நீங்கள் ஒன்றை அவதனித்து இருக்கிறீர்களா?. நம் குழந்தைகளுக்கு ஆயிரம் கதைகள் மனிதர்களைப் பற்றி சொன்னாலும் அவர்கள் பன்றிகளைப் பற்றியே அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப் படுகின்றனர். The Three Little Wolves And The Big Bad Pig என்றொரு கதை நாடகம் (பாட்டும் உண்டு) சிறு பிள்ளைகள் இரசித்துக் கேட்பார்கள். நீங்களும் படியுங்கள் இங்கு.

பன்றிகளால் மூளைக் காய்ச்சல் பரவும். சாதாரணமாக மிக சாதுவாகவே இருக்கும். அதனுடைய இடம் எதுவென புரியாமல் நாம் வெளியே சென்றால் வாலை ஆட்டி வாசம் தெளித்துப்போகும் இயல்பு கொண்டது. பாவமான பிராணி. அதுவும் வயதாகி விட்டதென்றால் மிகப் பாவம். இப்படித்தான் நாம் அறிந்திருக்கிறோம். அவைகளின் பல பரிமானங்கள் காட்டும் Old Pig என்ற மற்றொரு புத்தகமும் படிக்கச் சுவையானது. வேண்டுவோர் புத்தகங்களைப் பற்றி இங் கிங் கும் இங்கும் தெரிந்து கொள்ளலாம்.
பன்றிக்காகவெல்லாம் ஒரு பதிவான்னு கேட்கிறிங்களா?. அதுவும் சரிதான்.
9 comments:
நல்ல பயனுள்ள பதிவு, மிக்க நன்றிங்க.
ஆமாம், பன்றியை பற்றி அதிகம் தெரிந்து ஆசைப்படுகிறார்கள் என்று எதை வைத்து சொல்லுறீங்க.
வாருகைக்கு நன்றி பரஞ்சோதி. எல்லாம் சொந்த அனுவங்களை வைத்துதான் :). piggy Bank ல் ஆரம்பிக்கிறது இவர்கள் ஆர்வம்.
வீட்டில் நாய்குட்டி வளர்க்கராப்ல பன்னிக்குட்டி வளர்க்கலாமாம். அது நல்ல watch dog கா
இருக்காம். ரொம்ப லாயல் மிருகமாம்.
//watch dog கா இருக்காம்//
அப்படியா?., மிருகங்களைப் பற்றி அதிகம் தெரிஞ்ச நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.
அட ஆமாம், நானும் கவனித்திருக்கிறேன். piggy என்றால் 2 லிருந்து 5-6 வயது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்குது.
வாங்க Jayashree., நன்றி.
மரம்,
இந்த பதிவில் உள், வெளி, சைடு, மேல், கீழ், சென்டர் குத்துக்கள் ஏதேனும் உளதா?!
ஆம்/இல்லை மட்டும் சொல்லுங்கள்! மற்றதை புரிந்துகொள்கிறேன்!
:)))))))))
ஆமாம் என்றால் ஆமாம்., இல்லையென்றால் இல்லை. தேர்தல் நேரமப்பு...!!
//வாருகைக்கு நன்றி பரஞ்சோதி. எல்லாம் சொந்த அனுவங்களை வைத்துதான் :). piggy Bank ல் ஆரம்பிக்கிறது இவர்கள் ஆர்வம். //
ஆமாம், இதை நான் தெரிஞ்சிக்கலையே, நாங்க சின்ன வயசில் மண்ணினால் ஆன உண்டியலை உபயோகித்தமா, அதான் புரியலை. அது மட்டுமல்லாம சின்னவயசிலெ எங்க பாட்டி அடிக்கடி ஒரு பழமொழி சொல்லி என்னை வெறுப்பேத்திட்டாங்க :)
இப்போ உள்ள குழந்தைகள் piggy Bank உபயோகிப்பதாலும், கார்டூனில் அடிக்கடி பார்ப்பதாலும் பன்றி குட்டியை விரும்பலாம்.
Post a Comment