Sunday, February 05, 2006

தமிழ்மணம் நண்பர்களுக்கு

கடந்த சில நாட்களாக தமிழ் மணத்தில் நடந்து வரும் கூத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்., சிலர் அதில் ஆர்வமுடன் பங்கெடுத்தும் கொண்டீர்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. என் எழுத்தை படிக்கும் சிறு குழந்தையும் அறியும் எனக்கும் அந்த மார்டன் கேர்ள்க்கும் சம்பந்தமில்லையென்பது. முகமூடிக்கும் அது தெரியும்தான். டோண்டுவிடம் நான் கேட்ட கேள்விகளை திசை திருப்ப., முகமூடி சேற்றுக் குட்டையில் விழுந்து., சேறு என் மீது பட பெரும் பிராயத்தனப்பட்டார்ர்ர்ர்ர்(வேற வழி?., பொதுவுல எழுதுறனே?). எடுப்பார் கைப்பிள்ளைகள் சிலவற்றிற்கு மயில் அனுப்பி கூட்டம் சேர்த்து ஆடிய கூத்துக்கள் சுவரஷ்யமாகவே இருந்தது. தலையாட்டிக் கூட்டம் நான் தலையாட்டுவதாகச் சொன்னது.

அப்புறம் இந்த சுள்ளான்., யாரோ சின்னவனாமே?., அது ஏகத்துக்கும் எகிறி குதிச்சுது. சத்தமில்லாம அமைதியா படங்காட்டுற ஆனந்துங்கிறவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 100 வது பதுவு போட., நம்ம போயி வாழ்த்துச் சொல்ல., அவரூஊஊஊஊஊ பதிவுக்கு (இந்தப் போட்டா பதிவுக்கு மட்டும்தான்.), இப்படி நான் பின்னூட்டம் போடுவது வழக்கம்தான். நம்ம மக்கள் தொலைபேசி என்ன இப்படி பண்ணிட்டிங்கன்னு கேட்டாங்க?., என்னாச்சுன்னு கேட்டா., அந்த ஆனந்தந்தான் இந்தச் சுள்ளான் சின்னவன்வன்வன்வனாம்., நமக்கு ஒண்ணும் புரியலே., மீண்டும் அந்த போர்னோ சைட்டுக்குப் போயி பார்த்தேன். சும்மா சொல்லக்கூடாது நல்லாவே தொழில் கத்துக்குடுத்துகிறது தல!!த்த்... உண்மையான தலயெல்லாம் இனிமே முகமூடி மாட்டிங்ககப்பா!)., அழகாப் படம் வரையிற பொண்ணு ஒண்ணு, இரண்டு மாதிரி படம் புடிக்கப் பட்டு பாவம் லாஸ் வேகஸ்ல நிப்பாட்டி வைக்கப்பட்டிருந்தது!!.

அப்புறம் யாரோ இந்த ஞானபீடமாம்., அது ஏற்கனவே பல்லுப் புடுங்கப்பட்ட பாம்பாம்., அது தெரியாம அதோட சர்க்கஸ் கூடாரத்துக்குப் போயி பின்னூட்டம் போட்டு வச்சுறுந்தேன். தருமி அய்யாவின் பின்னூட்டம் பார்த்த பின்புதான் உறைத்தது. மரியாதை இல்லாம 'டி' போட்டு சித்தர் பாட்டு வேற., இதெல்லாம் நம்ம போடான்னு சொல்லவே தகுதியில்லாதது. ஒரு விதயத்தை உறுதியாகத் தெரியுமுன்னரே அல்லது வேண்டுமென்றே., பரப்பி மனவிகாரங்களை எழுத்தில் கொட்டி பதிவிட., அதை பார்த்து நாலு கையைத் தட்ட., கேட்டுட்டு போகணுமா?. நண்பர்கள் சொன்னார்கள் முகமூடியெல்லாம் ஒரு மனிதனாக மதித்து நாங்கலெல்லாம் பின்னூட்டம் இடுவதில்லை. நரித்தனமாக எதையாவது எழுதிவிட்டு ஓடி ஒளிந்து கொள்வான், இந்த விதயத்திற்கு முக்கியதுவம் கெடுத்து மன அமைதியை கெடுத்துக் கொள்ளாதீர்கள், அமைதியாக இருங்கள் என்று. என் கணவரும் " Just Trash it " என்றார். இருந்தாலும் இதற்கு ஒரு முடிவு கட்டாமல் நான் விடப்போவதில்லை.

சரி விதயத்துக்கு வர்றேன்., முகமூடி, ஞான பீடம், சின்னவன் பேரில் சட்ட நடவடிக்கை எடுப்பேன். எத்தனை முகமூடிகள் மாட்டியிருந்தாலும் எனச் சொல்லிக் கொள்கிறேன். 'நெட்வொர்க்' வேலையை முகமூடி அலுவலகத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவும் அல்லது கூட்டம் போட்டு கூம்மியடிப்பதை அடுத்தவர்களுக்குப் பாதிப்பில்லாது செய்யவும்.

நடுநிலையில் உள்ளவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளாக இருப்பதும்., உண்மையை அறிந்தவர்கள் வாய் பொத்தி இருப்பதும் அந்த வகையாறாக்களுக்கு தமிழ் மணத்தை தாரை வார்த்துவிட்டுப் போக வழிவகுக்கும். ஏற்கனவே பல இணைய இதழ்கள் இவ்விதம் ஆனதை நண்பர்கள் கருத்தில் கொள்க.

ஆரம்பம் முதல் இங்கு நடப்பதை பார்த்து கொண்டு வரும் நண்பர்கள் இங்கு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.