Wednesday, May 03, 2006

தேர்தல் அலசல் - 2006 - தஞ்சாவூர்

மணி எது?
தஞ்சாவூர் : மொத்தம் 10 தொகுதிகள்

1.திருவையாறு 2.பாபநாசம் 3.திருவிடைமருதூர் 4.கும்பகோணம் 5.தஞ்சாவூர் 6.ஒரத்தநாடு 7.திருவோணம் 8.பேராவுரணி 9.பட்டுக்கோட்டை
1. திருவையாறு:
துரை சந்திரமோகன் (திமுக)- (கூட்டணிபலம், தொகுதியில் செல்வாக்கு ++)
துரை. கோவிந்தராஜன் (அதிமுக)

இரண்டு கழகங்களும் மாறி, மாறி வென்ற தொகுதி. சிட்டிங் அய்யாரு வாண்டையார் களத்தில் இல்லை. அதிமுகவில் இம்முறை வாய்ப்பு துரை கோவிந்தராஜனுக்கு. 1984ல் இங்கு நின்று, வென்றுவிட்டு சென்றுவிட்டார். இப்போது மீண்டும் அழைத்து வந்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் துரை சந்திர சேகரன் 4 முறை இதே தொகுதியில் திமுக சார்பாக நின்று, இரு முறை வென்றிருக்கிறார். 1989 இத்தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு சிவாஜிகணேசன் தோற்றபோது (இதை எழுதிக் கொண்டிருக்கும் போது யார் யாரோ நியாபகத்துக்கு வரிசையா வாராங்க) வென்று எம்.எல்.ஏ ஆனவர் இவர்.. தொகுதிக்கு நன்கு அறிமுகம் ஆனவர். வெள்ள நிவாரணப் பணிகள், மற்றும் கொள்ளிடம் பாலம் பணிகள் அதிமுகவிற்கு சாதகம் என்றால் கூட்டணி, தொகுதியில் நல்ல பெயர், விவசாயிகள் நிறைந்த இத் தொகுதியில் அவர்கள் வாக்குப் பெற தேர்தல் அறிக்கை கைகொடுக்கும். பெருவாரியான முஸ்லீம் மக்கள் வசிக்கும் பகுதி அவர்கள் ஓட்டு முழுமையாக இங்கு திமுகவிற்குத்தான். இத்தனையும் வைத்துப் பார்த்தால் நிற்கும் இரண்டு துரைகளில் திமுக துரையே வெல்ல வாய்ப்பதிகம்.
2.பாபநாசம் :
ராம்குமார்(காங்கிரஸ்) -(கூட்டணிபலம் +)
இரா.துரைக்கண்ணு (அதிமுக)
கடந்த எழுமுறை நடந்த அத்தனை தேர்தல்களிலும் வென்றுள்ளது காங்கிரஸ். ராஜாராமன், கருப்பையா மூப்பனார் போன்ற பழம் பெரும் காங்கிரஸ் தலைவர்களின் இடம். இப்போதும் சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ எம்.ராம்குமாரே நிற்கிறார். அதிமுக சார்பில் நிற்பவர் துறைக்கண்ணு என்பவர். தன் பகட்டில்லாத அணுகு முறையால் மக்கள் மனதில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறார். ராம்குமாரின் மீது அதிருப்தி இருந்தாலும் கூட்டணி, காங்கிரஸ் செல்வாக்கு அதுவும் இத்தொகுதியில் வேறு கட்சிகளை விட்டதில்லை கதர்சட்டைகள் என்பதினாலும் ராம்குமாருக்கே மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்.

3.திருவிடைமருதூர் :
கோ.ஆலையமணி(பாமக)
ஆர்.கே.பாரதி மோகன்(அதிமுக)
திமுக நல்ல பலமும், காங்கிரஸ்க்கு மிதமான பலமும் உள்ள தொகுதி. இங்கு திமுக முன்னால் எம்.எல்.ஏ எஸ். ராமலிங்கம் கடந்த 7 முறைகளும் தேர்தலில் நின்று, 5 முறை வென்றுள்ளார். ஆனால் இம்முறை பாமக களமிறங்குகிறது இங்கு. பாமக சார்பில் அதன் முக்கியத் தலைவரான ஆலையமணி அதிருப்திகளையெல்லாம் கடந்து அனைவரையும் அரவணைத்து பிரச்சாரம் முழுவீச்சில் செய்கிறார்.., தொகுதியில் அனைத்து இடங்களையும் நன்கு அறிந்தவர். அதிமுக சார்பில் புதுமுகம் பாரதி மோகன் நிற்கிறார். அதனால் சிட்டிங் தவமணி ஏக கடுப்பில், சீட்டு கேட்டு ஏமந்த ஓசெ அசோக்குமர் போன்றோரே இவருக்கு பிரச்சனையாக உள்ளனர் திமுக பலமும், காங்கிரஸ்பலமும், ஆலையமணியின் உழைப்பும் அவரை திருவிடைமருதூரில் அமர வைத்து பாமகவிற்கு இங்கு ஒரு ஆரம்பம் கொடுக்கும்.

4.கும்பகோணம் :
கோ.சி.மணி (திமுக)
ராம.ராமநாதன் (அதிமுக)
கும்பகோணம் கோசி மணியின் கோட்டையென்று சின்னபிள்ளைங்களக் கேட்டாக் கூட சொல்லுமே, இதுக்கு ஒரு கணிப்பா?. இங்கு 3 முறை நின்று, அத்தனை முறையும் வென்று, இன்றும் நின்று கொண்டிருக்கிறார். இவருடன் எப்போதும் மோதும் அதிமுக ராமநாதன் இங்கு 3 முறை நின்று, 1 முறை வென்று 2 முறை தோற்றுள்ளார். ஒருமுறை வென்றதும் கோசி மணியை எதிர்த்தல்ல., ஜனத கட்சியை எதிர்த்து. பஸ், பள்ளிக்கூடம், கல்லூரி என இவர் சுற்றி ஓட்டுக் கேட்டுக் கொண்டிருக்க., கோசி ஏசி ல உட்கார்ந்து கையாட்டிகிட்டே ஓட்டு கேட்கிறார். இவர் கும்பகோணத்தில் செய்த மாற்றங்கள் என்றும் மக்கள் மனதில் நிற்கச்செய்யும். ராமநாதனுக்கு எதிரா பாஜக வேட்பாளர் கோதண்டராமன் நிற்கிறார் ஒட்டைப் பிரிக்க. தேமுதிகவும் குப்பல்.தேவதாஸை களமிறக்கி இருக்கிறது. எவ்வளவு பேர் எதிர்த்து நின்றாலும் கும்பகோணம் கோசி.மணிக்கே.

5.தஞ்சாவூர் :
என்.எஸ்.எம்.உபயத்துல்லா(திமுக) -சிட்டிங் -(கட்சி பலம், சொந்த செல்வாக்கு கூட்டணி பலம் +)
எம்.ரங்கசாமி(அதிமுக)

திமுகவின் செல்வாக்குள்ள தொகுதி. 4 முறை உபயத்துல்லா நின்று, 3 முறை வென்று 5 முறையாக இப்பொழுது களமிறங்கியுள்ளார். 5 ஆவது முறையும் இவர்தானா?, இவர் மகன் வேறு சரியில்ல என்ற எரிச்சலில் உபிக்கள் இருந்தாலும் தொகுதியில் செல்வாக்கு மிக்கவர் மக்களுக்கு வெகு நன்றாக அறிமுகமானவர் இதெல்லாம் அவர்களைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறது. கலைஞரின் தஞ்சை விசிட்டும் புது உற்சாகம்தர பற்றிக் கொண்டது தேர்தல் பிரச்சாரம் வேகமாக. அதிமுகவில் போட்டியிடும் ரங்க இவரளவில்லையென்றாலும் தோழியுன் கணவர் நடராஜனின் உறவினர். பணபலம் உள்ளவர். தஞ்சை அதிமுக கோஷ்டி அரசியலுக்கும் அப்பாற்பட்டவர். குடம் குடுக்கிறோம், சில்வர் வாளி கொடுக்கிறோம் கலக்கிக் கொண்டிறுக்கிறது அதிமுக. தேமுதிக சார்பில் சிவநேசனும் பாரதிய ஜனதா சார்பில் சவுரஷ்ட்ர சமூக ராமலிங்கம் போட்டியிடுகின்றனர். விவசாய மாவட்டமான தஞ்சையில் விவசாயக் கடன்கள் ரத்து, இலவச மின்சாரம் போன்ற சலுகைகளும், உபயத்துல்லாவின் தொகுதி செல்வாக்கும் திமுகவின் வாக்கு வங்கியும் சேர்ந்து இங்கு குறள் நெறிச் செல்வர் வெற்றி பெறுவார்.

6.ஒரத்தநாடு :
பி.ராசமாணிக்கம்(திமுக)
ஆர்.வைத்திலிங்கம் (அதிமுக) - சிட்டிங் - அமைச்சர் வனத்துறை மற்றும் சுற்றுச் சூழல் - (பணபலம் ++)

1996ல் இத் தொகுதியை வென்ற ராசமணிக்கம் இம்முறையும் திமுக சார்பில் களமிறங்குகிறார். அதிமுக சார்பில் வனம் மற்றும் சுற்றுச்சுழல் அமைச்சர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். மதிமுக எல்.கணேசனின் ஊருள்ள தொகுதி என்பதால் மதிமுக இத் தொகுதிக்கு முயன்றது. கிடைக்கவில்லை. எனவே மதிமுக அவ்வளவு அக்கறையாக வேலை செய்யவில்லை. தேமுதிக சார்பில் ரமேஷ் என்பவரும் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். அமைச்சரின் சாதனைகளும், மத்திய அரசு தர முன் வந்த கலைகல்லூரி கட்டுவதை புறக்கணித்தையும் மக்கள் கருத்தில் கொள்வர். வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக முன்னால் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு பிரச்சாரம் செய்கிறார். இதெல்லாவற்றிற்கும் மேல் அமைச்சரின் பண பலம் மீண்டும் அமர வைக்கும்.

7.திருவோணம் :
தா. மகேஷ் கிருஷ்ணசாமி(திமுக)
கு.தங்கமுத்து (அதிமுக)
அதிமுக சிட்டிங் சி.ராஜேந்திரனுக்கும் இல்லை, கடந்தமுறை இவரிடம் தோற்ற திமுக எம்.ராமச்சந்திரனுக்கும் இல்லை அதிமுக சார்பில் பழைய மாசெ தங்கமுத்துவும்., திமுக சார்பில், வழக்கறிஞரும், ஓசெ தங்கராஜ்வின் வாரிசுமான மகேஷ் கிருஷ்ணமூர்த்தி நிறுத்தப்பட்டுள்ளனர். எம்.ராமச்சந்திரன் 5 முறை இதே தொகுதியில் போட்டியிட்டு 2 முறை வென்றவர். இந்தமுறையும் உறுதியாக தனக்கு கிடைகுமென நம்பியிருந்தார். தொகுதி கிடைக்காததில் அவர் ஆதரவளர்கள் அதிருப்தி பிரச்சாரத்தை பாதிக்கிறது. அந்தப் பக்கமும் சிட்டிங் ராஜேந்திரன் தொகுதிகென்று எதுவும் செய்யாமல் சிட்டிங்லேயே இருந்தது பெரிய சறுக்கல் அதிமுகவிற்கு. மதிமுகவின் ஒத்துழைப்பும் போதுமானதாக இல்லை. இருந்தாலும் இங்கு காங்கிரஸ் பலமில்லாத தொகுதி (சிவஞானம் இருந்த போது செல்வாக்கிருந்தது., இப்போது குறைவுதான்) எல்லாவற்றையும் பார்க்கும்போது, அதிமுக இங்கு வெல்லலாம்.

8.பேராவுரணி :
எஸ்.சி.திருஞான சம்பந்தம் (காங்கிரஸ்) -(கூட்டணி பலம், கட்சியின் செல்வாக்கு ++)
எம்.வி.ஆர்.வீரக்கபிலன்(அதிமுக)
காங்கிரஸ் கடந்த 4 முறைகளாக வென்று கொண்டிருக்கும் தொகுதி. காங்கிரஸ் சார்பில் கடந்த முறை வென்ற திருஞான சம்பந்தமே மீண்டும் போட்டியிடுகிறார்.தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். அதிமுக சார்பில் நிற்கும் வீரகபிலன் தொகுதிக்கு புதுமுகம். அதுவும்தவிர கடந்த 4 முறைகளாக இங்கு அதிமுக போட்டியிட்வில்லை. எனவே கட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒருவரை நிறுத்தியிருந்தால் நன்றாக இருக்கும் என ரரக்களே புலம்புகிறார்களாம். இருந்தாலும் இத் தொகுதியில் அதிமுகவை மீண்டும் கொண்டு வர முனைப்புடன் பிரச்சாரம் செய்கின்றனர். பெரும்பான்மையாக முத்தரையர், தேவர் சமூக ஓட்டுகள் உள்ளன. இதைப் பிரிக்க தேமுதிக வேட்பாளர் பழனிவேலு கணிசமாக வாக்குகளை பிரிக்கும் பலத்துடன் உள்ளார். எது எப்படி இருந்தாலும் இது காங்கிரஸ் தொகுதி, சிட்டிங் எம்.எல்.ஏவே மீண்டும் நிற்கிறார். கூட்டணி கட்சிகளும் கலகலப்பாக வேலை செய்கின்றனர். இவை அனைத்தும் "காங்கிரஸ்க்கே..." கைகொடுக்கும்.


9.பட்டுக்கோட்டை:
என்.ஆர்.ரங்கராஜன் (கங்கிரஸ்)
சு.விஸ்வநாதன் (மதிமுக) - (பிரச்சாரம் +)

காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ என்.ஆர். ரங்கராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். கணிக்க முடியாததொரு தொகுதி. மதிமுக சேர்மன் ஜெயபாரதி நல்ல செல்வாக்குடன் உள்ள ஊர். பல நலத்திட்டங்களை செய்து மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளார். இது மதிமுக வேட்பாளர் விஸ்வநாதனுக்கு பலம் கூட்டும். அதிமுகவில் எழுந்த மறைமுக எதிர்ப்புகளையும் சமாளித்துவிட்டார். ரங்கராஜன் தன்னுடைய தொகுதி என்றும், வேளாளர் சமூக வாக்குகள் தனக்கு அப்படியே விழும் என்றும் நம்பிக்கொண்டு பிரச்சாரத்தில் நிதானமாக இருக்கிறார். தொகுதிக்கு நிறைய செய்திருக்கிறார்தான் எனினும் பிரச்சார வேகம் வேண்டும். தேமுதிக வேட்பாளர் செந்திலை ஆதரித்து விஜயகாந்த் வந்து பிரச்சாரம் செய்தார். பட்டுக்கோட்டை சுவமிநாதன் என்பவரை ஃபார்வர்டு பிளாக் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. களத்தில் அனைவரையும் முந்திக் கொண்டு பிரச்சாரத்திலும், மக்கள் வரவேற்பிலும் முன்னனியில் இருப்பது பம்பரம். விஸ்வநாதன் வரலாம் பட்டுக்கோட்டையில்.
திமுக -2 காங்கிரஸ் - 1 சிபிஐ -1
அதிமுக - 1
வெல்வதற்கு வாய்ப்புள்ளவர்கள் :
துரை சந்திரமோகன் (திமுக)
என்.எஸ்.எம்.உபயத்துல்லா(திமுக)
கோ.சி.மணி (திமுக)
ராம்குமார்(காங்கிரஸ்)
இளமதி சுப்ரமணியன்(காங்கிரஸ்)
எஸ்.சி.திருஞான சம்பந்தம் (காங்கிரஸ்)
கோ.ஆலையமணி(பாமக)
சு.விஸ்வநாதன் (மதிமுக)கு.தங்கமுத்து (அதிமுக)
ஆர்.வைத்திலிங்கம் (அதிமுக)
தஞ்சை நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
தேனி மாவட்டம்
நாகை மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்

No comments: