Friday, February 10, 2006

பேச்சு

சரி... நம்ம பொளப்பப் பாக்கலாம்னு., நாளிதழ்கள் பார்த்ததில் அம்மா அறிவித்திருந்திருந்த சலுகை மழையில்....

**** 15 நாள்கள் ஈட்டிய விடுப்பை பணமாக்கிக் கொள்ளலாம். அரசு ஊழியார் குடும்ப பாதுகாப்பு நிதி (பணிக் காலத்தில் மறைந்தால்/இறந்தால் அரசால் அளிக்கப்படும் தொகை) ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 1.5 லட்சமாக உயர்வு.

**** அங்கன்வாடிப் பணியாளர்கள் தொகுப்பு ஊதியம் பெறும் காலம் 5 ஆண்டுகளில் இருந்து மூன்றாண்டு களாகக் குறைப்பு.

**** கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்.

**** சிறப்பு ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தொகுப்பு ஊதியம் மற்றும் தினக் கூலி அடிப்படையில் பணிபுரியும் 10,967 துப்புரவுப் பணியாளர்கள், குடிநீர்த் திட்ட பராமரிப்புப் பணியாளர்கள், தெரு விளக்கு பராமரிப்புப் பணியாளர்கள் ஆகியோருக்கும் பொதுப்பணித் துறையில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் 900 பேருக்கும் கால முறை ஊதியம்.

மனம் மகிழ்ந்து., தேர்தல் கால சலுகை., பிடுங்கப்பட்டது பலவும் மீண்டும் தரப்பட்டது என்றாலும், என்னா நடக்குது நாட்டுலன்னு தெரிஞ்சுக்கறதுக்காக., சன் டிவியப் பார்த்தால்..,

"ஏமாற்றாதே ஏமாற்றாதே கூட்டம் சேர்த்து ஏமாற்றாதே"ன்னு ஒரே கூச்சல்., அட அங்க வரைக்கும் தெரிஞ்சுபோச்சா?.,ன்னு நினைச்சு முடிக்கறதுக்குள்ள அடுத்த குரல்கள் "ரத்து செய்., ரத்து செய்., தொகுப்பூதியத்தை ரத்து செய்" - நம்ம அங்கன்வாடிப் பணியாளர்கள்தான் கத்திக்கொண்டிருந்தார்கள். அது என்னான்னு கவனிச்சு., அதனால இன்னும் கொஞ்சம் பி.பிய ஏன் கூட்டிக்கணும்., அடுத்த செய்தியப் பாக்கலாம்னு. எம்புள்ளையோட விளையாட ஆரம்பிச்சுட்டேன். அடுத்த செய்தி வந்தது... அதில கர்நாடகாவில தெவகவுடா மகன் குமாரசாமி பேசிகிட்டு இருந்தார்... அவர் பலத்த நிருபிக்கிறதுக்கு... அட மக்கான்னு நினைச்சுகிட்டு அடுத்த செய்தியப் பார்த்தா... கேரளாவுல உம்மன் சண்டியும்., கருணாகரனும் மண்டையில இரத்தம் ஒழுக கொஞ்சிக்கிறாங்க...

நாடே கெட்டுப்போச்சுப்பா....! ந்னு நினைச்சுகிட்டு "ஏய் பாப்பா! ஹோம் ஒர்க் என்னா?., வா செய்யலாம்னு" எம் புள்ளையக் கூப்பிட்டேன்., வந்ததும் கேள்விகளைப் படித்துக் காட்டினேன்., ஏதேதோ., பதில்களைச் சொல்லிக் கொண்டு வந்தவள்., பேசாமல் அமர்ந்திருந்த என்னைப் பார்த்துக் கேட்டாள்., ''ஏம்மா சைலண்ட்டா இருக்க?''. அம்மா பேசாம இருந்தா... பாப்பா.... ஆன்சர... சீக்கிரம் கண்டுபிடிப்பயில்ல?., என்றேன்.

10 comments:

KARTHIKRAMAS said...

இனி வழக்கம் போல எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

பெத்த ராயுடு said...

மரம், நீங்களும் பூடகமா பேச ஆரம்பிச்சுட்டீங்க?

அப்டிப்போடு... said...

நன்றி கார்த்திக்.,

//இனி வழக்கம் போல எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.//
:-)).

பெத்தராயிடு.,
உங்கள் மொழியில் பேசிப்பார்க்கலாம் என்றுதான்., ஒண்ணையே ஒழுங்கா எழுத வரவில்லை பாருங்கள். திரைகளுக்குப் பின்னே உள்ள முகங்களை., குழந்தைகள் அறிய வேண்டும் என்பதே இப்பதிவு சொல்லுவது.

N. Rethinavelu said...

அம்மாவின் அறிவிப்பு ஏமாற்றம் ஏமாற்றம்

Pot"tea" kadai said...

//''ஏம்மா சைலண்ட்டா இருக்க?''. அம்மா பேசாம இருந்தா... பாப்பா.... ஆன்சர... சீக்கிரம் கண்டுபிடிப்பயில்ல?., என்றேன்//

"கண்டுபிடிச்சிட்டாலும்..."

:-)

யெக்கோவ்...எனக்கு ஒரு பாட்டு நெனவுக்கு வருது...

அப்டிபோடு...போடு...போடு..."திருப்பிபோடு"...போடு...போடு...

பொறவு பாப்பா ஆன்சர கண்டுபிடிச்சிட்டாளா...:-)

அப்டிப்போடு... said...

//அம்மாவின் அறிவிப்பு ஏமாற்றம் ஏமாற்றம்//

எந்தம்மாவச் சொல்றிங்க? இரத்தினவேலு. நீங்க நினைக்கிற அம்மான்னா எப்பவும் அப்படித்தான்.

//பொறவு பாப்பா ஆன்சர கண்டுபிடிச்சிட்டாளா...:-) //
தம்பி., அவ கண்டுபிடிச்சாளோ இல்லையோ... நம்ம அண்ணன் கண்டுபிடிச்சு இங்க பட்டைய கிளப்புறாரு பாருங்க.
http://wandererwaves.blogspot.com/2006/02/25.html

Pot"tea" kadai said...

சுட்டியை சுட்டிக் காட்டிய அக்காவிற்கு நன்றி!

குமரன் (Kumaran) said...

சும்மா வணக்கம் போட்டுட்டுப் போலாம்ன்னு வந்தேன்கா. எப்படி இருக்கீங்க?

திரு said...

தமிழக அரசியலை வேடிக்கையாக எழுதினாலும் அதன் வேதனை வெளிப்படுகிறது. தொடருங்கள் அப்பிடிப்போடு. அப் பிடிப்போடு எழுதுங்கள்!

குமரன் (Kumaran) said...

அன்பு அக்கா.

http://elavasam.blogspot.com/2006/02/blog-post_28.html

இந்த வலைப் பதிவைப் பார்த்து உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் ரோஜா அணியினருக்குத் தருமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.