Wednesday, May 03, 2006

தேர்தல் அலசல் - 2006 -தருமபுரி

வெற்றி தருமா தருமபுரி?
தருமபுரி : மொத்தம் 10 தொகுதிகள்

1.ஓசூர் 2.தளி 3.கிருஷ்ணகிரி 4.காவேரிப் பட்டினம் 5.பாலக்கோடு 6.பென்னாகரம் 7.பர்கூர் 8.தருமபுரி 9.மொரப்பூர் 10.அரூர்.

1.ஓசூர் :
கே.கோபிநாத் (காங்கிரஸ்) - (கட்சி பலம், கூட்டணி பலம் +++)
கம்பங்கி ராமையா(அதிமுக)
ஓசூர் காங்கிரஸ் தொகுதி. இத்தொகுதியில் எப்போதும் காங்கிரஸ்க்கும், ஜனதா தளத்துக்கும்தான் போட்டியிருக்கும். கடந்தமுறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற கே.கோபிநாத், தற்போதைய எம்.எல்.ஏ தான் இப்போதும் நிற்கிறார். இத்தொகுதியில் இருமுறை சுயேச்சையாக நின்று காங்கிரசுடன் மோதி கணிசமான வாக்குகள் பெற்ற (30909 - கடந்தமுறை) வி.சம்பங்கி ராமையா என்றவர் இப்போது அதிமுகவிற்காக நிற்கிறார். இதுவரை இத்தொகுதியில் அதிமுக போட்டியிட்டதில்லை. காங்கிரஸ், ஜனதாதளம், பாஜக (1முறை), பாமக (1 முறை) போட்டியிட்டு இருக்கின்றனர். மற்றவர்கள் எல்லாம் சுயேட்சை வேட்பாளர்கள் தான். இம்முறை கேப்டன் துணிவா இங்கேயும் ஆள் இறக்கியிருக்கிறார். அவர் பெயர் சந்திரன். இவர்களுடன் பாஜக சர்பில் வெங்கடேஷ்வரனும் நிற்கிறார். கட்சி பலத்துடனும், கூட்டணி பலத்துடனும் காங்கிரஸ் மீண்டும் வெல்லும்.


2.தளி :
நாகராஜ ரெட்டி (சிபி ஐ) - (கூட்டணி பலம் +)
என்.எஸ்.எம். கவுடா (மசா ஜனதாதளம்)
அதிமுக கூட்டணியில் கர்நாடக தேவகவுடாவின் ஜனதாதளம் கட்சியும் உள்ளது. தளி தொகுதியில் அக்கட்சி வேட்பாளர் என்.எஸ்.எம்.கவுடா நிறுத்தப்பட்டுள்ளார். தமிழகத்திலேயே இந்த ஒரு இடத்தில்தான் இக்கட்சி போட்டியிடுகிறது. எனவே அதிமுக இங்கு பிரச்சாரத்தில் மந்தம் காட்டுகிறது. சிபிஐ க்கோ சொந்தபலம், கூட்டணிபலம், குறிப்பாக பாமகவின் நல்ல ஒத்துழைப்பு ஆகியவை ஏறுமுகம் என்பதை காட்டுகிறது. கடந்த முறை வென்றவர் கஏ.வி.முரளிதரன் பாஜக. இம்முறையும் அவரையே நிறுத்தியுள்ளது பாஜக. தொகுதியில் செல்வாக்குள்ள இரு சுயேட்சை வேட்பாளர்களும்( ராமச்சந்திரன், பிரகாஸ்) வாக்குகளை பிரிப்பர். எனினும் நாகராஜரெட்டிக்கே தளி.

3.கிருஷ்ணகிரி :
டி.செங்குட்டுவன் (திமுக) - (கூட்டணி பலம் +)
கோவிந்தராஜ் (அதிமுக)

கடந்தமுறை வென்ற சிட்டிங் எம்.எல்.ஏ கோவிந்தராஜ் அதிமுகவிற்காக இம்முறையும் களத்தில். இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சாதிப் பாகுபாடு பார்ப்பவர் என உட்கட்சியில் இவருக்கு எதிர்ப்பிருந்தது. திமுகவில சீட்டு கேட்டுச் சென்ற வேப்பனாம்பள்ளி சீனப்பர் தலையில் அடிபட்டு மயங்கிவிழ சீட்டு மாசெ செங்குட்டுவனுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் இச்சம்பவத்தால் வேப்பனாம்பள்ளி ஓட்டுக்கள் இவருக்கு விழாது என்கிறார்கள். இவர் ஒரு அரசு ஊழியர் என்பதால் அரசு ஊழியர்களின் 'கோபம்' இவருக்கு ஓட்டாக மாறும். தேமுதிக வேட்பாளராக அன்பரசு இங்கு நிற்கிறார். கூட்டணி பலம் செங்குட்டுவனை கரை சேர்க்கும்.

4.காவேரிப் பட்டினம் :
த.அ.மேகநாதன் (பாமக) - (கூட்டணி பலம் +)
கே.பிமுனுசாமி (அதிமுக)
பாமகவிற்கென்று தனித்த செல்வாக்கு இங்கு இல்லைதான். சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ மீண்டும் நிற்கிறார். எனவே அதிருப்தியாளகள் அதிகம். அதிமுகவிற்கு வாக்கு வங்கி இருந்தாலும், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஜனதாதளம் தவிர இல்லை. ஆனால் பாமகாவிற்கோ கூட்டணியைக் கணக்கில் கொண்டால், திமுக, முன்பு கூட்டணி கட்சிகளுடன் நின்றபோது 72,945 வாக்குகள் இத்தொகுதியில் பெற்றது கடந்தமுறை அதிமுக 67,241 எடுத்திருந்தது. ஐயாயிரத்திற்கும் சற்று அதிகம். எனவே இங்கு மேகநாதன் வெல்லலாம்.

5.பாலக்கோடு :
கு.மன்னன் (பாமக) - (கூட்டணி பலம் +)
கே.பி.அன்பழகன் (அதிமுக) - -சிட்டிங் - அமைச்சர். செய்தி, விளம்பரம் மற்றும் உள்ளாட்சி.
பாலக்கோடு தொகுதியில் அதிமுக மாசெவும், அமைச்சருமான கே.பி அன்பழகன் போட்டியிடுகிறார். இத்தொகுதில் நன்கு அறிமுகமான முகமிவர். இங்கு அறிவிக்கப்பட்ட பல நலத்திட்டங்கள் செயல்படுத்தி, இத் தொகுதியை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றுள்ளார். இது இவருக்கு சாதகமானது, விளம்பரதுறை அமைச்சர் நன்கு இதை பயன்படுத்திக் கொள்வார். பாமக சார்பில் களமிறங்கும் தருமபுரி மேற்கு பாமக மாசெவான மன்னனும் தொகுதி மக்களுக்கு தெரிந்த முகம்தான். இத் தொகுதியில் சிறுபான்மையினர் அதிகமாகவும், அதற்கடுத்து வன்னியர்கள் அதிகமாகவும் அதற்கடுத்து ஆதிமக்களும் உள்ளனர். இதர சமூகங்கள் இருந்தாலும். சிறுபான்மை மக்களின் வாக்குகளே இங்கு வெற்றியை தீர்வு செய்யும். பாமக வேட்பாளருக்கு இரு சமூக மக்களின் ஆதரவு உண்டு. இரு கட்சி வேட்பாளர்களுமே தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வாய்ப்பு பாமக மன்னனுக்கு.

6.பென்னாகரம் :
பி.என்.பெரியண்ணன்(திமுக) - (கூட்டணி பலம் +)
வேற்றிவேல் (மசா ஜனதாதளம்) /அதிமுக

ஜிகே மணியின் தொகுதி. பலமான பாமக தொகுதி. இங்கு சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மீதும் மக்கள் கவனம் உள்ளது. முன்பு பாமகவிலிருந்து தற்போது திமுகவிலிருக்கும் பெரியண்ணன் திமுக சார்பாக நிற்கிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஆர்.வெற்றிவேல் நிறுத்தப் பட்டுள்ளார். பாமகவினர் உதவியுடன் வலம் வரும் முத்துலட்சுமி, எளிமையாக இருப்பதும் வீடு, வீடாகச் சென்று ஓட்டுக்கேட்பதும் அங்கேயே கிடைத்தை சாப்பிடுவதுமாக இருந்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்கிறார்கள். பத்திரிக்கைகள் மொழி வித்தியாசமில்லாம் வந்து அவரை பேட்டி கண்டு, படம் பிடித்துப் போகிறார்களாம். (கன்னட நிருபர்களும் தான்). பல கிராமங்களில் அவருக்கு முழுமையான ஆதரவு தெரிகிறது. திமுக வேட்பாளர் பாமகவிலிருந்து போனதால் அங்கும், பெரியண்ணன் மீது ஆதங்கம் கொண்ட திமுகவினரும் முத்துலெட்சுமியை ஆதரிக்கிறனர். இந்த உள்குத்துகளையெல்லாம் கடந்து பிரச்சாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் பெரியண்ணன். கட்சி செல்வாக்கும், கூட்டணி பலமும் இல்லாத நிலையில், அம்மாவின் சாதனைகளையும், பண பலத்தையும் நம்பி இருக்கிறது அதிமுக தரப்பு. தேமுதிக சார்பில் தண்டபாணி போட்டியிடுகிறார். எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்தால் பெரியண்ணனுக்கு கிடைக்கலாம் பென்னாகரம்.

7.பர்கூர்:

எம்.வி.வேற்றிச் செல்வன்(திமுக)
மு. தம்பிதுறை (அதிமுக) - (சொந்த கட்சி பலம் +)

ஜெயலலிதா முதலில் வென்ற தொகுதி. கடந்த 7 தேர்தல்களை எடுத்துக் கொண்டால் 1 முறைதான் திமுக வென்றிருக்கிறது. ஆனாலும் அது ஜெவை எதிர்த்து சுகவனம் கண்ட வெற்றி. திமுக கூட்டணியுடன் நின்ற போது வாங்கிய வாக்குகளை விட அதிமுக அதிகம் பெற்றிருக்கிறது. மதிமுகவிற்கு இத் தொகுதியில் பலமில்லை, விசிக்களுக்கும் அப்படியே . அதேபோல் அப்பக்கம் பாமகவிற்கு பலமில்லை. எனவே கட்சியின் தனித்த செல்வாக்கினால் தம்பிதுறைக்கே மீண்டு கிடைக்கலாம் பர்கூர். ஆனால் அவரின் மீதும் கடுமையான அதிருப்தியுள்ளது மக்களுக்கு.
8.தருமபுரி :
வேலுச்சாமி (பாமக) - (கூட்டணி பலம் +)
வி.எஸ்.சம்பத் (மதிமுக)
கடந்தமுறை தருமபுரித் தொகுதியில் கே. பாரி மோகன் பாமக சார்பில் நின்றார். இப்போது பாமகவின் மாசெ வேலுச்சாமி போட்டியிடுகிறார். பாரி மோகன் தொகுதிக்கு என்ன செய்திருக்கிறார் என இவரிடம் கேட்கிறார்கள் மக்கள்.மட்டத்தில் வேலுச்சாமிக்கு நல்ல பெயர் இருக்கிறது. இவர் திருமணம் செய்து கொள்ளாமல் பொது வாழ்வில் இருப்பவர். உள்ளுர்க்காரர் இல்லை எனப் பிரச்சாரம் செய்கிறது எதிர்தரப்பு இருந்தாலும் கட்சி ஆட்களும் திமுக முன்னால் எம்.எல்.ஏ மனோகரனும், பல பெரிய தலைகளும் சேர்ந்து விறு விறு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
எதிர்ப்பக்கம் மதிமுகவின் மாசெ சம்பத் போட்டியிடுகிறார். இது மதிமுகவிற்கு பலமில்லாத் தொகுதி. அதிமுகவின் சாதனைகளை பட்டியலிடுகிறார்கள். சம்பத்தும் கட்சி மட்டத்திலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயர் எடுத்தவர்தான், பணபலமும் இருக்கிறது. மாதிமுகவினர் உற்சாகமாக இருக்கின்றனர். அதிமுகவினர் அனைவரும் பென்னகரத்தில் போட்டியிடும் வெற்றி வேலுக்கு பிரச்சாரம் செய்ய போய்விட்டனர். சம்பத்துக்கும், வெற்றி வேலுக்கும் இருக்கும் தொழிற்பகையும் பாமகவிற்கு சாதகம் செய்யும். இருந்தாலும் நடிகர்கள் பட்டாளத்தை கொண்டு வந்து வண்ணமயமாய் பிரச்சாரம் செய்கிறது மதிமுக. சம்பத் வெற்றி பெற்றால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவோம் என்கிறது மதிமுக. தேமுதிக சார்பில் போட்டியிடும் பாஸ்கர் கணிசமாக வாக்குகளை பிரிப்பார். தர்மபுரியில் முகமிட்டு கூட்டணி கட்சியுடன் உற்சாகமாக தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் பாமக வேட்பாளர். இது பாமகவின் கோட்டை என்பதாலும், கூட்டணி பலத்தாலும் இங்கு வேலுச்சாமி வரவே அதிக வாய்ப்பு.

9.மொரப்பூர் :
வ.முல்லைவேந்தன் (திமுக) - (தொகுதியில் செல்வாக்கு கூட்டணி பலம் ++)

கெ.சிங்காரம்(அதிமுக)


மொரப்பூர் அதிமுகவிற்கு சற்று பலமான தொகுதி. திமுக சார்பில் இத்தொகுதியில் 2 முறை நின்று 1996ல் வென்ற முல்லைவேந்தன். அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ பி.பழனியப்பன்., தற்போது கே.சிங்காரம் என்பவர் அதிமுக சார்பில். இந்த கே.சிங்காரம் 1996ல் முல்லைவேந்தனை எதிர்த்து நின்று தோற்றவர். அதற்கு முன் அதிமுக சார்பில் நின்று ஒருமுறை வென்றிருக்கிறார். எனவே போட்டி கடுமையாக இருந்தாலும். தொகுதியில் முல்லை வேந்தனுக்கு உள்ள நல்ல பெயர், பழைய சாதனைகள், கூட்டணி பலம் எல்லாம் சேர்ந்து, முல்லை வேந்தனை மொரப்பூரில் வெற்றி பெற வைக்கும்.

10.அரூர்(தனி):
கோவேந்தன் (விசி)
டில்லிபாபு (சிபிஐ (எம்)) - (கட்சி பலம், கூட்டணிபலம் ++)

கம்யூனிஸ்ட் கட்சிகளின் பலமான தொகுதி. சிட்டிங் சிபிஐயைச் சார்ந்த் வி.கிருஷ்ணமூர்த்தி. இப்போது இது சிபிஐ எம் க்கு ஒதுக்கப்பட்டு டில்லிபாபு நிற்கிறார். எதிர் தரப்பில் விடுதலை சிறுத்தைகள் கோவேந்தன் நிற்கிறார். கூட்டணி கட்சியான அதிமுக தகுந்த ஒத்துழைத்துப்பு நல்குகிறது. இவர் ஓட்டைப் பிரிக்க பி.அர்சுனன் தேமுதிக களத்தில். திமுக, பாமக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும் இங்கு செல்வாக்கு உண்டு சிபிஎம், சிபி ஐக்கும் நல்ல எண்ணிக்கையில் வாக்குகள் கிடைக்கும் தொகுதி இது. எனவே டில்லிபாபு வெல்வார்.

தருமபுரி நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.

தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்

சிவகங்கை மாவட்டம்

விருதுநகர் மாவட்டம்

தேனி மாவட்டம்
நாகை மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம்
தஞ்சை மாவட்டம்

கரூர் மாவட்டம்

No comments: