Sunday, January 01, 2006

நிசம்தான்...நிசந்தாங்க ஒரு வாரம் ஓடிப்போச்சு. என்னங்க.. 'அட்டுப்' படத்தையும் எல்லோரும் பார்த்திங்களா?.,

தாரிணை விருப்ப மாகத் தலைதனில் முடிக்குந் தோறும்
நாரினைப் பொல்லா தென்றே ஞாலத்தோர் தள்ளு வாரோ?

எத்தனையோ நல்ல சிந்தணையாளர்கள்., தான் நினைத்தை தெளி நீரோடையாய் சொல்லிச் செல்லும் எழுத்து வண்ணம் கைவரப் பெற்றோர்., ஏதேனும் ஒரு நிறை நோக்கம் கொண்டு எழுதிச் செல்வோர் ஏராளாமாக இருக்கிறீர்கள் இங்கு. பொறுமையுடன் என் பதிவுகள் படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி. எதிர்படுவோரிடம் புலம்பும் சதாரணமான ஒருத்தியை திடீரெனப் பிடித்து மேடையில் ஏற்றி 'மைக்' யும் கொடுத்தால் என்னாகும் என்பது இப்போது உங்களுக்குத் நன்றாய் புரிந்திருக்கும். எவ்வளவோ சொல்ல நினைத்தேன்., ஆனால் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்ததால் சொல்லாமல் விட்டதை 'லைட்' வெளிச்சத்தில் நான் இல்லாத போது சொல்வதே சிறந்ததென விட்டுவிட்டேன். எளிய மக்கள் வாழ்க்கை ஒரளவேனும் காட்டவேண்டுமென நினைத்தேன். அதைச் செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். கிரமங்களுடைய வளமையை மறைத்து., எப்பப் பார்த்தாலும் ‘எத்தியோப்பா ‘ மாதிரியே இந்திய கிராமங்களை சித்தரிப்பதை என்னால் ஏற்க முடியவில்லை. வறுமை இருக்கிறது இல்லையென அதன் மீது பல வண்ணத் துணி போர்த்தி மறைக்கச் சொல்லவில்லை., ஆனால் வறுமை மட்டுமே கிராமங்களின் அடையாளம் அல்ல., அதைத் தாண்டி எத்தனையோ செல்வங்களைத் தன்னில் கொண்டது.. சரிங்க., இன்னைக்கும் உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம். படித்த., தொடர்ந்து எழுத ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி. மீண்டும் சந்திப்போம். இப்போது போயிட்டு வாரங்க!.

11 comments:

குமரன் (Kumaran) said...

நல்ல பதிவுகள் அக்கா. நட்சத்திர வாரம் நன்றாய் இருந்தது. இனியும் தொடர்ந்து நல்ல பதிவுகள் எழுதுங்கள். உங்களுக்கு ஒரு வாசகன் இங்கே இருக்கிறேன். உங்கள் பழைய பதிவுகளையும், கடைசி இரண்டு பதிவுகளையும் இன்னும் படிக்கவேண்டும். படிக்கிறேன்.

வருஷம் பொறக்கும் இந்த நல்ல நாளுல நாம 100வது பதிவ போட்டாச்சுல்ல. எங்க வீட்டுப்பக்கமும் கொஞ்சம் வந்து போங்க அக்கா. நாங்க எழுதுறதெல்லாம் உங்களுக்கு புடிக்குமோ இல்லியோ தெரியல. ஆனா வீட்டுக்கு வாங்கன்னு கூப்புடுறது மரியாதையில்ல. அதான். நாங்க எல்லாம் மரியாதை தெரிந்த பயலுவ இல்ல.

துளசி கோபால் said...

நல்ல வாரமாக இருந்தது மரமே!

நல்ல மினுக்கல்தான் இந்த நட்சத்திரத்துக்கு.

நல்லா இருங்க.

ஒரு ரெண்டு நாள் லீவு எடுத்துக்கிட்டு மறுபடி எழுத வந்துரணும், ஆமா:-)

பத்மா அர்விந்த் said...

எனக்கு பிடித்திருந்தது. நன்றி

G.Ragavan said...

வாழ்த்துகள் அக்கா. இந்த வாரம் இனிய வாரமாக அமைந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

இந்தப் பதிவில் நீங்கள் சொன்னதை நானும் ஒத்துக் கொள்கின்றேன். ஒட்டு மொத்த இந்தியாவே கேடு கெட்டுப் போய் விட்டது போல் பேசுவதெல்லாம் உங்கள் கருத்துப் படி மடமையே.

இளந்திரையன் said...

இந்த வாரம் டபிள் பண்டிகையாச்சு நமக்கு... உலக தயவில ஒண்ணு... உங்க தயவில ஒண்ணு... 'பாவப்பட்ட ஜனங்களைப்' பத்தி நெனைக்கிறதுக்கே பெரிய மனசு வேணும். அது உங்ககிட்ட இருக்கு.....

ஸ்மாட்டா இருக்கணும்.. ஆனா மனிதாபிமானம் இல்லாமல் இருக்கிகிறது தான் ஸ்மாட் என்று நெனக்கிறவங்க பலரிருக்கிற பூமி...உங்களைப் போலவும் சிலர்...

புத்தாண்டு வாழ்த்துக்கள்....

அப்டிப்போடு... said...

//எங்க வீட்டுப்பக்கமும் கொஞ்சம் வந்து போங்க அக்கா. நாங்க எழுதுறதெல்லாம் உங்களுக்கு புடிக்குமோ இல்லியோ தெரியல//
குமரன் வராமையா இருக்கேன்?., என்ன பின்னூட்டம் போடறதிக்குள்ள பிள்ள, குட்டிப் பிடுங்கள் இருந்தா., முடியாமப் பேயிறதுதான். தொடந்த ஊக்குவிப்பிற்கு நன்றி தம்பி.

//நல்ல மினுக்கல்தான் இந்த நட்சத்திரத்துக்கு//
அக்கா., இவ்வாரத்தில் நிறைய நண்பர்களுக்கு அறிமுகமாகி இருப்பேன் என்றுதான் நம்புகிறேன். எந்த ஒரு புதிய வலைபதிவாளருக்கும் முதலில் வரவேற்பு கூறுவது நீங்கள்தான். வரவேற்பது நல்ல சக்திகளை உருவாக்கும். நன்றி.

அப்டிப்போடு... said...

//எனக்கு பிடித்திருந்தது//

நன்றிங்க பத்மா., இன்னும் நல்லா எழுதியிருக்கலாமேன்னு எண்ண வைக்குது இந்தப் பதிவின் பின்னூட்டங்கள் எல்லாம். நிதமும் வலி தாங்குவோருடன் பழகி, உணர்ந்து, துன்பம் களைய உழைக்கிறீர்கள். அவ்வளவு வேலையிலும் என் பதிவுகள் படித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி.

//வாழ்த்துகள் அக்கா. இந்த வாரம் இனிய வாரமாக அமைந்திருக்கும் என்று நினைக்கின்றேன்//
ராகவன் எங்க போனிங்க?., குமரனிடம் உங்க நண்பரைக் கொஞ்சம் இந்தப் பக்கம் அழைத்துவாருங்கள் எனச் சொல்லாம் என்றுகூட நினைத்தேன். TAKE CARE.

அப்டிப்போடு... said...

//இந்த வாரம் டபிள் பண்டிகையாச்சு நமக்கு... //

ரொம்ப நன்றிங்க இளந்திரையன். வாழ்க்கையின் அடித் தட்டில் இருப்பவர் மீதே கவனமும், பரிவும் தேவை. இவர்கள் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. வெறும் இராணுவ வளர்ச்சியும், பன்னாட்டு நிறுவனங்களின் வருகையைக் கொண்டு கணித்தும் சொல்லப்படுகின்ற புள்ளி விவர வளர்ச்சி., இவர்களை கணக்கில் எடுத்து கொண்டால் எப்படியாகுமோ?. நாளுக்கு நான்கு முறை உண்பவன் ஆறு முறை உண்டால் அதுவா வளர்ச்சி?. ஆனால் அப்படித்தான் காட்டப் படுகிறது.

Thangamani said...

அப்படிப்போடு!

நல்ல பதிவுகள். அதுவும் கிராமிய வாழ்க்கையை மேல் ஒரு ஒளிக் கீற்றாக, உங்கள் நடையில் அவைகள் ஒளிர்ந்தன. நன்றி.

புத்தாண்டு வாழ்த்துகள்.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லாதது....

பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா

lennyfrie32144857 said...

I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. So please Click Here To Read My Blog

http://pennystockinvestment.blogspot.com