Thursday, May 04, 2006

தேர்தல் அலசல் - 2006 -கோயம்புதூர்


கோவை யாருக்கு?


கோயம்புதூர் : 1.மேட்டுப்பாளையம் 2.பொங்கலூர் 3.தொண்டாம்புத்தூர் 4. அவினாசி 5.போரூர் 6.சிங்க நல்லூர் 7.திருப்பூர் 8.கோவை கிழக்கு 9.கோவை மேற்கு 10.பல்லடம் 11.பொள்ளாச்சி 12.தரபுரம் 13.கிணத்துகடவு 14.உடுமலைப் பேட்டை 15. வால்பாறை

1.மேட்டுப்பாளையம் :
பி.அருண்குமார் (திமுக)
ஓ.கே.சின்னசாமி (அதிமுக) - (கட்சி செல்வாக்கு +)

மேட்டுப் பாளையம் தொகுதியில் அதிமுக அடுத்து திமுக அதற்கடுத்து காங்கிரஸ் என பலம் கொண்டவைதான். இங்கு அதிமுக சிட்டிங் ஏ.கே. செல்வராஜ் வேட்பாளரோ ஓ.கே.சின்னராஜ். திமுக தரப்பில் கடந்த 3 முறை போட்டியிட்டு ஒரு முறை வென்ற (1996) பி. அருண்குமாரே மீண்டும் நிற்கிறார். தேமுதிக சார்பில் இங்கு பெண் வேட்பாளர் சரஸ்வதி நிறுத்தப்பட்டுள்ளார். இங்கு அதிமுக வெல்லலாம்.

2.பொங்கலூர்:
எஸ்.மணி (திமுக) - (கூட்டணி பலம் +)
டி.பி.தாமோதரன் (அதிமுக)

பொங்கலூர் அதிமுக காங்கிரஸ் சற்று பலமாக உள்ள தொகுதி. அதிமுகவில் அமைச்சர் தாமோதரன் மீண்டும் களமிறங்குகிறார். அவர் தொகுதிக்கு நல்லது செய்தாரோ இல்லையோ ரரக்களுக்கு நல்லது செய்யவில்லை போல., அது பெரிய ரகளையாகிவிட்டது. இவர் நாய்க்கர் சமூகம் சார்ந்தவர்., கட்சியில் கவுண்டர் சமூக ரரக்களிடம் பாராமுகமாக இருப்பதாக புகார். அது ஒரு அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் எதிரொலித்து, அடிதடியில் முடிந்திருக்கிறது. அடிதடியெல்லாம் முடிந்த பிறகு, மந்திரி நிதானமாக எந்திரிச்சு இது திமுகவினர் சதி என்றாராம். எதிர்புறத்தில் பார்த்தால், திமுக வேட்பாளார் எஸ். மணி நிற்கிறார். இது காங்கிரஸ் எஸ்.ஆர்.பி தொகுதி. அவருடைய செல்வாக்கு உள்ள தொகுதி. அவர் இருமுறை தொடர்ந்து வென்ற தொகுதி. திமுகவிற்கு அவ்வளவு பலம் இங்கு இல்லையென்றாலும் வேட்பாளர் இங்கு அதிகமாக இருக்கும் கவுண்டர் சமூகம் சார்ந்தவர் இதனால் அதிமுக ஓட்டுக்களே கிடைக்கலாமாம். அடுத்துள்ளது காங்கிரஸ் செல்வாக்கு எனவே இங்கு திமுக மணி தொகுதியை பிடிக்கலாம்.

3.தொண்டாம்புத்தூர்
எஸ்.ஆர்.பாலசுரமணியன்(காங்கிரஸ்)
மு.கண்ணப்பன்(மதிமுக)

திமுகவும் அதன் தோழமை கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அகியவை பலமாக இருக்கிறது இத் தொகுதியில் மாநில அளவில் அரசியல் செய்யும் இரு தலலகல் மோதுகின்றன.. தமிழகத்தின் தற்போதய எதிர்கட்சி தலைவரும், தொகுதியின் தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏவும் ஆன காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பி மீண்டும் இங்கு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மாதிமுக சார்பில் அதன் பொருளாலரும், முன்னால் அமைச்சருமான மு.கண்ணப்பன் போட்டியிடுகிறார். அரசை எதிர் வரிசையிலிருந்து ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்ததனால் தொகுதிப் பக்கம் எஸ்.ஆர்.பி வருவதில்லை. இந்த வருத்தம் மக்களுக்கு உள்ளது. ஆனால் பல நல்ல வளர்ச்சிப் பணிகளை சென்னையிலிருந்து கொண்டேனும் செய்திருக்கிறார். இப்போதும் சீட் கிடைக்கவில்லையென்றால் சுயேட்சையாக நின்று ஓட்டைப் பிரிக்க வேண்டும் என்ற காங்கிரசின் கலாச்சாரத்தில் இத்தொகுதியில் இருந்தவர்களை சமாதனப்படுத்தி தனக்காக தேர்தல் பணி செய்ய அழைத்து அரவணைத்திருக்கிறார்.. மு.கண்ணப்பனுக்கு அதிமுக ஓட்டுவங்கி பலமாக உள்ளது. இது கிராமப்புறங்கள் நிரம்பிய தொகுதி. இவர்களுடன் தேமுதிக கோவில் பிள்ளையும், பாஜக சின்னராஜ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். பாஜக வேட்பாளர் ஓட்டுகள் பிரிப்பார். எனினும் கூட்டணிபலம் எஸ்.ஆர்.பிக்கு கைகொடுக்கும்.

4. அவினாசி
எம்.ஆறுமுகம் (சிபிஐ) - (கூட்டணி பலம் +)
ஆர்.பிரேமா (அதிமுக)

அவினாசி அதிமுக தொகுதி. சிட்டிங் எஸ்.மகாலிங்கம் இல்லாமல் ஆர்.பிரேமா என்பவர் அதிமுக சார்பாக நிற்கிறார். இவர் இத்தொகுதிக்கு புதுமுகம். திமுக இம்முறை சிபி ஐக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது. சிபிஐ எம்.ஆறுமுகம் 3 முறை இதே தொகுதியில் நின்று ஒரு முறை வென்றிருக்கிறார். தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர் கூட்டணி பலத்தோடு ஆறுமுகம் அவினாசியில் வெற்றி பெறலாம்.

5.பேரூர் :
நா.ருக்குமணி (திமுக)
எஸ்.பி. வேலுமணி (அதிமுக)
பேரூர் நகரங்களையும் அதிக எண்ணிக்கையில் கிராமங்களையும் கொண்ட தொகுதி. இங்கிருக்கும் கிரமங்களில் கட்சிக் கொடிகளில்லை., சுவர்களில் சின்னங்கள் இல்லை ஏன் மக்கள் ஓட்டுக்கேட்டு யாரையயும் உள்ளே வரவே அனுமதிப்பதில்லை. அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத இக்கிராமங்களில் அதைச் செய்துத்ருகிறேன் என்று சொல்லிச் சொல்லி ஓட்டு வாங்குபவர்கள் செய்வதில்லை. பேரூரில் திமுகவும், அதிமுகவும் சம்மான பலம் பெற்ற தொகுதி. இங்கு குனியமுத்தூர் நகராட்சித்தலைவர் எஸ்.பி வேலுமணி அதிமுக சார்பில் நிற்கிறார். குனியமுத்தூரில் இவர் பலம் பொருந்தியவர். நலங்களும் செய்திருக்கிறார். திமுக சார்பில் நா.ருக்மணி நிற்கிறார். கூட்டணி ஒத்துழைப்பு இவருக்கு உள்ளது. தேமுதிக சார்பில் ராஜசேகர் என்பவர் நிற்கிறார். இங்கு திமுக கூட்டணியுடன் இருக்கும்போது எடுத்த வாக்குகள் 96,507. அதிமுக கூட்டணியுடன் இருந்தபோது எடுத்த வாக்குகள் 94,607. அடிப்படை வசதிகள் இல்லாததால் அதிமுக எம்.எல்.மீது மக்களுக்கு கடும் அதிருப்தி. மதிமுகவுக்கு செல்வாக்கில்லை. காங்கிரஸ்க்கும் அப்படித்தான். ஆனால் சிபிஎம் பலம் சிறிதளவு உள்ளது. அதிமுகவிற்கு சாதகம் செய்யும் ஜனதாதளம் சிறிது பலம். கூட்டி, கழித்து, அடித்து, திருத்திப் பார்த்தால்... எனக்கு என்ன தெரியும்?. திமுகவிற்குத்தான் சாதகமாக உள்ளது.

6.சிங்க நல்லூர்:
சவுந்தராஜன்(சிபிஎம்) - (சொந்த கட்சி பலம், கூட்டணி பலம் ++)
காளான் (ஐ.என். டி.யூ.சி)
சிட்டிங் கேசி கருணாகரன் சிபிஎம். வேட்பாளரோ சிபிஎம் சவுந்தராஜன். எதிர் தரப்பில் ஐ.என். டி.யூ.சி சார்பில் காளான் நிற்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பலம் பெருந்திய மாவட்டம்தான். ஜனத தளத்தின் கையும் கொஞ்சம் ஓங்கியிருக்கிறது. ஆனாலும் கூட்டணி துணையோடு சிபிஐ (எம்)சவுந்தராஜன் வெல்லாம்.

7.திருப்பூர் :
கோவிந்தசாமி(சிபிஎம்) -(சொந்த கட்சி பலம், கூட்டணி பலம் ++)
சு.துரைசாமி (மதிமுக)
திருப்பூர் தொழிற் நகரம். தொழிற் இருந்தால் தொழிற் சங்கங்கள் இருக்காதா?., சங்கங்கள் இருந்தால் அங்கு எக்கட்சி செல்வாக்குப் பெற்றிருக்கும் எனத் தெரியாதா?. தொழிலாளி இருந்தால் முதலாளி இருந்தாகணுமே? இங்கு தேர்தல் களத்திலேயே அனைத்தும் உண்டு. சிட்டிங் அதிமுக சி.சிவகாமிக்கு இல்லாமல் மதிமுகவிற்கு சென்றுவிட்டது தொகுதி. சு.துரைசாமி போட்டியிடுகிறார். திமுக தரப்பில் சிபிஎம் கோவிந்தசாமி போட்டியிடுகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பலமான மாவட்டம் இது. மாநிலத் தொழிளார் பிரிவு செயலாளர் கார்த்திகேயன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். வாக்குகள் சிதறும். மதிமுக துரைசாமியோ வல்லிசு தொழிலதிபர். எனினும் சொந்த கட்சி பலம், கூட்டணி பலம், தொகுதிக்கு செய்த நல்லவைகள் எல்லாம்கொண்டு கோவிந்தசாமி சிபிஎம் சார்பில் இங்கு வெல்வார்.

8.கோவை கிழக்கு
பொங்கலூர் ந. பழனிச்சாமி (திமுக) - (கூட்டணி பலம் ++)
டி.கோபாலகிருஷ்ணன் அதிமுக

கோவை கிழக்கு சிபிஎம். காங்கிரசின் பலமான தொகுதி. அவ்விரு கட்சிகளிக்கில்லாமல் திமுக எடுத்துகொண்டது. திமுகவில் பொங்கலூர் ந.பழனிச்சாமி நிற்கிறார். 1980ப் பிறகு நடந்த அனத்து தேர்தல்களிலும் கூட்டணி கட்சிகளே நின்றிருக்கின்றன. இப்போதுதான் திமுக நிற்கிறது. திமுகவிற்கு பலமில்லாத தொகுதிதான் ஆயினும் கூட்டணி கட்சிகளுக்கு மிகுந்த பலம் இங்கு. கடந்தமுறை காங்கிரஸ் வென்று வந்திருக்கிறது, அரசு ஊழியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. பொங்கலூரைச் சேர்ந்தவர் இங்கு நிற்கிறார் என பிரச்சாரம் செய்கிறது அதிமுக தரப்பு. அதிமுக மட்டுமென்ன 1984ல் ல் கோவைத்தம்பி இங்கு போட்டியிட்டார். அவருக்குப் பிறகு இப்போது டி.கோபால கிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். அரசு ஊழியர்களின் ஓட்டாலும், காங்கிரஸ், கம்யுனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்காலும் இங்கு பழனிச்சாமி கோவைக் கிழக்கில் வெல்வார்.

9.கோவை மேற்கு :
மகேஸ்வரி (காங்கிரஸ்) - (கட்சி பலம் +)
தா.மலரவன் (அதிமுக)

திமுக, காங்கிரஸ் செல்வாக்குள்ள தொகுதி. சிட்டிங் காங்கிரஸ் மகேஷ்வரியே மீண்டும் நிற்கிறார். அதிமுக சார்பில் த.மலரவன் களமிறங்குகிறார். இங்கு சிறுபான்மையின மக்களின் ஓட்டுக்கள் வெற்றியைத் தீர்மானிக்கும். தேமுதிக சார்பில் ஏ.எஸ்.அக்பர் நிற்கிறார். எனவே சிறுபான்மையின மக்கள் ஒட்டுக்கள் சிதறும். விஜய் ரசிகர் மன்ரத் த்லைவர் யுவராஜ் என்பவர் சுயேட்சையாக பொட்டியிடுகிறார் (ஆரம்பிச்சாசா?). கூட்டணி பலத்தோடு மகேஷ்வரி இங்கு வெல்லலாம்.


10.பல்லடம்:
எஸ்.எஸ்.பொன்முடி (திமுக)
செ.ம.வேலுச்சாமி(அதிமுக)-பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை- தொகுதியில் செல்வவக்கு, கட்சி பலம் + )

அதிமுக செல்வாக்கு உள்ள தொகுதி. அமைச்சர் வேலுச்சாமியின் தொகுதி. தொகுதியில் இவருக்கு நல்ல பெயர். நிறைய நலத்திட்டங்கள் செய்துள்ளளர். கடந்த 5 ஆண்டுகள் அமமச்சராக இருந்தது, அதிமுக அமமச்சரவையிலேயே இவர் மட்டும் தான். இவர் மீண்டும் நிற்பதில் பல்லடம் ஒசெ பரமசிவன் முன்பு பிரச்சனை செய்தாலும் இப்போது விறுவிறு சென்று பிரச்சாரமும் செய்கிறார். திமுக சார்பில் கடந்த இருமுறை நின்று 1996 ல் வென்ற எஸ்.எஸ்.பொன்னுச்சாமி மீண்டும் போட்டியிடுகிறார். தொகுதியில் இரட்டை இலை செல்வாக்குடன் திகழ்வதாலும், அமைச்சரின் தனிப்பட்ட சாதனைகளாலும் பல்லடம் மீண்டும் வேலுச்சாமிக்கே.

11.பொள்ளாச்சி :
த. சாந்திதேவி (திமுக) - (கூட்டணி பலம் +)
பொள்ளாச்சி ஜெயராமன்(அதிமுக)
அதிமுகவிற்கு பலம் கூடுதலான தொகுதி. அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனே அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். தன் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறார். திமுக சார்பில் ஆனைமலை ஓசெ சாந்திதேவி நிற்கிறார். கடந்தமுறை திமுக சார்பில் போட்டியிட்ட தமிழ்மணி. 1996 ல் வென்ற ராஜூ போன்றவர்கள் இத்தொகுதியை எதிர் பார்த்து ஏமாந்ததால், பிரச்சாரம் சுணக்கமாய்த்தான் இருந்ததாம். சாந்திதேவி தொகுதியில் அதிகம் உள்ள கவுண்டர் ச்மூக வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வார். கிராமப்புற செல்வாக்கும் இருக்கிறது.ஜெயராமனுக்கு நகர் புற செல்வாக்கும் செட்டியார் சமூக ஓட்டுக்களும் கிடைத்தாலும் தென்னை விவசாயிகள் அதிகமுள்ள மாவட்டம் என்பதாலும், கூட்டணி பலத்தாலும் சாந்திதேவி முன் நிற்கிறார்.

12.தராபுரம் :
பெ.பிரபாவதி (திமுக) -(கூட்டணி பலம் +)
எம்.ரெங்கநயகி (அதிமுக)
பாமக சிட்டிங் சிவகாமி வின்சென்ட். தொகுதி திமுக பெ.பிரபாவதிக்கு. திடிரென அதிமுகாவில் ஐக்கியமான சிவகாமிக்குத்தான் சீட் முதலில் தருவதாக இருந்தது. இப்போது அதிமுக சார்பில் எம்.ரெங்கநயகி நிற்கிறார்.. பாமகவிற்கும், மதிமுகவிற்கும் சற்று பலம் இருக்கிறது. கூட்டணி பலம் கொண்டு நோக்கினால் இங்கு பெ.பிரபாவதி வெல்வார்.

13.கிணத்துகடவு ;
நெகமம் கந்தசாமி (திமுக) -(கூட்டணி பலம் ++)
தாமோதரன் (அதிமுக)
கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக சார்பாக சிட்டிங் எம்.எல்.ஏ தாமோதரன் மீண்டும் களமிறங்கிகிறார். தொகுதியில் மிக நல்ல பெயர் இவருக்கு. இங்கு அதிகம் இருக்கும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். தொகுதியில் உள்ள பெரும்பான்மையான கிராமங்களில் கூட்டு குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தி வெற்றி கண்டு இருக்கிறார். திமுக தரப்பில் சீனியர் அதிமுக தல நெகமம் கந்தசாமி நிற்கிறார். பலமுறை இத்தொகுதியில் வென்று வந்தவர் அவர். அப்போதைய அடாவடி அரசியல் இப்போது எடுபடுமா? என்ற கேள்வி இருந்தாலும். மதிமுக சப்போர்ட் இங்கு திமுகவிற்கு சாதகமாக இருப்பதாலும், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பும் உள்ளதாலும் நெகமத்தாருக்கே கிணத்துக்கடவு.

14.உடுமலைப் பேட்டை :
செ.வேலுச்சாமி (திமுக)
சண்முகவேல்(அதிமுக) -( கட்சி பலம் +)
அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ சண்முகவேல் மீண்டும் நிற்கிறார். திமுக சார்பில் செ.வேலுச்சாமி நிற்கிறார். சண்முகவேல் மீண்டும் வர வாய்ப்புள்ளது.
15. வால்பாறை:
கோவைத் தங்கம் (திமுக) - (கூட்டணி பலம், சொந்த செல்வாக்கு +)
சுசி.கலையரசன் (விசி)
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்திற்கும் வாக்கு வங்கி உண்டு இங்கு. காங்கிரஸில் சிட்டிங் எம்.எல்.ஏ. கோவைத் தங்கமே மீண்டும் போட்டியிடுகிறார். நல்ல பல சாதனைகள் செய்து தொகுதியை தன் பக்கம் வைத்திருகிறார். கூட்டணி பலமும் நன்றாக உள்ளது. எதிர்தரப்பில் விடுதலை சிறுத்தைகளின் மாநில பொதுச் செயலாளரான சுசி.கலையரசன் இங்கு நிற்கிறார். அதிமுகவினரின் ஆதரவு இல்லா நிலையில் தேர்தலைச் சந்திக்கிறார். கோவைத் தங்கம் மீண்டும் வெல்வார்.
கோவை நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
தேனி மாவட்டம்
நாகை மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
தஞ்சை மாவட்டம்
கரூர் மாவட்டம்
தருமபுரி மாவட்டம்
ஈரோடு மாவட்டம்
நீலகிரி மாவட்டம்

No comments: