Monday, May 01, 2006

தேர்தல் அலசல் - 2006 - நாகப்பட்டினம்


மக்கள் தீர்ப்பு யாருக்கு?

நாகப்பட்டினம்: மொத்தம் 6 தொகுதிகள்.

1. சீர்காழி 2.மயிலாடுதுறை 3.குத்தாலம் 4. பூம்புகார் 5. நாகப்பட்டினம் 6.வேதாரண்யம்

1. சீர்காழி(தனி) :

மு.பன்னீர்செல்வம் (திமுக) - (தொகுதியில் செல்வாக்கு, கூட்டணி பலம்+)
துரைராசன் (விசி)

திமுக சார்பில் 1996 ல் வென்ற திமுக எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் மீண்டும் இத் தேர்தலில் போட்டியிடுகிறார். வன்னிய சமுகத்தினர் பெரும்பான்மையாக உள்ள தொகுதி. தற்போதைய எம்.எல்.ஏ என். சந்திரமோகன் விடுதலைச் சிறுத்தை வேட்பாளர் உஞ்சை அரசன் என்கிற துரைராசனுக்கு ஆதரவாக சீட்டில்லா அதிருப்தியோடு பிரச்சாரம் செய்கிறார். விசியின் மாநில பொதுச் செயலாளர் துரைராசன். இவர் வெளியூர்காரர் என்பதாலும், கூட்டணிகட்சிகள் இணக்கமாக இல்லாததாலும்., எம்.எல்.ஏவாக இருந்தபோது பன்னீர் செல்வம் மேற்கொண்ட பணிகள் தொகுதி மக்களின் மனதில் இருப்பதாலும் திமுகவிற்கே இந்தத் தொகுதி.

2.மயிலாடுதுறை:
ராஜ்குமார் (காங்கிரஸ்) - (தொகுதியில் செல்வாக்கு, கூட்டணி பலம்+)
எம்.மகாலிங்கம் (மதிமுக)
ஜெகவீர.பாண்டியன் (பஜக) - சிட்டிங்
பி.தவமணி (தேமுதிக)

மதிமுக மா.செ மகாலிங்கமும், காங்கிரஸ் மாநில செயலாளருமான ராஜ்குமார் காங்கிரஸ் சார்பில் நிற்கிறார். கடந்த முறை பெரிய கட்சிகள் எதுவும் உடனில்லாத நிலையில் திமுக ஆர்.செல்வராஜ் இதொகுதியில் 48,851 வாக்குகள் பெற்றிருக்கிறார். இதை ஏன் காங்கிரஸ்க்கு கொடுத்தாங்கன்னு தெரியலை. சிட்டிங் ஜெகவீ இம்முறையும் நம்ம செல்வாக்கு அப்படியேதான் இருக்கான்னு நின்னு பார்க்கிறார். விஜய. டி.ராஜேந்தர் அதிமுக, திமுகன்னு அல்லாடிப் பார்த்துவிட்டு, அவர் கட்சி லட்சிய திமுக வேட்பாளர்கள் 11 பேரையும் நிறுத்தி, தானும் மைலாடுதுறையில் நிற்கிறார். தேமுதிக தவமணி என்ற பெண்மணியை களமிறக்கியுள்ளது. அதிமுகவின் பலத்தை மட்டும் நம்பியுள்ளார் மதிமுக மகாலிங்கம். மணிசங்கரின் ஒத்துழைப்புடன் நின்றாலும் ராஜ்குமாருக்கு , மணிசங்கரின் மீதான தொகுதி மக்களின் கோபம் தலைவலிதான். வைகோவுக்கு உள்ள நல்ல இமேஜ் மகாலிங்கத்திற்கும் இருக்கிறது. ஆனாலும் ராஜ்குமாருக்குத்தான் வாய்ப்புள்ளது போல் தெரிகிறது.

3.குத்தாலம்:

க.அன்பழகன் (திமுக) - ( கூட்டணி பலம்+)
எஸ்.ராஜேந்திரன்(அதிமுக)

திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏவும் கடந்த முறை இத் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கோட்டைவிட்ட கல்யாணத்தின் வாரிசு அன்பழகன் இம்முறை போட்டியிடுகிறார் (இப்போது இருப்பவர்களில் வயது குறைந்த வேட்பாளர் இவர்தானாம்). தொகுதி மக்களுக்கு புதியமுகமான ராஜேந்திரனை களமிறக்கியுள்ளது அதிமுக. அன்பழகன் எம்.எல்.ஏ ஆக வாய்ப்புகள் அதிகம்.

4. பூம்புகார் :

மு.கே.பெரியசாமி (பாமக) -( கூட்டணி பலம்+)
எஸ்.பவுன்ராஜ் (அதிமுக)

பாமகவின் மாநில பொதுச்செயலாளர் பெரியசாமி திமுக கூட்டணி சார்பில். அதிமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் பவுன்ராஜ். வன்னிய மக்களின் ஓட்டு வங்கி பாமக விற்கு., ஆதி திராவிடர், மீனவர் ஒட்டு வங்கி பவுனுக்கு., ஆனால் சமாஜ்வாடி கட்சி சார்பில் மாயா வெங்கடேசன் வேறு ஆதிதிராவிட ஓட்டுக்களை பிரிக்க நிற்கிறார். கூட்டணி பலத்தை கொண்டு நோக்கினால் பூம்புகார் பெரியசாமிக்கு.

5. நாகப்பட்டினம் : -
மாரி முத்து (சிபிஐ (எம்)) - (தொகுதியில் செல்வாக்கு, கூட்டணி பலம்+)
கே.ஏ.ஜெயபால் (அதிமுக)

சிட்டிங் எம்.எல்.ஏ ஜீவனந்தம். இம்முறை அதிமுக சார்பில் போட்டியிடுபவர் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஜெயபால். ஜெயபால் சுனாமி நிவாரணத்தை சொல்லியே ஓட்டு வாங்கி விடலாம். ஆனால் மீனவர் ஓட்டையும் பிரிக்க தேமுதிகவும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளரையே களமிறக்கியுள்ளது. மீனவர்கள் பெருவாரியாக வசிக்கும் தொகுதி என்றாலும், இத்துடன் நாகூரில் இருக்கும் முஸ்லிம் மக்களின் வாக்குகளும் சேர்ந்துதான் இத்தொகுதியின் வெற்றியை உறுதி செய்யும். மாரிமுத்து 1996 ல் இத் தொகுதியில் சிபிஎம் வேட்பளாராக களமிறங்கி தமிழகத்தில் பெரிய கட்சிகள் திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக 20,990 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த கம்யுனிஸ்ட் தொகுதி பின்பு கழகங்களிடம் கைமாறி இருக்கிறது. இப்போது கூட்டணி பலத்தால் மீண்டும் இங்கு சிபி.எம் வரவே வாய்ப்பதிகம்.

6.வேதாரண்யம் :
எஸ்.கே.வேதரத்தினம்(திமுக) - (தொகுதியில் செல்வாக்கு, கூட்டணி பலம்+)
ஓ.எஸ்.மணியன்(அதிமுக)

அதிமுக கெபசெ ஒ.எஸ்.மணியன் களத்தில். பிரச்சாரமும் பலமாக இருக்கிறதாம். இத்தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ வாக இருக்கும் திமுக எஸ்.கே. வேதரத்தினம்தான் இம்முறையும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் பலமான தொகுதி. பணபலம், நடிகைகள் பிரச்சாரம் என அதிமுக வேட்பாளர் கலக்கி கொண்டிரிந்தாலும். மீனவ கிராமங்களுக்குச் சென்று வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்து கொண்டிருந்தாலும், வேதரத்தினத்தின் க்ளீன் இமேஜ் மற்றும் இது திமுகவிற்கும், காங்கிரஸ்கும் பலமான தொகுதி என்பதாலும் கூட்டணி பலத்துடன் மீண்டும் வாய்ப்பு வேதரத்தினத்திற்கே கிடைக்கலாம்.
மொத்தம் 6 தொகுதிகள். திமுக - 3, காங்கிரஸ் - 1, பாமக - 1, சிபி எம் - 1
அதிமுக - 4, மதிமுக - 1, விசி -1 என போட்டியிடும் நாகை, கடல் மாவட்டம். இப் பட்டம் குமரிக்கு கொடுக்கவில்லையேன்னு புகை வேண்டாம். ஒவ்வொரு வருடமும் நாகப்பட்டினத்தில் எது வருதோ இல்லயோ புயல் வரும். மீனவர்கள் சுனாமி சோகத்திலிருந்து மீண்டெழுந்து விட்டாலும். நிவாரணத்தோடு நிறுத்திவிட இயலா அவலங்கள் பல உண்டு அங்கு. நிவாரணப் பணிகளில் நிறைவு கண்டிருந்தால், ஓட்டு அதிமுகவிற்கு சாதகம், இல்லையெனில் பாதகம் இரண்டுமிருக்கிறது. கிழக்கு கடற்கரை சாலையை கடலூரிலிருந்து குமரிவரை விரிவுபடுத்தும் திட்டமும் நலம்பயக்கும். நாகையை துறைமுக நகரமாக்குதல் என்பது அவர்களின் கனவு என்று சொல்வதைவிட நீண்ட காலம் அவர்கள் வாழ்வில் ஓளியூட்டும் உடனடியாக செய்யப் பட வேண்டிய தேவை. மத்திய மந்திரிகள் செய்ய முன் வரும் திட்டமே என நினைத்து மாநில அரசும், மாநில அரசு முன்வரவில்லையென அமைச்சர்களும் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். தேர்தலும் வந்துவிட்டது. இவையெல்லாவாற்றையும் விட மீனவ மக்களை வருடம் முழுவதும் தாக்க, கிழக்கு கடற்கரையிலும், கச்சத்தீவிலும் காத்திருக்கும் இலங்கைச் சுனாமியிடமிருந்து காக்கும் அரசே இப்பகுதி மக்களின் தேவை.

கடந்த முறை மைலாடுதுறை வேதாரண்யம் தவிர்த்த மற்ற தொகுதிகளில் அதிமுக வென்றது. இம்முறை போட்டியிடும் 3 இடங்களிலும் திமுகவிற்கு வாய்ப்புள்ளது. மற்ற மூன்று தொகுதிகளில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், பாமக, சிபிஎம் நிற்க வைத்திருப்பது திமுகவிற்கு சதகமாகவே இருக்கும். கடந்த முறை மைலாடுதுறை வேதாரண்யம் தவிர்த்த மற்ற தொகுதிகளில் அதிமுக வென்றது. இம்முறை போட்டியிடும் 3 இடங்கலும் திமுகவிற்கு.
திமுக - 3 பாமக - 1 சிபிஐ -1 வெல்லலாம்
வெல்வதற்கு வாய்ப்புள்ளவர்கள் :
மு.பன்னீர்செல்வம் (திமுக)
எஸ்.கே.வேதரத்தினம்(திமுக)
க.அன்பழகன் (திமுக)
ராஜ்குமார் (காங்கிரஸ்)
மாரி முத்து (சிபிஐ (எம்))
மு.கே.பெரியசாமி (பாமக)
நாகை நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
தேனி மாவட்டம்

6 comments:

கோவி.கண்ணன் said...

முன்பு அரிவாள் சுத்தியலைப் பிடித்த தலித்துகள் இப்பொழுது திருமாவளவடனுடன் கைகோர்த்து இணைந்து நிற்கிறார்கள், மீனவர்களின் பெரும்பாண்மை வாக்கு எப்பொழுதும் இரட்டை இலைக்குத்தான், அதைத்தவிர நாகை நகரில் கனிசமான தேவரின வாக்குகளும் உள்ளது, இது அதிமுகவிற்கு சாதகமாகும். படித்தவர்களும், முஸ்லிம் சமூகமும், வன்னியர்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர் என்பதால் திமுக விற்கு சாதகமாகவும் இருக்கிறது. வெற்றிவாய்பை நிர்ணயம் செய்வது கடினம்.

சோழநாடன் said...

i think Jagaveera pandiyan escaped from the BJP trap.:-)))
And now he joined in D.M.K..
Check the details.

முத்து(தமிழினி) said...

அப்டிபோடு,

ஏறக்குறைய தென்மாவட்டம் எல்லாம் கவர் பண்ணிட்டீங்க..

எப்படி லா ஆஃப் ஆவரேஜ்..மற்றும் பழைய ஓட்டிங் பேட்டர்ன்னா இல்லை ஒருபக்கசார்பா(?)?

நடுநிலைமைவியாதியாக இருங்க.ஃஃ

சிங். செயகுமார். said...

நீங்கள் தி.மு.கவின் அபிமானி என்று தெரியும். ஜோவின் பிளாக்கில் பர்த்தேன் உங்கள் வாதங்களை. தி.மு.க நிச்சைய எதிர்பார்ப்பு ஏரியாவைதானே சொல்லி இருக்கிறீர்கள். இருந்தும் இங்கே பாருங்கள்http://singaarakumaran.blogspot.com/2006/04/blog-post_07.html

அப்டிப்போடு... said...

கோ.வி கண்ணன், நன்றி. ஆம் அங்கே விசிக்களின் தாக்கம் அதிகமாக ஆரம்பித்திருக்கிறதுதான். கணிசமாக பிரிக்கமுடியுமே தவிர வெற்றி பெற முடியாது. மீனவர்கள் ஓட்டு... தேமுதிகவும் மீனவர் ஒருவரைதான் நிறுத்தியிருக்கிறது. தாமதமான பதில் பொறுத்துகொள்க.

அப்டிப்போடு... said...

சோழநாடன் தகவலுக்கு நன்றி

முத்து நடுநிலைமயா?... யாரு?.... :)).

சிங் .ஜெ. குமார்., நீங்கள் அதிமுக அனுதாபி என்று தெரியும் :). முதல்முறை பின்னூட்டம் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி. பதிவைப் பார்த்தேன்.