Thursday, May 04, 2006

தேர்தல் அலசல் - 2006 -நீலகிரி


நீலகிரி யாருக்கு?

நீலகிரி : மொத்தம் 3 தொகுதிகள்.

1.கூடலூர் 2.ஊட்டி 3.குன்னூர்

1.கூடலூர் :
கா.ராமச்சந்திரன் (திமுக) - (கூட்டணி பலம் ++)
மில்லர் (அதிமுக) - அமைச்சர் - சுற்றுலாத்துறை.

கூடலூர் சுற்றுலாத்துறை அமைச்சர் மில்லரின் தொகுதி. இம்முறையும் அவர்தான் இங்கு நிற்கிறார். இவரின் மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. சுற்றுலா தளத்திலிருந்து போன இவருக்கு அந்தத் துறையே கிடைத்துள்ளது. இருப்பினும் வாக்குறிகள் எதையும் நிறைவேற்றவில்லை. திமுக சார்பில் இராமசந்திரன் நிற்கிறார். சிபிஐ, சிபிஎம்க்கு இங்கு சிறிது பலமுண்டு. கூட்டணி பலம் கொண்டு வெல்லப்போவது திமுகதான்.

2.ஊட்டி :
பி.கோபால் (காங்கிரஸ்) - (கட்சி பலம், கூட்டணி பலம் +)
கே.என். துரை (அதிமுக)
காங்கிரஸ் தொகுதி. கடந்த 7 முறை நடந்த தேர்தல்களை கணக்கில் கொண்டால்., 5 முறை காங்கிரஸ் வென்றிருக்கிற்து. 1 முறை திமுக 1 முறை அதிமுக. கடந்த முறை இத்தொகுதியில் வென்றதும் காங்கிரஸ் ஹெச்.எம்.ராஜூதான். இவர் இத்தொகுதியில் 4 முறை போட்டியிட்டு 3 முறை வென்றிருக்கிறார். தற்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் பி.கோபால். ஊட்டியின் மத்தியப் பகுதியில் இக்கோடையில் சுற்றுலா சென்ற அனைவரும் குதூகலித்துக் கொண்டிருக்க., சுற்றியிருக்கும் ஊர்களிலோ தேயிலை வீழ்ச்சியால், வறுமையில் வாடும் குடும்பங்களே அதிகம். இவர்களைப் பற்றிப் பேச 10 மாகாஸ்வேதாதேவிகள் வேண்டும். எத்தனை பேசினாலும் என்ன மாற்றம் வந்துவிடும்?. தமிழ் நாட்டில் மட்டும் மொத்தம் 36 வகையான மலைவாழ் இன மக்கள் வாழ்கின்றனர். விடுதலை கிடைத்து 50 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னும் இவர்களுக்கு தேர்தலில் வெறும் 4 இடங்கள். அதையும் யார் யாரோ வந்து நான் மலைசாதி என பொய் பிறப்புச் சான்றிதழ் கொடுத்து, போட்டியிட்டு பதவிகளை அனுபவிக்கும் நிலையே உள்ளது. ஊட்டியில் அதிகமுள்ளது படுகர் இனம். காங்கிரஸ் வேட்பாளருக்கு கூட்டணி ஆதரவுடன் சொந்த கட்சி ஆதரவும் உள்ளது. அதிமுகவிற்கு மலைவாழ் மக்களின் ஓட்டுக்கள் கிடைக்க படுகர் இனத்தை சேர்ந்த ஒருவரையே நிறுத்தியிருக்கிறார்கள். ஓட்டுக்கள் சிதறலாம் எனினும் தேயிலை விவசாயிகளின் உற்பத்திக்கு உரிய விலை கிடைக்க மத்திய அரசிடம் வ்லியுறுத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கை கூறுவதும், கூட்டணி பலமும் காங்கிரஸ்க்கே மீண்டும் இத்தொகுதி.
3.குன்னூர் (தனி):
அ.சவுந்திர பாண்டியன் (திமுக)
எம்.செல்வராஜ் (அதிமுக) - (பிரச்சாரம் +)

கே.கந்தசாமி காங்கிரஸ் எம்.எல்.ஏ சிட்டிங். தொகுதி திமுகவிற்குப் போயிருக்கிறது. சவுந்திரபாண்டியன் என்கிற புதுமுக வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். உள்ளுர் உடன்பிறப்புகள் ஆதரவளிக்கவில்லை. அதிமுக சார்பில் எம்.செல்வராஜ் நிற்கிறார். இங்கு அதிமுக வெல்லவே அதிக வாய்ப்பு.
நீலகிரி நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
தேனி மாவட்டம்
நாகை மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
தஞ்சை மாவட்டம்
கரூர் மாவட்டம்
தருமபுரி மாவட்டம்
ஈரோடு மாவட்டம்

தேர்தல் அலசல் - 2006 -கோயம்புதூர்


கோவை யாருக்கு?


கோயம்புதூர் : 1.மேட்டுப்பாளையம் 2.பொங்கலூர் 3.தொண்டாம்புத்தூர் 4. அவினாசி 5.போரூர் 6.சிங்க நல்லூர் 7.திருப்பூர் 8.கோவை கிழக்கு 9.கோவை மேற்கு 10.பல்லடம் 11.பொள்ளாச்சி 12.தரபுரம் 13.கிணத்துகடவு 14.உடுமலைப் பேட்டை 15. வால்பாறை

1.மேட்டுப்பாளையம் :
பி.அருண்குமார் (திமுக)
ஓ.கே.சின்னசாமி (அதிமுக) - (கட்சி செல்வாக்கு +)

மேட்டுப் பாளையம் தொகுதியில் அதிமுக அடுத்து திமுக அதற்கடுத்து காங்கிரஸ் என பலம் கொண்டவைதான். இங்கு அதிமுக சிட்டிங் ஏ.கே. செல்வராஜ் வேட்பாளரோ ஓ.கே.சின்னராஜ். திமுக தரப்பில் கடந்த 3 முறை போட்டியிட்டு ஒரு முறை வென்ற (1996) பி. அருண்குமாரே மீண்டும் நிற்கிறார். தேமுதிக சார்பில் இங்கு பெண் வேட்பாளர் சரஸ்வதி நிறுத்தப்பட்டுள்ளார். இங்கு அதிமுக வெல்லலாம்.

2.பொங்கலூர்:
எஸ்.மணி (திமுக) - (கூட்டணி பலம் +)
டி.பி.தாமோதரன் (அதிமுக)

பொங்கலூர் அதிமுக காங்கிரஸ் சற்று பலமாக உள்ள தொகுதி. அதிமுகவில் அமைச்சர் தாமோதரன் மீண்டும் களமிறங்குகிறார். அவர் தொகுதிக்கு நல்லது செய்தாரோ இல்லையோ ரரக்களுக்கு நல்லது செய்யவில்லை போல., அது பெரிய ரகளையாகிவிட்டது. இவர் நாய்க்கர் சமூகம் சார்ந்தவர்., கட்சியில் கவுண்டர் சமூக ரரக்களிடம் பாராமுகமாக இருப்பதாக புகார். அது ஒரு அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் எதிரொலித்து, அடிதடியில் முடிந்திருக்கிறது. அடிதடியெல்லாம் முடிந்த பிறகு, மந்திரி நிதானமாக எந்திரிச்சு இது திமுகவினர் சதி என்றாராம். எதிர்புறத்தில் பார்த்தால், திமுக வேட்பாளார் எஸ். மணி நிற்கிறார். இது காங்கிரஸ் எஸ்.ஆர்.பி தொகுதி. அவருடைய செல்வாக்கு உள்ள தொகுதி. அவர் இருமுறை தொடர்ந்து வென்ற தொகுதி. திமுகவிற்கு அவ்வளவு பலம் இங்கு இல்லையென்றாலும் வேட்பாளர் இங்கு அதிகமாக இருக்கும் கவுண்டர் சமூகம் சார்ந்தவர் இதனால் அதிமுக ஓட்டுக்களே கிடைக்கலாமாம். அடுத்துள்ளது காங்கிரஸ் செல்வாக்கு எனவே இங்கு திமுக மணி தொகுதியை பிடிக்கலாம்.

3.தொண்டாம்புத்தூர்
எஸ்.ஆர்.பாலசுரமணியன்(காங்கிரஸ்)
மு.கண்ணப்பன்(மதிமுக)

திமுகவும் அதன் தோழமை கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அகியவை பலமாக இருக்கிறது இத் தொகுதியில் மாநில அளவில் அரசியல் செய்யும் இரு தலலகல் மோதுகின்றன.. தமிழகத்தின் தற்போதய எதிர்கட்சி தலைவரும், தொகுதியின் தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏவும் ஆன காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பி மீண்டும் இங்கு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மாதிமுக சார்பில் அதன் பொருளாலரும், முன்னால் அமைச்சருமான மு.கண்ணப்பன் போட்டியிடுகிறார். அரசை எதிர் வரிசையிலிருந்து ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்ததனால் தொகுதிப் பக்கம் எஸ்.ஆர்.பி வருவதில்லை. இந்த வருத்தம் மக்களுக்கு உள்ளது. ஆனால் பல நல்ல வளர்ச்சிப் பணிகளை சென்னையிலிருந்து கொண்டேனும் செய்திருக்கிறார். இப்போதும் சீட் கிடைக்கவில்லையென்றால் சுயேட்சையாக நின்று ஓட்டைப் பிரிக்க வேண்டும் என்ற காங்கிரசின் கலாச்சாரத்தில் இத்தொகுதியில் இருந்தவர்களை சமாதனப்படுத்தி தனக்காக தேர்தல் பணி செய்ய அழைத்து அரவணைத்திருக்கிறார்.. மு.கண்ணப்பனுக்கு அதிமுக ஓட்டுவங்கி பலமாக உள்ளது. இது கிராமப்புறங்கள் நிரம்பிய தொகுதி. இவர்களுடன் தேமுதிக கோவில் பிள்ளையும், பாஜக சின்னராஜ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். பாஜக வேட்பாளர் ஓட்டுகள் பிரிப்பார். எனினும் கூட்டணிபலம் எஸ்.ஆர்.பிக்கு கைகொடுக்கும்.

4. அவினாசி
எம்.ஆறுமுகம் (சிபிஐ) - (கூட்டணி பலம் +)
ஆர்.பிரேமா (அதிமுக)

அவினாசி அதிமுக தொகுதி. சிட்டிங் எஸ்.மகாலிங்கம் இல்லாமல் ஆர்.பிரேமா என்பவர் அதிமுக சார்பாக நிற்கிறார். இவர் இத்தொகுதிக்கு புதுமுகம். திமுக இம்முறை சிபி ஐக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது. சிபிஐ எம்.ஆறுமுகம் 3 முறை இதே தொகுதியில் நின்று ஒரு முறை வென்றிருக்கிறார். தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர் கூட்டணி பலத்தோடு ஆறுமுகம் அவினாசியில் வெற்றி பெறலாம்.

5.பேரூர் :
நா.ருக்குமணி (திமுக)
எஸ்.பி. வேலுமணி (அதிமுக)
பேரூர் நகரங்களையும் அதிக எண்ணிக்கையில் கிராமங்களையும் கொண்ட தொகுதி. இங்கிருக்கும் கிரமங்களில் கட்சிக் கொடிகளில்லை., சுவர்களில் சின்னங்கள் இல்லை ஏன் மக்கள் ஓட்டுக்கேட்டு யாரையயும் உள்ளே வரவே அனுமதிப்பதில்லை. அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத இக்கிராமங்களில் அதைச் செய்துத்ருகிறேன் என்று சொல்லிச் சொல்லி ஓட்டு வாங்குபவர்கள் செய்வதில்லை. பேரூரில் திமுகவும், அதிமுகவும் சம்மான பலம் பெற்ற தொகுதி. இங்கு குனியமுத்தூர் நகராட்சித்தலைவர் எஸ்.பி வேலுமணி அதிமுக சார்பில் நிற்கிறார். குனியமுத்தூரில் இவர் பலம் பொருந்தியவர். நலங்களும் செய்திருக்கிறார். திமுக சார்பில் நா.ருக்மணி நிற்கிறார். கூட்டணி ஒத்துழைப்பு இவருக்கு உள்ளது. தேமுதிக சார்பில் ராஜசேகர் என்பவர் நிற்கிறார். இங்கு திமுக கூட்டணியுடன் இருக்கும்போது எடுத்த வாக்குகள் 96,507. அதிமுக கூட்டணியுடன் இருந்தபோது எடுத்த வாக்குகள் 94,607. அடிப்படை வசதிகள் இல்லாததால் அதிமுக எம்.எல்.மீது மக்களுக்கு கடும் அதிருப்தி. மதிமுகவுக்கு செல்வாக்கில்லை. காங்கிரஸ்க்கும் அப்படித்தான். ஆனால் சிபிஎம் பலம் சிறிதளவு உள்ளது. அதிமுகவிற்கு சாதகம் செய்யும் ஜனதாதளம் சிறிது பலம். கூட்டி, கழித்து, அடித்து, திருத்திப் பார்த்தால்... எனக்கு என்ன தெரியும்?. திமுகவிற்குத்தான் சாதகமாக உள்ளது.

6.சிங்க நல்லூர்:
சவுந்தராஜன்(சிபிஎம்) - (சொந்த கட்சி பலம், கூட்டணி பலம் ++)
காளான் (ஐ.என். டி.யூ.சி)
சிட்டிங் கேசி கருணாகரன் சிபிஎம். வேட்பாளரோ சிபிஎம் சவுந்தராஜன். எதிர் தரப்பில் ஐ.என். டி.யூ.சி சார்பில் காளான் நிற்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பலம் பெருந்திய மாவட்டம்தான். ஜனத தளத்தின் கையும் கொஞ்சம் ஓங்கியிருக்கிறது. ஆனாலும் கூட்டணி துணையோடு சிபிஐ (எம்)சவுந்தராஜன் வெல்லாம்.

7.திருப்பூர் :
கோவிந்தசாமி(சிபிஎம்) -(சொந்த கட்சி பலம், கூட்டணி பலம் ++)
சு.துரைசாமி (மதிமுக)
திருப்பூர் தொழிற் நகரம். தொழிற் இருந்தால் தொழிற் சங்கங்கள் இருக்காதா?., சங்கங்கள் இருந்தால் அங்கு எக்கட்சி செல்வாக்குப் பெற்றிருக்கும் எனத் தெரியாதா?. தொழிலாளி இருந்தால் முதலாளி இருந்தாகணுமே? இங்கு தேர்தல் களத்திலேயே அனைத்தும் உண்டு. சிட்டிங் அதிமுக சி.சிவகாமிக்கு இல்லாமல் மதிமுகவிற்கு சென்றுவிட்டது தொகுதி. சு.துரைசாமி போட்டியிடுகிறார். திமுக தரப்பில் சிபிஎம் கோவிந்தசாமி போட்டியிடுகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பலமான மாவட்டம் இது. மாநிலத் தொழிளார் பிரிவு செயலாளர் கார்த்திகேயன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். வாக்குகள் சிதறும். மதிமுக துரைசாமியோ வல்லிசு தொழிலதிபர். எனினும் சொந்த கட்சி பலம், கூட்டணி பலம், தொகுதிக்கு செய்த நல்லவைகள் எல்லாம்கொண்டு கோவிந்தசாமி சிபிஎம் சார்பில் இங்கு வெல்வார்.

8.கோவை கிழக்கு
பொங்கலூர் ந. பழனிச்சாமி (திமுக) - (கூட்டணி பலம் ++)
டி.கோபாலகிருஷ்ணன் அதிமுக

கோவை கிழக்கு சிபிஎம். காங்கிரசின் பலமான தொகுதி. அவ்விரு கட்சிகளிக்கில்லாமல் திமுக எடுத்துகொண்டது. திமுகவில் பொங்கலூர் ந.பழனிச்சாமி நிற்கிறார். 1980ப் பிறகு நடந்த அனத்து தேர்தல்களிலும் கூட்டணி கட்சிகளே நின்றிருக்கின்றன. இப்போதுதான் திமுக நிற்கிறது. திமுகவிற்கு பலமில்லாத தொகுதிதான் ஆயினும் கூட்டணி கட்சிகளுக்கு மிகுந்த பலம் இங்கு. கடந்தமுறை காங்கிரஸ் வென்று வந்திருக்கிறது, அரசு ஊழியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. பொங்கலூரைச் சேர்ந்தவர் இங்கு நிற்கிறார் என பிரச்சாரம் செய்கிறது அதிமுக தரப்பு. அதிமுக மட்டுமென்ன 1984ல் ல் கோவைத்தம்பி இங்கு போட்டியிட்டார். அவருக்குப் பிறகு இப்போது டி.கோபால கிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். அரசு ஊழியர்களின் ஓட்டாலும், காங்கிரஸ், கம்யுனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்காலும் இங்கு பழனிச்சாமி கோவைக் கிழக்கில் வெல்வார்.

9.கோவை மேற்கு :
மகேஸ்வரி (காங்கிரஸ்) - (கட்சி பலம் +)
தா.மலரவன் (அதிமுக)

திமுக, காங்கிரஸ் செல்வாக்குள்ள தொகுதி. சிட்டிங் காங்கிரஸ் மகேஷ்வரியே மீண்டும் நிற்கிறார். அதிமுக சார்பில் த.மலரவன் களமிறங்குகிறார். இங்கு சிறுபான்மையின மக்களின் ஓட்டுக்கள் வெற்றியைத் தீர்மானிக்கும். தேமுதிக சார்பில் ஏ.எஸ்.அக்பர் நிற்கிறார். எனவே சிறுபான்மையின மக்கள் ஒட்டுக்கள் சிதறும். விஜய் ரசிகர் மன்ரத் த்லைவர் யுவராஜ் என்பவர் சுயேட்சையாக பொட்டியிடுகிறார் (ஆரம்பிச்சாசா?). கூட்டணி பலத்தோடு மகேஷ்வரி இங்கு வெல்லலாம்.


10.பல்லடம்:
எஸ்.எஸ்.பொன்முடி (திமுக)
செ.ம.வேலுச்சாமி(அதிமுக)-பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை- தொகுதியில் செல்வவக்கு, கட்சி பலம் + )

அதிமுக செல்வாக்கு உள்ள தொகுதி. அமைச்சர் வேலுச்சாமியின் தொகுதி. தொகுதியில் இவருக்கு நல்ல பெயர். நிறைய நலத்திட்டங்கள் செய்துள்ளளர். கடந்த 5 ஆண்டுகள் அமமச்சராக இருந்தது, அதிமுக அமமச்சரவையிலேயே இவர் மட்டும் தான். இவர் மீண்டும் நிற்பதில் பல்லடம் ஒசெ பரமசிவன் முன்பு பிரச்சனை செய்தாலும் இப்போது விறுவிறு சென்று பிரச்சாரமும் செய்கிறார். திமுக சார்பில் கடந்த இருமுறை நின்று 1996 ல் வென்ற எஸ்.எஸ்.பொன்னுச்சாமி மீண்டும் போட்டியிடுகிறார். தொகுதியில் இரட்டை இலை செல்வாக்குடன் திகழ்வதாலும், அமைச்சரின் தனிப்பட்ட சாதனைகளாலும் பல்லடம் மீண்டும் வேலுச்சாமிக்கே.

11.பொள்ளாச்சி :
த. சாந்திதேவி (திமுக) - (கூட்டணி பலம் +)
பொள்ளாச்சி ஜெயராமன்(அதிமுக)
அதிமுகவிற்கு பலம் கூடுதலான தொகுதி. அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனே அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். தன் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறார். திமுக சார்பில் ஆனைமலை ஓசெ சாந்திதேவி நிற்கிறார். கடந்தமுறை திமுக சார்பில் போட்டியிட்ட தமிழ்மணி. 1996 ல் வென்ற ராஜூ போன்றவர்கள் இத்தொகுதியை எதிர் பார்த்து ஏமாந்ததால், பிரச்சாரம் சுணக்கமாய்த்தான் இருந்ததாம். சாந்திதேவி தொகுதியில் அதிகம் உள்ள கவுண்டர் ச்மூக வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வார். கிராமப்புற செல்வாக்கும் இருக்கிறது.ஜெயராமனுக்கு நகர் புற செல்வாக்கும் செட்டியார் சமூக ஓட்டுக்களும் கிடைத்தாலும் தென்னை விவசாயிகள் அதிகமுள்ள மாவட்டம் என்பதாலும், கூட்டணி பலத்தாலும் சாந்திதேவி முன் நிற்கிறார்.

12.தராபுரம் :
பெ.பிரபாவதி (திமுக) -(கூட்டணி பலம் +)
எம்.ரெங்கநயகி (அதிமுக)
பாமக சிட்டிங் சிவகாமி வின்சென்ட். தொகுதி திமுக பெ.பிரபாவதிக்கு. திடிரென அதிமுகாவில் ஐக்கியமான சிவகாமிக்குத்தான் சீட் முதலில் தருவதாக இருந்தது. இப்போது அதிமுக சார்பில் எம்.ரெங்கநயகி நிற்கிறார்.. பாமகவிற்கும், மதிமுகவிற்கும் சற்று பலம் இருக்கிறது. கூட்டணி பலம் கொண்டு நோக்கினால் இங்கு பெ.பிரபாவதி வெல்வார்.

13.கிணத்துகடவு ;
நெகமம் கந்தசாமி (திமுக) -(கூட்டணி பலம் ++)
தாமோதரன் (அதிமுக)
கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக சார்பாக சிட்டிங் எம்.எல்.ஏ தாமோதரன் மீண்டும் களமிறங்கிகிறார். தொகுதியில் மிக நல்ல பெயர் இவருக்கு. இங்கு அதிகம் இருக்கும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். தொகுதியில் உள்ள பெரும்பான்மையான கிராமங்களில் கூட்டு குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தி வெற்றி கண்டு இருக்கிறார். திமுக தரப்பில் சீனியர் அதிமுக தல நெகமம் கந்தசாமி நிற்கிறார். பலமுறை இத்தொகுதியில் வென்று வந்தவர் அவர். அப்போதைய அடாவடி அரசியல் இப்போது எடுபடுமா? என்ற கேள்வி இருந்தாலும். மதிமுக சப்போர்ட் இங்கு திமுகவிற்கு சாதகமாக இருப்பதாலும், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பும் உள்ளதாலும் நெகமத்தாருக்கே கிணத்துக்கடவு.

14.உடுமலைப் பேட்டை :
செ.வேலுச்சாமி (திமுக)
சண்முகவேல்(அதிமுக) -( கட்சி பலம் +)
அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ சண்முகவேல் மீண்டும் நிற்கிறார். திமுக சார்பில் செ.வேலுச்சாமி நிற்கிறார். சண்முகவேல் மீண்டும் வர வாய்ப்புள்ளது.
15. வால்பாறை:
கோவைத் தங்கம் (திமுக) - (கூட்டணி பலம், சொந்த செல்வாக்கு +)
சுசி.கலையரசன் (விசி)
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்திற்கும் வாக்கு வங்கி உண்டு இங்கு. காங்கிரஸில் சிட்டிங் எம்.எல்.ஏ. கோவைத் தங்கமே மீண்டும் போட்டியிடுகிறார். நல்ல பல சாதனைகள் செய்து தொகுதியை தன் பக்கம் வைத்திருகிறார். கூட்டணி பலமும் நன்றாக உள்ளது. எதிர்தரப்பில் விடுதலை சிறுத்தைகளின் மாநில பொதுச் செயலாளரான சுசி.கலையரசன் இங்கு நிற்கிறார். அதிமுகவினரின் ஆதரவு இல்லா நிலையில் தேர்தலைச் சந்திக்கிறார். கோவைத் தங்கம் மீண்டும் வெல்வார்.
கோவை நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
தேனி மாவட்டம்
நாகை மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
தஞ்சை மாவட்டம்
கரூர் மாவட்டம்
தருமபுரி மாவட்டம்
ஈரோடு மாவட்டம்
நீலகிரி மாவட்டம்

தேர்தல் அலசல் - 2006 -ஈரோடு


ஈரோட்டில் வெல்லப் போவது யார்?


ஈரோடு : 1.சத்திய மங்கலம் 2.பவானிசாகர் 3. மொடக்குறிச்சி 4.அந்தியூர் 5.கோபி 6.பவானி 7.ஈரோடு 8.பெருந்துறை 9.வெள்ளக்கோவில் 10.காங்கேயம்

1.சத்திய மங்கலம்:
எஸ்.பி. தர்மலிங்கம் (திமுக) - (கூட்டணி பலம் +)
டி.கே.சுப்ரமணியன் (மதிமுக)

சத்தியமங்கலம் இரு கழகங்களுக்கும் சமமாகவே வாய்ப்பளிக்கும் தொகுதி. அதிமுக கேந்தசாமி சிட்டிங் எம்.எல்.ஏ. இம்முறை மதிமுகவிற்கு கொடுத்திருக்கிறார்கள் இத் தொகுதியை. 2001 சட்ட மன்றத் தேர்தலில் இத் தொகுதியில் தனித்து நின்று 16,486 வாக்குகள் பெற்ற டி.கே சுப்ரமணியந்தான் இம்முறையும் களமிறங்குகிறார். இவர் தொகுதிக்கு நன்கு அறிமுகமான முகம். தவிர இதே தொகுதியில் 3 முறை திமுக சார்பில் நின்று., ஒடுமுறை வென்று எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார். சத்திய மங்கலத்தை முதன்மைத் தொகுதியாக்குவேன் என்றெல்லாம் மதிமுகவிற்கு இவ்விடம் கிடைக்குமென உறுதியாக எண்ணிக்கொண்டு பிரச்சாரம் பலமாகவே இருக்கிறது. ஆனால் வீரப்பன் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்கு அதிமுகவின் மேல் கோபமும் இருக்கிறது. அது இவரின் வாக்குகளைப் பாதிக்கலாம். மலை மக்களின் ஓட்டுக்கள் அப்படியே தனக்கு கிடைக்குமென நினைத்து திமுக தர்மலிங்கம் என்ற வேட்பாளரைக் களமிறக்கியுள்ளது. திமுக பிரச்சாரம் கொஞ்சம் மந்தம்தான். ஆனால் மலை வாழ் மக்களது குறைகள் கேட்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும், அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று திமுக கூறி வருவதாலும், கூட்டணி பலத்தாலும் தர்மலிங்கம் சத்தியமங்கலத்தில் வெல்வார்.
2.பவானிசாகர் :
ஜீவா ஓ.சுப்ரமணியம்(திமுக) - (கூட்டணி பலம் +)
சிந்து ரவிச்சந்திரன் (அதிமுக)
சிட்டிங் அதிமுக பி.சிற்றம்பலம். தற்போது நிற்பது சிந்து ரவிச்சந்திரன். பவானிசாகர் அதிமுகவிற்கு சாதகமான தொகுதிதான். திமுக சார்பில் முதலில் வேட்பாளரென அறிவிக்கப்பட்டது கீதா நடராஜன். பிறகு அதை மாற்றி ஜீவா என அறிவித்தது திமுக. இதனால் உடன்பிறப்புகளுக்கு உற்சாகம் இல்லை. சிந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்த சிந்துவை இறக்கியிருக்கிறார்கள். இத் தொகுதி மட்டும் அதிக அளவில் வசிக்கும் வேட்டுவ கவுண்டர்கள் ஓட்டுக்கள் இதனால் பாதிக்கப்படும். இச்சமூக ஓட்டுக்கள் விழுந்தால், கூட்டணி பலத்துடன் திமுக வெல்லும்.

3. மொடக்குறிச்சி:
ஆர்.எம்.பழனிச்சாமி (காங்கிரஸ்)
வி.பி.நமச்சிவாயம் (அதிமுக) - (கட்சி பலம் +)
மொடக்குறிச்சியும் அதிமுக செல்வாக்குள்ள தொகுதி. சிட்டிங் ராமசாமிக்கு சீட்டில்லை. நமச்சிவாயம் நிற்கிறார். எதிர்புரத்தில் ஆர்.எம். பழனிச்சாமி காங்கிரஸ். தேமுதிக சார்பில் விக்டோரியா நிற்கிறார். இங்கு அதிமுக வெல்லவே அதிக வாய்ப்புள்ளது.

4.அந்தியூர்:
எஸ்.குருசாமி(திமுக)
மு.சுப்ரமணியம் (அதிமுக) - (கட்சி பலம் +)
அதிமுக பலம், திமுக அதற்கடுத்தபடியாக, பாமக செல்வாக்குள்ள தொகுதி. காங்கிரஸ் கடந்த எழு தேர்தல்களில் இங்கு நிற்கவில்லை. சிட்டிங் எம்.எல்.ஏ. பாமக ஆர்.கிருஷ்ணன். போட்டியிடுவது திமுக எஸ்.குருசாமி. அதிமுக தரப்பில் மு.சுப்ரமணியம். குக்கிரமங்கள் என்று சொல்லிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் இருக்கும் கிராமங்களை பார்த்திருக்கிறோம். அந்தியூர் தொகுதியில் உள்ள கிரமங்கள்தான் உண்மையிலேயே குக்கிராமங்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத கிராமங்கள். இங்கு அதிமுக வரவே அதிக வாய்ப்பு.

5.கோபி:
வெங்கிடு மாணிமாறன்(திமுக)
செங்கோட்டையன் (அதிமுக) - (தொகுதியில் செல்வாக்கு, கட்சி பலம் +)
கோபியும் அதிமுக பலமான இடம். முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் தொகுதி. 5 முறை இங்கு தேர்தலில் நின்று இருக்கிறார் செங்கோட்டையன். 4 முறை வெற்றி பெற்று இருக்கிறார். தற்போதும் நிற்கிறார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் மறுவாழ்வு. கடந்த முறை அதிமுக சார்பில் இங்கு நின்று, வென்றவர் எஸ்.எஸ்.ரமணீதரன். அப்பக்கம் திமுக முன்னால் எம்.எல்.ஏ வெங்கிடுவின் மகன் மணிமாறன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்கிறார். ஜெ. பிரச்சாரத்திற்கு போகும்போதெல்லாம் முன்னால் செல்லும் செங்கோட்டையன் தன் தொகுதியில் பிரச்சாரம் சரிவர செய்வதில்லையாம். தேமுதிக சார்பில் நடராஜன் போட்டியிடுகிறார். பணபலமும் பிரச்சாரமும் இத்தொகுதியை அதிமுகவிற்கு கொடுக்கும்.

6.பவானி :
கேசி கருப்பண்ணன் (அதிமுக) - (கட்சி பலம் +)
கே.வீ.இராமநாதன் (பாமக)
பவானி அதிமுக தொகுதி. இங்கு அதிமுகவில் கேசி கருப்பண்ணனும், பாமக சார்பிக் கே.வீ. ராமநாதனும் போட்டியிடுகிறார்கள். அதிமுக கருப்பண்ணந்தான் சிட்டிங் எம்.எல்.ஏ. ஜெ. பிரச்சாரத்திற்கு போகும்போது அவரிடமே இவர் தொகுதிப் பக்கமே வரவில்லையென்று பெண்கள் சொல்ல, பிறகு கருப்பண்ணனின் நிலைமைய நீங்களே கற்பனை பண்ணிக்குங்க. ஆனாலும் தொகுதியில் சில வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களிடம் நல்ல பெயரும் வைத்திருக்கிறார். பாமக இத்தொகுதியில் 1996 ல் தனித்து நின்று 18,768 வாக்குகள் எடுத்திருக்கிறது. இப்போது இதில் நிச்சயம் முன்னேற்றமிருக்கும்., அதிமுக அதிக முறைகள் இங்கு வென்றிருக்கிறதே தவிர, அதே தேர்தலில் இங்கு தனித்து நின்று அதிமுக பெற்ற வாக்குகள் 28,427 தான் மதிமுகவிற்கு பலமில்லாத தொகுதி, விசிக்களுக்கும் அப்படியே. இதை வைத்து கணித்தால் பாமகவிற்கு சாதகம் இருக்கிறது என்றாலும் உறுதியாக சொல்லமுடியவில்லை. எனவே இப்போதைக்கு இத்தொகுதி அதிமுகவிற்கு.

7.ஈரோடு :
என்.கே.கே.பி.ராஜா (திமுக) -(கூட்டணிபலம் +)
இ.ஆர்.சிவக்குமார் (அதிமுக)
ஈரோடும் கரூரைப் போல இரு விவசாய, தொழிற் நகரம். மஞ்சள் விளைச்சலில் முதன்மையான இடம். கைத்தறி, விசைத்தறிகளின் உலகம். ஈரோடு தொகுதியும் சொல்லப்போனால் அதிமுக சர்போர்ட் தொகுதிதான். கடந்த 7 தேர்தல்களில் 5 முறை அதிமுக வந்திருக்கிறது 2 முறை திமுக வந்திருக்கிறது. இம்முறை திமுக வேட்பாளர் என்.கே.கே.பெரியசாமி மகன் ராஜா. கடந்தமுறை பெரியசாமி நின்றார். 1996ல் இப்பகுதி எம்.எல்.ஏ அவர். அதிமுகவில் சிட்டிங் கே.எஸ் தென்னரசுவை விட்டுவிட்டு சிவக்குமார் என்ற வேட்பாளர் நிற்கிறார். எனவே தென்னரசு அமைதியாகிவிட்டார். இவர் ஆதரவாளர்களும் அதே. முன்னால் அமைச்சர் முத்துச்சாமி அதிமுகவிற்கு ஆதரவாக களத்தில் இறங்கி பிச்சாரம் செய்கிறார். அமைச்சர் பி.சி. ராமசாமியும் தற்போது பிரச்சாரக்களத்தில் இறங்கிவிட்டார். இப்பகுதியில் நெசவாளர்களை வாட்டி எடுத்த வரி பிரச்சனையை (சென் -வாட் ) திமுக தீர்த்ததால் நெசவாளர் ஓட்டுக்கள் திமுகவிற்கே. தேமுதிக சார்பில் அக்கட்சியின் கொ.பசெ. சந்திரக்குமார் போட்டியிடுகிறார். கூட்டணி பலமில்லை அதிமுக வேட்பாளருக்கு. திமுக இங்கு கூட்டணி பலத்தோடு உள்ளதால் வெல்லும்.

8.பெருந்துறை :
என். பெரியசாமி (சிபிஐ) - (கூட்டணி பலம் +)
பொன்னுதுறை (அதிமுக)
கடந்த 7 தேர்தல்களில், 6 முறை அதிமுக இத்தொகுதியில் வென்றிருக்கிறது. 1 முறை சிபிஐ வென்றிருக்கிறது பெருந்துறையில். ஆனால் மதிமுக மற்றும் விசிக்களுக்கு போதிய பலமில்லை. தற்போதய எம்.எல்.ஏ, கே.எஸ். பழனிச்சாமி அதிமுக சார்பில் தற்போது சேர்மன் பொன்னுதுரை களமிறக்கப்பட்டுள்ளார். எனவே உட்கட்சி பூசல்களும் அதிகம். 1996 ஆல் நின்று இங்கு வென்ற சிபிஐ என்.பெரியசாமி மீண்டும் இத்தேர்தலில் நிற்கிறார். சிபிஐ க்கு இத்தொகுதியில் நற்பெயரும், நல்ல அறிமுகமும் இருக்கிறது. கூட்டணி பலம் சிபிஐ பெரியசாமி வெற்றி பெறலாம்.

9.வெள்ளக்கோவில்:
எம்.பி.சாமிநாதன் (திமுக) - (கட்சி செல்வாக்கு, கூட்டணி பலம் +)
வி.பி.பெரியசாமி (அதிமுக)
திமுகவும், அதிமுகவும் சமமான பலம் பெற்ற வெள்ளக்கோவிலில்,இம்முறை, திமுகவும், அதிமுகவும் மோதுகிறது. திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசன், அதிமுகவின் துரை ராமசாமி போன்ற சீனியர்கள் நின்ற தொகுதி. திமுக வேட்பாளர் எம்.பி.சீனிவாசன் கடந்த 2 முறை இங்கு போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். இம்முறையும் அவரையே களமிறக்கியுள்ளது திமுக. தொகுதியில் மிக நல்ல பெஉயர் இவருக்கு. மத்திய அமைச்சர் சுப்புலட்சுமியின் செல்வாக்கும் திமுகவிற்கு உதவும். கடந்த முறை அதிமுக வி.பி பெரியசாமி போட்டியிட்ட தொகுதி இப்போது மதிமுக வசம். மதிமுக மாசெ கணேசமூர்த்தி வேட்பாளராக போட்டியிடுகிறார். போட்டி கடினம். கூட்டணி பலம், கட்சி செல்வாக்கு அனைத்தையும் வைத்துப் பார்த்தால் எம்.பி.சீனிவாசனுக்கு வாய்ப்புள்ளது.

10.காங்கேயம்:
விடியல் சேகர் (காங்கிரஸ்) - (கூட்டணி பலம் +)
என்.எம்.எஸ்.பழனிச்சாமி (அதிமுக)
அதிமுகவின் பலமான தொகுதி, 1991ல் ஜெ. போட்டியிட்டு வென்ற தொகுதி. சிட்டிங் செல்வி இல்லை.,இம்முறை என்.எம்.எஸ்.பழனிச்சாமி அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். திமுக இம்முறை தொகுதியை காங்கிரஸ்க்கு விட்டுக் கொடுத்திருக்கிறது. இப்பகுதி செல்வாக்குள்ள திமுக பிரமுகர் ராஜ்குமார் மன்றாடியார். இம்முறை விடியல் சேகர் காங்கிரஸ் சார்பில் களமிறங்குகிறார். விடியல் சேகர் ஆயிரம்விளக்கு தொகுதியில் கடந்தமுறை ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றவர். இரு வேட்பாளர்களுமே இப்பகுதியில் அதிகம் உள்ள கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகம் சார்ந்தவர்கள். அரசு கல்லூரி காங்கேயத்தில் வேண்டும் என்பது தொகுதி மக்களின் கனவு. குடிநீர்ப் பிரச்சனை உள்ள தொகுதி (எந்தத் தொகுதில இது இல்லாம இருக்குங்கிறிங்களா அதுவும் சரித்தான்!). விவசாயம், நெசவு இரண்டும் செழித்திருக்கும் தொகுதி. இங்கு மதிமுக பலமானதல்ல. மற்றும் பழனிச்சாமியும் தொகுதிக்குப் புதியவர். கூட்டணி பலம், கட்சி பலம் எல்லாம் சேர்ந்து இத் தொகுதியில் காங்கிரஸ் வர வாய்ப்புள்ளது.
பெரியார் பெரியார் மாவட்டம் முழுக்க அதிமுகவிற்கே. ஆதரவு இருக்கிறது. ஆனால் கடந்த ஆட்சியில் வந்த சென் - வாட் பூதம், கஞ்சித் தொட்டி எல்லாம் கணக்கில் கொண்டே தேர்தல் தீர்ப்பு அமையும். நெசவாளர்களுக்கு பல சலுகைகள் வழங்குகிறது கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில். திமுக நாடாளுமன்றத்திலிருந்து வென்று வந்த பிறகு அது வாக்குறுதி அளித்தபடி சென் - வாட் வரியை முழுதாக நீக்க மத்திய அரசை வலியுறுத்தி அதை செயல்படுத்தியது.
ஈரோடு நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
தேனி மாவட்டம்
நாகை மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
தஞ்சை மாவட்டம்
கரூர் மாவட்டம்
தருமபுரி மாவட்டம்

தேர்தல் அலசல் - 2006 -சேலம்


சேலம் : மொத்தம் 11 தொகுதிகள்.

1.மேட்டூர் 2.தாரமங்கலம் 3.எடப்பாடி 4.வீரபாண்டி 5.ஒமலூர் 6. ஏற்காடு 7.சேலம்-1 8.சேலம்-2 9.பனைமரத்துப்பட்டி 10.ஆத்தூர் 11.தலைவாசல்.

1.மேட்டூர் :
ஜி.கே.மணி (பாமக) - ( கூட்டணி பலம், கட்சி செல்வாக்கு +)
கே,கந்தச்சமி (அதிமுக)

அதிமுக கை சற்று ஓங்கியுள்ள தொகுதி. சிட்டிங் எஸ்.சுந்தராம்பாளுக்கு சீட்டில்லை. கே.கந்தசாமி அதிமுக சார்பில் நிற்கிறார். பாமக சார்பில் ஜி.கே.மணி. எனவே சுறுசுறுப்பாக இருக்கிறதாம் தொகுதி. கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு 1996ல் வென்ற பி.கோபாலுக்கு கிடைக்கும் என நினைத்து ஏமாந்தனவாம் உடன்பிறப்புகள். பாமகவிலேயே சரியான ஒத்துழைப்பு இல்லையாம். பிறகு எல்லாவற்றையும் சரிப்படுத்தி இப்போது உற்சாகமாக ஓடிக்கொண்டிருக்கின்றனாரம். அதிமுக வேட்பாளர் கந்தசாமியும் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறாராம். மேட்டூர் மணியின் சொந்த ஊர் என்பதாலும், கூட்டணி பலத்தாலும், கட்சி செல்வாக்காலும் ஜி.கே.மணி வெல்லலாம்.

2.தாரமங்கலம்:
பி.கண்ணன் (பாமக)
தாமரைக்கண்ணன் (மதிமுக)
கோவிந்தன் (சுயேட்சை) - (சொந்த செல்வாக்கு ++)
இத் தொகுதியில் இரண்டு கூட்டணிகட்சிகள் மோதுகின்றன. சிட்டிங் அதிமுக காமராஜ். மதிமுகவிற்கு தொகுதி கிடைத்திருகிறது. கடந்தமுறை இங்கு திமுக சார்பில் நின்றவர் அம்மாசி. இம்முறை பாமக களமிறங்குகிறது. மூன்றாவது பெரிய கட்சி எதுன்னு பார்க்க இப்படியோ?. மதிமுக சார்பில் தாமரைக்கண்ணன் பாமக சார்பில் பி.கண்ணன். ஆனா பாருங்க இரு கண்ணன்களை விட ஒரு சுயேட்சை வேட்பாளர் கோவிந்தன் இங்கு முன்னனியில் உள்ளார். பாமகவைச் சேர்ந்தவர் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். பாமகவினர் ஆதரவு இவருக்கு இருக்கிறது. இவர் 1996ல் பாமகவில் நின்று வெற்றி பெற்றவர். இங்கு சுயேட்சை வேட்பாளர் கோவிந்தனே வெல்வார்.

3.எடப்பாடி:
காவேரி(பாமக) - (கட்சி செல்வாக்கு, கூட்டணி பலம் +)
எடப்பாடி பழனிச்சாமி (அதிமுக)
எடப்பாடி பலமான பாமக தொகுதி. கடந்த இருமுறைகளாக வென்ற சிட்டிங் பாமக ஐ.கணேசன் இம்முறை களத்தில் இல்லை. பாமக சார்பில் காவேரி நிற்கிறார். இவரை எதிர்த்து அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி நிற்கிறார். மதிமுகவிற்கு பலமில்லாத நிலையில் அதிமுக அதன் வாக்கு வங்கியை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள இயலும். எனவே கூட்டணி பலத்துடன் உள்ள பாமக காவேரி வெல்லலாம்.

4.வீரபாண்டி:
வீ.ராஜேந்திரன் (திமுக) - (கட்சிபலம், கூட்டணி பலம் +)
விஜயலட்சுமி பழனிச்சாமி (அதிமுக)
வீரபாண்டி ஆறுமுகத்தின் இடம். இங்கு அவர் மகன் ராஜேந்திரன் திமுக சார்பில் நிற்கிறார். அதிமுக சார்பில் சிட்டிங் எஸ்.கே செல்வம். விஜயலட்சுமி பழனிச்சாமி இம்முறை அதிமுக சார்பாக போட்டியிடுகிறார். மதிமுகவிற்கு சொல்வாக்கில்லாத பகுதி. எனவே அதிமுக வாக்கு வங்கியை மட்டுமே நம்பி இருக்கவேண்டிய நிலை. ராஜேந்திரனுக்கு திமுக பலம், சொந்த தொகுதி, தந்தை செல்வாக்கு (இவரே 'அப்ப' ஆக்டிவ் பாலிடிக்ஸ்ல இருந்தவர்தான்)., பாமக செல்வாக்கு, காங்கிரஸ் பலம் இத்தனை இருக்கிறது. வீரபாண்டி குடுமபத்திலிருந்து சட்ட மன்றத்திற்கு இருவர். திமுக வெல்லும் இங்கு.

5.ஒமலூர் :
அ. தமிழரசு(பாமக)-( கூட்டணி பலம், கட்சி செல்வாக்கு +)
பி.கிருஷ்ணனுக்கு (அதிமுக)
சிட்டிங் செம்மலை, சீட் பி.கிருஷ்ணனுக்கு அதிமுகவில். எதிரில் சென்ற முறை போட்டி இரா.ராஜேந்திரன். இம்முறை பாமக அ. தமிழரசு. பாமக,திமுக,காங்கிரஸ், சிபிஐ போன்ற எல்லாக் கட்சிகளுமே கணிசமான செல்வாக்கு கொண்ட இடம். இம்முறை தமிழரசு வெல்லவே வாய்ப்புள்ளது.


6. ஏற்காடு (தனி):
சி.தமிழ்ச்செல்வன் (திமுக) -( கூட்டணி பலம் ++)
அலமேலு(அதிமுக)

ஏற்காடு தனித்தொகுதி. அதிமுகவில் சிட்டிங். இளைய கண்ணுக்கு சீட் கிடைக்காமல் புத்முகம் அலமேலுக்கு கிடைத்திருக்கிறது. லோக்கல் அதிமுக சர்போர்ட் இல்லாமல் அல்லல் படுகிறார். திமுக சார்பில் புழுதிக்குட்டை பஞ்சாயத்துதலைவர் தமிழ்ச் செல்வன் போட்டியிடுகிறார். பாமக மிகவும் பலம் பெற்றிருக்கிறதிங்கு. தொகுதியில் நிறைய மலை கிராமங்கள் இருப்பதால், அத்தனை ஒட்டுக்களும் திமுகவிற்கு சாதகமாகவே விழும் தேமுதிக சார்பில் ராமகிருஷ்ணன் மலை மக்களின் வாக்குகளை இவர் பிரிக்கலாம். எனினும் கூட்டணி பலம், தேர்தல் வாக்குறுதிகள் கொண்டு தமிழ்ச்செல்வன் வெல்ல வாய்ப்பு அதிகமிருக்கிறது.

7.சேலம்-1 ;
ரவிச்சந்திரன் (அதிமுக)
எம்.ஆர்.சுரேஷ் (காங்கிரஸ்) - (கூட்டணி பலம் +)
சிட்டிங் வெங்கடசலத்திற்கு சீட்டில்லாத நிலையில் அதிமுக ரவிச்சந்திரன் நிற்கிறார். காங்கிரஸ் சார்பில் சுரேஷ். காங்கிரஸ் வெல்ல வாய்ப்பு உள்ளது.

8.சேலம் 2 :
வீர.பாண்டி ஆறுமுகம் (திமுக) -(சொந்த செல்வாக்கு, கூட்டணி பலம் குறிப்பாக பா.ம.க +)
சுரேஷ் குமார் (அதிமுக)

முன்னால் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தொகுதி. பிரச்சாரம் படு வேகத்தில் சென்று முடிந்ததாம். இளைஞர் படையொன்றை தயாரித்து வீடுவீடாக தேர்தல் அறிக்கைகளை வினியோகித்து பிரச்சாரம் செய்து கலக்குகிறதாம் திமுக. அதிமுக சார்பில் மேயர். சுரேஷ் களமிறக்கப்பட்டிருக்கிறார். சேலம் 2 வீரபாண்டி ஆறுமுகத்திற்கு.

9.பனைமரத்துப்பட்டி:
ராஜெந்திரன் (திமுக) - (கூட்டணி பலம் +)

ஆர். இளங்கோவன் (அதிமுக)
திமுகவிற்கு கிடைக்கும் இத் தொகுதி.

10.ஆத்தூர் :
ஆர் சுந்தரம் (காங்கிரஸ்) - (கூட்டணி பலம் +)
ஏ.கே முருகேசன் (அதிமுக)
அதிமுக மஞ்சினி ஏ.கே முருகேசன் மீண்டும் நிற்கிறார். காங்கிரஸ் சார்பில் ஆர் சுந்தரம் போட்டியிடுகிறார் இங்கு காங்கிரஸ்க்கு நல்ல செல்வாக்கு உள்ளது, பாமகவிற்கும்தான் எனவே காங்கிரஸ்க்கு இத்தொகுதி கிடைக்கவே அதிக வாய்ப்பு.

11.தலைவாசல்(தனி):
கு.சின்னத்துரை(திமுக) - (கூட்டணி பலம் +)
பா.இளங்கோவன்(அதிமுக)
தலைவாசலைப் போய் கடைசியில் போட்டுவிட்டேன். சரி., தலைவாசல் காங்கிரஸ் பலமுள்ள தொகுதி. அதிமுக சிட்டிங் வி.அழகம்மாள். நிற்பது பா.இளங்கோவன். சென்ற முறை திமுகவில் நின்றது எம். பாண்டியராஜன். இம்முறை கு.சின்னத்துரை. இத் தொகுதியில் கு.சின்னதுரைக்கு ஆதரவு அதிகமாக உள்ளது.

தேர்தல் அலசல் - 2006 -கரூர்


யாருக்கு கரூர்?
கரூர் - மொத்தம் 6 தொகுதிகள்.

1.கிருஷ்ணராயபுரம் 2.கரூர் 3.தொட்டியம் 4.அரவகுறிச்சி 5.குளித்தலை 6. மருங்காபுரி

1.கிருஷ்ணராயபுரம் :
பி.காமராஜ் (திமுக) - (கூட்டணி பலம் +)
சசிகலா ரவி (அதிமுக) - சிட்டிங்

கிருஷ்ணராயபுரம் தொகுதி, அதிமுக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளின் பலமான தொகுதி. அதிமுக எம்.எல்.ஏ சசிகலாவே மீண்டும் போட்டியிடுகிறார். கடந்தமுறை திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.பெரியசாமிக்கு இம்முறை சீட் இல்லை. அதிமுக எம்.எல்.ஏ பெரிதாக ஒன்றையும் சாதித்துவிடவில்லையானாலும். வெள்ள நிவரண தொகைகளை சமமாக பங்கிட்டு கொடுத்திருக்கிறார். இவர் அறிவிக்கப்பட்டபோது முகம் சுளித்தவர்கள் இப்போது ஒன்றாக இணைந்து பரபரப்பாக அதிமுகவிற்கு வேறுபாடு மறந்து வாக்கு கேட்கிறார்கள். திமுக சார்பில் புதுமுகம் காமராஜ் போட்டியிடுகிறார். கூட்டணி செல்வாக்கும், விவசாயிகள் நிறைந்த இத் தொகுதியில் விவசாய சலுகைகளும் இவருக்கு கை கொடுக்கும். தேமுதிக சார்பில் இங்கு முருகன் என்பவர் நிற்கிறார். தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் கட்சி சார்பில் இங்கு போட்டியிட்ட பொன்னுசாமி என்பவர் கொலைசெய்யப்பட்டார். கிருஷ்ணராயபுரத்தில் திமுக வெல்லும்.
2.கரூர்:
வாசுகி முருகேசன் (திமுக) - (சொந்த செல்வாக்கு, கட்சி பலம் ++)
வி.செந்தில் பாலாஜி(அதிமுக)
திமுக, அதிமுக விடம் மாறி, மாறி இருந்த தொகுதி தற்போது காங்கிரஸ் வசம் வரும் தேர்தலில் யார் வசம்?. திமுக சார்பில் 3 முறை இதே தொகுதியில் போட்டியிட்ட வாசுகி முருகேசன் 1 முறை வென்றிருக்கிறார். அவரேதான் இம்முறையும் போட்டியிடுகிறார். காங்கிரஸ்க்கு இத்தொகுதி இல்லை. இங்கு அதிமுகவில் எப்போதும் போட்டியிடும் சின்னச்சாமி இல்லாமல் வி.செந்தில் பாலாஜி என்ற வேட்பாளர் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ரவி என்பவர் நிற்கிறார். அமரவதியாற்றுப் பாலம் போட்டதை வைத்து ஓட்டுக் கேட்கிறது அதிமுக. இருப்பினும் எம்.பி. பழனிச்சாமிக்கு தொகுதியில் உள்ள நல்ல பெயரும் வாசுகிக்கு உதவும். திமுகவிற்கு செல்வாக்குள்ள தொகுதி இது. வாசுகிக்கு 1996 ஆம் ஆண்டு மீண்டும் திரும்பலாம்.

3.தொட்டியம் :
ம.ராஜசேகரன் (காங்கிரஸ்) - கூட்டணி பலம் +
ஆர்.நடராஜன் (மதிமுக)

இத்தொகுதியில் காங்கிரஸால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்பி.சி.செல்வராஜ். திடிரென இவரை மாற்றி, மாசெ இராஜசேகரை வேட்பாளராக அறிவித்தது கட்சி. அவசர, அவசரமாக செல்வராஜ் சென்று மனுதாக்கல் செய்த செல்வராஜிடம், உங்கள் கட்சியின் ஒப்புதல் கடிதம் இல்லாததால் சுயேட்சை வேட்பாளர் ஆக இந்த மனு ஏற்றுக் கொள்ளப்படும் என்று சொல்ல., திடுகிட்ட செல்வராஜ் சோனியாவிற்கு தெரியாமல் என்னை மாற்றி விட்டார்கள என புலம்ப, ம.ராஜசேகரன் இப்போது காங்கிரஸ் சார்பில் மகிழ்ச்சியுடன் நின்றார். திமுக சார்பில் இதே தொகுதியில் 4 முறை போட்டியிட்டு, இரண்டு முறை வென்ற கண்ணையன் மற்றும் அதிருப்தி கோஷ்டிகளால் இராஜசேகரும் இப்போது கலங்கத்தில். இருந்தாலும் மதிமுகவிற்கென தனிப்பட்ட செல்வாக்கில்லாத தொகுதி. அது அதிமுக பலத்தை மட்டுமே நம்ப வேண்டும். கூட்டணி பலமுள்ள கை வேட்பாளர் வெல்வார்.

4.அரவக்குறிச்சி :
கலீலூர்ரஹ்மான் முஸ்லீம்லீக்(திமுக) -(கூட்டணி பலம், முஸ்லீம் மக்கள் வாக்கு வங்கி +)
மொஞ்சனுர் பி.ராமசாமி(மதிமுக)

இத்தொகுதியில் மதிமுகவும், திமுகவும் (முஸ்லீம் லீக்) மோதுகின்றன. மதிமுக சார்பில் போட்டியிடும் மொஞ்சனூர் ராமசாமி, கடந்த 7 தேர்தல்களில் 6 முறை (திமுக, மதிமுக சார்பில்) போட்டியிட்டு 1 முறை வென்று இருக்கிறார். மதிமுக இம்முறையும் இந்த சீனீயர் தலைவரை களமிறக்கி இருக்கிறது. மதிமுக தனித்து நின்று போனமுறை அவர் பெற்ற வாக்குகள் 16,954. இவரை எதிர்த்து நிற்கும் முஸ்லீம் லீக் (திமுக சின்னத்தில்) வேட்பாளர் கலிலூர் ரஹ்மான் முஸ்லீம் மக்களின் ஓட்டை அள்ளலாம். கடந்தமுறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற லியாதீன் சையீத் இம்முறை சீட் கிடைக்கவில்லை என்கிற மனவருத்தில் இருக்கிறார். இவர் பிரச்சாரத்தில் முழுவீச்சில் ஈடுபட்டால் முஸ்லீம் வாக்குகளை கணிசமாக அதிமுக பெறலாம். தேமுதிக சார்பில் பஷீர் அகமது நிற்கிறார். ஓட்டைப் பிரிப்பார். எனினும் கூட்டணி செல்வாக்கால் முஸ்லீம் லீக் வேட்பாளர் இத் தொகுதியில் வெல்லலாம்.

5.குளித்தலை :
ரா.மாணிக்கம்(திமுக) -கூட்டணி பலம் +
ஏ.பாப்பாசுந்தரம் (அதிமுக)

கலைஞர் முதன்முதலில் தேர்தலில் நின்ற தொகுதி, இங்கு அதிமுக சார்பில் நிற்கும் பாப்பா சுந்தரம் 4 முறை போட்டியிட்டு 3 முறை வென்ற தொகுதி. சிட்டிங் எம்.எல்.ஏவும் அவர்தான். ஆனால் மக்கள் இம்முறை அவர் மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். அரசு கல்லூரி, கூட்டு குடிநீர்த் திட்டம், மணப்பாறை அரசு மருத்துவனை குளித்தலையில் பேருந்துநிலையம் மற்றும் நெசவாலை அமைப்பேன் எனக் கூறி ஓட்டுவாங்கிவிட்டு, இதில் ஒன்றைக் கூட செய்ய முனையவில்லை. அரசு அறிவித்திருந்த சில நலத்திட்டங்கள் நிறைவேறின. மீனாச்சி டீச்சர் விவகாரம் வேறு பாப்பா சுந்தரத்திற்கு பகையாய் இருக்கிறது. இவர் கூட்டணி சகிதம் பிரச்சாரத்திற்கு போகும்போது நிறைய கிராமங்களில் அவரை உள்ளே விட மறுத்தனர் மக்கள். திமுக சார்பில் நகரச்செயளாலர் மாணிக்கம் நிற்கிறார். இவர் முத்துராஜா சமூகத்தைச் சேர்ந்தவர் எனவே அந்த வாக்கு வங்கியை கைப்பற்றக்கூடும். (பாப்பா சுந்தரத்திற்கும் ரெட்டியார் சமூக வாக்கு வங்கி உள்ளது.) காங்கிரஸ், கம்யூனிசத் தோழர்களுடன் இணைந்து சுறுசுறுப்பாக இருக்கிறது பிரச்சாரம். தேமுதிக சார்பில் விஸ்வநாதன் என்பவர் போட்டியிடுகிறார். பாப்பாவின் மீதான அதிருப்தி, பிரச்சார பலம், கூட்டணி பலம், உட்கட்சி ஒத்துழைப்பு, தேர்தல் அறிக்கை அனைத்தும் சேர்ந்து மாணிக்கத்தை வெல்ல வைக்கும். .

6. மருங்காபுரி:
ரெக்கையா மாலிக் /சல்மா (திமுக)
செ.சின்னசாமி (அதிமுக) - (கட்சி செல்வாக்கு +)
மருங்காபுரி அதிமுகவின் தொகுதி. திமுகவிற்கு செல்வாக்கு இல்லாத தொகுதி இங்கு 1996 ல் மட்டும்தான் புலவர். செங்குட்டுவன் போட்டியிட்டு வென்றார். அதுவரை திமுக வந்ததில்லை. மீண்டும் 2001ல் அதிமுகவிற்கு சென்றுவிட்டது. பொன்னம்பட்டி தலைவி ரெக்கையாமாலீக் என்ற கவிஞர் சல்மா நிற்கிறார். இவருக்கு நன்கு அறிமுகமான தொகுதி இது. மற்றும் இலங்காகுறிச்சி, துவரங்குறிச்சி போன்ற இடங்களில் இருக்கும் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் விழலாம். காங்கிரஸ் ம் உடன் இருக்கிறது. அதிமுக சின்னச்சாமி பிரச்சாரம் பண்ணாமலேயே வெல்லலாம் இத்தொகுதியில். எந்த புதுமுகமும் இங்கு அதிமுக சார்பில் நின்றால் வெல்லும். கடந்த முறை வென்றவர் செல்லையா. முன்னால் கல்வி அமைச்சர் பொன்னுசாமி இன்றும் செல்வாக்குடன் இருக்கும் தொகுதி. ஆனால் 1996 ல் நின்ற போது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து நின்றதால் புலவர் செங்குட்டுவன் வெல்ல முடிந்தது. இப்போதும் கூட்டணிதான். சல்மா நன்றாக பிரச்சாரம் செய்கிறார். அவர் பெண் என்பதாலும், முஸ்லீம் வாக்கு வங்கியுள்ளதென்பதாலும், கூட்டணியாலும் இம்முறை திமுக வெல்ல வாய்ப்புள்ளது எனக் கணிக்கலாம் தேமுதிக வேட்பாளர் ஜமால்முகமது முஸ்லீம் வாக்குகளை பிரிப்பார். எனவே சின்னச்சாமிக்கு வாய்ப்புள்ளது.
கரூர் மாவட்டம் இயற்கையும், அறிவியலும் இணைந்து விளங்கும் மாவட்டம். காகித ஆலை ,சிமெண்ட் பாக்டரி, நூற்பாலைகள்,சர்க்கரை ஆலை, பேருந்து கட்டுமானச்சாலை, என தொழிற்சாலைகளும், வாழை, மஞ்சள், வெற்றிலை, வெங்காயம் என விவசாயமும் சிறந்து விளங்கும் மாவட்டம். இது பொதுவாக திமுக மாவட்டம். இப்போவோ அப்பவோன்னு உயிரைக் கையில பிடிச்சுகிட்டுதான் அமராவதி ஆத்து பாலத்த ஒரு காலத்துல கடக்கணும். அதிலயும் பாலம் முழுவதும் மக்கள் சலிக்காம போய்கொண்டிருப்பார்கள். இப்போது அப்பாலம் புதுபிக்கப்பட்டது., ஊர் நடுவில் அதிமுகவிற்கு பெரிய பிரச்சார மேடையாக இருக்கிறது. மழைநீர் சேமிப்புத்திட்டம் முறையாக செய்யப்பட்டு, பயன்பெறும் மாவட்டம். கரூர் மட்டும் இப்படி இருக்கிறதா?., பக்கத்தில் உள்ள குளித்தலைக்கோ பேருந்துகள் நிற்க நிலையமில்லை. அங்கிருந்து ஆரம்பித்து வரும் கிராமங்கள்., அரவக்குறிச்சியை சுற்றியுள்ள ஊர்கள், கரூர் - மணப்பாறை நெடுஞ்சாலை செல்லும் வழியிலுள்ள கிராமங்கள் ஆகியவைகளில் அடிப்படை வசதியும், போக்குவரத்து வசதியும் இல்லாத ஊர்கள் அதிகம் உள்ளன. விவசாயத்திற்கும், சிறு தொழிழுக்கும் ஊக்கம் தருவோர் இங்கு வெல்வர்.
கரூர் நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
தேனி மாவட்டம்
நாகை மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
தஞ்சை மாவட்டம்