Monday, May 18, 2009

ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா மரணம்!!

நேற்றிரவு முழுவதும் கண்மூட முடியவில்லை. ராஜபக்ச, கோத்தபாயா, புண்சேகா இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தாத செய்திகள் வந்ததால். கடலைப் பிடித்துவிட்டோம், மணலைப் பிடித்து விட்டோம் என்ற இவர்களின் பொய்செய்தி காடை மக்களுக்கு தெரிந்து அவர்கள் தொரத்திய, தொரத்தலில் படகெடுத்து ஓடியிருக்கிறார்கள். 'இந்திய உள(எழ)வு' நம்மாட்கள்தான் போறோம்னு நினைத்து போட்டுத்தள்ளிருச்சாம். இதெல்லாம் உறுதிப்படுத்த முடியாத தகவல்கள்தான். சரி இவனுக உறுதியாச் செத்தாதான் நமக்கென்ன‌?. இவிங்க குறுதி பாய்ந்து வந்து கால் தொட்டதில் உறக்கமில்லை.

சர்வதேசம் எப்படி இப்படி ஒரு இனத்தின் எதிரியாய் மாறத் துடிக்கிறது? அந்த 'புத்து' (இந்திராகாந்தியே 'புத்து'ன்னுதான் கூப்பிடுமாம்) ஒருத்தனுக்காகவா?, இன்றுகூட சி.என்.என் அதைக் கிளறி இருக்கிறது. படிக்காத முட்டாள் பார்ப்பான் கோவிலில் தருவதை அறிவுள்ள தமிழ் மக்கள் கூனிக் குறுகி வாங்குதல்போல், நேரு குடும்பத்து அறிவிலிகள் வழிநடத்திச் செல்லுவதை வளைந்து நெளிந்து ஏற்றுக் கொண்டுதானே இருக்கிறது தமிழகமும்?. தமிழனின் எந்த கோரிக்கை அவர்கள் காதில் விழுந்திருக்கிறது?. இராஜீவ் காந்தி நமக்குச் செய்தது இந்தியப்படையை ஏவி நம் மக்களை கொன்றது. இந்தியாவிற்கு செய்தது தம்மக்கள் மீதே கொடூர சட்டங்களை ஏவிவிட்டது. தடா, பொடா போன்று இன்றிருக்கும் அத்தனை ஆள்தூக்கிச் சட்டத்திற்கும் காரணகர்த்தா ராஜீவ்தான். பஞ்சாபில் ராஜீவ் கொண்டுவந்த தடாவைத்தான், சுமார் 20 ஆண்டுகாலம் நம்மை பேசவிடாமல் செய்ய தமிழ்நாட்டில் ஏவிவிட்டது பாஞ்சாலியின் வாரிசு.

ச‌ரி, ந‌ம்மைக் கொல்ல‌ ஆயுத‌ம் அனுப்பும் காங்கிர‌ஸ் தேர்த‌ல் வெற்றி கொண்டாட இனிப்பு வ‌ழ‌ங்கும், தூங்க மூஞ்சி சீனாக்காரன் நம் மக்களைக் கொல்ல ஆயுதம்வித்த‌ காசில் அடுப்பெரிப்பான். எல்லாம் முடித்துவிட்டேன் என‌க் கொக்க‌ரித்து காடை ஓநாய் ஊளையிட்டுக் கொண்டாடும். ந‌ம்மூரூ ஆல்பிர‌ட் துரைய‌ப்பாக்கள் இன்றும்கூட‌ எல்லாத்தையும் அல்லும், ப‌க‌லும் பாடுப‌ட்டு முடித்துவைக்கிறேன் என‌ அறிக்கை கொடுப்பார்க‌ள். நண்பர்களே நீங்கள் வேறு அஞ்ச‌லி ப‌திவு போட்டுக் கொல்கிறீர்க‌ளே?.

ராஜ‌ப‌க்ச‌வை விட‌ கொடுங்கோல‌னை எல்லாம் ச‌ந்தித்த‌வ‌ர் த‌ம்பிய‌ண்ண‌ன். நரிப்பய ஜெய‌வ‌ர்த்த‌னேவைவிட‌வா கொடுங்கோல‌ன் இந்த‌ப் பிள்ளைபூச்சி?. அடைக்க‌ல‌மாக‌ வ‌ந்த‌ ம‌க்க‌ளின்மேல் குண்டைப்போட்டுக் கொல்லும் கோமாளி நாய், செய்தி என்ன‌ன்னு உறுதியாத் தெரியாமக் கூட பயணத்தை பாதியில் முடித்துவிட்டு ஓடிவருகிறான். விமான‌த்த‌விட்டு இற‌ங்கிய‌வுட‌ன் கீழ‌விழுந்து எந்திரிக்கிறான் மெண்டல். இவ‌னைப் போன்ற‌ முட்டாள் கையிலா த‌மிழனம் சிக்கிச் சீரழிய‌வேண்டும்?. இறுதி யுத்த‌ம்தான். மனமுள்ள ஈழத் த‌மிழின‌த்திற்கு கேடு காலம்தான். கையில் முத‌ன்முத‌லில் துப்பாக்கி ஏந்தும்போதே த‌ன் வாழ்வின் உறுதித்த‌ன்மையை ஊகிக்காம‌ல் இருக்க‌ சென்னையில் வ‌ள‌ர்ந்த‌ செத்த‌ த‌மிழ‌னா பிர‌பாக‌ர‌ன்?. எவ்வளவு துன்பங்கள், வலிகள், வேதனைகள் தாங்கி யாரேனும் வரமாட்டார்களா தன்னைக் காப்பாற்ற என பரிதவிக்கும் மக்களுக்கு நாம் என்ன செய்ய முடியும் என நினைத்து மட்டுமே செயல்படுங்கள். நினைவுபோய், கை கால்கள் இழந்து ஒருவாய் தண்ணீருக்கு ஏங்கி நிற்கிறது எம் இனம். பற்று, பசத்தை உலகிற்கு கற்றுக் கொடுத்த இனம் இன்று சிதறி உறவு யார், பகை யார் உணரத்தெம்பில்லாது மரத்துப்போன மக்கள்கூட்டமாகிவிட்டது. ச‌ங்க‌ர் துவ‌ங்கி.... இன்றுவ‌ரை ஈழ‌ம‌ண்ணிற்கு உர‌மாகிக்கொண்டிருக்கும் அத்த‌னை மாவீர‌ர்க‌ளின் க‌னவை,அவ்வ‌ள‌வு எளிதில் முடித்துவிட‌லாம் என சிங்க‌ள‌ன் நினைக்கிறானோ இல்லையோ, திண்ணைதூங்கி கூட்ட‌ம் நினைக்கிற‌து. என‌வேதான் த‌மிழ‌க‌த்தில் இவ்வ‌ள‌வு ஆர்ப்பாட்ட‌ம். காப்பாத்த கூப்புட்டா வ‌ர‌மாட்டாய்ங்க‌... ஆனா ஒப்பாரிவைக்க‌ ஓடிவ‌ருவாய்ங்க.... என‌வே ஈழ‌ சொந்த‌ங்களே இவ‌ர்க‌ள‌து கூக்குர‌லை க‌ண்டுகொள்ளாது.... ப‌ர‌ப்புரைக‌ளை க‌ண்டுகொள்ளாது நிதான‌மாக‌ இருங்க‌ள். உறுதியான தகவல்களின் படி த‌ம்பிய‌ண்ணன் பாதுகாப்பாக‌வே இருக்கிறார்.

6 comments:

முத்துகுமரன் said...

இருள் விலகும் விரைவில்

திரு/Thiru said...

'குளிர்கால இரவின் இருள் நீளமானது என்பதற்காக விடியாமலா போகும்?'

'அடுத்த ஆண்டில் ஈழத்தில் சந்திப்போம்!'
'Next Year in Eelam!'

-/சுடலை மாடன்/- said...

அப்பிடிப் போடுங்க!

நன்றி - சொ.சங்கரபாண்டி
'அடுத்த ஆண்டில் ஈழத்தில் சந்திப்போம்!'
'Next Year in Eelam!'

வெங்கிராஜா said...

நல்ல பதிலடி. பொய்ப்பிரச்சாரங்களையும், வதந்திகளையும் பரப்பும் ஊடகங்கள் ஒழிக!

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in