Sunday, February 05, 2006

தமிழ்மணம் நண்பர்களுக்கு

கடந்த சில நாட்களாக தமிழ் மணத்தில் நடந்து வரும் கூத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்., சிலர் அதில் ஆர்வமுடன் பங்கெடுத்தும் கொண்டீர்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. என் எழுத்தை படிக்கும் சிறு குழந்தையும் அறியும் எனக்கும் அந்த மார்டன் கேர்ள்க்கும் சம்பந்தமில்லையென்பது. முகமூடிக்கும் அது தெரியும்தான். டோண்டுவிடம் நான் கேட்ட கேள்விகளை திசை திருப்ப., முகமூடி சேற்றுக் குட்டையில் விழுந்து., சேறு என் மீது பட பெரும் பிராயத்தனப்பட்டார்ர்ர்ர்ர்(வேற வழி?., பொதுவுல எழுதுறனே?). எடுப்பார் கைப்பிள்ளைகள் சிலவற்றிற்கு மயில் அனுப்பி கூட்டம் சேர்த்து ஆடிய கூத்துக்கள் சுவரஷ்யமாகவே இருந்தது. தலையாட்டிக் கூட்டம் நான் தலையாட்டுவதாகச் சொன்னது.

அப்புறம் இந்த சுள்ளான்., யாரோ சின்னவனாமே?., அது ஏகத்துக்கும் எகிறி குதிச்சுது. சத்தமில்லாம அமைதியா படங்காட்டுற ஆனந்துங்கிறவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 100 வது பதுவு போட., நம்ம போயி வாழ்த்துச் சொல்ல., அவரூஊஊஊஊஊ பதிவுக்கு (இந்தப் போட்டா பதிவுக்கு மட்டும்தான்.), இப்படி நான் பின்னூட்டம் போடுவது வழக்கம்தான். நம்ம மக்கள் தொலைபேசி என்ன இப்படி பண்ணிட்டிங்கன்னு கேட்டாங்க?., என்னாச்சுன்னு கேட்டா., அந்த ஆனந்தந்தான் இந்தச் சுள்ளான் சின்னவன்வன்வன்வனாம்., நமக்கு ஒண்ணும் புரியலே., மீண்டும் அந்த போர்னோ சைட்டுக்குப் போயி பார்த்தேன். சும்மா சொல்லக்கூடாது நல்லாவே தொழில் கத்துக்குடுத்துகிறது தல!!த்த்... உண்மையான தலயெல்லாம் இனிமே முகமூடி மாட்டிங்ககப்பா!)., அழகாப் படம் வரையிற பொண்ணு ஒண்ணு, இரண்டு மாதிரி படம் புடிக்கப் பட்டு பாவம் லாஸ் வேகஸ்ல நிப்பாட்டி வைக்கப்பட்டிருந்தது!!.

அப்புறம் யாரோ இந்த ஞானபீடமாம்., அது ஏற்கனவே பல்லுப் புடுங்கப்பட்ட பாம்பாம்., அது தெரியாம அதோட சர்க்கஸ் கூடாரத்துக்குப் போயி பின்னூட்டம் போட்டு வச்சுறுந்தேன். தருமி அய்யாவின் பின்னூட்டம் பார்த்த பின்புதான் உறைத்தது. மரியாதை இல்லாம 'டி' போட்டு சித்தர் பாட்டு வேற., இதெல்லாம் நம்ம போடான்னு சொல்லவே தகுதியில்லாதது. ஒரு விதயத்தை உறுதியாகத் தெரியுமுன்னரே அல்லது வேண்டுமென்றே., பரப்பி மனவிகாரங்களை எழுத்தில் கொட்டி பதிவிட., அதை பார்த்து நாலு கையைத் தட்ட., கேட்டுட்டு போகணுமா?. நண்பர்கள் சொன்னார்கள் முகமூடியெல்லாம் ஒரு மனிதனாக மதித்து நாங்கலெல்லாம் பின்னூட்டம் இடுவதில்லை. நரித்தனமாக எதையாவது எழுதிவிட்டு ஓடி ஒளிந்து கொள்வான், இந்த விதயத்திற்கு முக்கியதுவம் கெடுத்து மன அமைதியை கெடுத்துக் கொள்ளாதீர்கள், அமைதியாக இருங்கள் என்று. என் கணவரும் " Just Trash it " என்றார். இருந்தாலும் இதற்கு ஒரு முடிவு கட்டாமல் நான் விடப்போவதில்லை.

சரி விதயத்துக்கு வர்றேன்., முகமூடி, ஞான பீடம், சின்னவன் பேரில் சட்ட நடவடிக்கை எடுப்பேன். எத்தனை முகமூடிகள் மாட்டியிருந்தாலும் எனச் சொல்லிக் கொள்கிறேன். 'நெட்வொர்க்' வேலையை முகமூடி அலுவலகத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவும் அல்லது கூட்டம் போட்டு கூம்மியடிப்பதை அடுத்தவர்களுக்குப் பாதிப்பில்லாது செய்யவும்.

நடுநிலையில் உள்ளவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளாக இருப்பதும்., உண்மையை அறிந்தவர்கள் வாய் பொத்தி இருப்பதும் அந்த வகையாறாக்களுக்கு தமிழ் மணத்தை தாரை வார்த்துவிட்டுப் போக வழிவகுக்கும். ஏற்கனவே பல இணைய இதழ்கள் இவ்விதம் ஆனதை நண்பர்கள் கருத்தில் கொள்க.

ஆரம்பம் முதல் இங்கு நடப்பதை பார்த்து கொண்டு வரும் நண்பர்கள் இங்கு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

42 comments:

Satheesh said...

I have the same advice that is been given to people. Just ignore and move on...!!

ramachandranusha said...

அப்படிப்போடு, உங்கள் பெயரையும் முகமூடியின் பெயரையும் குறிப்பிட்டதற்கு காரணம், பெயரைப்பார்த்து பதிவுக்கு மறுமொழி
போடுவதில்லை என்பதை சொல்ல முற்பட்டேன். என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை மட்டுமே பார்க்கிறேன். அவர்களின் பின்புலங்களை ஆராயவோ அல்லது முன்பு என்ன என்ன எழுதினார் என்பதையும் நினைவு வைத்துக் கொள்ளுவதில்லை என்பதையும் இன்னொரு முறை சொல்லிக் கொள்கிறேன்.
மூன்று பின்னுட்டங்களில் தவறாய் புரிந்துக் கொண்டேன் என்று சொல்வது எதை எதை? வருத்தமாய் இருக்கிறது. பொதுவாய்
என்னை விமர்சித்து வருவதைக் கூட நான் பெரியதாய் எடுத்துக் கொள்வதில்லை. அப்படி இருக்க, உங்களை ஏன் நான்
தவறாய் புரிந்துக் கொள்ள வேண்டும்? உங்க ஈ மெயில் ஐடி தாங்களேன். மெயில் அனுப்புகிறேன்.//

அப்படிப்போடு, இது உங்களுக்கு இளவஞ்சியின் பதிவில் இட்ட பதில். கணிணி மிகுந்த பிரச்சனை கொடுக்கிறது. முந்தா நாள் இரவு
ரிப்பேருக்குப் போய், நேற்றிரவு வந்தது. ஆனால் இன்னும் சரியாகவில்லை.
இணையத்தில் நடக்கும் சங்கதிகளை பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை.பல மூடு மந்திர விவகாரங்கள், பின்னால் வேறு பேசுவது
போன்றவை கொஞ்சம் ஸ்ரெஸ்ட் பார்வோர்ட் ஆளான எனக்கு ஒத்துவருவதில்லை. நேரமிருக்கும்பொழுது எட்டிப் பார்த்துவிட்டுப் போவது. இதை எல்லாம் பெரியதாய் எடுத்துக் கொண்டால் மனமும்,
உடலும்தான் கெடும் என்பது என்னுடைய கருத்து. இது சரியானது வழியா என்றால் எனக்கு தெரியாது, என் நிலமைக்கு
இது சரி என்பதால் கடைப்பிடிக்கிறேன். ஆனால் இத்தகைய விஷயங்கள், நான் நான்கு வருடம் முன்பு இணையத்தில் நுழைந்ததில்
இருந்து நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. மனசுக்கு ஒவ்வாதவைகளை ஒதுக்குவது என் வழி
:-))))))))))))))

முகமூடி said...

மரம். வழக்கம் போலவே உணர்ச்சி கண்ணை மறைக்க சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை அள்ளி வீசுகிறீர்கள்.

உங்களுக்கும் மாடர்ன் கேர்ளுக்கும் சம்பந்தம் என்று நான் எங்கே சொன்னேன் என்று காட்ட முடியுமா?

டோண்டுவின் மீது நீங்கள் விமர்சனம் வைப்பதை திசை திருப்புவது என் நோக்கமல்ல. ஒரு நிகழ்வை பற்றிய என் கருத்தை என் பதிவில் சொன்னேன். எடுப்பார் கைப்பிள்ளைகளை மெயில் அனுப்பி கூட்டம் சேர்த்தது நான் என்பது உங்கள் யூகம். டோண்டு பதிவில் நீங்கள் அக்காரியத்தை செய்தீர்கள் என்று நானும் சொல்ல முடியும். எனக்கு இதுவரை கூட்டம் சேர்க்கும் அவசியம் கண்டிப்பாக தேவைப்படவில்லை. நாலு பேர் உங்கள் கருத்துக்கு மாற்றாக கருத்து சொன்னால் மெயில் அனுப்பி ஆள் சேர்ப்பதா? grow up.

சட்ட பூச்சாண்டியெல்லாம் சூப்பர்தான். அதற்கு முன் நீங்கள் என் மேல் வைக்கும் குற்றச்சாட்டு என்ன என்பதை சொல்லுங்கள்.

என் மேல் நீங்கள் சொல்லும் சம்பந்தமில்லாத கற்பனை குற்றச்சாட்டுகளுக்கு சில விளக்கங்கள்இந்த பதிவிலே இருக்கிறது. முடிந்தால் படித்துப்பாருங்கள்

கோபி(Gopi) said...

இங்கே சொல்லியிருப்பது போல "துப்ப விரும்புவோர் துப்பிக்கொள்ளுங்கள். நான் வழிபடவே விரும்புகிறேன்" தமிழை!

துப்புவது யார்.. துப்புரவு செய்வது யார் என்றெல்லாம் ஆராய்ச்சியோ வாதமோ செய்ய எனக்கு விருப்பமில்லை.

unmaivilambi said...

பத்ம வியூகமா இது?


//ஆனால் தலித் என்பதால் கொலை என்ற பிரச்சாரம் மட்டும் வெளியில் வருகிறது.//

தலித் என்பதால் கொலையை யாரும் கண்டிக்கவில்லை என்பதாக வரவேண்டும்...இது தெரியாமல் வந்த பிழையா அல்லது வேறு மாதிரியா ?

//சமீப போராட்டங்களின் போது பெரியாரை முழங்கிய திருமாவை நாத்திகவாதி என்று தவறாக நினைத்து //

சிந்திக்க தெரிந்த மனிதன் யாரையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதை தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.பெரியார் எவ்வளவோ கூறியிருப்பார். எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வதில்லை யாரும்.

//நான் அந்த அங்கீகரிப்பை ஒரு சாதாரண நிகழ்வாகத்தான் பார்க்கிறேன்.//

அப்படியா..ஆனால் நீங்கள் நீங்களாகவே உங்களையே பரிந்துரைத்துக்கொண்டதை பார்த்து நாங்கள்தான் முட்டாள்கள் உங்களை தவறாக புரிந்துக்கொண்டிருக்கலாம்.

//தருமி என்ற புனைபெயரில் எழுதும் பதிவர் ரொம்ப நாள் கழித்தே தம் உண்மையான பெயர், புகைப்படம் ஆகியவற்றை வெளியிட்டார்//

அப்படியானால் முகமூடி யார் என்று தெரியும் வேளை வந்துவிட்டதா?

//இனி பதிவுகளில் correction/omission ஏதும் நிகழ்ந்தால் முன்கூட்டியே தெரிவிக்க ஏதுவாக, தணிக்கை கமிட்டி மெம்பர்கள் தங்களது mailing list எனக்கு அனுப்பி வைத்தால் முன்கூட்டியே தகவல் அனுப்பிவிடுகிறேன்//

ஒண்ணும் வேண்டாம்.தனிபதிவாக போட்டு விளக்கிவிடுங்கள் சார்...

//மோடி tums, வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றெறிச்சல் சரியாகும் என்று எழுதியதை பற்றி உங்களுக்கு ஆட்சேபம் இருந்தால் ஒரு வரி தனிமடலிலாவது சொல்லியிருந்தால் நீக்கியிருப்பேன். //

கேவலமான விமர்சனத்தை தனிமடலில் எழுதினால் மட்டுமே இவர் நீக்குவாராம்.மற்றவர்கள் மட்டுறுத்தல் பண்ணவேண்டுமாம்.

//அப்டிபோடு/மரம் என்ற இரண்டு பெயரில் எழுதும் நீங்கள் முகமூடி என்ற ஒரே பெயரில் எழுதும் என்னை பல பெயரில் எழுதுவதாக குற்றம் சாட்டுகிறீர்கள்//

இது பயங்கர ஜோக்.இது கண்டிப்பாக நமது முகமூடி எழுதியது இல்லை.இவ்வளவு வீக்கான வாதத்தை அவர் வைக்க மாட்டார்.என்ன இது சின்ன பிள்ளைத்தனமா இருக்கு?

//எனது IP, ISP எல்லாம் தருகிறேன், உங்கள் மீது நம்பிக்கை வரும் அளவு உங்களது முகவரி, தகவல்கள் மற்றும் உங்கள் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வையுங்கள். //

ஐ.பி மட்டும்தானா..போட்டோ கிடையாதா.....முகவரி கிடையாதா...

//இளவஞ்சியில் பதிவில் நண்பன் என்பவர் வந்து என்னை பற்றி தனிப்பட்ட முறையில் தரம் தாழ்த்தியும், அவர் பங்குக்கு என்னை சிலரோடு சம்பந்தப்படுத்தியும் திட்டித்தீர்க்கிறார். //

அதனால்தான் இவரும் அவரை ஊளையிடுகிறார் என்று பண்பாய் எழுதி இருக்கிறார்.

//கடைசியாக எல்லாரையும் போலவே "முகமூடிக்கு பின்னால் இருக்கும் திருமலை" என்று ஒரே போடாக போடுகிறார். தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒரு மத இயக்கத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டு சட்ட விரோத செயலகள் பல செய்து கைதிலிருந்து தப்ப அமீரகத்திலே தஞ்சம் புகுந்திருக்கும் நண்பன், என்னை பார்த்து குற்றம் சாட்டுகிறார். (அவரின் பாணியில் பேச கேவலமாக இருக்கிறது. என்ன செய்வது. இது நாள் வரை என்னை யாரோடாவது ஒப்பீடு செய்யும்போதெல்லாம் பொறுமையாக பதில் சொல்வது இவர்களுக்கு உரைப்பதில்லை... இனி இப்படித்தான். இவ்வரிகள் நீக்கப்பட வேண்டுமாயின், என்னை திருமலையோடு ஒப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்//

அது யாரு திருமலை?

இந்த பதில் எழுத ஒரு வாரம் எதுக்கு?
நேற்று மதியம் முகமூடியின் வலைப்பதிவு சற்றுநேரம் கிடைக்காமல் இருந்தது ஏன்?

பத்மவீயூகத்தில் நுழைந்த அபிமன்யு வெளியே வரமுடியாமல் இருந்ததற்கும் இதற்கும் சம்மந்தம் என்ன என்று தேடினால் என்ன கிடைக்கும்?
நிறைய கிடைக்கும் வலைப்பதிவாளர்களே...

அப்டிப்போடு... said...

//அப்டிபோடு அவதியுறுவதற்கு டோண்டு எவ்வகையில் பொறுப்பாவார், //

எத்தனையோ முறை அப்பதிவிலேயே., சொல்லியாச்சு., திரும்பத் திரும்ப நேத்துதான் புதுசா உலகத்த பார்க்கிற மாதிரி., கேள்விய கேட்டுவிட்டு., அடுத்தவர்களை குழந்தை என்று நக்கல் செய்வது.

//என் பதிவு அவருக்கு புரிந்ததா என்றே தெரியவில்லை//
எனக்கு பதிவு புரியாது., நண்பன் அரைவேக்காடு., இளவஞ்சி புரிந்து கொள்ளாமல் பதிவெழுதுகிறார். ஏன் தமிழ் மணத்தில எல்லோரும் புரிந்து கொள்ள முடியாத மூளை அமைப்பை கொண்டவர்கள். ஆனால் சின்னவன், ஞானபீடம் போன்றவர்கள் என்னை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள்., எனவே அவர்கள் பதிவிற்குப் சென்று ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து வருகிறேன் என்கீறீர்கள். அப்படித்தானே?.,

//சம்பந்தப்பட்ட பதிவரோ அப்படியே அந்த விதயத்தை திசை திருப்பி மூடி வச்சிட்டார்" //
இது டோண்டு அவர்களின் விவாதத்தைப் பற்றி சொன்னது., உங்களைளுக்குச் சொன்னதல்ல. நீங்கள் அடுத்தவர்களை குழந்தைகள் என்கிறீர்கள்.

//மோடி டும்ச், வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றெறிச்சல் சரியாகும் என்று எழுதியதை பற்றி உங்களுக்கு ஆட்சேபம் இருந்தால் ஒரு வரி தனிமடலிலாவது சொல்லியிருந்தால் நீக்கியிருப்பேன்//

தெரிந்தே அனுமதித்தது நீதானே?., தனி மடல் போடுவதெல்லாம் முகமூடியின் வேலை. மோடி மஸ்தான் என்ற பெயரில் அப்பின்னூட்டமே முகமூடி போட்டதுதான்.

//பதிவில் APADIPODU இவ்வாறு எழுதுகிறார் :: "குழலி., என்ன விளையாட்டு இது? நான் எழுத நினைசதையெல்லாம் நீங்க எழுதிட்டிங்க. மெதுவா வரலாம்னு இருக்க நம்ம பயகல பட்டுன்னு இரண்டு பொடனில போட்டு "வாடா., வெரசா...."ன்னு சொல்றதுதான் என் நோக்கம். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்"... மேலும் இன்னொரு இடத்தில் அப்டிபோடு எழுதியது "நாம எப்பவுமே நம்மள நாமன்னுதான் சொல்லிக்கிறது வழக்கம்".

இப்போது அப்டிபோடு எழுதும் "நாம" "நம்மள" என்பதற்கெல்லாம் வேறு அர்த்தம் தோன்றுகிறது எனக்கு. //

இதை படிக்கும் வாசகர்களிடமே விடுகிறேன்.

//ஞானபீட பதிவில் மோடித்தனம் என்று எழுதியபோது //
மோடி மஸ்தானைக் குறிக்க எழுதப்பட்டது அது. (மோடி மஸ்தான் என்ற பெயரில் அப்பின்னூட்டமே முகமூடி போட்டதுதான் என நான் நினைப்பதால் குறிப்பிட்டேன்)

//ரொம்ப நாட்களுக்கு முன் தமிழ் ராம்வாட்சர், ஒரு சிலர் பதிவு பெயரில் மட்டுமல்லாமல் போலி பெயரிலும் பின்னூட்டம் எழுதுகிறார்கள் என்று ஐ.பி. எல்லாம் பிடித்து ஒரு பதிவு எழுதினார்//
அந்தப் பதிவையும் நான் படிக்கவில்லை., ராம்வாட்சர் யார் என்பதும் எனக்குத் தெரியாது. எனவே அதற்கு பிறகு நீங்கள் பினாத்தியிருக்கிற உளறல்களை தமிழ்மணம் வாசகர்களுக்கே விடுகிறேன்.

//அன்னப்பறவை, மணியன் என்ற பெயரில் எல்லாம் வலைப்பதிவும், உங்களுக்கு ஆதரவாக உங்கள் கருத்தை வலியுறுத்த பல அவதார பெயர்களிலும், கேவலமான வார்த்தைகளில் திட்டி உங்கள் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த சில சமயம் உங்கள் பெயர் பல சமயம் போலி பெயர்களிலிலும் உலவுகிறீர்கள்//

இதை தகுந்த ஆதாரத்துடன் விளக்கவேண்டுகிறேன். இப்படி அவதூறு பரப்புவதற்காக உங்கள் மீது சட்டப் படியான நடவடிக்கை உறுதியாக எடுப்பேன்.

//கருத்தை கற்பனை குற்றச்சாட்டுகளால் அல்லாமல் கருத்தால் எதிர்கொள்ள முயற்சி செய்யுங்கள்//
இதை முகமூடி உணர்ந்தால் போதும்.

//உங்களை கேள்வி கேட்க எல்லாம் பினாமி பெயரில் வர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை//

நான் கூறிய வசனத்தில் (இளவஞ்சியின் பதிவில்) எது முகமூடியை பாதித்ததோ அதையே திரும்பி ஊழையிடுவதால் நல்லவனாக வேடங்கட்டினாலும்., என்னைவிட தமிழ் மண நண்பர்கள் தாங்களை மிக நன்றாகப் புரிந்து வைத்திருப்பதால் இந்த ஊளையைப் பற்றி., எனக்கு வலையில்லை.

//உங்கள் மீது நம்பிக்கை வரும் அளவு உங்களது முகவரி, தகவல்கள் மற்றும் உங்கள் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வையுங்கள். //
ஏன் சின்னவனைவிட்டு படங்காட்டச் சொல்லவா?. முகமூடியின், முகமூடி அனைவரும் அறிந்ததே., புதிய வலைபதிவர்கள் மட்டும் இதை அறியாமல் இருக்கலாம். அறிந்து கொள்ளும் காலம் தொலைவில் இல்லை.

http://njanapidam.blogspot.com/2006/01/blog-post_28.html
http://njanapidam.blogspot.com/2006/01/blog-post_26.html
http://njanapidam.blogspot.com/2006/01/coffee.html
http://njanapidam.blogspot.com/2006/01/circus.html

http://chinnavan.blogspot.com/2006/02/reason.html
http://chinnavan.blogspot.com/2006/01/copy.html

சின்னவனும்., ஞன பீடமும் சூழ்ந்து கொண்டு ஆடிய ஆட்டங்களுக்கு எல்லாம் தவறாமல் போய் பின்னூட்டம் அளித்து உற்சாகம் கொடுத்த மூகமூடி., ஒன்றுமே தெரியாததுபோல்., முகமூடியை மையப்படுத்தி ஆட்டம் நடந்ததாக., கவனியுங்கள் முதலில் டோண்டுதான் ஆட்டத்தில் இருந்தார். ஆனால் புனுகை பூசி டக்கென்று வெளிச்சத்துக்கு வந்தது முகமூடி., இப்போது பத்மவியூகம் .. அது இது என்ற சலம்பல் வேறு.., யார் தாக்கினார் அப்பனே ?., காற்றில் பத்மவியூகமாய் கற்பனை பண்ணிக் கொண்டு உன்னோட குதர்க்கவாத கத்திகளை வீசிக்கொண்டிரு., வியர்த்த உனக்கு விசிறி விட உன் அடிப்பொடிகள் வருவார்கள். ஆனாலும் கூட இப்படியே எவ்வளவு காலம் நண்பனே நாட்களை ஓட்டிக் கொண்டிருப்பாய்?. தனிப்பதிவு போட்டு எதிற்க்கும் அளவிற்கு முகமூடியின் தகுதிதான் தான் என்ன? பெரிய இலக்கியவாதியா., இல்லை அரசியல்வாதியா? ஒரு ஆதாரமுமில்லாமல் யாரையும் அவர்கள் செய்வதை நேராகக் குறிப்பிடும் துணிவுகூட இல்லாமல் மறைமுகமாக... ஒரு வார்த்தை 10 பதிவர்களை குறிப்பிடும் வண்ணம் எழுதி என்னேரமும் பிதற்றித் திரியும் முகமூடி., நான் நேரத்தை வீனாக்கி., தனிப் பதிவு போடும் அளவிற்கெல்லாம் தகுதியான ஆள் அல்ல என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன்… இத்துடன் முகமூடிக்கு செயல்தான் நான் சொல்லப்போவதில்லை. என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிருக்கலாம்., நான் பதில் அளிக்கப் போவதில்லை. ஏனெனில் என்னை விட அனைவருக்கும் இங்கு முகமூடியை புரிந்திருக்கிறது. இது எனது பதிவிலும் நகலிடப்படும்.

KARTHIKRAMAS said...

மரம்,
/இந்த விதயத்திற்கு முக்கியதுவம் கெடுத்து மன அமைதியை கெடுத்துக் கொள்ளாதீர்கள், அமைதியாக இருங்கள் என்று. என் கணவரும் " Just Trash it " என்றார். /

இதுதான் சரி என்று படுகிறது எனக்கும். இருந்தாலும் சில பதிவுகளை வாசித்துவிட்டு, விரிவாக பின்னூட்டம் எழுதுகிறேன். தொடர்ச்சியாக பதிவுகளை வாசித்திருக்கவில்லை,

Vaa.Manikandan said...

சத்தியமா என்ன நடக்குதுனு என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் மிக வருத்தத்தில் இருக்கிறீர்கள் என்பது மட்டும் தெரிகிறது.

அடக் கடவுளே...அரசியல் அரசியல் அரசியல்

இளவஞ்சி said...

/இந்த விதயத்திற்கு முக்கியதுவம் கெடுத்து மன அமைதியை கெடுத்துக் கொள்ளாதீர்கள், அமைதியாக இருங்கள் என்று. என் கணவரும் " Just Trash it " என்றார். /

மரம்!

எனக்கும் இதுவே சரியெனப்படுகிறது!

நம் வாழ்க்கையில் எந்த விடயத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப்பொறுத்தே நம் மன அமைதி அமைகிறது! கருத்துக்களை எடுத்துச்சொன்னோம்! அவர்களும் அதனை நல்லவிதமாக எடுத்துக்கொண்டால் நன்று! இல்லை அவர்களுக்கு வேறு கருத்துக்களோ / சச்சரவுகளோ இருக்கிறதா! அவ்வளவுதான்! அதைப்பற்றி நாம் ஏன் மனநிம்மதியை கெடுத்துக்கொள்ளும் அளவுக்கு மெனக்கெடவேண்டும்?! நாம் எடுத்துச்சொன்னதில் நேர்மையிருப்பில் நமக்கு அதுபோதுமே?!

வலைப்பதிவு என்பது நமக்கு தொழில் அல்ல! மனநிம்மதிக்கு பதிகிறோம்! அந்த நோக்கத்தையே கெடுத்துக்கொள்ளும் அளவுக்கு போகிறோம் எனில் என்ன சொல்ல?! :( அனைத்தையும் புறங்கையால் ஒதுக்கித்தள்ளுங்கள்! நம் வாழ்க்கையில் நம் நேரத்தை செலவழிக்க எவ்வளவோ இருக்கிறது! வலை எனும் மாய உலகம் நமது வாழ்க்கையெனும் நிஜ உலகை பாதிக்கவிடாதீர்கள்!

நண்பன் என்ற முறையில் இதைவிட வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை! :(

Ram.K said...

வருத்தமடையாதீர்கள்.
விஷயத்தை sportive ஆக எடுத்துக்கொள்ளுங்கள்.

Thangamani said...

மரம்,

நீங்கள் எழுத வேண்டியது அனேகம். அதை எழுதுங்கள். இதெல்லாம் உங்களுக்கு உதவாது; இதில் எல்லாம் உங்களுக்கு பயிற்சியும் இல்லை என்பது உங்கள் உணர்ச்சி வசப்பட்ட பதிவில் இருந்தே தெரிகிறது. டேக் கேர்.

நண்பன் said...

அப்படிப் போடு,

அமைதி கொள்ளுங்கள்.

சிலர் தான் இன்னது செய்கிறோம் என்று அறியாது செய்வர். முகமூடி அத்தகையவர்களில் ஒருவர்.

அடுத்த வேலையைக் கவனியுங்கள்.

இவருக்குப் பதில் சொல்வது ஒன்று தான் வேலை என்றாகிவிடும். குறைந்தபட்சம் புத்திசாலித்தானம் கூட இல்லாத ஒருவரிடமும் பேசிக் கொண்டிருப்பதில் யாருக்கு என்ன லாபம்?

நண்பன்

டிசே தமிழன் said...

மரம், தொடர்ச்சியாய் இது சம்பந்தமான பதிவுகளையோ விவாதங்களையோ வாசிக்கவில்லை என்றாலும் நீங்கள், பெயரிலி போன்றவர்கள் எழுதியதை வாசிக்கும்போது என்ன நடந்திருக்குமென்று ஒரளவு புரிந்துகொள்ளமுடிகின்றது. மேலே பலர் கூறியதுமாதிரி, இவற்றை விலத்தி விட்டு உங்களுக்குப் பிடித்த விடயங்களை எழுதிக்கொண்டு இருப்பதுதான் நன்று போலத்தான் எனக்கும் தோன்றுகின்றது.
.....
நீங்கள், உங்கள் நட்சத்திர வாரத்தில் எழுதிய பதிவுகளைப் பார்த்தபோது இன்னும் அப்படியான பதிவுகள் நிறைய - முக்கியமாய் உங்கள் ஊர் அனுபவங்கள்- எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். மீண்டும் நடசத்திரமாக்கினால்தான் அப்படி எழுதுவேன் என்று அடம்பிடிப்பீர்கள் என்றால், மதி, காசி போன்றவரிடம் உங்களை இன்னொருமுறை நட்சத்திரமாக்க ஒரு வேண்டுகோளை அனுப்பிவிடுகின்றேன் :-).

முத்து(தமிழினி) said...

மரம்,

//நம் வாழ்க்கையில் எந்த விடயத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப்பொறுத்தே நம் மன அமைதி அமைகிறது!//

இது தான் சரி..மனதை குழப்பிக்கொள்ளாதீர்கள்...

ஜோ / Joe said...

அப்படிப்போடு,
கார்த்திக்ராம்ஸ்,தங்கமணி,இளவஞ்சி ஆகியோர் சொன்னதையே நானும் உங்களுக்கு சொல்ல நினைக்கிறேன்.

முகமூடி-யின் நேர்மையின்மை,திரித்தல் பற்றி இப்போது புதிதாகத்தான் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை .இங்கே .யிர் கொடுத்து வளர்த்த தமிழ் மற்றும் பல
பதிவில் ,அவருடைய அந்த பதிவை விட ,பின்னூட்டங்களில் என்னோடு செய்த நேர்மையற்ற் ,காழ்ப்புணர்வும் ,வெறும் வெறுப்பேற்றும் வாதங்களை படித்துப்பாருங்கள் ..அனானிமஸாக வந்து வெறுப்பேற்றியதும் அவர் தான் என்பதை நான் பின்னர் தான் உணர்ந்தேன்.

அதற்குப் பின்னர் நேர்மையற்ற இந்த மனிதரோடு எவ்வித விவாதத்திலும் ஈடுபடுவதில்லை என்பதை தீர்மானமாக எடுத்துக்கொண்டேன்.

அவரிடம் திறமையிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை .ஆனால் அவர் அதை எதற்கு பயன்படுத்துகிறார் என்பதில் தான் அவர் மீது கொள்ள வேண்டிய மரியாதை முடிவு செய்யப்படும் .என்னைப் பொறுத்தவரை விதண்டாவாதத்தின் மன்னர் அவர்.

எனவே மேற்கண்ட நண்பர்களின் யோசனையை நீங்கள் பின்பற்றுவதே நல்லது.

குழலி / Kuzhali said...

பதிவாகவே போடலாமே என்று நிறைய எழுதினேன்... அலுப்பு தட்டுவதால் தற்போது அதை பதிவிட விருப்பமில்லை...ம்... தற்போதைக்கு இதை மிதிக்காமல் தாண்டி போங்கள்....

நான் இது தொடர்பாக எழுதிய பதிவிடாத பதிவிலிருந்து ஒரு சில வரிகள் உங்களுக்கும்

//சின்ன வயசுல இருந்து இன்னிக்கு வரிக்கும் அம்மா சொன்னது ரோசனைக்கு வந்துச்சி அப்போலாம் (இப்ப மட்டும் என்ன எளவாம்?) விவாதம் வெதண்டாவாதம்னு கத்திகினே கெடப்பன்.... அம்மா சொல்லுவாங்க கத்தி கத்தி விவாதம் செஞ்சி யாரையும் மாத்த முடியாது, நீ உன் பக்க நெசத்தை நியாயத்த மட்டும் சொல்லிட்டு போய்கிட்டே இரு, இன்னிக்கி இல்லனாலும் லாங் ரன்(long run)ல நெசம் மட்டும் தேன் செயிக்கும்....//

Pot"tea" kadai said...

யெக்கொவ், நீங்க இப்பிடியெல்லாம் உணர்ச்சிவசப்படலாமா? அது கெடக்குது கழுதன்னு(சும்மா பின்ன போயி நின்னால போயி நின்னாலே ஒதைக்கும்!)உட்டுட்டு போவீங்களா....
செவிடன் காதுல சங்கு ஊதுனா அவன் காதுல உழுமா...வாய்ப்பே இல்ல...நீங்க போயி "சிறிசு"க்கும், "நம்பர் 1 பதிவு"க்கும் பதில் எழுதிக்கிட்டு...
உங்களுக்கு நக்கலா எழுத வேறத் தெரியாது. டைரக்டா எழுதிட்டு "ரோட்ல போற வர்ரது கிட்டவெல்லாம் ஏன்க்கா கடி வாங்கற"...
மத்தவங்கள மாதிரி குருமா, இட்டிலி, தோசன்னு எழுதத் தெரிமா ஒங்களுக்கு? தெரியாதே...

தயவு செஞ்சி "மலையப் பாத்து நாய் கொளைக்குது"ன்னு ஃப்ரீயா உடுவீங்களா.......

எது எப்பிடியோ... கண்ட நாய்ங்ககிட்ட கடி வாங்காதீங்க யெக்கோவ்...

freeyaa udunga...takecare

Pot"tea" kadai said...

//தேவைப்படவில்லை. நாலு பேர் உங்கள் கருத்துக்கு மாற்றாக கருத்து சொன்னால் மெயில் அனுப்பி ஆள் சேர்ப்பதா? grow up.//

அய்யோ மொகத்த மூடிட்டு இருக்க ராசா...போயி ஒன்னோட பதுவு அல்லாத்தியும் ஒரு மொர படிச்சி பாரு...யாரு "grow up" ஆவனும்னு தெரியும்...போ போ...நடையக் கட்டு!

அப்டிப்போடு... said...

நன்றி சந்தோஷ்.

அப்டிப்போடு... said...

//:-))))))))))))))//

உஷா., எதற்கு இவ்ளோ சிரிப்பு?., கொண்டாடுங்க!!. நன்றி :-))))..

அப்டிப்போடு... said...

நன்றி கோபி

அப்டிப்போடு... said...

நன்றி உண்மைவிளம்பி அவர்களே.

கார்த்திக் நன்றி.

நன்றி மணிகண்டன்.

அப்டிப்போடு... said...

//நண்பன் என்ற முறையில் இதைவிட வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை! :( //

நன்றி இளவஞ்சி

அப்டிப்போடு... said...

//விஷயத்தை sportive ஆக எடுத்துக்கொள்ளுங்கள்.//

:-))). Thanks Chameleon.

அப்டிப்போடு... said...

//நீங்கள் எழுத வேண்டியது அனேகம்//

ஆரம்பிச்சாச்சு... ! எழுதுவேன். நன்றி தங்கமணி.

//அடுத்த வேலையைக் கவனியுங்கள்//

ம்....!... நன்றிங்க நண்பன்.

//பெயரிலி போன்றவர்கள் எழுதியதை வாசிக்கும்போது என்ன நடந்திருக்குமென்று ஒரளவு புரிந்துகொள்ளமுடிகின்றது.//

ஓரளவா? :-))) நன்றி டி.ஜே.

அப்டிப்போடு... said...

//மனதை குழப்பிக்கொள்ளாதீர்கள்... //
நன்றி முத்து. குழப்பமெல்லாம் இல்லை. இப்பத்தான் நிறைய தெளிவாக இருக்கிறேன்.

//கார்த்திக்ராம்ஸ்,தங்கமணி,இளவஞ்சி ஆகியோர் சொன்னதையே நானும் உங்களுக்கு சொல்ல நினைக்கிறேன்//.
நன்றி ஜோ., மண்டைக்காடை பதிவு செய்ய மறந்துவிடாதீர்கள்.

அப்டிப்போடு... said...

//ம்... தற்போதைக்கு இதை மிதிக்காமல் தாண்டி போங்கள்....//
நான் தாண்டித்தான் போகிறேன்., அதில் விழுந்து புரளத்தான் ஒரு கூட்டமே இருக்கிரதே?. நன்றி குழலி.

//மலையப் பாத்து நாய் கொளைக்குது"ன்னு ஃப்ரீயா உடுவீங்களா.......//
தம்பி.,அப்படித்தான் நினைத்துக் கொள்கிறேன்.,

//எது எப்பிடியோ... கண்ட நாய்ங்ககிட்ட கடி வாங்காதீங்க யெக்கோவ்...//
எத்தனை காலம் குரைக்க முடியும்?., குரைக்கிறவைகள்.... ம்!... நன்றி தம்பி.

அப்டிப்போடு... said...

முகமூடி நலமா?., உஷாவின் தோழி மிக நலமாம் உஷா., மெயில் அனுப்பி உங்களுக்குச் சொல்லச் சொன்னார். நீங்கள் இங்கு ஜோ அவர்களும்., சத்யா தம்பியும் கேட்ட கேள்விகளுக்கு உங்கள் பதிவில் விடையளித்து இருந்தீர்கள். அதனால்தான் பேச வேண்டியிருக்கிறது. என் வீட்டுல நான் என்னா வேணுமின்னாலும் பேசிக்கலாம் பாருங்க.

//அவரது கேள்விக்கு எதிர்வாதம் வைத்தவர்கள் அனைவரும் என் அவதாரங்கள் என்பது//

அச்சச்சோ முகமூடி., 'உங்களின்' அவதாரங்களா என்று கேட்டால் உங்களை மட்டும் குறிப்பிடுவதாகவா எண்ணிக் கொண்டிர்கள்?. ஒரு வேளை நண்பன் இதை என்னைவிட அழகாக விளக்கிச் சொல்லியிருப்பார். எப்போதும் ஒரு வார்த்தை பல பொருள் என்று இருக்கும் நீங்கள்., இவ்வார்த்தைக்கு மட்டும் ஒரே வார்த்தை., ஒரே பொருள் என்று கொள்கிறீர்களே?.,

//அப்போது என் பதிவில் ஒரு விவாதம் நடக்கிறது. அதில் பதில் சொல்லும் Y என்ற பதிவர் ஷிட் என்கிறார். அதை மேற்கோளாக்கி Z என்பவர் டம்ஸ் மற்றும் * சாப்பிடுமாறு சொல்கிறார். //

அது ஏன் ஷிட் என்றேன் என்பதை சொல்லிவிட்டேன். திரும்பத், திரும்ப பிரச்சாரம் பண்ணுறிங்க? பண்ணிக்கங்க. அந்த மோடி TUMs,ம் வாழைப்பழம் என்று எழுதியிருந்தது. அது தாமதமாக தணிக்கை செய்யப்பட்டு., பொதுப் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இன்று சிலர் காலில் மிதிக்க., பல சருகுகள் தரும் ஆபாச சத்தத்தை விட., இது தணிக்கை செய்யப் பட வேண்டிய விதயம் நினைக்கிறீர்கள் போலும். சருகுகள் தரும் சத்தம் அவ்வற்றின் உறவுகளை பற்றியதுதான் என்றாலும். யார் பதிவு எழுத வேண்டுமென்பதை நீங்களா முடிவு செய்வீர்கள்? அவர்கள் நினைத்தை எழுத அவர்களுக்கு உரிமையுண்டு., நான் யாருக்குப் பின்னூட்டமிட வேண்டுமென்பதை உங்களைக் கேட்டா செய்ய வேண்டும் என்பீர்கள். நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்பதை இங்கு சொல்லிக்கொள்கிறேன்.

//மோடி மஸ்தான் என்ற பெயரில் எழுதப்பட்ட பின்னூட்டம் நானே வேறு பெயரில் எழுதிக்கொண்டேன் என்பது//

ஆமாம் முகமூடி., நீங்கள் கேட்கும் தொனி அதில் இருந்ததால் அப்படி நினைத்தேன். அதை உங்களிடம்தான் சொன்னேன். அது வேறு ஒரு குசும்பன் என்று மறுத்துவிட்டு நடையை கட்டினீர்களானால் முடிந்தது விதயம்! (அப்பா., அப்படியே எழுத வருதுப்பா...!)

//ஞானபீடம் பதிவில் பலருக்கு தேள் கடிக்கும் என்ற அவர் கருத்தை சமெ டொ யொஉ என்று சொன்னேன் என்பதற்காக நான்தான் ஞானபீடம் என்ற பினாமி பெயரில் எழுதி வருகிறேன் என்பது.//

ராம்ஸ்... சாரி...! ஞான்ஸ் பதிவில்., //உங்களுக்கு வலியே தெரியலையா...// - இது நீங்கள் உதிர்த்த முத்து. தேள் கொட்டியதை உணர்ந்ததால் எழுதினீர்களோ என்ற ஐயத்தில் நீங்களே ஞான்ஸ் தானோ எனக் கேட்டேன்., தற்போது அந்தச் சந்தேகமில்லை.
//ஆனந்த்/சின்னவன் என்பவரோடு சேர்ந்து கூத்து அடிக்கிறேன் என்பது//.

நான் ஆனந்தோ/சின்னவனையோ தனியாகச் சொல்லவில்லையப்பனே... ஆனந்த்/சின்னவன் பதிவுகளிலோ அல்லது வேறு ஒரு அப்பாவி பதிவிலோ., நீங்கள் பின்னூட்டமிட்டதை நான் கூத்தடிக்கிறீர்கள் என கூறினேன் என்பீர்களேயானால்., நீங்கள் பின்னூட்டமிட்டதை ., ஆதாரம் காட்டமுடியும்., அது உங்கள் எழுத்து வன்மைக்குச் சான்றாகவும் அமையும்.


//அவரது ஆ, இ, ஈ, உ என்பவற்றை கற்பனை குற்றச்சாட்டுகளாக நீங்கள் வைப்பது போலவே நானும் வைக்க முடியும் //

நீங்கள் என்னை அன்னப்பறவை, அனானி அதுவும் பத்தாதென்று 'மணியன்' என்று நகைச்சுவையாக கற்பனை பண்ணினீர்களா?. நானும் இது போல் ‘கற்பனை பண்ணி ‘ சொல்லலாம் அல்லவா? ஆனால் அது பொய்யாக முடியும் என நீங்கள் கருதுவீர்கள் இல்லையா?.

//இந்த சந்தர்ப்பத்தில் என் பெயரில் தவிர வேறு பெயரில் போலியாக எழுதாத என்மேல் ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள் என்ற என் ஆதங்கத்தை//

இதே ஆதங்கத்தை நாங்கள் சொன்னால்.,

//நான் நேர்மையானவள்" என்று சத்தியம் செய்கிறீர்கள். I dont believe your words, even if your tongue came notorized. even otherwise, உங்கள் சத்தியம் மற்றவர் மீது சேற்றை வாரி இறைக்க ஒரு தகுதியாகாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். தான் மட்டும்தான் உலகத்தில் யோக்கியம் மற்றவர்கள் எல்லாம் அயோக்கியர்கள் என்ற மனநிலையை விட்டு வெளியே வாருங்கள். கருத்தை கற்பனை குற்றச்சாட்டுகளால் அல்லாமல் கருத்தால் எதிர்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் குற்றம் சாட்டும்போது ஒரு விரல் எதிராளியை நோக்கி நீளும் அதே நேரத்தில் உங்களை நோக்கி மூன்று விரல்கள் நீளும் என்ற நிதர்சனத்தை உணருங்கள்.//

என்று மதன் பாப் மாதிரி சிரித்துக்கொண்டே எழுதுகிறேன் என்று உறுதி கூறி எழுத உங்களால் முடியும். அது உங்கள் உரிமை.

//எதிர்கருத்து சொல்பவர்களெல்லாம் என் அவதாரங்கள் அல்லது போலி, பலர் பெயரில் நான் எழுதிக்கொள்கிறேன், அநாநிமஸாகவும் நான் எழுதிக்கொள்கிறேன் என்பதாக புரிந்துணரும் நிலவும் சூழ்நிலை இப்போது. //

ம்... இந்த திரித்தலுக்காகத்தான் இப்போது இதை என்னுடைய பதிவிலாவது இட்டுத் தொலைப்போம் என எழுதுகிறேன். உங்களை மட்டும் நான் குறிப்பிடவில்லை. இந்த ஒற்றை வாதத்தை வைத்து ஒரு கூட்டத்தையே காப்பாற்றும் தியாகி ஆகாதீர்கள்., என்று மட்டும் என்னால் சொல்லமுடியும் என்று சொல்லிக்கொள்கிறேன். ஆனால் அதை மறுக்கும் உரிமை உங்களுக்குண்டு., அதைப் புரிந்துணரும்., புரிந்துணர்வும் எனக்குண்டு.(ஸ்ஸ்ஸ்...).


//எதிர்கருத்து சொல்பவர்களெல்லாம் என் அவதாரங்கள் அல்லது போலி என்பதாக புரிந்துணரும் நிலவும் இந்த சூழ்நிலையில் உங்கள் பின்னூட்டம் என்னவாக புரிந்து கொள்ளப்படும் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்//

நான் (மட்டும்) எல்லாப்போலிகளும் நீங்கள்தான் எனச் சொல்லவில்லை., நான் அப்படிச் சொன்னதாகப் புரிந்து கொள்ளாதீர்கள். இந்த இடத்திலே என்னை பற்றி பேசுவதுதானே நான் செய்ய முடியும். "ஏதோ உங்களை மட்டும் செய்தார்கள் என்று நினைக்காதீர்கள், மற்றவரையும் என்னையும்தான் செய்திருக்கிறார்கள்" என்று நீங்கள் சொல்கிறீர்கள். உங்கள் நியாயத்தை நீங்கள் கேட்பதை பற்றி ஆட்சேபம் இல்லை எனக்கு. என் நியாயத்தை நான் கேட்கிறேன் என்று என் இடத்திலே கேட்கிறேன் நான்.

மற்றபடி திருமலையின் விளக்கக் கடிதம்., அருமை., நல்ல பதிவு...! (எழுத்தும் பதிவுதானே?). இது ஏதோ நான் மார்டன் கேர்ள் இல்லையென்று விளக்கம் சொன்னாலும் காப்பி கலக்கினீர்களே?...ச்ச!.. கலக்கினார்களே? அதானல் சொல்கிறேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். எனக்கும் மார்டன் கேர்ள் வந்து விளக்கக் கடிதம் தந்தால் நன்று. அவர் வருகையால் யாருக்கேனும் ஏதேனும் வயிரு எரியுமாயின் நிவாரணத்திற்கு மோடியை அணு கலாம். என்னால் யாருக்கேனும் எரிச்சல் வந்தால் சருகுகள் சிலவற்றை அழுத்தி மிதித்து ஆபாச குப்பைகளை நல்ல எழுத்தில் பக்தியும், பாட்டும்., பல படங்களும் பாங்குடன் கலந்து, நாகரீக முறையில் பரப்பவிடலாம்., அது குப்பைகளைப் பற்றியும்., குப்பைகளைப் பற்றியிருக்கும் குப்பைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள வழிவகுக்கலாம்., இது நடக்கும் என்று நான் சொல்லவில்லை. நடக்காது என்று சொன்னாலும் அது பொய்யில் முடியும் அபாயம் இருக்கிரதென்பதை மறுப்பதற்கில்லை என்று நீங்கள் சொன்னால் அதை மறுப்பதற்கில்லை.

இப்பதிலை நீங்கள் குழந்தைத் தனமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பில்லை. அப்படி ஆகுமானால்., பாவம் சன்னாசி அவர்களுக்கு அநாவசிய சிரமம். உங்கள் பதில் படித்து., பதில் மீண்டும் எழுத முடியாச் சூழ்நிலை., நடத்திக் கொள்ளலாம் விரும்பியவற்றை .... :-))).

ALL THE BEST

Satheesh said...
This comment has been removed by a blog administrator.
அப்டிப்போடு... said...

சதீஷ்., முகமூடி.,

அந்தக் கமெண்டில் ஆபாசம் இல்லாததாலும்., தற்போது பல பதிவுகளில் வரும் ஆபாச பின்னூட்டங்களை விட இதில் ஆபாசம் இல்லாததாலும் அனுமதித்தேன்., பின்னூட்டத்தை தவிர எதையும் பார்க்கவில்லை., அவசரமாக வெளியே செல்வதால் இப்போதைக்கு வருத்தம் மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ramachandranusha said...

அப்படிப்போடு மேடம்,
உங்களுக்கு நேற்று ஒரு தனிமடல் போட்டு இருந்தேனே கிடைத்ததா? அதே தன்னிலை விளக்கம் முகமூடிக்கும் போட்டேன், உடனே ரிப்ளை போட்டு விட்டார் :-))))
இப்படிக்கு,
உஷா

அப்டிப்போடு... said...

Comments in Your Blog

Dear Apdipodu,
Even Though we know so Less about each other.. But for what we know... I think we r pretty clear that you or I have never mentioned anything related to our jaadhis, much less discriminated or been inquisitive, in our blogs or comments. However, I see you have no problem in publishing a particularly racist comment (Thirupachi) which includes my name amongst others. I find this seriously disturbing. As far as i know, there is no one except me in tamil blogdom named Ramanathan. So i have to assume, that comment was meant for me.
Â
I am not that surprised to see silly comments made by some idiotic bigots, but I must admit I was taken aback that you, whom I consider to be a sane blogger, to so casually publish such a caustic comment without ever caring to verify, whom that comment so carelessly accuses anything of. I dont know and care whats your tiff with mugamoodi. But then am offended that my name and other neutral, casual bloggers like Suresh, Usha, Jayashree et al are dragged into this nonsense, just coz you consider any comment against mugamoodi, is justified by default; though it includes unrelated third persons' names.
Â
I sincerely hope such silliness wont be repeated in the future. At Least, provide a disclaimer that you know that it is a poli but still want to publish his nonsensical, if sometimes unintentionally funny comments.
Â
Regards
Â
Ramanathan

அப்டிப்போடு... said...

உஷா.,

நம்மளுக்கு கடிதம் வந்தா., உடனே பதில் போட நேரமிருக்காது சரியா?., அதுவும் வேற நீங்க திடீர்ன்னு எங்கள மாதிரி மதுரைப் பாஷையில இறங்கிட்டிங்க., உங்க பாஷைய ஒழுங்காக் கத்துகிட்டு பதில் போடலாம்னு இருந்தேன் :-))). இல்ல நாங்க பேசறத புரிஞ்சிக்கிற அளவுக்கு நல்லா மதுரையை பாஷைய நீங்க படிங்க... அப்பத்தானே நான் எழுதறது உங்களுக்கும் புரியும். மதுரையப் பத்தி சொல்றதுக்குத்தான் நிறைய பேரு இருக்காங்களே?. உஷா., பிள்ளையக் கிள்ளிவிட்டுட்டு., தொட்டிலையும் ஆட்டறவங்கங்களுக்குப் பேருதான் நடுநிலைவாதியாம்.. இந்த அரசியலை கற்றுக்கொள்ள எனக்கு நேரம் பிடிக்கும். ஏன்னா சந்து பொந்தில் வாழ்ந்த சாதாரண கிரமத்தைச் சேர்ந்தவள் நான் பாருங்க., மெட்ரோ அரசியல் நமக்குத் தெரியாதுப்பா....!

//அதே தன்னிலை விளக்கம் முகமூடிக்கும் போட்டேன், உடனே ரிப்ளை போட்டு விட்டார் :-))))//
எனக்கு 'தனிப்பட்ட முறையில்' என்று கடிதம் வந்திருந்தது. நீங்கள் யார் யாருக்குப் போட்டீர்கள் என்றெல்லாம் அதில் இல்லை. அவருக்கு நேரம் இருந்திருக்கும் உடன் பதில் அளித்திருப்பார். இதை நீங்கள் இங்கு சொல்ல என்ன காரணம்?., "உங்களுக்கு கடிதம் போட்டேனே., ஏன் இன்னும் பதிலெழுதவில்லை? என்று பட்டுன்னு கேளுங்க உஷா"., அதுதான் மதுரை பழக்கம். அவர் எப்படி பேச வேண்டும் என நீங்கள் சொல்லமுடியுமா? என்று எவராது ஆரம்பிக்கும்முன்., நன்றி உஷா. :-))). கற்றுக் கொண்டு வருவதில்லை., மதுரைத் தமிழும்., பழக்கமும் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

Karthik Jayanth said...

அப்டிபோடு,

//கற்றுக் கொண்டு வருவதில்லை., மதுரைத் தமிழும்., பழக்கமும்

:-)

மத்தபடி "உள்ளடங்கும் ஆமைகள்" மாதிரியான பதிவுகளை எதிர்பார்கிரேன்

ramachandranusha said...

அப்படிப்போடு மேடம்,
இணையத்துல என்ன நடக்குதுன்னே தெரியலை! முகமூடிக்கும் ஒரு மடல் போட்டேன் என்ற செய்தியை இங்க சொன்னதற்கு காரணம், என்னைப் பொறுத்தவரையில் இருவரின் நட்பு என்பது பதிவில் படிப்பதுவரையில் மட்டுமே என்பதை குறிக்கவே. இந்த சைடு, அந்த சைடு நடு நிலைமை எல்லாம் இல்லைங்க.பிள்ளைய கிள்ளி விடுவதுன்னா, முகமூடிக்கு போட்ட மடல் சைலண்டா தானே விடணும்?
என்னமோங்க, மதுரை பாஷைங்கிறீங்க? சத்தியமா புரியலை. என் பெயரூல யாராவது மெயில் அனுப்புராங்களா? இனிமெலே பின்னுட்டம் போடக்கூட யோசிக்கிற நிலைமைக்கு வந்துட்டேன்.
உஷா

அப்டிப்போடு... said...

Ramanathan.,

I hope you read my answer to Satheesh and Mugamoodi.

//At Least, provide a disclaimer that you know that it is a poli but still want to publish his nonsensical, if sometimes unintentionally funny comments.//

:-)))

Thank you for your comments!!.

அப்டிப்போடு... said...

//இனிமெலே பின்னுட்டம் போடக்கூட யோசிக்கிற நிலைமைக்கு வந்துட்டேன்//.
இப்பிடியெல்லாம் சொல்லாதிங்க., எதிர்ப்பார்க்கிறேன் உங்களிடமிருந்து பதிவுகளையும், பல பின்னூட்டங்களையும்.

முத்துகுமரன் said...

//கற்றுக் கொண்டு வருவதில்லை., மதுரைத் தமிழும்., பழக்கமும் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.//

சரியாச் சொன்னீங்க.

கருவாடுகளால் ஒரு காலமும் மீனாக முடியாது

மத்தபடி இந்த பிரச்சனைகளை எல்லாம் நேர் கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு இருப்பதால் தனிப்பட்ட எந்த அறிவுரைகளும் சொல்லப் போவதில்லை. தொடருங்கள் உங்கள் வழக்கமான பணிகளை வழக்கமான பாணியில்

Satheesh said...

Thanks apdipodu!. I removed my earlier comment as it is not necessary anymore!!

மு மாலிக் said...

ஒரு சாதாரணமான விஷயத்தை திடீரென இடையில் புகுந்து கேட்பதற்கு மன்னிக்கவும்.

பல பதிவுகள் வருவதைப் பார்த்தால் சீரியசாக ஏதோ நடந்து இருக்கிறது என்று தெரிகிறது. புதிதாக வந்தவர்களுக்கும் அவ்வப்போது தமிழ்மண ப்ளாக்-களைப் படிப்பவர்களுக்கும் இந்த பதிவுகளைப் படித்து சரியாகப் புரிந்துக் கொள்ள முடியவில்லையே. ஒரு சிறுதொகுப்பு இதைப் பற்றி எக்ஸாக்டாக எந்தப் பதிவில் உள்ளது என்று சொல்ல முடியுமா ?

neo said...

தங்கமணி, ஜோ, முத்துக்குமரன் போன்ற நண்பர்கள் சொல்வது போல உங்கள் எழுத்துப் பணி தொடரட்டும். அதிகம் நேரத்தை 'ஜல்லியடிப்பவருக்காக' செலவிடாதிர்கள். :)

neo said...

தங்கமணி, ஜோ, முத்துக்குமரன் போன்ற நண்பர்கள் சொல்வது போல உங்கள் எழுத்துப் பணி தொடரட்டும். அதிகம் நேரத்தை 'ஜல்லியடிப்பவருக்காக' செலவிடாதிர்கள். :)