Thursday, May 04, 2006

தேர்தல் அலசல் - 2006 -நீலகிரி


நீலகிரி யாருக்கு?

நீலகிரி : மொத்தம் 3 தொகுதிகள்.

1.கூடலூர் 2.ஊட்டி 3.குன்னூர்

1.கூடலூர் :
கா.ராமச்சந்திரன் (திமுக) - (கூட்டணி பலம் ++)
மில்லர் (அதிமுக) - அமைச்சர் - சுற்றுலாத்துறை.

கூடலூர் சுற்றுலாத்துறை அமைச்சர் மில்லரின் தொகுதி. இம்முறையும் அவர்தான் இங்கு நிற்கிறார். இவரின் மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. சுற்றுலா தளத்திலிருந்து போன இவருக்கு அந்தத் துறையே கிடைத்துள்ளது. இருப்பினும் வாக்குறிகள் எதையும் நிறைவேற்றவில்லை. திமுக சார்பில் இராமசந்திரன் நிற்கிறார். சிபிஐ, சிபிஎம்க்கு இங்கு சிறிது பலமுண்டு. கூட்டணி பலம் கொண்டு வெல்லப்போவது திமுகதான்.

2.ஊட்டி :
பி.கோபால் (காங்கிரஸ்) - (கட்சி பலம், கூட்டணி பலம் +)
கே.என். துரை (அதிமுக)
காங்கிரஸ் தொகுதி. கடந்த 7 முறை நடந்த தேர்தல்களை கணக்கில் கொண்டால்., 5 முறை காங்கிரஸ் வென்றிருக்கிற்து. 1 முறை திமுக 1 முறை அதிமுக. கடந்த முறை இத்தொகுதியில் வென்றதும் காங்கிரஸ் ஹெச்.எம்.ராஜூதான். இவர் இத்தொகுதியில் 4 முறை போட்டியிட்டு 3 முறை வென்றிருக்கிறார். தற்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் பி.கோபால். ஊட்டியின் மத்தியப் பகுதியில் இக்கோடையில் சுற்றுலா சென்ற அனைவரும் குதூகலித்துக் கொண்டிருக்க., சுற்றியிருக்கும் ஊர்களிலோ தேயிலை வீழ்ச்சியால், வறுமையில் வாடும் குடும்பங்களே அதிகம். இவர்களைப் பற்றிப் பேச 10 மாகாஸ்வேதாதேவிகள் வேண்டும். எத்தனை பேசினாலும் என்ன மாற்றம் வந்துவிடும்?. தமிழ் நாட்டில் மட்டும் மொத்தம் 36 வகையான மலைவாழ் இன மக்கள் வாழ்கின்றனர். விடுதலை கிடைத்து 50 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னும் இவர்களுக்கு தேர்தலில் வெறும் 4 இடங்கள். அதையும் யார் யாரோ வந்து நான் மலைசாதி என பொய் பிறப்புச் சான்றிதழ் கொடுத்து, போட்டியிட்டு பதவிகளை அனுபவிக்கும் நிலையே உள்ளது. ஊட்டியில் அதிகமுள்ளது படுகர் இனம். காங்கிரஸ் வேட்பாளருக்கு கூட்டணி ஆதரவுடன் சொந்த கட்சி ஆதரவும் உள்ளது. அதிமுகவிற்கு மலைவாழ் மக்களின் ஓட்டுக்கள் கிடைக்க படுகர் இனத்தை சேர்ந்த ஒருவரையே நிறுத்தியிருக்கிறார்கள். ஓட்டுக்கள் சிதறலாம் எனினும் தேயிலை விவசாயிகளின் உற்பத்திக்கு உரிய விலை கிடைக்க மத்திய அரசிடம் வ்லியுறுத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கை கூறுவதும், கூட்டணி பலமும் காங்கிரஸ்க்கே மீண்டும் இத்தொகுதி.
3.குன்னூர் (தனி):
அ.சவுந்திர பாண்டியன் (திமுக)
எம்.செல்வராஜ் (அதிமுக) - (பிரச்சாரம் +)

கே.கந்தசாமி காங்கிரஸ் எம்.எல்.ஏ சிட்டிங். தொகுதி திமுகவிற்குப் போயிருக்கிறது. சவுந்திரபாண்டியன் என்கிற புதுமுக வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். உள்ளுர் உடன்பிறப்புகள் ஆதரவளிக்கவில்லை. அதிமுக சார்பில் எம்.செல்வராஜ் நிற்கிறார். இங்கு அதிமுக வெல்லவே அதிக வாய்ப்பு.
நீலகிரி நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
தேனி மாவட்டம்
நாகை மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
தஞ்சை மாவட்டம்
கரூர் மாவட்டம்
தருமபுரி மாவட்டம்
ஈரோடு மாவட்டம்

3 comments:

ஜெயஸ்ரீ said...

ஊட்டி பெரும்பாலும் காங்கிரஸ் கோட்டையாகவே இருந்துள்ளது. ராஜு இந்த முறை போட்டியிடாதது ஏன் என்று தெரியவில்லை. தங்கள் கணிப்பு சரி என்று நானும் நினைக்கிறேன். காங்கிரஸ் வெல்ல வாய்ப்புகள் அதிகம்.

ஜெயஸ்ரீ said...

தேயிலைக்கு உரிய விலை கிடைக்காத்தால் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. தி.மு.க தனது வாக்குறுதியை நிறைவேற்றினால் பல நூறு குடும்பங்கள் பிழைக்கும்.

அப்டிப்போடு... said...

ஜெயஸ்ரீ,

நன்றிங்க. கொடுத்த வாக்குறுதிகளை அதிகம் நிறைவேற்றும் கட்சி திமுக. அப்படித்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது. எனவே இது நிச்சயம் நடக்கும்.