Saturday, March 04, 2006

தொல்ல விட்டுச்சுப்பா....!

எல். கணேசன் சும்மா திண்ணையில படுத்திருக்க... ஓடி உழைச்சு பாராளுமன்றத்துல உக்கார வைச்சது தி.மு.க நேரு. எல்.ஜி! அதையெல்லாம் நினைச்சுப், கினைச்சுப் பார்த்து, திரும்ப, கிரும்ப ஓடி வந்துறாதிங்க ராசா.,. சொல்ல நினைக்கிறதெல்லாம் ஒண்ணுதான். தொல்ல விட்டுருச்சு., பந்தியப் 'பங்கீட' ஆரம்பிங்கப்பா.... மத்தியில என்னா செய்யப் போகுதோ மறுமலர்ச்சி?.

13 comments:

குழலி / Kuzhali said...

எதிர்பார்த்தது தானே!!!

Pot"tea" kadai said...

எதிர்பார்த்தது தானே!
ஒரு வகையில் சந்தோசம் தான்...அனேகமா நாளைக்கு பந்தி பரிமரிடுவாங்க...

குழலி / Kuzhali said...

என்ன ஒரு பத்து நாளைக்கு முன்னயே போயிருக்கலாம் திருமா இங்க இருந்திருப்பார்... பார்ப்போம் என்ன ஆகிறதென்று.

அப்டிப்போடு... said...

நன்றி குழலி, சத்யா.

எதிர்பார்த்ததுதான் முன்னாலேயே 'சினிமா'க் காட்டாம போயிருந்திருக்க வேண்டியதுதானே?. வெற்றி வாய்ப்பு இதனால் பாதிக்கப் படாது.

ENNAR said...

தஞ்சாவூர்காரவுக ஒன்னு சேந்தா தமிழகத்தின் தலையெழுத்தையே மாத்தலாமாம். அது உங்களுக்குத்தெரியுமா?

அப்டிப்போடு... said...

என்னார் அய்யா., ம்...! மன்னார்குடிகாரங்களால் அது முன்னமேயே நடந்துருச்சு :)))))))))) எஸ்கேப்.....!!

ENNAR said...

பெருங்காய காரரும் மன்னாரும் சேர்ந்து திருக்குவளையை திரு திரு ன்னு முழிக் வைத்து விட்டார்கள்

அப்டிப்போடு... said...

//திருக்குவளையை திரு திரு ன்னு முழிக் வைத்து //

கொஞ்ச நாள் பொறுத்திருங்க....! அந்தப் பக்க விழிகளைப் பார்க்க :))

Babble said...

தி.மு.க. கூடாரமா இது, நடத்துங்க நடத்துங்க. ஆனா அப்டிபோடு, உங்க "about" பார்த்தேன். முக்கண்ணனேயானலும், முரண்பட்டால் சுட்டுவேன்-னு போட்டிருக்கீங்க. தவறிருந்தால் சுட்டுவேன்னு சொன்னா சரியா இருக்குமோனு தோணுது. முறன்பட்டாலே சுட்டுவேன்-கிறது ராணுவ ஜெனரல் சொல்ற மாதிரி இருக்கு :)

இராமநாதன் said...

அக்கா,
பாவம், எண்பத்தி சொச்சம் ஆச்சு தலைவருக்கு,,, இன்னும் எத்தன நாள் ஆட்சி நடாத்த முடியும்?

தேர்தலுக்கு அப்புறம் ஸ்டாலின் தான். அதச் சொல்லியே ஈஸியா வோட்டு வாங்கிடலாம். இன்னும் நானே முதல்வராவேன்னா எப்படி? நம்பற மாதிரி இல்ல.

எனக்கென்னவோ இந்த தேர்தல் ஜெக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான விளையாட்டுன்னு தோணுது. ஜெ ஆண்டாலென்ன தியாகச்சுடர ஸ்டாலின் சோனியா முதல்வரா வந்தாலென்ன. :)


தனிக்கேள்வி,
ஸ்டாலின்னு, ஹிட்லர் புண்ணியாத்மான்னு சொல்லக்கூடிய, யாராவது உங்க மகனுக்கு பேர் வப்பீங்களா?

அப்டிப்போடு... said...

//முறன்பட்டாலே சுட்டுவேன்-கிறது ராணுவ ஜெனரல் சொல்ற மாதிரி இருக்கு :) //
நல்லவைகளுடன் முரண்பட்டால் என்று வைத்துக் கொள்ளுங்கள். சுட்டுவேன் என்பது சுட்டிக்காட்டுவேன் அவ்வளவுதான் (அதுனால கடி வந்தாலும், இடி விழுந்தாலும்)., நீங்க என்னமோ நான் சுட்டுத் தள்ளப் போற மாதிரி இராணுவத்தையெல்லாம் இழுக்கிறிங்க :)). வருகைக்கு நன்றி.

அப்டிப்போடு... said...

//அக்கா, பாவம், எண்பத்தி சொச்சம் ஆச்சு தலைவருக்கு,,, இன்னும் எத்தன நாள் ஆட்சி நடாத்த முடியும்?//

தம்பி....., நாட்ட இளைஞர்கள் கையில் கொடுக்கிர அளவுக்கா இப்ப இளைய சமுதாயம் இருக்கு??!!!.

//நானே முதல்வராவேன்னா எப்படி? நம்பற மாதிரி இல்ல.//
அவர் பதவிப் பிரமாணம் எடுக்கும் போது நம்ம நம்பிக்கவேண்டியதுதான்!!!.

//ஜெ ஆண்டாலென்ன தியாகச்சுடர ஸ்டாலின் சோனியா முதல்வரா வந்தாலென்ன. :)//
சோனியா தமிழ்நாட்டுக்கு முதல்வராகணும்கிறிங்க??., நல்ல வேளை டாக்டர் பிராகஸ் முதல்வர் ஆனலென்னன்னு கேட்காம விட்டிங்களே :).,

//தனிக்கேள்வி,
ஸ்டாலின்னு, ஹிட்லர் புண்ணியாத்மான்னு சொல்லக்கூடிய, யாராவது உங்க மகனுக்கு பேர் வப்பீங்களா? //

தனிப்பதில்.,
வைக்கும் போது சொல்லி அனுப்புகிறேன் தம்பி :)).

-/பெயரிலி. said...

ஸ்டாலின் என்ற பெயரிலே என்ன தவறிருக்கின்றதெனத் தெரியவில்லை. ஸ்டாலின் ஒரு மதிக்கப்பட்ட தலைவர். பண்பாட்டு வேறுப்பாட்டினை முன்னிறுத்தி காந்தியைக் கேவலமாகப் பேசிய சேர்ச்சிலினைப் புகழ்கிறோம். ஹிட்லரோடு சேர்ந்துகொண்ட சுபாஷ் சந்திரபோசின் பெயரை வைப்பதிலே பெருமையடைகின்றோம். ஆனால், ஸ்டாலின் என்ற பெயரிலேமட்டும் எமக்கு வெறுப்பு வந்துவிடுகின்றது.