Wednesday, May 31, 2006

ஆளுநர் உரை

நம்மூர் கோவில் திருவிழாவில் பரிவட்டம் கிடைத்தவன் உற்சாகமாகவும், எதிர் கூட்டம் வன்மமாகவும் சுற்றிக் கொண்டிருந்து, விழா முடிய காட்டிக்குவாய்ங்க தத்தம் பலத்தை. எனக்கு நினைவு தெரிந்து அன்பா நாலு பேர் கூடி அடிச்சுக்காத திருவிழாவே இருந்ததில்லை. ஆளுநர் உரையும் அப்படித்தான். தேர்தல் திருவிழா முடிந்தபின் இரு அணிகளும் சம்பிரதாய அமைதி காப்பதே அவர் உரை வாசித்து முடிக்கும்வரைதான். விவாதத்தில் கலவரம் என்பது இயல்பு. அது எந்தளவு காட்டமானது என்பதுதான் தெரிய வேண்டுமே ஒழிய, ரகளை நடக்குமென்பது அனனவரும் அறிந்ததுதான். எதிர் கட்சியும், ஆளுங்கட்சியும் "நன்றி" தெரிவிக்கும் வரை ஒன்றாக உள்ளேயே உட்கார்ந்திருக்கும் நாள் இனி என்றாவது வருமா என்பது சந்தேகமே... ! அதிமுகவைத் பொருத்தவரை அது ஆளுங்கட்சியாக இருந்த போதும்., எதிர் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் உரை மீது புள்ளி வைத்து கோலம் போடாமல் விட்டதில்லை.

கடந்த ஆட்சியில் கவர்னர் உரை மிதான விவாதத்தின் போது, கன்னியாகுமரி ஆஸ்டின் அவர்களின் பேச்சை சாக்காக வைத்து கலைஞரை 'தீய சக்தி' என திருவாய் மலர்ந்தார் ஜெயலலிதா. அதை சபைக் குறிப்பிலும் ஏற்றிக் களிப்படைந்தது அதிமுக. எம்.ஜியார் காலத்திலிருந்து அதிமுகவிலிருக்கும் ஆஸ்டினை நாந்தான் உன்னை வளர்த்துவிட்டேன் எனக் கூறி, அதிமுகவிலிருந்து வெளியேறியவர்கள் அனைவரையும் ஜெயலலிதா சாட அதற்கு பதில் கூற முற்பட்டு எழுந்த சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆரை அதிமுகவினர் 'துரோகி' எனக் கத்தி கலாட்டா செய்தனர். "இது சாத்தூர் இல்ல சட்டமன்றம்" என அவரைப் பார்த்து நக்கல் செய்தார் ஜெயலலிதா. சாத்தூர்ல இருந்து பேசுவதற்கு இல்லாமல் பொறி கடலை வாங்கித் திங்கவா சட்ட மன்றம் வந்தார்?.

அப்போதும் தண்ணீர் பிரச்சனைதான்... 750 கோடி தெலுங்கு -கங்கை திட்டம். கிருஷ்ணா நீர் சென்னைக்கு வரவில்லை., கண்டலேறு தண்ணிய காட்டி கிருஷ்ணா நீர் என்று திமுகவினர் ஏமாற்றி விட்டார்கள், வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்ற நான் அதை கொண்டு வருவேன் என்று பேசி, (ஆனால் ஆந்திர அரசே திமுக ஆட்சியில் எவ்வளவு தண்ணீர் இத் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு திறந்து விடப் பட்டதென வருட வாரியாக (5 ஆண்டுகளுக்கு) புள்ளி விவரம் தந்தது), திமுகவினர் வெளிநடப்பு செய்ய வாய்ப்பு நல்கினார்.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போதாவது சமாதானமாக இருந்தாரா என்றால் அப்போதும் கொள்ளைப் புறமாக வந்து பதவியை ஏற்றுக் கொண்டார் கருணாநிதி., ஆனால் நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு (நல்ல வேளை............) உலகமெலாம் அறிய பதவியேற்றுள்ளேன் என்றார். ஆளுங்கட்சியாக இருந்தபோதே இந்தப் பதற்றம். இம்முறை கண்டிப்பாக கலவரம் நடக்கவெண்டும் என்பதற்காக, எதிர் கட்சித் தலைவரான பன்னிர் செல்வம் ஓரங்கட்டப்பட்டு., சொன்னதைச் செய்யும் செங்கோட்டையன் தயார் படுத்தப்பட்டார். ஆளுநர் உரை வாசிப்பின் போதே அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அடுத்த நாளும் அப்படித்தான். முன்றாம் நாள் விவாதத்தின் போது, காத்திருந்தார் போல காட்சி அறங்கேற்றம். அதற்கு பிறகு நடந்ததுதான் தெரியுமே?. பன்னீர் அந்த நாள் சபையில் அமைதியாக இருந்ததில் ஏற்பட்ட எரிச்சலாலும், அதிமுகவினரின் கலாட்டாக்களை மீடியாவிலிருந்து திசை மாற்றவும் ஜெயலிலதா "நானே சட்ட மன்றம் செல்வேன்" என சூளுரைத்து, சென்று பேசி விட்டு வந்தார். (இது பற்றிய சந்திப்பு அவர்கள் மற்றும் நண்பர் சசியின் பதிவுகள்). இது பத்தாதா பத்திரிக்கைகள் தைரிய லட்சுமியை கொண்டாட?.
இவ்வரசு ஆட்சியேற்று 20 நாட்கள் ஆகின்றன. பதவியேற்ற நாளிலிருந்து மக்கள் நலனுக்கான சட்டங்கள் போடப்பட்டு வருகின்றன. ஆட்சிக்கு வந்ததும் ஜெயா வீட்டுக்கு அனுப்பிய 13,000 மக்கள் நலப் பணியாளர்கள் ஊதிய உயர்வுடன் பணி பெறப் போகின்றனர். ஜெயலிலதாவும்தான் ஆட்சியேற்று 20 நாட்கள் ஆகியிருந்த போது ஏகப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்., அமைச்சரவை பதவியேற்ற 4 நாளில் இலாகக்களை மாற்றினார். 20 நாட்களுக்குள் 3 அமைச்சர்கள் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அவர் ஆட்சி நடத்திய '5 ஆண்டுகளும்' மத்திரி பதவி வகித்தவர் ஒரே ஒருவர்தான் (பல்லடம் வேலுச்சாமி). புதிய அரசு பதவியேற்றவுடன் அதிகாரிகளை மாற்றுவது எல்லா அட்சியிலும்தான் நடக்கும்., ஆனால் ஜெ மாதிரி பழிவாங்க இன்னொரு ஆள் இல்லை. பதவிக்கு வந்தவுடன் அப்போது புலனாய்வுத்துறை மற்றும் "வீரப்பன்" அதிரடி படைக்குத் தலைவராக இருந்த அலெக்சாண்டரை 2 முறை மாற்றி அதுவும் ஆறாமல் மூன்றாம் முறையாக ஒரு எஸ்.ஐ பார்த்தால் போதுமான "மண்டபம்" முகாம் பாதுகாப்பு பணிக்கு மாற்றி அவமானப்படுத்தினார். வீட்டில் மோட்டு வளையை பார்த்துக் கொண்டிருந்த தேவாரம் அதிரடிப் படை தலைவரானார். அதிமுக அரசு பதவியேற்ற 20 நாளில் மாற்றப் பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 68. ஓரிரு மாதங்களில் மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 100.
தற்போது மாநகராட்சியிலும் ரகளை செய்து மைக்குகளை உடைத்து, பேர்ப்பர்களை விசிறி அடித்து அராஜகம் புரிந்திருக்கின்றனர் அதிமுகவினர். மாநகராட்சிய விடுங்க.. சட்ட மன்றத்தில் அதிமுகவினரின் நாட்டியம், திமுகவிற்கும், ககங்கிரஸ்க்கும் ஒரு "பேரன்பு" ஏற்படும் வரை தொடருமென்றுதான் தோன்றுகிறது. சட்ட மன்றத்தில் கன்ணியத்துடன் நடந்து கொள்ளும் கட்சிகள்தான் தேர்தலில் நிற்க வெண்டுமென தேர்தல் கமிஷன் ஒரு நிபந்தனை வைத்தால் என்ன?., மாநகராட்சி கலவரங்களை பார்த்தபிறகு சொல்லத் தோன்றுவது இதுதான். சூட்டோடு சூடா உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தி முடிங்கப்பா... அதுக்கான அவசியம் நிறைய உள்ளது.

2 comments:

neo said...

பதிவுக்கு நன்றி! அருமையாகச் சொல்லிவிட்டீர்கள்! :)

கலைஞரின் அரசு பதவியேற்று சில நாட்கள் கூட ஆகவில்லை! அதற்குள்ளாக சில நடுநிலைவியாதிகளின் 'தொல்லை' தாங்கலை! கருண்னாநிதி "ஸ்டண்ட்", கருணாநிதி "ஏமாற்று வேலை" என்றெல்லாம் Review நடத்துகிறார்கள்!

வழக்கறிஞர் காந்தியை சிறுபான்மையினர் கூட்டமைப்பு - அந்த மதமாற்றத் தடைச் சட்டத்துக்காக ஜெ.வால்கொண்டுவரப்பட்ட Act - பிறகு 2004 தோல்விக்குப் பின் கொண்டு வந்த Ordinance அதை சட்டப்பேரவையில் வைத்துச் சட்டமாக்காமல் ச்தித்தனமாகக் காலாவதியாக விட்டது - எல்லாவற்ரையும் சொல்லி - சட்ட நிபுணர்களின் கருத்து என்ன என்று கேட்டிருக்கிறார்கள்.

காந்தி அவர்களும் - இதை ஒரு முழு சட்டமாகச் செய்யாமல் விட்டால் - பிற்பாடு ஒரு காலத்தில் - மதச் சார்பான ஒரு அரசு அமைய நேரிட்டால் - அவர்கள் இதன் மூல முறைகேடுகளும் இடைச்செருகல்களும் செய்ய வாய்ப்பு உள்லது என்று - கருத்து தெரிவித்தபிந்தான் - திமுகவும் அதை ஏற்றுக் கொண்டு - தனது தேர்தல் அறிக்கையில் - மத மாற்றத் தடைச் சட்டத்தை திரும்பப் பெறும் சட்டத்தை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து - முழுமையாகத் திரும்பப் பெறுவோம் என தெளிவாக குறிப்பிட்டிருந்தனர்; எல்லா கூட்டணியினரும் தேர்தல் பரப்புரையில் இதை முன்வைத்துப் பேசினர்.

அப்போதெல்லாம் விட்டுவிட்டு - இப்பொது கலைஞர் அதை தான் சொன்னதுபோல செய்கிற நேரத்தில் இது "தேவயற்ற ஸ்டண்ட்" என்று தமிழ்சசி போன்றவர்கள் சொல்வது - ஏமாற்றமளிக்கிறது.

இது போன்ற விசயத்தில் ஒரு Technical point கிடைத்தாலும் இந்துத்துவாவினர் புகுந்து விளையாடிவிடுவார்கள் என்பது தெரியாதா?

மேலும் ஜவாஹிருல்லாவும், எஸ்ராவும் இதைப் பற்ரிப்[ பேசுவதுதான் சரியாக இருக்கும். பாதிக்கப்படாதவர்கள் எளிதாக இது போல "ஸ்டண்ட்" என்று சொல்வது எப்படித் தார்மீகமாகும்?

அப்டிப்போடு... said...

நன்றி நியோ, மத மாற்ற தடை சட்ட மசோதா சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட போது, இதன் மீதான விவாதம் 3 மணி நேரம் நடந்தது. திமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பால் மசோதா வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு, அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்களின் ஒட்டுமொத்த வாக்களிப்பால் தீர்மானம் நிறைவேறியது. இப்படி சட்ட மன்றத்தில் நிறைவேறிய மசோதா மீண்டும் சட்ட மன்றத்தால்தான் ரத்து செய்யப் பட வேண்டும். அப்படி செய்திருந்தால் சந்தேகத்திற்கு இடம் இருந்திருக்காது.

இதே போல் நிறைவேற்றப் பட்ட பல இதர மசோதாக்கல் வாபஸ் பெறப் பட்ட போது நிலைமை என்ன?

வெறும் 7 நாளில் போட்ட சட்டங்களை திரும்பப் பெறப்படும் சட்டங்களையும் சேர்த்து 49 மசோதாக்கள் நிறைவேற்றப் படும் என சபாநயகர் அதிரடியாக அறிவிக்க., எதிர் கட்சிகள் அனைத்தும் வெளிநடப்பு செய்தன. (இதை எதிர்பார்த்து தானே அவர்கள் அதிரடி அறிவிப்புகள் செய்வது? :)). ஜெயலிலதாவும் சட்ட மன்றதிற்கு வராத நிலையில் 6 நாட்கள் பேருக்கு ஒன்றிரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு., கடைசி 7 ஆம் நாளில் ஒட்டுமொத்தமாக ஒரேநாளில் 24 மானியங்கள், 23 மசோதாக்களை எதிரில் எதிர்கட்சிகள் இல்லாத நிலையில் நிறைவேற்றி சாதனை புரிந்தது அதிமுக ஆட்சி. அன்று ஆடு-கோழி பலியிட தடை சட்டம் வரைதான் ஏனோ தானோவென்று விவாதம் நடைபெற்று (யாருடன் விவாதித்தார்களோ?) அச்சட்டத்தை ரத்து செய்தனர். அப் புனித நாளில் கூட மத மாற்றத் தடை சட்டத்தை திரும்ப பெறுவது பற்றிய பேச்சில்லை. ஆனால் அச்சட்டம் 2004 லிருந்தே நடைமுறையில் இல்லை என்கிறார் ஜெயலலிதா., சட்ட சபையினரின் அனுமதி பெறாமல் ரத்தான சட்டத்தை சட்ட சபையில் வைத்து ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லையென சுப்ரீம் கோர்ட்டே 2005 ல் கூறியிருக்கிறது அதை அவமதிக்கிறீர்களா என்கிறார் ஜெயலலிதா. அப்படியென்றால்., மற்ற சட்டங்களெல்லாம் சட்ட மன்றத்தில் வைத்து அவசர, அவசரமாக திரும்பப் பெறப்பட்டது ஏன்?. அதே போல் மத மாற்றத் தடை சட்டத்தையும் திரும்பப் பெற தடுத்தது எது?.

கலைஞர் சொல்லுவது போல்., சாவில் சந்தேகம் இருந்தால் தோண்டிப் பார்த்து மீண்டும் புதைப்பதில் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.