Wednesday, May 03, 2006

தேர்தல் அலசல் - 2006 - திருவாரூர்


திருவாரூர் : மொத்தம் 5 தொகுதிகள்

1.நன்னிலம் 2.வலங்கைமான் 3.திருவாரூர் 4.மன்னார்குடி 5.திருத்துரைப் பூண்டி

1.நன்னிலம்:
பி.பத்மாவதி (சிபிஐ)
க.அறிவானந்தம்(அதிமுக)
நன்னிலம் காங்கிரஸ், திமுக செல்வாக்கு உள்ள தொகுதி. கடந்த இரு முறையும் அங்கு காங்கிரஸ் (தமகா) வென்றுள்ளது. இந்த முறை தொகுதி சிபிஐக்கு சென்றிருக்கிறது. சிபிஐ சார்பில் பி.பத்மாவதியும் அதிமுக சார்பில் க.அறிவானந்தமும் போட்டியிடுகின்றனர். சிபிஐக்கு இத்தொகுதி கிடைக்க வாய்ப்புள்ளது.

2.வலங்கைமான் (தனி):
சோம.செந்தமிழ்ச்செல்வன்(திமுக) - (கூட்டணி பலம்+)
இளமதி சுப்ரமணியன்(அதிமுக)
வலங்கைமான் அதிமுகவும் திமுகவும் சம பலம் கொண்ட தொகுதி. சிட்டிங் எம்.எல்.ஏ பூபதி மாரியப்பனுக்கு அதிமுகவில் சீட் கொடுக்காமல், முன்னால் எம்.எல்.ஏவின் மகள் இளமதி சுப்ரமணியனுக்கு கொடுத்திருக்கிறார்கள். திமுக சார்பில் சோமசுந்தரத்தின் மகன் சோம.செந்தமிழ்ச் செல்வன் நிற்கிறார். அதிமுகவிற்கென பலமான ஓட்டு வங்கியுள்ளது எனினும். மதிமுகவிற்கோ, விசிக்கோ அவ்வளவு மற்றமேற்படுத்தக்கூடிய அளவு பலமில்லை. இடையில் தேமுதிக சித்ராவும் நிற்கிறார். கூட்டணி கட்சிகளின் ஆதரவும், பலமும் செந்தமிழ் செல்வனுக்கு வலங்கை மானைத் தரும்.

3.திருவாரூர் :
உ.மதிவாணன் (திமுக) - (கூட்டணி பலம்+)
ஏ.தங்கமணி(அதிமுக) :

கலைஞர் ஊர். திருவாரூர் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளின் கூடாரம். அதிமுக 1984க்குபிறகு இப்போதுதான் இத் தொகுதியில் போட்டியிடுகிறது. சிட்டிங் அசோகன் சீட்டுக் கிடைக்காததால் அதிமுகவில் சேர்ந்து விட, அதிமுக பலம் சற்று அதிகரித்திருக்கிறது. திருவாரூர் கிராமப்பகுதிகளில் ஆதி மக்கள் வாக்கி வங்கி உள்ளது. நகரத்தில் பிள்ளை, முதலியார் மற்றும் முஸ்லீம் சமூக மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். திமுக சார்பில் போட்டியிடும் மதிவாணன் சுறுசுறுப்பாக களத்தில் பிரச்சாரம் செய்கிறார். நகர்புரத்தில் திமுக செல்வாக்கும், கிரம புறங்களில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் செல்வாக்கு இருப்பதாலும், கலைஞரின் ஊர் என்பதாலும் கலக்கமில்லை மதிவணனுக்கு.

4.மன்னார்குடி :
சிவ.புண்ணியம் (சிபிஐ) - (கூட்டணி பலம்+)
ஆர்.காமராஜ்(அதிமுக)
மன்னார்குடி செஞ்சட்டைத் தோழர்களின் கோட்டை. கடந்த இருமுறையும் சிபிஐதான் வென்றுள்ளது. இம்முறையும் வாய்ப்பு சிபிஐக்கே. கடந்த இருமுறை இதொகுதியில் வென்ற சிவபுண்ணியம் திமுக கூட்டணி சார்பில். தொகுதியில் நல்ல செல்வாக்குள்ளவர். நலங்கள் பல செய்தவர். அனைத்து கூட்டணி கட்சி பிரமுகர்கள் சூழ ஓட்டு வேட்டை நடத்துகிறாராம். எனவே கூட்டணி பலமும் நன்றாக உள்ளது. அவரை எதிர்த்து அதிமுக ஆர். காமராஜ் போட்டியிடுகிறார். மேதின கூட்டங்களில் எல்லாம் கொடியேற்றி வைத்து தொழிலாளர்கள் ஓட்டை கவர் முயன்று கொண்டிருக்கிறார். முழுக்க அதிமுகவின் பலத்தை மட்டுமே நம்பியிருக்கிறது அதிமுக கூட்டணி இங்கு. சிவபுண்ணியம் மீண்டும் வரலாம் இங்கு. (ஒருவரைப் பற்றி குறிப்பிடவேயில்லையே? என்கிறீர்களா? :):).

5.திருத்துரைப் பூண்டி:
கே.உலகநாதன் (சிபிஐ) - (கூட்டணி பலம்+)
ஏ.உமாதேவி (அதிமுக)
சிபிஐ - உலகநாதனுக்கு வாய்ப்புள்ளது.

No comments: