Thursday, May 04, 2006

தேர்தல் அலசல் - 2006 -ஈரோடு


ஈரோட்டில் வெல்லப் போவது யார்?


ஈரோடு : 1.சத்திய மங்கலம் 2.பவானிசாகர் 3. மொடக்குறிச்சி 4.அந்தியூர் 5.கோபி 6.பவானி 7.ஈரோடு 8.பெருந்துறை 9.வெள்ளக்கோவில் 10.காங்கேயம்

1.சத்திய மங்கலம்:
எஸ்.பி. தர்மலிங்கம் (திமுக) - (கூட்டணி பலம் +)
டி.கே.சுப்ரமணியன் (மதிமுக)

சத்தியமங்கலம் இரு கழகங்களுக்கும் சமமாகவே வாய்ப்பளிக்கும் தொகுதி. அதிமுக கேந்தசாமி சிட்டிங் எம்.எல்.ஏ. இம்முறை மதிமுகவிற்கு கொடுத்திருக்கிறார்கள் இத் தொகுதியை. 2001 சட்ட மன்றத் தேர்தலில் இத் தொகுதியில் தனித்து நின்று 16,486 வாக்குகள் பெற்ற டி.கே சுப்ரமணியந்தான் இம்முறையும் களமிறங்குகிறார். இவர் தொகுதிக்கு நன்கு அறிமுகமான முகம். தவிர இதே தொகுதியில் 3 முறை திமுக சார்பில் நின்று., ஒடுமுறை வென்று எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார். சத்திய மங்கலத்தை முதன்மைத் தொகுதியாக்குவேன் என்றெல்லாம் மதிமுகவிற்கு இவ்விடம் கிடைக்குமென உறுதியாக எண்ணிக்கொண்டு பிரச்சாரம் பலமாகவே இருக்கிறது. ஆனால் வீரப்பன் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்கு அதிமுகவின் மேல் கோபமும் இருக்கிறது. அது இவரின் வாக்குகளைப் பாதிக்கலாம். மலை மக்களின் ஓட்டுக்கள் அப்படியே தனக்கு கிடைக்குமென நினைத்து திமுக தர்மலிங்கம் என்ற வேட்பாளரைக் களமிறக்கியுள்ளது. திமுக பிரச்சாரம் கொஞ்சம் மந்தம்தான். ஆனால் மலை வாழ் மக்களது குறைகள் கேட்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும், அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று திமுக கூறி வருவதாலும், கூட்டணி பலத்தாலும் தர்மலிங்கம் சத்தியமங்கலத்தில் வெல்வார்.
2.பவானிசாகர் :
ஜீவா ஓ.சுப்ரமணியம்(திமுக) - (கூட்டணி பலம் +)
சிந்து ரவிச்சந்திரன் (அதிமுக)
சிட்டிங் அதிமுக பி.சிற்றம்பலம். தற்போது நிற்பது சிந்து ரவிச்சந்திரன். பவானிசாகர் அதிமுகவிற்கு சாதகமான தொகுதிதான். திமுக சார்பில் முதலில் வேட்பாளரென அறிவிக்கப்பட்டது கீதா நடராஜன். பிறகு அதை மாற்றி ஜீவா என அறிவித்தது திமுக. இதனால் உடன்பிறப்புகளுக்கு உற்சாகம் இல்லை. சிந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்த சிந்துவை இறக்கியிருக்கிறார்கள். இத் தொகுதி மட்டும் அதிக அளவில் வசிக்கும் வேட்டுவ கவுண்டர்கள் ஓட்டுக்கள் இதனால் பாதிக்கப்படும். இச்சமூக ஓட்டுக்கள் விழுந்தால், கூட்டணி பலத்துடன் திமுக வெல்லும்.

3. மொடக்குறிச்சி:
ஆர்.எம்.பழனிச்சாமி (காங்கிரஸ்)
வி.பி.நமச்சிவாயம் (அதிமுக) - (கட்சி பலம் +)
மொடக்குறிச்சியும் அதிமுக செல்வாக்குள்ள தொகுதி. சிட்டிங் ராமசாமிக்கு சீட்டில்லை. நமச்சிவாயம் நிற்கிறார். எதிர்புரத்தில் ஆர்.எம். பழனிச்சாமி காங்கிரஸ். தேமுதிக சார்பில் விக்டோரியா நிற்கிறார். இங்கு அதிமுக வெல்லவே அதிக வாய்ப்புள்ளது.

4.அந்தியூர்:
எஸ்.குருசாமி(திமுக)
மு.சுப்ரமணியம் (அதிமுக) - (கட்சி பலம் +)
அதிமுக பலம், திமுக அதற்கடுத்தபடியாக, பாமக செல்வாக்குள்ள தொகுதி. காங்கிரஸ் கடந்த எழு தேர்தல்களில் இங்கு நிற்கவில்லை. சிட்டிங் எம்.எல்.ஏ. பாமக ஆர்.கிருஷ்ணன். போட்டியிடுவது திமுக எஸ்.குருசாமி. அதிமுக தரப்பில் மு.சுப்ரமணியம். குக்கிரமங்கள் என்று சொல்லிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் இருக்கும் கிராமங்களை பார்த்திருக்கிறோம். அந்தியூர் தொகுதியில் உள்ள கிரமங்கள்தான் உண்மையிலேயே குக்கிராமங்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத கிராமங்கள். இங்கு அதிமுக வரவே அதிக வாய்ப்பு.

5.கோபி:
வெங்கிடு மாணிமாறன்(திமுக)
செங்கோட்டையன் (அதிமுக) - (தொகுதியில் செல்வாக்கு, கட்சி பலம் +)
கோபியும் அதிமுக பலமான இடம். முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் தொகுதி. 5 முறை இங்கு தேர்தலில் நின்று இருக்கிறார் செங்கோட்டையன். 4 முறை வெற்றி பெற்று இருக்கிறார். தற்போதும் நிற்கிறார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் மறுவாழ்வு. கடந்த முறை அதிமுக சார்பில் இங்கு நின்று, வென்றவர் எஸ்.எஸ்.ரமணீதரன். அப்பக்கம் திமுக முன்னால் எம்.எல்.ஏ வெங்கிடுவின் மகன் மணிமாறன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்கிறார். ஜெ. பிரச்சாரத்திற்கு போகும்போதெல்லாம் முன்னால் செல்லும் செங்கோட்டையன் தன் தொகுதியில் பிரச்சாரம் சரிவர செய்வதில்லையாம். தேமுதிக சார்பில் நடராஜன் போட்டியிடுகிறார். பணபலமும் பிரச்சாரமும் இத்தொகுதியை அதிமுகவிற்கு கொடுக்கும்.

6.பவானி :
கேசி கருப்பண்ணன் (அதிமுக) - (கட்சி பலம் +)
கே.வீ.இராமநாதன் (பாமக)
பவானி அதிமுக தொகுதி. இங்கு அதிமுகவில் கேசி கருப்பண்ணனும், பாமக சார்பிக் கே.வீ. ராமநாதனும் போட்டியிடுகிறார்கள். அதிமுக கருப்பண்ணந்தான் சிட்டிங் எம்.எல்.ஏ. ஜெ. பிரச்சாரத்திற்கு போகும்போது அவரிடமே இவர் தொகுதிப் பக்கமே வரவில்லையென்று பெண்கள் சொல்ல, பிறகு கருப்பண்ணனின் நிலைமைய நீங்களே கற்பனை பண்ணிக்குங்க. ஆனாலும் தொகுதியில் சில வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களிடம் நல்ல பெயரும் வைத்திருக்கிறார். பாமக இத்தொகுதியில் 1996 ல் தனித்து நின்று 18,768 வாக்குகள் எடுத்திருக்கிறது. இப்போது இதில் நிச்சயம் முன்னேற்றமிருக்கும்., அதிமுக அதிக முறைகள் இங்கு வென்றிருக்கிறதே தவிர, அதே தேர்தலில் இங்கு தனித்து நின்று அதிமுக பெற்ற வாக்குகள் 28,427 தான் மதிமுகவிற்கு பலமில்லாத தொகுதி, விசிக்களுக்கும் அப்படியே. இதை வைத்து கணித்தால் பாமகவிற்கு சாதகம் இருக்கிறது என்றாலும் உறுதியாக சொல்லமுடியவில்லை. எனவே இப்போதைக்கு இத்தொகுதி அதிமுகவிற்கு.

7.ஈரோடு :
என்.கே.கே.பி.ராஜா (திமுக) -(கூட்டணிபலம் +)
இ.ஆர்.சிவக்குமார் (அதிமுக)
ஈரோடும் கரூரைப் போல இரு விவசாய, தொழிற் நகரம். மஞ்சள் விளைச்சலில் முதன்மையான இடம். கைத்தறி, விசைத்தறிகளின் உலகம். ஈரோடு தொகுதியும் சொல்லப்போனால் அதிமுக சர்போர்ட் தொகுதிதான். கடந்த 7 தேர்தல்களில் 5 முறை அதிமுக வந்திருக்கிறது 2 முறை திமுக வந்திருக்கிறது. இம்முறை திமுக வேட்பாளர் என்.கே.கே.பெரியசாமி மகன் ராஜா. கடந்தமுறை பெரியசாமி நின்றார். 1996ல் இப்பகுதி எம்.எல்.ஏ அவர். அதிமுகவில் சிட்டிங் கே.எஸ் தென்னரசுவை விட்டுவிட்டு சிவக்குமார் என்ற வேட்பாளர் நிற்கிறார். எனவே தென்னரசு அமைதியாகிவிட்டார். இவர் ஆதரவாளர்களும் அதே. முன்னால் அமைச்சர் முத்துச்சாமி அதிமுகவிற்கு ஆதரவாக களத்தில் இறங்கி பிச்சாரம் செய்கிறார். அமைச்சர் பி.சி. ராமசாமியும் தற்போது பிரச்சாரக்களத்தில் இறங்கிவிட்டார். இப்பகுதியில் நெசவாளர்களை வாட்டி எடுத்த வரி பிரச்சனையை (சென் -வாட் ) திமுக தீர்த்ததால் நெசவாளர் ஓட்டுக்கள் திமுகவிற்கே. தேமுதிக சார்பில் அக்கட்சியின் கொ.பசெ. சந்திரக்குமார் போட்டியிடுகிறார். கூட்டணி பலமில்லை அதிமுக வேட்பாளருக்கு. திமுக இங்கு கூட்டணி பலத்தோடு உள்ளதால் வெல்லும்.

8.பெருந்துறை :
என். பெரியசாமி (சிபிஐ) - (கூட்டணி பலம் +)
பொன்னுதுறை (அதிமுக)
கடந்த 7 தேர்தல்களில், 6 முறை அதிமுக இத்தொகுதியில் வென்றிருக்கிறது. 1 முறை சிபிஐ வென்றிருக்கிறது பெருந்துறையில். ஆனால் மதிமுக மற்றும் விசிக்களுக்கு போதிய பலமில்லை. தற்போதய எம்.எல்.ஏ, கே.எஸ். பழனிச்சாமி அதிமுக சார்பில் தற்போது சேர்மன் பொன்னுதுரை களமிறக்கப்பட்டுள்ளார். எனவே உட்கட்சி பூசல்களும் அதிகம். 1996 ஆல் நின்று இங்கு வென்ற சிபிஐ என்.பெரியசாமி மீண்டும் இத்தேர்தலில் நிற்கிறார். சிபிஐ க்கு இத்தொகுதியில் நற்பெயரும், நல்ல அறிமுகமும் இருக்கிறது. கூட்டணி பலம் சிபிஐ பெரியசாமி வெற்றி பெறலாம்.

9.வெள்ளக்கோவில்:
எம்.பி.சாமிநாதன் (திமுக) - (கட்சி செல்வாக்கு, கூட்டணி பலம் +)
வி.பி.பெரியசாமி (அதிமுக)
திமுகவும், அதிமுகவும் சமமான பலம் பெற்ற வெள்ளக்கோவிலில்,இம்முறை, திமுகவும், அதிமுகவும் மோதுகிறது. திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசன், அதிமுகவின் துரை ராமசாமி போன்ற சீனியர்கள் நின்ற தொகுதி. திமுக வேட்பாளர் எம்.பி.சீனிவாசன் கடந்த 2 முறை இங்கு போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். இம்முறையும் அவரையே களமிறக்கியுள்ளது திமுக. தொகுதியில் மிக நல்ல பெஉயர் இவருக்கு. மத்திய அமைச்சர் சுப்புலட்சுமியின் செல்வாக்கும் திமுகவிற்கு உதவும். கடந்த முறை அதிமுக வி.பி பெரியசாமி போட்டியிட்ட தொகுதி இப்போது மதிமுக வசம். மதிமுக மாசெ கணேசமூர்த்தி வேட்பாளராக போட்டியிடுகிறார். போட்டி கடினம். கூட்டணி பலம், கட்சி செல்வாக்கு அனைத்தையும் வைத்துப் பார்த்தால் எம்.பி.சீனிவாசனுக்கு வாய்ப்புள்ளது.

10.காங்கேயம்:
விடியல் சேகர் (காங்கிரஸ்) - (கூட்டணி பலம் +)
என்.எம்.எஸ்.பழனிச்சாமி (அதிமுக)
அதிமுகவின் பலமான தொகுதி, 1991ல் ஜெ. போட்டியிட்டு வென்ற தொகுதி. சிட்டிங் செல்வி இல்லை.,இம்முறை என்.எம்.எஸ்.பழனிச்சாமி அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். திமுக இம்முறை தொகுதியை காங்கிரஸ்க்கு விட்டுக் கொடுத்திருக்கிறது. இப்பகுதி செல்வாக்குள்ள திமுக பிரமுகர் ராஜ்குமார் மன்றாடியார். இம்முறை விடியல் சேகர் காங்கிரஸ் சார்பில் களமிறங்குகிறார். விடியல் சேகர் ஆயிரம்விளக்கு தொகுதியில் கடந்தமுறை ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றவர். இரு வேட்பாளர்களுமே இப்பகுதியில் அதிகம் உள்ள கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகம் சார்ந்தவர்கள். அரசு கல்லூரி காங்கேயத்தில் வேண்டும் என்பது தொகுதி மக்களின் கனவு. குடிநீர்ப் பிரச்சனை உள்ள தொகுதி (எந்தத் தொகுதில இது இல்லாம இருக்குங்கிறிங்களா அதுவும் சரித்தான்!). விவசாயம், நெசவு இரண்டும் செழித்திருக்கும் தொகுதி. இங்கு மதிமுக பலமானதல்ல. மற்றும் பழனிச்சாமியும் தொகுதிக்குப் புதியவர். கூட்டணி பலம், கட்சி பலம் எல்லாம் சேர்ந்து இத் தொகுதியில் காங்கிரஸ் வர வாய்ப்புள்ளது.
பெரியார் பெரியார் மாவட்டம் முழுக்க அதிமுகவிற்கே. ஆதரவு இருக்கிறது. ஆனால் கடந்த ஆட்சியில் வந்த சென் - வாட் பூதம், கஞ்சித் தொட்டி எல்லாம் கணக்கில் கொண்டே தேர்தல் தீர்ப்பு அமையும். நெசவாளர்களுக்கு பல சலுகைகள் வழங்குகிறது கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில். திமுக நாடாளுமன்றத்திலிருந்து வென்று வந்த பிறகு அது வாக்குறுதி அளித்தபடி சென் - வாட் வரியை முழுதாக நீக்க மத்திய அரசை வலியுறுத்தி அதை செயல்படுத்தியது.
ஈரோடு நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
தேனி மாவட்டம்
நாகை மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
தஞ்சை மாவட்டம்
கரூர் மாவட்டம்
தருமபுரி மாவட்டம்

4 comments:

கமல் said...

இதையேதான் நானும் கணித்து வைத்திருக்கிறேன். கோபியில் செங்கோட்டையனை எதிர்த்து யார் நின்றாலும் வெல்வது கடினம். பவானி தொகுதி தேமுதிக வேட்பாளர் கோபால் என் பள்ளித்தோழர். என்கேகேபி ராஜாவின் உறவினர் என்பதால், திமுக ஓட்டுக்கள் பிரிய வாய்ப்புண்டு. ஆனால், கேசிகே-வுக்கே வாய்ப்புகள் அதிகம். ஓட்டு வித்தியாசம் குறைவாகவே இருக்கும்.

எப்படி எல்லாத் தொகுதி விவரங்களையும் திரட்டுகிறீர்கள்?

நன்றி
கமல்
www.varalaaru.com

Pot"tea" kadai said...

ஈரோடு, பெருந்துறை தொகுதிகள் அதிமுகவின் கோட்டையல்லவா? மேலும் ஈரோட்டில் "முத்துசாமி"யின் தனிப்பட்ட செல்வாக்கு அதிமுகவிற்கு சாதகமாகவே இருக்கும்.

அப்டிப்போடு... said...

கமல் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். 10 ஆண்டுகள் கழித்து செங்கோட்டையனுக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கிறது. என்ன செய்தேனும் அதை தக்க வைத்துக் கொள்வார் எனத் தான் நம்புகிறேன். கருப்பண்ணன் பாவம்...இன்னொரு முறையும் வென்றுவிட்டுப் போகட்டும். எனக்கு தனிப்பட்ட முறையில் அதிமுக அரசியல் செய்பவர்களில் ஒரு சிலரின் அரசியல் மிகப் பிடிக்கும். ஒரு தடவ வென்றால்... அடுத்து எழுப்பறது ரொம்ப கஸ்டம். தேர்தல் நேரத்தில் அவர்கள் சுறுசுறுப்பு எல்லாம். அப்படித்தான் இருக்கணும். ஆனால் கட்சி என்றால்... கலைஞர் கட்சிதான். நல்ல ஆட்சி வேண்டுமென்றால் திமுக வே இடம் இப்போதைக்கு.

அப்டிப்போடு... said...

தம்பி, ஈரோடு மாவட்டம் முழுவதுமே அதிமுக கோட்டைதான். முத்துசாமியெல்லாம் ஒரு காலத்தில் அதிக செல்வாக்கோடு வலம்வந்த இடம்தான். இப்போது வேறு கதை.