Wednesday, May 10, 2006

2006 தேர்தல் முடிவுகள்
ஐந்தாம் முறையாக அமரப் போகும் தலைவருக்கு வாழ்த்துக்கள்.

முதல் வாழ்த்து நான் சொன்னதாக இருக்கட்டும் :)).


முன்னனி நிலவரம்

திமுக கூட்டணி = 148
அதிமுக கூட்டணி = 57

தேமுதிக - 1 மற்றவை - 1

(57 லா?., பயமுறுத்துது)

இன்னும் 3 மணி நேரம்.....55 comments:

டிசே தமிழன் said...

அக்கா முதல் வாழ்த்தினால் தம்பிமார் பின்னே வருகின்றோம் :-).

அப்டிப்போடு... said...

அட... கூடக்...கூட போகுதே.... தொங்குனாலும் உட்காந்திருங்க தல.

Sivabalan said...

தலைவருக்கு வாழ்த்துக்கள்!!

அப்டிப்போடு... said...

எழும்பூரில் பருதி இளம்வழுதி (திமுக) வெற்றி...

கோபியில் செங்கோட்டையன் (அதிமுக) வெற்றி பெற்றார்.

சேரன் மாதேவி வேல்துரை (காங்)

திருச்சி 1 அன்பில் பெரியசாமி (திமுக) வெற்றி பெற்றார்.

அச்சிறுப்பாக்கம் சங்கரநாராயணன் (திமுக) வெற்றி.

மதுரை கிழக்கு நன்மாறன் வெற்றி

முத்து(தமிழினி) said...

அப்டி போடு,

வாழ்த்துக்கள்


தலைவர்
தி.ரா.மு.மு

அப்டிப்போடு... said...

நன்றி தம்பி, இன்னுமா தூங்கவில்லை?

நன்றி சிவபாலன்

அப்டிப்போடு... said...

இதுவரை வந்த வெற்றிகளில் என் கணிப்பு சரியாக இருந்தது., இங்கே ஒரு மாற்றம் சிங்க நல்லூர்ல (காளான்) (ஐ.என். டி.யூ.சி) வெற்றி பெற்றிருக்கிறார்.

அப்டிப்போடு... said...

ராயபுரத்தில் நம் கணிப்புபடி அதிமுகவே வென்றிருக்கிறது

அப்டிப்போடு... said...

தற்போதைய நிலவரம் :

திமுக கூட்டணி - 162

அதிமுக கூட்டணி - 65

தேமுதிக - 2 மற்றவை - 1

முத்துகுமரன் said...

மருங்காபுரியில் திமுக முன்னிலை:-)

திருப்பரங்குன்றத்தில் மார்க்சிஸ்ட் முன்னிலை:-)

அப்டிப்போடு... said...

பொள்ளாச்சி ஜெயராமன்(அதிமுக) வெற்றி

அப்டிப்போடு... said...

தி ரா முமு ?., அந்த வார்த்தை உங்க மனசுல அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு?.

முத்துக்குமரன் தம்பி நன்றி

அப்டிப்போடு... said...

நாங்குனேரியில் வசந்தகுமார் (காங்) வெற்றி.

விருதாச்சலத்தில் விஜயகாந்த்(தேமுதிக) வெற்றி

மதுரை மத்திய தொகுதி பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் (திமுக) வெற்றி.

காட்பாடி துரைமுருகன் (திமுக ) வெற்றி

பூந்தமல்லி சுதர்சனம் (காங்) வெற்றி

சேப்பாக்கம் கலைஞர் வெற்றி

கன்னியாகுமரி சுரேஷ்ராஜன் (திமுக) வெற்றி

மொரப்பூர் திமுக முல்லை வேந்தன் (திமுக) வெற்றி. (அடி தாங்கி, ஒரு உயிர் போயி இந்த வெற்றி...)

the meek said...

அக்கா வாழ்த்துக்கள். ஆனா என்ன, கங்கிரஸ் கொடைச்ச்ல் தாங்குவாரா தலைவரு....?

PUDUPPAALAM said...

குடந்தையில் கோ.சி.மணி (தி.மு.க) வெற்றி பெற்றுள்ளார்.

=இஸ்மாயில் கனி
kaniraja.blogspot.com

அப்டிப்போடு... said...

முனாகானா., தேர்தல்லயே உள்குத்தையெல்லாம் தாண்டித்தானே இவ்வளவு வந்திருக்கு. அப்புறம் கொடைச்சலாவது ஒண்ணாவது. வாசன் ஆதரவு, பா.சி யெல்லாம் பார்க்கும்போது பிரச்சனை இல்லை., பிரகாசமாகத்தான் இருக்கு.

நன்றி இஸ்மாயில் கனி தகவலுக்கும் \, வருகைக்கும்.

அப்டிப்போடு... said...

தற்போதைய முன்னனி நிலவரம்

திமுக கூட்டணி - 173

அதிமுக கூட்டணி - 59

தேமுதிக - 1 மற்றவை - 1

அப்டிப்போடு... said...

கடலாடி சுப.தங்கவேலன் (திமுக) வெற்றி.

விழுப்புரம் பொன்முடி(திமுக) வெற்றி

அண்ணா நகர் ஆற்காடு வீராசாமி (திமுக) வெற்றி

மேட்டூர் ஜி.கே.மணி (பாமக) வெற்றி

ராதாபுரம் அப்பாவு (திமுக) வெற்றி

அப்டிப்போடு... said...

திருநெல்வேலி * தொகுதியில் * அவுட்., அமைச்சர் நாயினார் தோல்வி.

மாலைராஜா (திமுக) வெற்றி

அப்டிப்போடு... said...

ஆர்.கே.நகர், மருங்காபுரி இரண்டிலும் என் கணிப்பு படி அதிமுக வென்றிருக்கிறது. கலசப்பாக்கம் பாமகவிற்கு என நினைத்தேன். அதிமுக கைப்பற்றியிருக்கிறது.

வரவனையான் said...

அப்டிப்போடு... said...
இதுவரை வந்த வெற்றிகளில் என் கணிப்பு சரியாக இருந்தது., இங்கே ஒரு மாற்றம் சிங்க நல்லூர்ல (காளான்) (ஐ.என். டி.யூ.சி) வெற்றி பெற்றிருக்கிறார்.


அதுதாங்க வருத்தமா இருக்கு தோழர்கள் வெறும் 14 ஓட்டில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்

அப்டிப்போடு... said...

காவேரி பட்டினம் மேகநாதன் (பாமக), வேடசதூர் தண்டபாணி (காங்கிரஸ்), திண்டுக்கல் பாலபாரதி (சிபிஎம்), குறிஞ்சிப்பாடி பன்னீர் செல்வம் (திமுக), பண்ருட்டி வேலமுருகன் (பாமக), கடலூர் அய்யப்பன்(திமுக), குன்னூர் சுந்தர பாண்டியன் (திமுக), பாளையங்கோட்டை மைதீன்கான் (திமுக), திருவாடனை கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்), முதுகுளத்தூர் முருகவேல் (திமுக), ஆத்தூர் ஆர்.எம்.சுந்தர் (காங்கிரஸ்) ஆகியோர் திமுக கூட்டணியில் வெற்றி.

அப்டிப்போடு... said...

நத்தம் விஸ்வநாதன் (அதிமுக), ஆண்டிபட்டி ஜெயலலிதா, மதிரை மேற்கு எஸ்.வி.சண்முகம் (அதிமுக), திருப்பறங்குன்றம் மகேந்திரன் (அதிமுக), பெரியகுளம் பன்னீர் செல்வம்(அதிமுக) ஆகியோர் அதிமுக கூட்டணியில் வெற்றி.

the meek said...

அக்கா, நான் கலசபாக்கம்தான். அங்க வேட்பாளர் சரியில்ல, அதான் காரணம். மத்தபடி, பெரும்பாலும் neck to neck போட்டி இருந்தாலும், காங்கிரஸ் அல்லது திமுக வெல்லக்கூடிய தொகுதிதான் அது.

அப்டிப்போடு... said...

மொத்தம் வெற்றி பெற்ற தொகுதிகள் நிலவரம்:

திமுக கூட்டணி - 110

அதிமுக கூட்டணி - 40

தேமுதிக - 1 மற்றவை - 0

அப்டிப்போடு... said...

செந்தில் அங்க ஜனதா தளத்திற்கும் பலம் உண்டு என்றாலும். தோழர்கள் வெல்வார்கள் எனவே நினைத்தேன், 14 ஓட்டுதானா வேறுபாடு?., வருத்தமாக இருக்கிறது.

தம்பி பாமகவிற்கு கலசப்பாக்கத்தை கொடுத்திருந்தார்கள். வென்றிருக்கலாம்.

அப்டிப்போடு... said...

மொத்தம் வெற்றி பெற்ற தொகுதிகள் நிலவரம்:

திமுக கூட்டணி - 140

அதிமுக கூட்டணி - 52

தேமுதிக - 1 மற்றவை - 0

அட,, 52 ஆஆஆ?

அப்டிப்போடு... said...

கேரளால்ல இடதுசாரிகள், பாண்டியில காங்கிரஸ் ஆட்சி அமைக்கப் போகிறார்கள்.

வரவனையான் said...

எப்படியோ எங்கள் தொகுதியில் மார்க்சிஸ்டு தோழர். பாலபாரதி வெற்றி பெற்றுவிட்டார். தொலைபேசியில் வாழ்த்தும் தெரிவித்துவிட்டேன்.

அப்டிப்போடு... said...

தொண்டாமுத்தூரில் வென்றி மதிமுக கண்ணப்பன் வெற்றி.,

மதிமுக சட்ட மன்றத்தில்.

அப்டிப்போடு... said...

அருப்புகோட்டை, ஆலங்குளம் திமுக வெற்றி

செங்கல்பட்டு பாமக, ப்ட்டுக்கோட்டை திருமயம், செங்கம், வேலூர், செய்யாறு, தொட்டியம் காங்கிரஸ் வெற்றி


கம்பம், விருதுநகர் அதிமுக வெற்றி

அப்டிப்போடு... said...

செந்தில் அங்க இப்ப உள்ள நாகலட்சுமியும் சிபிஎம் தானே?., சேர்மன் பஷீர் செல்வாக்கான ஆள்தான?., அவங்க வெற்றி பெறுவார்கள் என்று தெரியும்.
அதுசரி ஆத்தூர் என்னாச்சு?

அப்டிப்போடு... said...

ஆயிரம் விளக்கில் ஸ்டாலின் பின்னடைவுன்னு போட்டு டென்சன் பண்ணிகிட்டு இருந்தாங்க பத்திரிக்கைகள். வெற்றி பெற்றாயிற்று.

வரவனையான் said...

தோழரின் பெயர்தான் பாலபாரதி என்ற நாகலட்சுமி. பஷீர் அகமது இரண்டு முறை நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கபட்டவர், 96-01 மிக அருமையாக பணியாற்றினார், 01-06 அவ்வளவு வேகமில்லை கூடுதலாக "தல"யின்(இ.பெரியசாமி) எரிச்சலையும் சம்பாரித்து கொண்டார்.மற்ற படி திண்டுக்கல் நகரப்பகுதி ஓட்டு எப்பவும் திமுக விற்கே சாதகமாய் இருக்கும். ம.தி.மு.கவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன் போட்டியிட்டிருந்தால் அக்கட்சிக்கே வாய்ப்பாக அமைந்திருக்கும்.

ஆத்தூரில் "தல" வெற்றிப்பெற்று சான்றிதழும் வாங்கிவிட்டார்.

வரவனையான் said...

என்னாச்சு ! இன்னும் தரவேற்றமல் இருக்கீங்க .....

வரவனையான் said...

அப்டிப்போடு... said...
ஆயிரம் விளக்கில் ஸ்டாலின் பின்னடைவுன்னு போட்டு டென்சன் பண்ணிகிட்டு இருந்தாங்க பத்திரிக்கைகள். வெற்றி பெற்றாயிற்று.


அதுல்லாம் சும்மா உலுல்லா

now he is fine and safe

அடுத்த முதல்வரில்லையா....!

அப்டிப்போடு... said...

செந்தில் தகவல்களுக்கு நன்றி. 145 இடங்கள் திமுகவிற்க்கு என பார்ந்தவுடன்., தெம்பில் தூங்க போயாச்சு. sorry.

முத்துகுமரன் said...

மங்களூர் செல்வப்பெருந்தகை(விசி), காட்டுமன்னார்குடி எழுத்தாளர் ரவிக்குமார்(விசி) வெற்றி

வரவனையான் said...

திமுக தனித்தே ஆட்சியமைக்கும் கூட்டணி ஆட்சியில்லை - கலைஞர் அறிவிப்பு

Pot"tea" kadai said...

அக்கா,
நெல்லிகுப்பத்தில் வெற்றி பெற்ற சித்தப்புவுக்கு வாழ்த்துக்கள்.

தலைவருக்கு 100வது வாழ்த்து நான் சொன்னதாக இருக்கட்டும் :)).

அப்டிப்போடு... said...

வெற்றி

திமுக கூட்டணி - 172

அதிமுக கூட்டணி - 60

தேமுதிக - 1 சுயேட்சை - 1

இளவஞ்சி said...

உங்க கணிப்புகளுக்கு சற்று ஏறக்குறைய இருந்தாலும் திமுக வெற்றிக்கும் உங்க கணிப்புதிறனுக்கும் வாழ்த்துக்கள்! :)

டிசே தமிழன் said...

சல்மா (தி.மு.க) வென்றிருக்கின்றாரா? வி.சிறுத்தைகளில் வென்ற வேட்பாளார் யார்?

the meek said...

அன்புள்ள அப்டிபோடு அக்கா,

என் பெயர் ராஜ்குமார். சிங்கப்பூரில் மாஸ்டர்ஸ் பன்னிகிட்டு இருக்கேன். உங்க statcounter ல செக் பண்ணி பாருங்க. அது நாந்தான்.
தமிழ்மனம் எப்போதாவாது நேரம் கிடைக்கும்போது வாசிப்பது உண்டு. அப்படி வாசித்துக் கொன்டிருக்கும் போதுதான் உங்கள் பின்னூட்ட்ங்கள் கண்ணில் பட்டன. ஒரு வார்த்தையில சொல்லனும்னா பிரமித்துப் போனேன் - உங்கள் தெளிவைப் பார்த்து!. உங்கள் வலைப்பதிவைத் தேடிப் பிடித்து வந்து பிரித்து மேய்ந்தேன்.(உங்கள் பெயர்கூட கற்பகவல்லி என நினைக்கிறேன் - ஆமா நீங்களே உங்க பதிவுல ஒரு இடத்துல சொல்லி இருக்கீங்க ! ).


அப்புறம்...என்னை வேற எப்டி அறிமுகப்படுத்திக்கிறது...ம்ம்ம்ம்...இந்த28 வயதுக்காரனை....உங்கள் தம்பியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

(படிப்புக்கே நேரம் சரியா இருக்கு...வலைப்பூ ஆரம்பிக்க அதுவும் தமிழில் தட்டுதடுமாறி எழுத இப்போதக்கு முடியாதுக்கா.)

உங்கள் கருத்துக்களுக்கு நான் பரம ரசிகன்...எழுதுங்கள்... எழுதுங்கள் மேன்மேலும் எழுதுங்கள்...அவ்வப்போது என் சந்தேகங்களையும் கேட்கிறேன்...

அன்புடன்,
மூனாகானா.(சும்மா...கலைஞரைப் பிடிக்கும் என்பதால்)
mountrajkumar@gmail.com

(இது கமென்டு அல்ல. என்வே பிரசுரிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்)

அப்டிப்போடு... said...

முத்துக்குமரன்,

மதிமுகவும், விசிக்களும் சட்ட மன்றம் (திருமா சென்றுள்ளார் இருந்தாலும்) உவகை தான் தருகிறது இல்லையா?.

செந்தில்,

டப்புன்னு இராஜினாமா அம்மா?., கூட்டணியாச்சின்னுதான் ஊட்கங்கள் சொதப்புது...

தம்பி, நெல்லிக்குப்பத்தில் சித்தப்பாவா? :))))., என் வாழ்த்துக்கள். முன்பே கூறியிருக்கலாம்ல?

ஆமாங்க இளவஞ்சி., திமுக கூட்டணி 191 இடம்னு நினைச்சேன். 172 வந்திருக்கு அதிமுக - 40 ன்னு கணித்தேன் 60 வந்திருக்கு, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அவர் தொகுதியில் வெல்வார் என நினைத்தேன் (மிகுந்த செல்வாக்கு அவருக்கு, அந்தக் கட்சியும் சத்தமில்லாமல் வளர்ந்து வருகிறது ஊடக வெளிச்சம் படாமல்( அது ரொம்ப நல்ல விதயம் :)). மற்றபடி விஜயகாந்த் வெல்வார் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று.

தம்பி டிசே.,

சல்மா தோல்வி (நானும் சொல்லியிருக்கிறேன்., அனைத்து பத்திரிக்கைகளும் அவர் வெல்வார் என்றே கூறியிருந்தன.

மங்களூர் செல்வப்பெருந்தகை, காட்டுமன்னார்குடி எழுத்தாளர் ரவிக்குமார் ஆகியோர் விடுதலை சிறுத்தைகளில் வென்றுள்ளனர். 9 தொகுதிகளில் நின்று 2 வெற்றி. மதிமுகவை ஒப்பு நோக்கினால் இது பரவாயில்லை. மதிமுகவிற்கு பலமான நெல்லையில் அதிகம் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கலாம். கொடுத்த இடங்களும் 5, 6 இடங்களைத் தவிர மற்ற இடங்கள் மதிமுக சுத்தமாக செல்வாக்கு இல்லாத இடங்கள். அதிமுகவினரின் தேர்தல் ஈடுபாடும் (மதிமுக நின்ற இடங்களில்) சொல்லிக் கொள்வது போல் இல்லை. விடுதலை சிறுத்தைகளுக்கு அதிமுகவினரின் ஆதரவு சுத்தம். மீறியும் வெற்றிபெற்றிருப்பது மகிழ்ச்சி.

விஜயகாந்தின் தேர்தல் அணுகுமுறைகள் உண்மையில் பிறவி அரசியல்வாதியின் அணுகு முறைகள். அசந்து போய்விட்டேன். நேரமிருக்கும்போது அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும்.

எது எப்படியோ.,
நான் சொன்ன 191 க்கு 172., 40 க்கு 60 ஊடக கணிப்புகளை விட நம்ம கணிப்புதான் கொஞ்சம் பக்கத்துல இருக்கு :))). சரி..சரி.. நிறுத்திக்கிறேன்.

SK said...

எனது ஆசையைப் பிரதிபலிக்கவில்லை எனினும், தங்களது துல்லியமான, கணிப்பை ஆரம்பம்ன் முதலே ரசித்து வந்தவன் என்ற முரயில், உங்களுக்கு எனது வாழ்த்துகள்!

அப்டிப்போடு... said...

SK., நன்றி!.

KARTHIKRAMAS said...

அப்படிப்போடு உங்கள் சந்தோசத்தில் பங்குபெறுகிறேன். வாழ்த்துக்கள்.

kirukan said...

Dear AppadiPodu,

I asked you about the technique you use to make this poll survey in one of your post. whether as a team you make or just by your experiences. You didnt answered? :(

Also, your predictions completely went wrong in Virudhungar district except 2 constituencies. I wrote about my doubts on that Post itself.

May be you might have got the number more or less right..... But constituencies are switched.. I guess. Am I right?

Btw, my knowledge of Politics and Politicians is Null, except my home district Virudhunagar :)

குமரேஸ் said...

http://kumaraess.blogspot.com/2005/05/2006.html#c111626956128523491

அப்டிப்போடு... said...

//You didnt answered? :(//

kirukkan,

please check the appropriate post. I have answered I guess, and regarding viruthunagar... yes... in 4 places my predictions went wrong. Only KKSSR (DMK) and Ramasamy (CPI) got their places.

//But constituencies are switched//
May be, some of them are switched. As I told you before these are all only assumptions... nobody can predict 100% accurate.

Thanks for your encouragement.

முத்து(தமிழினி) said...

அமெரிக்காவுல உட்காந்துகிட்டே ஓரளவு சரியா கணிச்சிருக்கீங்க..

கிரேட் ஜாப்..

அப்டிப்போடு... said...

கார்த்திக், உங்களுக்கு நான் முதல்ல போட்ட பதில் எங்கே போனதோ., நன்றிங்க மகிழ்ச்சியில் பங்கெடுத்து கொண்டதற்கு.


முத்து மிக்க நன்றி. ஆள்தான் இங்க மனம் நேற்றுவரை ஊரில்தான்.

அப்டிப்போடு... said...

குமரேஸ்., நன்றி. கூட்டணி ஆட்சி இப்பவும் இல்லை. தமிழ் நாட்டில். இருந்தாலும் பிரச்சனைதான்.

//அடுத்த சட்டமன்றத் தேர்தல்ல, தி.மு.க தான்//

இது நடந்திருக்கிறதா இல்லையா?

//2a.மத்திய நிதி தலைமையில், புதிதாக வர இருப்பவர்களுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமையலாம்//

உங்களுடைய இவ்வரிகளைப் பார்த்தே., அப்பின்னூட்டம்.

சரி.. தாமதமாக உங்கள் பின்னூட்டம் வெளியிட்டேன் மன்னிக்க., ஏற்கனவே இப்படித்தான் லிங்க் செக் பண்ணாம ஒரு பின்னூட்டம் அனுமதித்துவிட்டு, 3 நாளாக அதை தேடி இன்று அழித்தேன்.

kirukan said...

Apdipodu...

Sorry. I didnt noticed your reply, as you have replied after 3 days. It was in that post for District Karur.

Usually I dont follow my feedbacks for more than a day. Anyhow thanks again.