Wednesday, May 03, 2006

தேர்தல் அலசல் - 2006 - புதுக்கோட்டையாருக்கு கோட்டை ?

புதுக்கோட்டை : மொத்தம் 5 தொகுதிகள்

1. புதுக்கோட்டை 2. குளத்தூர் 3. ஆலங்குடி 4. திருமயம் 5. அறந்தாங்கி

1. புதுக்கோட்டை:
எம்.ஜாபர் அலி (திமுக) - (சிறுபான்மை மக்கள் வாக்குகள், கூட்டணி கட்சிகள் பலம் +)
ஆர். நெடுஞ்செழியன் (அதிமுக)

புதுக்கோட்டை காங்கிரஸ்க்கு சற்று பலமான தொகுதி. சிட்டிங் விஜய பாஸ்கருக்கு இம்முறை சீட் கிடைக்கவில்லையே என்ற கடுப்பு, மாவட்ட எம்.ஜியார் மன்ற பொருப்பாளர் செல்லத்துரைக்கோ போன முறைதான் விஜய குமார் எனக்கு ஏழறை இந்த முறை நீ வந்து கெடுத்தியான்னு சலிப்பு. அனைவரையும் ஒருவழியாக அரவணைத்து இழுத்துச் செல்வதற்குள் அதிமுகவின் பல ரரஸ் பாஜகக்கு வேலை பார்க்கத் துவங்கிவிட்டது. பத்தாத்திற்கு தொகுதியில் அதிகம் உள்ள கள்ளர் சமூகம், ஆதி மக்கள் சமூகம் இரண்டில் கள்ளர் சமூகத்தினிடம் மட்டும் வேட்பாளர் ஓட்டுக் கேட்பாதாக பிரச்சனை எழுந்துள்ளது. சரியென்று இதையும் சமாளித்தால் தொகுதியில் அடுத்ததாக அதிக அளவில் இருக்கும் முத்தரையர் ஓட்டுக்களைப் பிரிக்க அதிமுக யூனியன் சேர்மன் கருப்பையா த நண்பர் மாரிமுத்துவை சுயேட்சையாக களமிறக்குகிறார். இவருக்கு ரகுபதியின் ஆட்கள் துணை வேறு இப்படி பலவற்றால் நொந்து நூலாகி கொண்டிருக்கிறார் அதிமுக வேட்பாளர். திமுக ஜாபர் அலியோ சிறுபான்மை மக்கள் பலம், கூட்டணி கட்சிகள் பலம் என தெம்பாக வலம் வருகிறார். பாஜக சார்பில் துரை திவ்யநாதனும், தேமுதிக சார்பில் சவாங்கீரும் இங்கு போட்டியிடுகின்றனர். துரை திவயத்திற்கு திருநாவுக்கரசர் வேலை பார்ப்பதால் திமுக, அதிமுக கட்சிகளுக்கு நன்றாக ஒட்டுப் பிரியும். ஆனால் பாஜக வேட்பாளர் வெல்ல வாய்ப்பில்லையென்றுதான் நினைக்கிறேன். தற்போதைக்கு புதுக்கோட்டை ஜாபர் அலிக்கு சாதகம்.
2. குளத்தூர் (தனி):
சி.பரஞ்சோதி (திமுக) - ( கூட்டணி கட்சிகள் பலம் +)
ந.சுப்ரமணியன்(அதிமுக)
தனித்தொகுதியான குளத்தூர், இப்பக்கம், சிட்டிங் டாக்டர் கருப்பாயி இருமுறை அதிமுக சார்பில் நின்று ஒரு முறை வென்ற தொகுதி. இம்முறை இங்கு விராலிமலை அதிமுக ஒசெ ராஜேந்திரன் பரிந்துறைக்க ந.சுப்பரமணியன் என்ற அரசு ஊழியரை களமிறக்கி இருக்கிறது அதிமுக. உடையார் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் நிறுத்தியவரை நாம் ஆதரிப்பதா என மற்ற ஒசேக்கள்( அனைவரும் கள்ளர் சமூகம்) சுப்ரமணியத்திற்கு வேலை செய்ய சுணக்கம் காட்டுகின்றனர். அப்பக்கம் காங்கிரஸ் காலத்தில் நற்பெயரெடுத்த குளத்தூர் சின்னய்யாவின் வாரிசு பரஞ்சோதியை திமுக சார்பில் நிறுத்தியுள்ளார்கள். இவரைப் பரிந்துறைத்ததும் ஒரு ஒசெதான் அன்னவாசல் காந்திநாதன். தன் கட்சிபலமும் திகுதியில் தெரிந்த முகமென்பதும், கூட்டணியின் இணக்கமான உழைப்பும் பரஞ்சோதிக்கு குளத்தூரை பரிசளிக்கலாம்.


3. ஆலங்குடி:
எஸ்.இராஜசேகரன் (சிபிஐ) -( கூட்டணி கட்சிகள் பலம் +)
அ.வெங்கடாசலம்(அதிமுக)

ஆலங்குடியில் 1996ஆல் சுயேட்சையாக நின்று சிபிஐ எஸ்.ராஜசேகரனை வெற்றி கொண்ட வெங்கடாசலம் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் நின்று, இத் தொகுதி வென்று, அமைச்சருமானார். முத்தரையர் சமூக ஓட்டுக்களால் இருமுறை வென்ற இவர் இம்முறையும் இறங்குகிறார். இவரை எதிர்த்து 1996ல் நின்ற அதே எஸ்.ராஜசேகரன் நிற்கிறார். வெங்கடாசலத்துடன் பிரச்சனையுள்ள அதிமுக ராஜா பரமசிவம் சுயேட்சையாக நிற்பதால் முத்தரையர் வாக்குகள் பிரியும். அதிமுகவினரின் ஆதரவும் இவருக்கு முழுமையாக இல்லை. கூட்டணி பலத்தால் சிபி.எம் ராஜசேகரனுக்கு இம்முறை வாய்ப்புள்ளது.

4. திருமயம்:
சுப்புராம்(காங்கிரஸ்) - (தொகுதியில் செல்வாக்கு, கூட்டணி பலம் +)
எம்.இராதகிருஷ்ணன்(அதிமுக) - - அமைச்சர் மீன்வளம்.
எம்.ராதா மீண்டும் இத்தொகுதியில் நிற்கிறார். தொகுதியை காங்கிரசஸ்க்கு கொடுத்திருக்கிறது திமுக. கடந்தமுறை அமைசர் ரகுபதி திமுக சார்பாக இராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட தொகுதி. காங்கிரஸ் சுப்பாராம் தொகுதிக்கு புதிய முகம் என்றாலும் பிரச்சாரத்திற்கு கனம் கூட்ட பா.சிதம்பரம், ரகுபதி ஆகியோர் உள்ளனர். தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சமூக ஒட்டுக்களை காங்கிரஸ்க்குப் பெற்றுத் தர காங்கிரஸ் தலைவர் புஸ்பராஜ் இருக்கிறார். தவிர ராதா போனமுறை வாக்களித்து நிறைவேற்றாத வாக்குறுதிகள் தண்ணீர் பிரச்சனை தீர்ப்பேன், திருமயம் கோட்டையை சுற்றுலாத்தலமாக்குவேன் போன்றவை காங்கிரஸ் சுப்பாராஜ் மீது மக்கள் கவனத்தை வெகுவாக திருப்ப வைத்திருக்கிறது. இராதா கிருஷ்ணனுக்கோ இந்த வாக்குறுதிகளுடன் சேர்ந்து அதிமுகவில் அவரு சுயேட்சையாக நிக்கிறாரு, இவரு சுயேட்சையா நிக்கிறாருன்னு வருகிற தகவல்களை கேட்டு சரி பண்ணுவதும் மண்டையிடி. பா.ஜ.க கூட்டமைத்து கு.ப.கிருஷ்ணன் (தமிழர் பூமியாம்ல?, கட்சி பேரு) இங்கு நிற்கிறார். முத்த்ரையர் சங்க ஆதரவு இவருக்குண்டு. தேமுதிக முருகேசனும் சுறுசுறுப்பாக களத்தில் இருக்கிறார். இத்தொகுதியில் கூட்டணி பலம் அமைச்சரை இறக்கி, காங்கிரஸை அமர வைக்கும்.

5. அறந்தாங்கி:
உதயம் சண்முகம்(திமுக)
கார்த்திகேயன் (அதிமுக) - (கட்சி பலம் +)

திருநாவுக்கரசு கோட்டை, அதிமுக சார்பில் 6 முறை இத்தொகுதியில் போட்டியிட்டு 6 முறையும் வென்றார் திருநா. ஆனால் இம்முறை இவர் கவனம் புதுக் கோட்டையில் முகாமிட்டு இருக்கிறது. கடந்த தேர்தலிலும் எம் அதிமுக பி.அரசன் தான் வென்றுள்ளார் தற்போதைய எம்.எல்.ஏ. அதிமுக சார்பில் முதலில் பி.எம். பெரியசாமி அறிவிக்கப்பட்டு, பின் அதை மாற்றி தற்போது கார்த்திகேயன் என்பவரை அறிவித்து இருக்கிறது அதிமுக (செலவு செஞ்சு நொந்து போயிருப்பார்)., திவாகரனின் செல்வாக்கில் கார்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள். பெரியசாமி அகமுடையார் சமுகம், கார்த்திகேயன் கள்ளர் சமுகம். இப்ப இரு சமுகத்தில் யார் பெரியவர் என வந்து நிற்கிறது. எண்ணிக்கையில் பார்த்தால் அகமுடையார் ஓட்டுக்கள்தான் அதிகம். ஆனால் அவரை நீக்கியதால் விளைவு அறந்தாங்கியிலிருந்து ஆண்டிப்பட்டி வரைக்கும் திமுக வை ஆதரிப்போம் என தேவர் பேரவை அறிவித்திருக்கிறது. பஸ் மறியல் கூட நடத்தியிருக்கிறார்கள் இவ்வேட்பாளர் மாற்றத்தைக் கண்டித்து. இதுனாலதான் கலைஞர் வாய் திறப்பதையெல்லாம் வேறு கோணத்தில் திரிக்கிறார்கள் போல. இது தவிர கைய வெட்டுனாரு, கடை புகுந்து அடிச்சாருன்னு ஏகப்பட்ட புகழ்கள் வேறு கார்த்திகேயனுக்கு இருப்பதாலும், கூட்டணிகட்சிகளின் ஆதரவினாலும் திமுக உதயம் சண்முகம் மகிச்சியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்... இருந்தாலும் ஆவுடையார் கோவில் சேர்மன் சுந்தராஜன், துரை மாணிக்கம் போன்ற திமுக தலைகள் உதய சண்முகத்திற்கு உற்சாகமாக உழைப்பதில்லை. பாஜக சார்பில் கவிஞர். குழ. காத்தமுத்துவும், முகமது அலி ஜின்னா தேமுதிக சார்பிலும் நிற்கிறார்கள். எல்லாவற்றையும் கணக்கிட்டால் தலை சற்று சுற்றுகிறது. திருநாவின் கோட்டை என்பதால் அதிமுகவிற்கு வாய்ப்புள்ளது.
மொத்தம் 5 தொகுதிகள். திமுக - 3, காங்கிரஸ் - 1, சிபி ஐ - 1
அதிமுக - 5 என களம் காணுகின்றன புதுக்கோட்டையில், புதுக்கோட்டை ஒரு மலை மாவட்டம். நார்த்தமலை, விராலிமலை, திருமயம் போன்றவை இம்மாவட்டத்தில் இருக்கிறது. இங்கு அதிமுக 5 இடங்களிலும் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்ட மாவட்டம். விவசாயிகளுக்கான சலுகைகள் கட்சிகளுக்கு கைகொடுக்கும், முத்தரையர் சமூகம், முக்குல சமுதாயம், சிறுபான்மை சமுதாயம், ஆதி மக்கள் ஓட்டுக்கள் அனைத்தும் இம்மாவட்டத்தின் ஓட்டு வங்கிகள். குடிநீர் பிரச்சனை உள்ள மாவட்டம். மழைநீரை நம்பி மட்டுமே இவ்வூரின் நீர் ஆதாரங்கள் உள்ளன. அடிப்படை வசதிகள் இல்லையென கூறி இம்மாவட்டத்தின் கந்தர்வ கோட்டையில் மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக கூறியுள்ளனர். இன்று 300 திமுகவினர் அதிமுகவில் சேர்ந்துள்ளனராம்.
திமுக -2 காங்கிரஸ் - 1 சிபிஐ -1
அதிமுக - 1 வெல்லலாம்

வெல்வதற்கு வாய்ப்புள்ளவர்கள் :
எம்.ஜாபர் அலி (திமுக)
சி.பரஞ்சோதி (திமுக)
எஸ்.இராஜசேகரன் (சிபிஐ)
சுப்புராம்(காங்கிரஸ்)
கார்த்திகேயன் (அதிமுக)
புதுவை நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
தேனி மாவட்டம்
நாகை மாவட்டம்

No comments: