Monday, January 24, 2011

ஜெயசூர்யாவிற்கு கண்டனம் தெரிவிப்போம்



ஹிட்லரையும் மிஞ்சிய கொடும் போர் குற்றவாளி ராஜபக்ச, நம் மக்களை முள்வேலிக்குள் அடைத்துவிட்டு, சொகுசாக‌ இந்திய கோவில்களில் விழுந்து எந்திரித்து... இந்தியாவின் விருந்தினராக சிவப்புகம்பள ஆடம்பர வரவேற்பில் உச்சி குளிர்ந்து, ஊர் ஊராக திரிந்து, லண்டனில் செருப்படிபட்டபின்னும் அடங்காமல் இப்போது அமெரிக்காவிற்கும் வந்துள்ளது. இருப்பிடத்தை மறைத்து பம்மி இருக்கிறது இங்கு. இது என்ன இந்தியாவா விசிலாட்டமா சிவப்புகம்பளத்தில் நடந்து வர?. இக்கொடுங்கோலனின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் கிரிக்கெட் ஆட்டக்காரர் ஜெயசூர்யா முன்பே கிரிக்கெட் மைதானத்தில் தமிழர்களை நோக்கி சுடுவதுபோல் சைகை காண்பித்தவர். தற்போது சூப்பர் சிக்ஸ் போட்டியில் விளையாட சென்னை வந்திருக்கும் இவரை கண்டிப்பது மனித உணர்வுள்ள ஒவ்வொருவரின் கடமை. தமிழ் இனத்தை கொடூரமாக கொன்றொழித்துவிட்டு, புலிகளை அழித்துவிட்டோம் என வெற்றி மிதப்பில் பால்சோறு தின்றுவிட்டு, எந்த தாகம் தீர‌ தினம் ஒரு மீனவர் இரத்தத்தை குடிக்கிறார்கள்? புலிகள் இல்லா நாட்டில் யாருக்கு உளவு சொல்ல எம்மீனவர் எல்லை தாண்டி போகப் போகின்றார்கள்?. கடல்புறமென்ன கொழும்பா இவர்கள் ஆட்டம் போட?. முறைப்படி இலங்கைக்கு கடவுசீட்டுப் பெற்று, அனுமதி வாங்கி சென்றவர்களை திமிர் தனத்துடன் கைது செய்வது, அகதிமுகாமில் எடுத்த படத்தில் ஆயுதமா தயாரித்துவிட முடியும்?. இப்படி திமிருடன் நடந்துகொள்ளும் இலங்கையை ஒன்றும் செய்ய இயலாக் கையறு நிலைமையில் இருக்கிறோம். தமிழக அரசு இப்போட்டிகளைத் தடைசெய்யவேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் நடக்கும் கொண்டாட்டங்களால் மூச்சடைத்துக் கிடக்கிறோம். ஜெயசூர்யா ஏற்கனவே இங்கு வந்தபோது, சென்னை விமானநிலையத்துல ஆர்ப்பாட்டம் நடந்ததே அதற்குள்ளாகவா மறந்துவிட்டது? போர் குற்றத்தை பிரிட்டன் விசாரிக்க வேண்டும் என்றவுடன், கோமாளி அதிபன் "You have no business here" ங்கிறான். இவர்களுக்கு மட்டும் மத்த நாட்டுல என்ன வேலை?. ஜெயசூர்யாவிற்கு நமது கடும் கண்டனத்தை தெரிவிப்போம்.

No comments: