Friday, March 17, 2006

எங்க தொகுதி...!!

டே எருமை..!, உன்ன யாரு சொன்னது? எவனச் சொன்னேன்னு... இரு...! ஹலோ.....

தம்பி., அக்கா பேசறேன்...என்னடா அங்க சலம்பிகிட்டு இருக்க?

அக்கா..., எப்படி இருக்கிங்க?., அது ஒண்ணுமில்ல....ஹி.,ஹி...

எப்டிடா., அப்பவே அவ்வளவு உறுதியாச் சொன்ன? நான் நம்ம நண்பர்களிடமும் சொன்னேன். ஆனா இன்னைக்குத்தான் பேப்பருலயே வருது... சூப்பர்...! இனி நம்ம ஜவுளிக்கடை செல்லையா கெதி?.,

என்னமோ அவரு பரம்பரை பரம்பரையா எம்.எல்.ஏவா இருந்த மாதிரி கேட்குறிங்க?. புயலே நிக்கும் போது....

டே... இன்னும் முடிவாகலல்ல?., ஆண்டிபட்டியும் பட்டியல்ல இருக்காட்டம்ல இருக்கு?., இருந்தாலும் இத எப்பவோ சொன்ன உனக்கு என்ன கொடுத்தாலும் தகும் சாமி... யாருக்கு வேல பாப்பிங்க?....

என்னக்கா தெரியாத மாதிரி ...

சரி...சரி... அய்யாகிட்ட குடு.,

வேற யார்கிட்டயும் பேசிறிங்களா? அய்யா கரூருக்கு போயிருக்காரு., ஒரு சொத்துப்...

ஆமா... நீங்களும் உங்க பிரச்சனையும்... சரி காலைல கூப்பிடறேன்னு சொல்லு. எல்லார்கிட்டயும் அப்பப் பேசிக்கிறேன். நிறையப் பேச வேண்டியிருக்கு!!.

******

தலையை பிய்த்துக் கொள்பவர்களுக்கு., இது 'அம்மா' நம்ம தொகுதில நிக்கப் போறாங்கன்னு வந்த செய்தியைப் பார்த்துவிட்டு., ஊருக்கு அழைத்தபோது நடந்த உரையாடல்.

11 comments:

டிசே தமிழன் said...

அக்கா, தம்பி உரையாடல் என்று ஆரம்பித்தபோது ஏதோ கனக்ககதைக்கப்போகின்றீர்கள் என்று நினைத்தேன். நானும் எனது அக்காவும் தொலைபேசுவதைப்போலவே நீங்களும் தம்பியும் தொலைபேசியிருக்கின்றீர்கள். எதோ இப்படியாவது இரண்டு வார்த்தைகள் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்று சந்தோசப்படவேண்டியதுதான். அக்காமார் அரசியல் பேசும்போது தம்பிமார் அமைதியாக இருக்க வேண்டும் என்பதே முறையாததால் 'அம்மா' உங்கள் தொகுதியில் போட்டியிடப்போவது குறித்து....no comment :-).

Thangamani said...

எந்தத் தொகுதியில நிக்கிறாங்க?

அப்டிப்போடு... said...

//அக்கா, தம்பி உரையாடல் என்று ஆரம்பித்தபோது ஏதோ கனக்ககதைக்கப்போகின்றீர்கள் என்று நினைத்தேன்.//

பேசியிருக்கலாம்தான்., ஆனால் நான் அழைத்த போது தம்பியும் 'நல்ல குணத்துல' இருந்ததனால்..., சரின்னு விட்டுட்டேன்.

//அக்காமார் அரசியல் பேசும்போது தம்பிமார் அமைதியாக இருக்க வேண்டும் என்பதே முறையாததால் 'அம்மா' உங்கள் தொகுதியில் போட்டியிடப்போவது குறித்து.... //

தம்பி!!., தப்பித்துக் கொண்டீர்கள் :-)). அம்மாவைப் பற்றி மட்டும் ஏன் யாருமே பேச மாட்டேன் என்கிறீர்கள்?.

***
நன்றி தங்கமணி., மருங்காபுரி சட்டமன்றத் தொகுதி. ஆண்டிபட்டியிலும் நிற்கலாம் என பத்திரிக்கைகள் இழுத்திருக்கிறன... ஆனால் நம்பத் தகுந்த வட்டாரங்கள் மருங்காபுரி என்று கூறுகிறது. பார்ப்போம்.

KARTHIKRAMAS said...

//அக்காமார் அரசியல் பேசும்போது தம்பிமார் அமைதியாக இருக்க வேண்டும் என்பதே முறையாததால் 'அம்மா' உங்கள் தொகுதியில் போட்டியிடப்போவது குறித்து....no comment :-).
//

aahaa enna njaanam! :-)

சிவனடியார் said...

ஆமா "BANGALORE" இப்ப என்னா பேரு? Official மாத்தீட்டாங்களா

அப்டிப்போடு... said...

நன்றி கார்த்திக்,

சிவனடியார்., என்னது இது ஒண்ணும் புரியல!!.

வாசன் said...

நன்றி தங்கமணி., மருங்காபுரி சட்டமன்றத் தொகுதி.

திரு. போடு: மருங்காபுரி உங்கள்
பழக்கமான அல்லது சொந்த ஊரா..? மருங்காபுரியில் சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகி, பிறகு கம்பி எண்ணி காணமாற் போனார் ஒருவர்.!! அவர் தற்போது என்ன செய்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா..? ஒரு வகையில் எனக்கு வெகு தூஊரத்து உறவினர் !

தமிழகத் தேர்தல் பற்றி நிறைய பேர் எழுதறது சுவராசியமாக உள்ளது படிக்க.

Sivaprakasam said...

உங்கள் http://bhaarathi.net/ntmani/?p=214 -க்கான் பின்னூட்டத்திற்க்கு ந்ன்றி.
/////.....
துக்ளக் சோவுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ்
---/
சில நாட்களுக்கு முன் இதையே நானும் www.bbc.com.uk தேடிப் பார்த்துவிட்டு, என் திறமையில்லாமையை நொந்து கொண்டேன் -) நன்றி. மிக்க நன்றி.

அப்டிப்போடு... said...

வாசன் வருக., அவரு உங்களுக்குச் சொந்தமா., நமக்குந்தான்!!!., அவர என் திருமணத்தின் போது பார்த்தது., காணமல் எல்லாம் போகல. வெளியில் வந்த போது திருச்சியே ஆடிப் போய் விட்டது திரண்ட ஆட்கள் கண்டு என்று பசங்க சொன்னாங்க..., ஒரு காலத்துல தொகுதியில் எந்த விழாவானாலும் ஏன்?., ஒரு காதுகுத்துக்குக் கூடப்பா., கூட நின்னு செய்வார்., செல்வாக்குள்ள ஆள்தான் இன்றும் தொகுதியில். முழுமையா "அனுபவிச்சது" அவர் மட்டும்தான்!! என்னா சொல்றிங்க?., கடினமான காலங்களை மறந்து போய் 'அவங்க' முன்னாடி நின்னா மீண்டும் வாய்ப்புக் கிடைக்கலாம். வெல்லவும் வாய்ப்பிருக்கு (இது சும்மா பேச்சுக்கு இல்ல...!! உண்மையாக.). எனக்குப் பிடிக்காத கட்சிதான்., அவரது எம்.ஜி.யார் ஸ்டைல் அரசியலிலும் எனக்கு உடன்பாடில்லைதான். குடும்ப நண்பர், அவரின் அமைச்சருக்கு முன்னான வாழ்வும் கண்டு வளர்ந்ததால்., அவருக்கு இனியும் அரசியல் எதிர்காலம் இருந்தால் வரவேற்பேன்.
(உங்கள் ஊரை நான் தெரிந்து கொள்ளலாமா., தனி மடலிலேனும்.)


வருகைக்கு நன்றி சிவா.

நேரத்தை நான் தின்று கொண்டிருந்தது போய்., தற்போது நேரம் என்னை விழுங்குகிறது தாமதமான பதிலுக்கு பொறுத்துக் கொள்க.

முகவைத்தமிழன் said...
This comment has been removed by a blog administrator.
அப்டிப்போடு... said...

முகவைத் தமிழன், நீங்கள் அளித்திருந்த இணைப்பிற்கு சென்று பார்க்கமல் உங்கள் பின்னூட்டம் அனுமதித்துவிட்டேன். தனி மனித தாக்குதல் உள்ள எதையும் நான் அனுமதிக்க முடியாது. உங்கள் பின்னூட்டம், நீக்கப்படுகிறது. நன்றி.