Saturday, June 10, 2006

இரும்பிதயங்கள்

இவ்வுள்ளங்களின் துடிப்பும், கதறலும், இரத்ததுளிகளும் வல்லரசு நாடுகளுக்கும், வல்லரசாய் வளரும் நாடுகளுக்கும், நல்லுள்ளம் இருந்தும் மேற்கத்திய ஜெண்டில் தன்மையை விட முடியா நாடுகளுக்கும், அப்பேயாச்சிக்கும், பத்திரிக்கா தர்மத்தை பயிரென வளர்க்கும் ஊடகங்களுக்கும், எத்தனை துயரம் பார்த்தாலும் இவையெல்லாம் வாழ்வின் நியதிகளுள் அடங்கும் என்ற மோன நிலையை அடைந்த (என்னையும் சேர்த்துக்கொள்கிறேன்...) மேன்மைத் தமிழ் இனத்திற்கும் காணிக்கையாகட்டும்!!.

Tuesday, June 06, 2006

செருப்பு.....!

இட ஒதுக்கீட்டால் இவ்வளவு கலவரம் நடக்கிறது அதைப் பற்றி ஏன் நீங்கள் எழுதுவதில்லை என ஒரு தோழி கேட்டார். சிரிப்புதான் வந்தது.. அப்படியே என் எண்ணத்தை இட ஒதுக்கீடு பற்றி இங்கு எழுதினேன் என்றால், அவ்வளவுதான் அத்தனனயும் சிண்டை பிச்சுகிட்டு அலைய வேண்டியதுதான் என்றேன். இப்ப மட்டும் என்ன?., நீங்க ஒரு பின்னூட்டம் போட்டிங்கன்னா கூட பிச்சுக்கிட்டுத் தானே அலையுதுங்க?. இதையும் எழுதிருங்க என்றார். பாவம் என் தோழிக்கு நேரம் போவது அவ்வளவு கடுமையாக உள்ளது போல :)) . ஸ்பிரிங்க நம்ம பாட்டுக்கு... வானத்தில் பறந்து கொண்டாடிகிட்டு இருக்க ஆணு., பொண்ணு எல்லாம் கீழ சும்மா... பறந்து ... பறந்து ல்ல கத்திகிட்டு இருந்துகளாம்... பாவம்... என்னத்த சொல்றது போங்க?., யாருக்காவது எரிச்சல் வந்தா... ரஷ்ய வீதிகளில் திரியும்., அந்த தொத்தல் நாயை வத்து, வத்துன்னு நாலு எத்து, எத்த அது குடு, குடு வென ஓடி வந்து கத்து, கத்தென்று கத்திப் பார்த்து, பித்தம் தலைக்கேறினால்., ஒரு காலை தூக்கி நின்று பெய்து விட்டு போகிறது. (தஞ்சை) பொந்து வாழ்வில் புழுங்கிக் கிடந்தவைகளுக்கு வெளிநாட்டு குளிர் காற்று ஒவ்வாமல் ஓடித் திரிகின்றன... மெயிலில் அடிவாங்கி பல்லுடை பட்ட போதும்... தெரியாமல் செய்துவிட்டேன் என காலில் விழுந்து... புதிய தமிழ் மணத்தில் புடுங்கவே..., வேரோடு... !முதலில் தன்னை இணைத்தது. இப்பீடையை கூட்டி அள்ளி, கோடியில் கொட்டினால் 10 பேருந்துகள் சாம்பலாகும், 10,000 பேர் தீக்குளிப்பர். எனவே வைத்துப் பார் கையை என தற்போது களைந்தாடுகிறது.... ! (கடிகாரத்தை...! நாய் கடிகாரம் கட்டுமாபா??) தன்னை குளிப்பாட்டி, சோறிட்டுப் பாராட்டும் நங்கையும் பார்க்க.
இந்த வத்தல் நாயிக்கேனும் நேரம் அனுமதிக்கும் போது இப்படி நாலு எச்சில் துண்டுகளை எறிந்து வீசலாம். கப்பென்று பிடித்து தின்று, இன்னும் நாலு ஆட்டம் போடும் அது ஊளையிட்டு அழைக்கும் இன்னும் பல நாய்களின் துணையுடன் அல்லது இந்த ஒன்றே பல் குரல் ஊளையில். ஆனால் மற்றவரின் சிறுநீரை., தான் நனைந்து தரம் பிரிக்கும் புளு... சுற்றித்தான் திரியும்...
செருப்பு...!
செருப்புகள்
காலைக் காக்க மாட்டுமல்ல...!!
தலைப்பு வச்சா கவிதை சொல்லனுமில்ல?.

Thursday, June 01, 2006

வைகோ

(மதிமுக- தேமுதிக பற்றியதொரு அலசலை பொடாத் தலை தேமுதிகவிற்கு போனதினால் எழுதிக்கொண்டிருந்தேன்... இடையில் இதை சொல்ல நேர்ந்து விட்டது)

வைகோவின் அரசியல் மூலதனமே அவரின் உணர்ச்சி வசப்படும் தன்மைதான். இவ்வளவு ஆண்டுகளாக (கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வரை) சல்லிக்கு உபயோகமில்லாமல் மதிமுக இருந்தும் அவரின் உணர்ச்சிகரமான பாசம் கண்டு அதில் இருந்தவர்களே அதிகம். தேர்தல் நேரத்தில் அவரது பேச்சு அதிர்ச்சிகரமாக இருந்தது உண்மைதான். தோற்று விடுவோமெனத் தெரிந்தும் அவர் தற்கொலை முடிவெடுத்தது தனக்காக அல்ல கட்சியின் தலைகளின் துண்டுதல் பேரில்தான். நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவைச் சாடியதை சமாதனப்படுத்த, திமுகவைத் தாக்க வேண்டும் அதற்கு அதிக வார்த்தைகள் அவருக்கு தேவையாய் இருந்தது. அதிமுகவினரை விட அதிகம் தாக்கியவர்கள் சரத்குமாரும், வைகோவும்தான். தேர்தல் நேரமென்பது அரசியல்வாதிகள் தன் நிலையில் இல்லா நேரம். வைகோவிற்கு தெரியாதா வெல்லப் போவது திமுக., இப்படிப் பேசினால் என்ன ஆவோம் என்பது?., பாண்டுக்கு (பாண்டு ரங்கனுக்கு) தெரியாதா அதீத கோபாவேச நடிப்பை காட்டினால் என்ன நடக்குமென்று?., சட்ட மன்றத்தில் எடுத்த எடுப்பிலேயே மைக் கைப் பிடுங்கினால் என்ன ஆகும் என்பது கலைக்கும் தெரியும், எல்லாத்துக்கும் ஹைலைட்டாக முதல்வரைத் தாக்கினால் என்ன ஆகும் என்பது சேகர் பாபுவிற்கும் தெரியும். (வரப் போற பட்ஜெட் வேற நம்மை பயமுருத்துகிறது., பட்ஜெட் என்ன ஆகும் என்பதை விட சட்ட மன்றம் என்ன அகுமோ என்றுதான் எண்ணம் எழுகிறது). அவர்கள் கைதை எதிர்பார்த்தே செய்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

திமுக வந்தால் பழிவாங்கப் படுவோம் என்பது வைகோ அறிந்ததே. தான் அதிமுகவுடன் சென்றதால் சரிந்த இமேஜ்., அவர்கள் பழிவாங்கினால் உயர்ந்துவிட்டுப் போகட்டும் என பேசினார். தன் கட்சியிலிருந்து முக்கியமான ஒரு ஆள் வெளியேறி அவர் சரிவை சந்திக்கும் சமயம் மீண்டும் தூக்கி விடுகிறது திமுக தயாநிதி மாறனின் வடிவில் என மதிமுக எடுத்துக் கொள்ளலாம். வைகோவின் மீதான குற்றச்சாட்டு வருத்தமளிக்கிறது. யாருக்காக பொடாவை அழிக்க குரல் கொடுத்தது திமுக?., அதிமுகவிற்கும், திமுகவிற்கும் வேறுபாடு உண்டு. ஆனால் மாறன் வாரிசிற்கும், அதிமுகவிற்கும் உள்ள வித்தியாசத்தை காலம்தான் கண்டு சொல்ல வேண்டும்.

Wednesday, May 31, 2006

ஆளுநர் உரை

நம்மூர் கோவில் திருவிழாவில் பரிவட்டம் கிடைத்தவன் உற்சாகமாகவும், எதிர் கூட்டம் வன்மமாகவும் சுற்றிக் கொண்டிருந்து, விழா முடிய காட்டிக்குவாய்ங்க தத்தம் பலத்தை. எனக்கு நினைவு தெரிந்து அன்பா நாலு பேர் கூடி அடிச்சுக்காத திருவிழாவே இருந்ததில்லை. ஆளுநர் உரையும் அப்படித்தான். தேர்தல் திருவிழா முடிந்தபின் இரு அணிகளும் சம்பிரதாய அமைதி காப்பதே அவர் உரை வாசித்து முடிக்கும்வரைதான். விவாதத்தில் கலவரம் என்பது இயல்பு. அது எந்தளவு காட்டமானது என்பதுதான் தெரிய வேண்டுமே ஒழிய, ரகளை நடக்குமென்பது அனனவரும் அறிந்ததுதான். எதிர் கட்சியும், ஆளுங்கட்சியும் "நன்றி" தெரிவிக்கும் வரை ஒன்றாக உள்ளேயே உட்கார்ந்திருக்கும் நாள் இனி என்றாவது வருமா என்பது சந்தேகமே... ! அதிமுகவைத் பொருத்தவரை அது ஆளுங்கட்சியாக இருந்த போதும்., எதிர் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் உரை மீது புள்ளி வைத்து கோலம் போடாமல் விட்டதில்லை.

கடந்த ஆட்சியில் கவர்னர் உரை மிதான விவாதத்தின் போது, கன்னியாகுமரி ஆஸ்டின் அவர்களின் பேச்சை சாக்காக வைத்து கலைஞரை 'தீய சக்தி' என திருவாய் மலர்ந்தார் ஜெயலலிதா. அதை சபைக் குறிப்பிலும் ஏற்றிக் களிப்படைந்தது அதிமுக. எம்.ஜியார் காலத்திலிருந்து அதிமுகவிலிருக்கும் ஆஸ்டினை நாந்தான் உன்னை வளர்த்துவிட்டேன் எனக் கூறி, அதிமுகவிலிருந்து வெளியேறியவர்கள் அனைவரையும் ஜெயலலிதா சாட அதற்கு பதில் கூற முற்பட்டு எழுந்த சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆரை அதிமுகவினர் 'துரோகி' எனக் கத்தி கலாட்டா செய்தனர். "இது சாத்தூர் இல்ல சட்டமன்றம்" என அவரைப் பார்த்து நக்கல் செய்தார் ஜெயலலிதா. சாத்தூர்ல இருந்து பேசுவதற்கு இல்லாமல் பொறி கடலை வாங்கித் திங்கவா சட்ட மன்றம் வந்தார்?.

அப்போதும் தண்ணீர் பிரச்சனைதான்... 750 கோடி தெலுங்கு -கங்கை திட்டம். கிருஷ்ணா நீர் சென்னைக்கு வரவில்லை., கண்டலேறு தண்ணிய காட்டி கிருஷ்ணா நீர் என்று திமுகவினர் ஏமாற்றி விட்டார்கள், வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்ற நான் அதை கொண்டு வருவேன் என்று பேசி, (ஆனால் ஆந்திர அரசே திமுக ஆட்சியில் எவ்வளவு தண்ணீர் இத் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு திறந்து விடப் பட்டதென வருட வாரியாக (5 ஆண்டுகளுக்கு) புள்ளி விவரம் தந்தது), திமுகவினர் வெளிநடப்பு செய்ய வாய்ப்பு நல்கினார்.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போதாவது சமாதானமாக இருந்தாரா என்றால் அப்போதும் கொள்ளைப் புறமாக வந்து பதவியை ஏற்றுக் கொண்டார் கருணாநிதி., ஆனால் நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு (நல்ல வேளை............) உலகமெலாம் அறிய பதவியேற்றுள்ளேன் என்றார். ஆளுங்கட்சியாக இருந்தபோதே இந்தப் பதற்றம். இம்முறை கண்டிப்பாக கலவரம் நடக்கவெண்டும் என்பதற்காக, எதிர் கட்சித் தலைவரான பன்னிர் செல்வம் ஓரங்கட்டப்பட்டு., சொன்னதைச் செய்யும் செங்கோட்டையன் தயார் படுத்தப்பட்டார். ஆளுநர் உரை வாசிப்பின் போதே அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அடுத்த நாளும் அப்படித்தான். முன்றாம் நாள் விவாதத்தின் போது, காத்திருந்தார் போல காட்சி அறங்கேற்றம். அதற்கு பிறகு நடந்ததுதான் தெரியுமே?. பன்னீர் அந்த நாள் சபையில் அமைதியாக இருந்ததில் ஏற்பட்ட எரிச்சலாலும், அதிமுகவினரின் கலாட்டாக்களை மீடியாவிலிருந்து திசை மாற்றவும் ஜெயலிலதா "நானே சட்ட மன்றம் செல்வேன்" என சூளுரைத்து, சென்று பேசி விட்டு வந்தார். (இது பற்றிய சந்திப்பு அவர்கள் மற்றும் நண்பர் சசியின் பதிவுகள்). இது பத்தாதா பத்திரிக்கைகள் தைரிய லட்சுமியை கொண்டாட?.
இவ்வரசு ஆட்சியேற்று 20 நாட்கள் ஆகின்றன. பதவியேற்ற நாளிலிருந்து மக்கள் நலனுக்கான சட்டங்கள் போடப்பட்டு வருகின்றன. ஆட்சிக்கு வந்ததும் ஜெயா வீட்டுக்கு அனுப்பிய 13,000 மக்கள் நலப் பணியாளர்கள் ஊதிய உயர்வுடன் பணி பெறப் போகின்றனர். ஜெயலிலதாவும்தான் ஆட்சியேற்று 20 நாட்கள் ஆகியிருந்த போது ஏகப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்., அமைச்சரவை பதவியேற்ற 4 நாளில் இலாகக்களை மாற்றினார். 20 நாட்களுக்குள் 3 அமைச்சர்கள் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அவர் ஆட்சி நடத்திய '5 ஆண்டுகளும்' மத்திரி பதவி வகித்தவர் ஒரே ஒருவர்தான் (பல்லடம் வேலுச்சாமி). புதிய அரசு பதவியேற்றவுடன் அதிகாரிகளை மாற்றுவது எல்லா அட்சியிலும்தான் நடக்கும்., ஆனால் ஜெ மாதிரி பழிவாங்க இன்னொரு ஆள் இல்லை. பதவிக்கு வந்தவுடன் அப்போது புலனாய்வுத்துறை மற்றும் "வீரப்பன்" அதிரடி படைக்குத் தலைவராக இருந்த அலெக்சாண்டரை 2 முறை மாற்றி அதுவும் ஆறாமல் மூன்றாம் முறையாக ஒரு எஸ்.ஐ பார்த்தால் போதுமான "மண்டபம்" முகாம் பாதுகாப்பு பணிக்கு மாற்றி அவமானப்படுத்தினார். வீட்டில் மோட்டு வளையை பார்த்துக் கொண்டிருந்த தேவாரம் அதிரடிப் படை தலைவரானார். அதிமுக அரசு பதவியேற்ற 20 நாளில் மாற்றப் பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 68. ஓரிரு மாதங்களில் மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 100.
தற்போது மாநகராட்சியிலும் ரகளை செய்து மைக்குகளை உடைத்து, பேர்ப்பர்களை விசிறி அடித்து அராஜகம் புரிந்திருக்கின்றனர் அதிமுகவினர். மாநகராட்சிய விடுங்க.. சட்ட மன்றத்தில் அதிமுகவினரின் நாட்டியம், திமுகவிற்கும், ககங்கிரஸ்க்கும் ஒரு "பேரன்பு" ஏற்படும் வரை தொடருமென்றுதான் தோன்றுகிறது. சட்ட மன்றத்தில் கன்ணியத்துடன் நடந்து கொள்ளும் கட்சிகள்தான் தேர்தலில் நிற்க வெண்டுமென தேர்தல் கமிஷன் ஒரு நிபந்தனை வைத்தால் என்ன?., மாநகராட்சி கலவரங்களை பார்த்தபிறகு சொல்லத் தோன்றுவது இதுதான். சூட்டோடு சூடா உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தி முடிங்கப்பா... அதுக்கான அவசியம் நிறைய உள்ளது.

Thursday, May 11, 2006

பூடக ஊடகங்கள்

தமிழக தேர்தல் வரலாறு விரிவாக எழுதப் பட வேண்டியது. திராவிடம் கண் பெற்ற பிறகு, வந்த தேர்தல்கள் அனைத்திலும் மேடைப் பேச்சுக்களும், எழுச்சி மிக்க எழுத்துகளுமே தமிழகத்தை ஆள்வோரை நிர்ணயம் செய்து வந்தது. எம்.ஜி.யாருக்குப் பிறகு தோற்றம், நல்ல உருவாக்கம் (இமேஜ்) இவைகளும் சேர்ந்து கொண்டன. எம்.ஜி.யாரின் இரண்டாவது தேர்தல் அத்தியாயத்தில் வந்தது பணம்!!. ஊழல் செய்தோர் மக்களைச் சந்தித்து ஒட்டு கேட்கும்போது, கேள்வி கேட்கும் வாய்களை அடைக்கப் பயன்பட்டது பணம். (பணம் பயன்படா இடத்தில் அடக்குமுறை). அதுவே தொடர்ந்து, இப்போது தேர்தல் எனில் பணம் ஆறாகப் பாய்கிறது. சில மாதங்களுக்கு முன்னால் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்ட மாநிலம் இது என்று தேர்தல் நேரத்தில் ஒரு வெளியூர்காரரிடம் சொல்லி இருந்தால் அவர் நம்பியிருப்பாரா?., இல்லை... பஞ்சம் தாளாமல் கஞ்சித்தொட்டி வைத்தோம் என்றால் என்ன பதில் கிடைத்திருக்கும்?. ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படுகிறது, பிறகு ஓரிரு நாட்களுக்குள் அதை மாற்றி வேரொருவர் பெயரை அறிவிக்கிறார்கள். இரண்டு, மூன்று நாட்களுக்குள் 12 லட்சம் செலவு செய்தேன் என்கிறார் பாதிக்கப்பட்ட வேட்பாளர். இப்படி முதலீடுகளை அவசரமாக கொட்டும் தொழிலாய் ஆகிவிட்டது அரசியல் எனில், அதில் அரசியல்வாதிகள் எதிர்பார்க்கும் லாபம் எவ்வளவு?. வேறு எத்தேர்தலிலும் இல்லா அளவிற்கு பணம் என்ற பதம் இத்தேர்தலில் தான் அதிகம் புலங்கியது. இதற்கிடையிலும் வீதி நாடகம் போட்டு பிரச்சாரம் செய்த தோழர்களும் உண்டுதான். மும்முனைப் போட்டி, முப்பது முனைப் போட்டி என்றெல்லாம் எழுதின ஊடகங்கள். ஆனால் போட்டியென்னவோ இரு கழகங்களுக்குத்தான். நாம் நடிகர்களை கூட மூனா வச்சிருக்க மாட்டோம். இருவர்தான் எப்பவும் வெளிச்சத்துல., இதுல எங்க தேர்தல்ல மும்முனை?., எல்லாத்துலயும் மாதிரி உருவாக்குறது ஊடகங்கள்தானே?.., இல்லையென்றால் அவைகளுக்கு மதிப்பு?. பத்துப் கட்சி சேர்ந்து ஆட்சி அமைச்சு., அடிச்சுகிட்டு நாசமா போனா யாருக்கு பிழைப்பு?. இப்படியொரு மாயை வேண்டுமென்றே ஏன் உருவாக்கப்படுகிறது?., தேமுதிக ஐந்தாறு வருடங்களாவது அரசியல் செய்து, மக்களின் சுக, துக்கங்களில் பங்கு கொண்டிருந்தால் அல்லது ஃபார்வர்டு ப்ளாக் எப்போதேனும் கணிசமான தன் பிரதிநிதிகளை சட்ட மன்றம் அனுப்பியிருந்தால்., சொல்லிக் கொள்ளுங்கள் முப்பதுமுனைப் போட்டியென்று. ஒருவர் இப்போதுதான் அடி வைத்துப் பார்க்கிறார். இன்னொருவர் ஏற்கனவே இருக்கும் கட்சியில் இறங்கி பார்க்கிறார். இப்போது சொல்பவர்கள் மதிமுக தனித்து நிற்கும்போது ஏன் ஒன்றும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் வைகோ வளர்ந்திருப்பார். என்னன்னமோ ஆகி, இப்ப கூட்டணியாச்சில வந்து நிக்குது. தேர்தல் வரை கூட்டணி கட்சிகள்!!. வென்றால்., அது தோழமை கட்சியாக இருந்து தோள் கொடுக்க வேண்டும், ஆட்சியில் தானும் இருந்தால்... (இருக்கக் கூடாது எனச் சொல்லவில்லை) அதை தக்க வைக்கப் போராடுமே தவிர, மக்கள் பிரச்சனைகளை எப்படி பார்க்க முடியும்?., அனைத்து தோழமை கட்சிகளுக்களும் நிபந்தனையற்ற ஆதரவளித்து., ஒரு கட்சி உட்கார வேண்டும் என்பதே என் ஆவல் (நிறைய பேருக்கு இவ்வரி வருத்தம் தரும் :)))., இருந்தாலும் கூட்டணியாச்சி என்ற கூட்டு கும்மி தமிழகத்திற்கு வேண்டாம். எதிர் அணியில் மதிமுகவைத் தவிர எதிர்கட்சியாக இருந்து செயல்பட கட்சியில்லை. அதிமுக ஆட்சியில் இருந்த போதே சட்ட மன்றத்தில் அதிகம் பேசியது அம்மாதான், இப்போது சட்ட மன்றம் வருவாரா?. சரி... இத் தேர்தலில் திமுக கூட்டணி வெல்ல, எல்லாவற்றினும் மேலாக இருந்தது பாட்டாளிகளின் வியர்வை, ஏழை மக்கள் கண்ணீர் துடைக்கும் திமுக தேர்தல் அறிக்கை. வைகோவாலும், சரத்குமார் மற்றும் பல நடிகர்களாலும் மட்டுமல்ல., இதெல்லாம் சாத்தியமா? என கேட்டு, கேட்டு எழுதிய திமுக ஆட்சியில் அமர்ந்துவிடுமோ என அதிமுகவை விட அதிகம் பயந்த சில பத்திரிக்கைகளாலும், இவ்வளவு தூரம் மக்களை சென்றடைந்தது. ஒரு கூட்டணி கட்சியைப் போல் நின்று ஒட்டு வாங்கிக் கொடுத்தது திமுக தேர்தல் அறிக்கை.
அதிமுகவிற்கு இருந்த பிரச்சார வேகம், ஊடக ஒத்துழைப்பு(இதழ்கள்), பண பலம் இருந்திருந்தால் திமுக கூட்டணி இன்னும் அதிக இடங்களை கைப்பற்றி இருக்கலாம்தான். எங்காவது ஒரு வேட்பாளரை 'நம்பி' நிறுத்துவார்களா அதிமுகவில்?., அவர்கள் நம்புவதெல்லாம் சின்னம், பணம், பிரச்சாரம். அதனால்தான் எந்த ஒரு புதியமுகமும் வெல்லுகிறது அதிமுகவில். ஆனாலும் இந்தத் தேர்தலில் அம்மா பழைய முகங்கள் அத்தனையையும் மீண்டும் அழைத்துவிட்டார் பிரச்சாரத்திற்கு (செங்கோட்டையன், பொன்னுசாமி இன்னும் பலர்). ஆனால் இத்தேர்தலில் ஆட்சியில் ஊழலே இல்லை, ஊழலை முன்னிருத்தாத தேர்தல் இதுவென மனசாட்சியை அடகு வைத்து எழுதுகின்றன பத்திரிக்கைகள். மிடாஸ் பணம்தான தண்ணியா ஓடுச்சு...தேர்தல் நேரத்தில்?. ஐந்தாண்டுகள் ஊழலே இல்லாத நல்லாட்சின்னு எழுதுகிற பத்திரிக்கைகள், பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சமயத்தில் எப்படி எழுதியிருக்கும் என எடுத்துப் பார்க்க முடியவில்லை. தோல்வியில் பாடம் கற்கும் (கற்றது போல் நடிக்கும்) முதல் ஆள் ஜெயலலிதா என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமும் இருக்காது. அவரது மன மாற்றங்களை மக்களுக்கு உணர வைப்பதும், அதை அதிமுகவிற்கான அலையாக்கவும் நன்கு தெரிந்தவர். அவரைப் பார்த்து இவ்வளவு ஆடம்பரமா? என்றன, வெகு இதழ்கள் ஒரு காலத்தில்., அடுத்த வாய்ப்பு வந்த போது எளிமையின் மறு உருவாய் நின்று பதவி ஏற்று விட்டு., மறுபக்கம் பத்திரிக்கையாளர்களுக்கு 'அம்மா என்றால் அன்பு' எனக் காட்டி மெய் மறக்கச் செய்தார். ஆனாலும் விடாமல் இன்றும் சாதகமாகத்தான் வாலை ஆட்டுகின்றன வெகு சனப் பத்திரிக்கைகள். கோவையை நினைத்து குமுறிக் கொண்டிருந்த சிறுபான்மை மக்களிடம் நம்பிக்கையூட்டி நாடாளுமன்றத் தேர்தலில் கைகோர்த்து, சட்ட மன்ற தேர்தலில் பாஜகவுடன் உறவு வைத்து விசுவாசம் காட்டினார். இப்போதும்தான் 'பரம்பரை பகையை' நினைவு கொண்டு, நியாபகப்படுத்தி அழைத்து பார்த்தார் ஆனால் அவர்களுக்கு வந்து சேர நேரம் அமையவில்லை. அதற்குள் வந்துவிட்டது தேர்தல். ஒன்று இவ்வோரம் அல்லது மறு ஓரம் 'மத்தி' என்ற ஒன்றை என்றுமே கணக்கில் கொள்ளாத அரசியல்வாதி. ஒருவரைப் பிடித்தால் பதவி, இல்லையென்றால் வழக்கு. எந்த அரசியல்வாதியும் செய்யாத எத்தனையோ அதிரடிகள். 2001 தேர்தலின் போது அரசு அதிகாரிகளின் மதிரியாதையை உயர்த்துவோம் என கூறி, ஆட்சிக்கு வந்ததும் ஒன்றல்ல, இரண்டல்ல 1,70,000 அரசு ஊழியர்களின் மரியாதையை, நள்ளிரவில் அவர்கள் வீடு புகுந்து, அதே அரசு ஊழிய இனமான காவலர்களை வைத்து உணர்ந்தினார். வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் நிலை அறவே இல்லையென தேர்தல் நேரத்தில் கூறிவிட்டு., ஒருநேரம் உணவருந்திக் கொண்டிருந்த சாலைப் பணியாளர்களின் தலையில் கல்லைப்போட்டு வளமை செய்தார். நள்ளிரவு கைதுகள், ஒன்று மட்டுமல்ல!! தான் ஊழல் செய்து உள்ளிருந்தால், பகையுணர்ச்சியில் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தலைகளின் மீது வழக்கு, கைது. சாமன்யர்கள் மட்டும் என்ன கஞ்சா...கைது, என்கவுண்டர் இப்படி எத்தனையோ. ஆனால் இவர் ஆட்சியை தமிழகத்தின் பொற்காலம் போல் வர்ணித்தன பொது இதழ்கள். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் பயம் கண்டு, பறித்ததை மீண்டும் துக்கி எறிந்தார் சலுகை என்ற பெயரில் அதை பெரிதாக விளம்பரப்படுத்தின பத்திரிக்கைகள். மத்திய அரசின் நலத்திட்டமெல்லாம் தான் கொண்டு வந்ததாக விளம்பரப்படுத்தினாலும் (விளம்பரப் படுத்த முடியாத திட்டங்களுக்கு முட்டுக்கட்டை அல்லது அத்திட்டமே சரியில்லை என மெத்தனம் காட்டுவது), சட்ட மன்றத்தில் அவரே தமிழகம் முதல் மாநிலமாகிவிட்டதென அறிவித்தாலும் கேட்க ஆளில்லை. ஆட்சியும், ஏவி விட காவல்துறையும் கையிலிருக்கிறதென்ற அசட்டுத் துணிச்சலில் அவர் செய்தது அனைத்தையும் 'தைரிய லட்சுமியாய்' காட்டிக் கொண்டாடின, எதிர்க் கட்சி போல் இருக்க வேண்டிய பத்திரிக்கைகள். ஊடக மாற்றமே உண்மையான சமூக மாற்றத்திற்கு வழி.
ஆளுங்கட்சிகளின் அடுத்த தேர்தல் பிரச்சாரம் அவர்களது நலத்திட்டங்களாகத் தான் இருக்க வேண்டும். நாடாளு மன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் முட்டுக்கட்டை இல்லாத தொலைதொடர்பு, இரவில்வே போன்ற துறைகளில் நிறைய செயல்படுத்தப் பட்டு இருக்கின்றன. இரண்டாண்டுகள் மத்திய அரசுடன் தோழமை போக்குடைய மாநில அரசு இல்லை. இப்போதேனும் தமிழக மக்களின் நலனை முதன்மையாக எடுத்துக் கொண்ட அரசாக திமுக அரசிருக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட எளிய மக்களுக்கான அத்தனை வாக்குறுதிகளும் முதலில் நிறைவேற்றப் பட வேண்டும். அனைத்து நல வாரியங்களிலும் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் அதிகம் இருக்கவேண்டும். அரசின் சாதனைகளை எப்படி வீர பாண்டி ஆறுமுகம் தேர்தல் அறிக்கையை இளைஞர்கள் குழு ஏற்படுத்தி வீடுவீடாக விளக்கச் செய்தாரோ., அதே போல் நலத்திட்டங்களை இளைஞர் குழுக்கள் ஏற்படுத்தி விளக்கச்செய்து அதன் பயன்பாடறிய வேண்டும் (டாஸ்மார்க் ஊழியர்களை இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்). திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட மகளிர் குழுக்களுக்களால் அதிகம் பயன் அடைந்தது அதிமுக. மகளிர் குழுக்கள் தொடர்ந்து நடத்தப் பட வேண்டும். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் குழு அமைத்து அவர்கள் பதவியில் இருந்த போது என்னன்ன திட்டங்கள் அந்தந்த மாவட்டங்களில் கிடப்பில் போடப்பட்டனவோ அதை மக்களுக்கு நலம் பயப்பதாயின் மீண்டும் கொண்டுவர ஆவன செய்யவேண்டும். மக்களுடன் இணைந்து பயணம் செய்யும் அரசாக இது இருக்கவேண்டும். ஈழத்தமிழர்கள் அமைதி நிறைந்த நல் வாழ்விற்கு வழிகாண முயற்சி எடுக்கப்படும் என அறிக்கையில் சொல்லியிருப்பது உண்மையில் நடக்கவேண்டும். தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது அனைத்தும் செயலில் இருந்தாலே போதும் தமிழகம் உயரும்.
கடைசியாக, நக்கீரன் இணையதளத்தில் கூட்டணி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தருவதாகவும், மே 13 ந் தேதி கலைஞர் தலைமையில் ஆட்சி அமையப் பொகதாகவும் கூறுகிறது. அமைச்சர்கள் பட்டியலையும் அறிவித்து இருக்கிறது.
கலைஞர் - பொது நிர்வாகம், இந்திய ஆட்சி, காவல் மற்றும் ஏனைய அனைத்து இந்தியப் பணிகள். உள்துறை மற்றும் தொழிற்துறை.
பேராசிரியர் - நிதி, திட்டமிடல்
ஆற்காடு வீராச்சாமி - மின்சாரம், சிறுதொழில் துறை
முக.ஸ்டாலின் - உள்ளாட்சித்துறை (அப்ப கோசி?)
கோசி.மணி - கூட்டுறவுதுறை
வீரபாண்டி ஆறுமுகம் - வேளாண்மைத் துறை
துறைமுருகன் - பொதுப் பணித்துறை
பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் - அறநிலையத்துறை :))
பொன்முடி - உயர் கல்வித்துறை
கே.என். நேரு - போக்குவரத்துதுறை (ஆஹா.. :)))
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை.
எஸ்.சுரேஷ்ராஜன் - சுற்றுலாத்துறை
பரிதி இளம்வழுதி - செய்தி மக்கள் தொடர்பு துறை
வேலு - உணவுத் துறை
சுப.தங்கவேலன் - வீட்டு வசதித் துறை
கே.கே.எஸ்.எஸ்.ஆர் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை :)
த.மோ.அன்பரசன் - தொழிலாளர் நலத்துறை
தங்கம் தென்னரசு - பள்ளி, கல்வித்துறை
உபயத்துல்லா - வணிகவரித் துறை
மைதீன்கான் - சுற்றுச் சூழல்
எஸ்.செல்வராஜ் - வனத்துறை
வெள்ளக் கோயில் சாமிநாதன் - நெடுஞ்சாலைத் துறை
டாக்டர். பூங்கோதை - மகளிர் மற்றும் சமூக நலத்துறை
கீதாஜீவன் - கால்நடைத்துறை
தமிழரசி - ஆதி திராவிடர் நலத்துறை.
கே.பி.பி.சாமி - மீன் வளம்
மதிவாணன் - பால்வளம்
கே.ராமச்சந்திரன் - கைத்தறி

இப் பட்டியலில் பெரிய கருப்பணும் அவர்களும் , என்.கே.கே.பி ராஜா அவர்களும் உள்ளனர் துறைகள் தெரியவில்லை. அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி நக்கீரனுக்கு.

Wednesday, May 10, 2006

2006 தேர்தல் முடிவுகள்
ஐந்தாம் முறையாக அமரப் போகும் தலைவருக்கு வாழ்த்துக்கள்.

முதல் வாழ்த்து நான் சொன்னதாக இருக்கட்டும் :)).


முன்னனி நிலவரம்

திமுக கூட்டணி = 148
அதிமுக கூட்டணி = 57

தேமுதிக - 1 மற்றவை - 1

(57 லா?., பயமுறுத்துது)

இன்னும் 3 மணி நேரம்.....Monday, May 08, 2006

தேர்தல் 2006 கணிப்புகள்

தேர்தல் நல்ல முறையில் அசம்பாவிதங்கள் இன்றி முடிந்துவிட்டது. இத் தளத்தில் வந்த கணிப்புகளின் மொத்தம் இங்கு,

திமுக 109 இடங்கள் (1 இடம் முஸ்லீம் லீக்)
கங்கிரஸ் 42 இடங்கள்
பாமக 20 இடங்கள்
சிபிஎம் 11 இடங்கள்
சிபிஐ 9 இடங்கள்

ஆக மொத்தம் திமுக கூட்டணி : 191 இடங்கள்

அதிமுக - 36 இடங்கள்
மதிமுக - 3
விசி - 1

ஆக மொத்தம் அதிமுக 40 இடங்கள்

சுயேட்சை - 1 இடம்
புதிய தமிழகம் - 1 இடம்
தேமுதிக - 1 இடம்

அக மொத்தம் 234 இடங்கள்.

இது என் கணிப்பு
**************************************************
நக்கீரன் இதழ் கணிப்பு

திமுக கூட்டணி - 207

அதிமுக கூட்டணி - 25

*****************************************************

ஜூனியர் விகடன் இதழ் கணிப்பு

திமுக கூட்டணி - 207

அதிமுக கூட்டணி - 26
*************************************************
குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் கணிப்பு

திமுக கூட்டணி - 145

அதிமுக கூட்டணி - 80
**************************************************

யாருடைய கணிப்பு சிறந்ததென பார்ப்போம்.

எது எப்படி இருந்தாலும் சூரியன் உதிக்க வேண்டும்.

Friday, May 05, 2006

மீதி.....

அனைவரும் பிரச்சாரத்தை நிறுத்திவிட்ட நிலையில். வலை பதிவிற்கும் பொது ஊடகங்களுக்கு உள்ள விதிமுறைகள் பொருந்துமா எனத் தெரியவில்லை. எனவே., விலாவாரியாக எழுதாமல் தொகுதியில் எக்கட்சி வெல்லும் என்று மட்டும் சொல்லியிருக்கிறேன்.

நாமக்கல்:

1.ராசிபுரம் - திமுக

2.கபிலர்மலை - பாமக

3.திருச்செங்கோடு: திமுக

திருச்செங்கோடு அதிமுகவின் பலமான தொகுதி., இப்போது எங்கே போனார் என நாமெல்லாம் தேடிக்கொண்டிருக்கும் நிதி(நிதியமைச்சர்) பொன்னையன் 4 முறை இதே தொகுதியில் நின்றிருக்கிறார் 4 முறையும் வென்றிருக்கிறார் கடந்த தேர்தல் உட்பட. (முன்னால் அமைச்சர் செல்வ கணப்தியும் இதே தொகுதான்). ஆனால் இங்கு அதிமுக சார்பில் பள்ளிப்பாளையம் சேர்மன் பி.தங்கமணி நிறுத்தப்பட்டுள்ளார். இவரும் தொகுதியில் நல்ல செல்வாக்கு பெற்றவர்தான். ஆனால் இத்தொகுதியில் வென்று விட்டுச் சென்றவர்தான், இன்னும் எட்டிப்பார்க்கவில்லையாம் பொன்னையன் அது கிராமம், கிராமாக சென்று வாக்குசேகரித்துக் கொண்டிருக்கும் தங்கமணிக்கு தலைவலியாக உள்ளது. அமைச்சர் சொன்னது எதையும் இதுவரை செய்யவில்லை என்பது மக்களுக்கு இலையின் மேல் அதிருப்தி கொள்ள வைத்திருக்கிறது. திமுக தரப்பை விட பிரச்சாரத்தில் சுறுசுறுப்பாக இருந்தும் இது ஒரு சோதனை. இது இப்படியிருக்க, திமுகவில் கடந்தமுறை கபிலர்மலையில் நின்ற மாசெ காந்திச்செல்வன் இம்முறை இத்தொகுதியை பற்றிக் கொண்டதால், இப்பகுதி உபிக்கள் முணுமுணுப்புடன் தேர்தல் வேலை செய்கின்றனர். கடந்த இருமுறை திமுகசார்பில் நின்று ஒருமுறை வென்ற டி.பி.ஆறுமுகம் தரப்பு, இத்தொகுதி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்த சேர்மன் நடேசன் தரப்பு எல்லோரையும் சமதானப்படுத்தி பிரச்சாரத்தை துவக்கியுள்ளார் காந்திச்செல்வன்.

4.சேந்தமங்கலம் - திமுக

5.சங்ககிரி - திமுக

6. நாமக்கல்: - காங்கிரஸ்
நமக்கல் இடைக்காலத்தில் பலமான அதிமுக தொகுதி என்றாலும், பின்பு திமுக கைக்கு மாறி, கடந்த தேர்தலில் காங்கிரஸ் கைக்கு வந்திருக்கிறது. இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் தொகுதியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. சிட்டிங் எம்.எல்.ஏ ஜெயக்குமார்தான் மீண்டும் காங்கிரஸ் சார்பில் நிற்கிறார். ஆனால் நாமக்கல் காங்கிரஸ் மக்களுடன் அவ்வள்வு சுமுகமான உறவு இவருக்கு இல்லை போலிருக்கிறது. தொகுதி எம்.பி ராணியின் ஆதரவாளர்கள் பிரச்சாரங்களில் தென்படுவதில்லையாம். ஜெயக்குமார் நாடளுமன்றத்தேர்தலில் அவருக்கு ஆதரவாக இல்லையென்பதால்., உட்கட்சிப் பூசல்கள் இருந்தாலும் திமுகவினர் ஆதரவுடன் அனைத்து இடங்களுக்கும் புகுந்து புறப்பட்டு கொண்டிருக்கிறாரம். அதிமுக பக்கம் வேட்பாளர் சாரதா மாசெயின் ஆதரவுடன் களமிறங்கி இருந்தாலும் பிரச்சாரம் என்னவோ விறுவிறுப்பாக இல்லையாம். இவர்கள் இருவரையும் மிஞ்சி விடுவாரோ என ஐயப்படும் அளவில் கலக்கி கொண்டிருப்பவர் தேமுதிக அமுதா. இவர் வெகுவாக ஓட்டுக்களை பிரிப்பார் எனத் தெரிகிறது. விஜயகாந்த் அமுதாவிற்கு பிரச்சாரம் செய்ய வந்தபோது கூடிய கூட்டம் கண்டு குழப்பத்தில் உள்ளதாம் காங்கிரஸ்ம், அதிமுகவும் வேறுபாடில்லாமல்.
****************************************************
பெரம்பளூர் :
1.வரகூர்: -பாமக
2.அரியலூர் - காங்கிரஸ்
3.ஆண்டிமடம் - திமுக
4.பெரம்பளூர் - திமுக
5. ஜெயங்கொண்டம் -பாமக
*********************************************
கடலூர் :
1.காட்டு மன்னார் கோவில் -காங்கிரஸ்
2.பண்ருட்டி - பாமக
3.நெல்லிக்குப்பம் -திமுக
4.விருதாச்சலம் - தேமுதிக - விஜயகாந்த்
5.குறிஞ்சிப்பாடி -திமுக
6.கடலூர் -திமுக
7.மங்களூர் - திமுக
8.புவனகிரி - அதிமுக
9.சிதம்பரம் - சிபிஐ (எம்)
**********************************************************************
விழுப்புரம் :
1. கண்டமங்கலம் - திமுக
2.மேல்மலையனூர் - பாமக
3.செஞ்சி - திமுக
4.சங்கராபுரம்: -திமுக
கடந்த தேர்தலில் பாமக வென்ற தொகுதி, இப்போது திமுகவிற்கு போயிருக்கிறது. கடந்த இரு தேர்தகளில் இங்கு திமுக சார்பில் நின்ற உதயசூரியனுக்கு சின்னசேலத்தில் வாய்ப்பளித்திருக்கிறார்கள். எனவே ஆ.அங்கையர்கண்ணி என்பவர் நிற்கிறார். சேர்மன் அண்ணாமலை மற்றும் திமுக நிர்வாகிகளும், சிட்டிங் எம்.எல்.எ பாமக பி.கசம்பு, கம்யூனிஸ்ட் கட்சி திருப்பதி போன்ற கூட்டணி கட்களின்காரர்களின் ஆதாரவுடனும் தாரை தப்பட்டை முழங்க வாக்கு திரட்டி வருகிறார். மலைகிராமங்களில் அதிக செல்வாக்குள்ள உதயசூரியனின் பிரச்சாரம் வெகுவாக இவருக்குப் பயன்படும். அதிமுக சார்பில் சன்னாசி நிற்கிறார். மீன் குத்தகை ஊழலில் மாட்டியிருப்பதால் பிரச்சாரம் செல்லுமிடமெல்லாம் கேள்விக் கணைகள் தொடுக்கப்படுகின்றனவாம். இருந்தாலும் கிரமப்புரங்களில் அதிமுக இங்கு செல்வாக்குடந்தான் இருக்கிறது. தேமுதிக சார்பில் செழியன் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். கூட்டணி பலத்தால் வெல்லப் போவது அங்கையர் கண்ணியாக இருக்க அதிக வாய்ப்புண்டு.
5.முகையூர் - விடுதலை சிறுத்தைகள்
6.திருநாவலூர் - திமுக
7.திண்டிவனம் - அதிமுக
8.விழுப்புரம் - திமுக
திமுக முன்னால் அமைச்சர் பொன்முடி 3 முறை வென்ற தொகுதி. இப்போதைய என்.எல்.ஏ வும் அவர்தான். இம்முறை இத் தொகுதியில் நிற்பவரும் இவர்தான். அதிமுக சார்பில் ஆர்.பசுபதி. இவர் கடந்த முறை பாமக சார்பில் நின்று 63,488 வக்குகள் பெற்றவர். எனவே பாமக ஓட்டுக்கள் இவருக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. திமுக நகர் மன்றத் தலைவர் பன்னீர் செல்வம் அதிமுகவிற்கு மாறிவிட்டது, மற்றொரு சருக்கல். உடையார் சமூக வாக்குகளை நம்பியிருந்தாலும் அது பெரிய வாக்கு வங்கி இல்லை.
9.வானூர் - பாமக
10.ரிஷிவந்தியம் -காங்கிரஸ்
11.சின்னச் சேலம் - திமுக
12.உளுந்தூர்பேட்டை -திமுக
***********************************************************************
திருவண்ணாமலை :
1.ஆரணி - அதிமுக
2.போளூர் - காங்கிரஸ்
3.செய்யாறு - காங்கிரஸ்
4.பெரணமல்லூர் - பாமக
5.கலசப்பாக்கம் - பாமக
6.செங்கம் - காங்கிரஸ்
7.தண்டாரம்பட்டு- திமுக
8.திருவண்ணாமலை - திமுக
9. வந்தவாசி - திமுக
*******************************************************************
1.குடியாத்தம் - சிபிஐ (எம்)
2.காட்பாடி -திமுக
3.வேலூர் - காங்கிரஸ்
4.அரக்கோணம் - திமுக
5.சோளிங்கர் - காங்கிரஸ்
6.ராணிப்பேட்டை - திமுக
7.வாணியம்பாடி - முஸ்லிம் லீக் (உதய சூரியன் சின்னத்தில்)
8.அணைக்கட்டு - பாமக
9.ஆற்காடு -அதிமுக
10.திருப்பத்தூர் -திமுக
11. நற்றாம்பள்ளி -திமுக
12பேரணாம்பட்டு. - திமுக
***********************************************************************
காஞ்சிபுரம்
1.காஞ்சிபுரம் - அதிமுக
2.ஆலந்தூர் - திமுக
3.தாம்பரம் - திமுக
4.உத்திரமேரூர் -திமுக
5. செங்கல்பட்டு - பாமக
6. அச்சிரப்பாக்கம் - திமுக
7. திருப்போரூர்- அதிமுக
8. மதுராந்தகம் - காங்கிரஸ்
****************************************************************************
சென்னை ;
1.ராயபுரம் - அதிமுக
2. ஆர்.கே.நகர் -அதிமுக
3.பெரம்பூர் - மதிமுக
4.புரசைவாக்கம் - திமுக
5.பூங்காநகர் - திமுக
6.சேப்பாக்கம் - திமுக
7.துறைமுகம் - திமுக
8.எழும்பூர் - திமுக
9.அண்ணாநகர் -திமுக
10.தி.நகர் - திமுக
11.ஆயிரம்விளக்கு - திமுக
12.திருவல்லிக்கேணி -திமுக
13.மையிலாப்பூர் -திமுக (நெப்ஸ் பலியாடோன்னு நினைச்சேன், இல்லை..இல்லை..)
14.சைதாப்பேட்டை -பாமக
****************************************************************************
திருவள்ளூர் :
1.திருத்தணி - பாமக
2.பள்ளிப்பட்டு - அதிமுக
3.திருப்பெரும்புதூர் - காங்கிரஸ்
4.கும்மிடிப்பூண்டி -அதிமுக
5.பொன்னேறி - திமுக
6.வில்லிவாக்கம் -திமுக
7.திருவள்ளூர்-திமுக
8.பூந்தமல்லி - காங்கிரஸ்
9.திருவெற்றியூர் -அதிமுக

Thursday, May 04, 2006

தேர்தல் அலசல் - 2006 -நீலகிரி


நீலகிரி யாருக்கு?

நீலகிரி : மொத்தம் 3 தொகுதிகள்.

1.கூடலூர் 2.ஊட்டி 3.குன்னூர்

1.கூடலூர் :
கா.ராமச்சந்திரன் (திமுக) - (கூட்டணி பலம் ++)
மில்லர் (அதிமுக) - அமைச்சர் - சுற்றுலாத்துறை.

கூடலூர் சுற்றுலாத்துறை அமைச்சர் மில்லரின் தொகுதி. இம்முறையும் அவர்தான் இங்கு நிற்கிறார். இவரின் மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. சுற்றுலா தளத்திலிருந்து போன இவருக்கு அந்தத் துறையே கிடைத்துள்ளது. இருப்பினும் வாக்குறிகள் எதையும் நிறைவேற்றவில்லை. திமுக சார்பில் இராமசந்திரன் நிற்கிறார். சிபிஐ, சிபிஎம்க்கு இங்கு சிறிது பலமுண்டு. கூட்டணி பலம் கொண்டு வெல்லப்போவது திமுகதான்.

2.ஊட்டி :
பி.கோபால் (காங்கிரஸ்) - (கட்சி பலம், கூட்டணி பலம் +)
கே.என். துரை (அதிமுக)
காங்கிரஸ் தொகுதி. கடந்த 7 முறை நடந்த தேர்தல்களை கணக்கில் கொண்டால்., 5 முறை காங்கிரஸ் வென்றிருக்கிற்து. 1 முறை திமுக 1 முறை அதிமுக. கடந்த முறை இத்தொகுதியில் வென்றதும் காங்கிரஸ் ஹெச்.எம்.ராஜூதான். இவர் இத்தொகுதியில் 4 முறை போட்டியிட்டு 3 முறை வென்றிருக்கிறார். தற்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் பி.கோபால். ஊட்டியின் மத்தியப் பகுதியில் இக்கோடையில் சுற்றுலா சென்ற அனைவரும் குதூகலித்துக் கொண்டிருக்க., சுற்றியிருக்கும் ஊர்களிலோ தேயிலை வீழ்ச்சியால், வறுமையில் வாடும் குடும்பங்களே அதிகம். இவர்களைப் பற்றிப் பேச 10 மாகாஸ்வேதாதேவிகள் வேண்டும். எத்தனை பேசினாலும் என்ன மாற்றம் வந்துவிடும்?. தமிழ் நாட்டில் மட்டும் மொத்தம் 36 வகையான மலைவாழ் இன மக்கள் வாழ்கின்றனர். விடுதலை கிடைத்து 50 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னும் இவர்களுக்கு தேர்தலில் வெறும் 4 இடங்கள். அதையும் யார் யாரோ வந்து நான் மலைசாதி என பொய் பிறப்புச் சான்றிதழ் கொடுத்து, போட்டியிட்டு பதவிகளை அனுபவிக்கும் நிலையே உள்ளது. ஊட்டியில் அதிகமுள்ளது படுகர் இனம். காங்கிரஸ் வேட்பாளருக்கு கூட்டணி ஆதரவுடன் சொந்த கட்சி ஆதரவும் உள்ளது. அதிமுகவிற்கு மலைவாழ் மக்களின் ஓட்டுக்கள் கிடைக்க படுகர் இனத்தை சேர்ந்த ஒருவரையே நிறுத்தியிருக்கிறார்கள். ஓட்டுக்கள் சிதறலாம் எனினும் தேயிலை விவசாயிகளின் உற்பத்திக்கு உரிய விலை கிடைக்க மத்திய அரசிடம் வ்லியுறுத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கை கூறுவதும், கூட்டணி பலமும் காங்கிரஸ்க்கே மீண்டும் இத்தொகுதி.
3.குன்னூர் (தனி):
அ.சவுந்திர பாண்டியன் (திமுக)
எம்.செல்வராஜ் (அதிமுக) - (பிரச்சாரம் +)

கே.கந்தசாமி காங்கிரஸ் எம்.எல்.ஏ சிட்டிங். தொகுதி திமுகவிற்குப் போயிருக்கிறது. சவுந்திரபாண்டியன் என்கிற புதுமுக வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். உள்ளுர் உடன்பிறப்புகள் ஆதரவளிக்கவில்லை. அதிமுக சார்பில் எம்.செல்வராஜ் நிற்கிறார். இங்கு அதிமுக வெல்லவே அதிக வாய்ப்பு.
நீலகிரி நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
தேனி மாவட்டம்
நாகை மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
தஞ்சை மாவட்டம்
கரூர் மாவட்டம்
தருமபுரி மாவட்டம்
ஈரோடு மாவட்டம்

தேர்தல் அலசல் - 2006 -கோயம்புதூர்


கோவை யாருக்கு?


கோயம்புதூர் : 1.மேட்டுப்பாளையம் 2.பொங்கலூர் 3.தொண்டாம்புத்தூர் 4. அவினாசி 5.போரூர் 6.சிங்க நல்லூர் 7.திருப்பூர் 8.கோவை கிழக்கு 9.கோவை மேற்கு 10.பல்லடம் 11.பொள்ளாச்சி 12.தரபுரம் 13.கிணத்துகடவு 14.உடுமலைப் பேட்டை 15. வால்பாறை

1.மேட்டுப்பாளையம் :
பி.அருண்குமார் (திமுக)
ஓ.கே.சின்னசாமி (அதிமுக) - (கட்சி செல்வாக்கு +)

மேட்டுப் பாளையம் தொகுதியில் அதிமுக அடுத்து திமுக அதற்கடுத்து காங்கிரஸ் என பலம் கொண்டவைதான். இங்கு அதிமுக சிட்டிங் ஏ.கே. செல்வராஜ் வேட்பாளரோ ஓ.கே.சின்னராஜ். திமுக தரப்பில் கடந்த 3 முறை போட்டியிட்டு ஒரு முறை வென்ற (1996) பி. அருண்குமாரே மீண்டும் நிற்கிறார். தேமுதிக சார்பில் இங்கு பெண் வேட்பாளர் சரஸ்வதி நிறுத்தப்பட்டுள்ளார். இங்கு அதிமுக வெல்லலாம்.

2.பொங்கலூர்:
எஸ்.மணி (திமுக) - (கூட்டணி பலம் +)
டி.பி.தாமோதரன் (அதிமுக)

பொங்கலூர் அதிமுக காங்கிரஸ் சற்று பலமாக உள்ள தொகுதி. அதிமுகவில் அமைச்சர் தாமோதரன் மீண்டும் களமிறங்குகிறார். அவர் தொகுதிக்கு நல்லது செய்தாரோ இல்லையோ ரரக்களுக்கு நல்லது செய்யவில்லை போல., அது பெரிய ரகளையாகிவிட்டது. இவர் நாய்க்கர் சமூகம் சார்ந்தவர்., கட்சியில் கவுண்டர் சமூக ரரக்களிடம் பாராமுகமாக இருப்பதாக புகார். அது ஒரு அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் எதிரொலித்து, அடிதடியில் முடிந்திருக்கிறது. அடிதடியெல்லாம் முடிந்த பிறகு, மந்திரி நிதானமாக எந்திரிச்சு இது திமுகவினர் சதி என்றாராம். எதிர்புறத்தில் பார்த்தால், திமுக வேட்பாளார் எஸ். மணி நிற்கிறார். இது காங்கிரஸ் எஸ்.ஆர்.பி தொகுதி. அவருடைய செல்வாக்கு உள்ள தொகுதி. அவர் இருமுறை தொடர்ந்து வென்ற தொகுதி. திமுகவிற்கு அவ்வளவு பலம் இங்கு இல்லையென்றாலும் வேட்பாளர் இங்கு அதிகமாக இருக்கும் கவுண்டர் சமூகம் சார்ந்தவர் இதனால் அதிமுக ஓட்டுக்களே கிடைக்கலாமாம். அடுத்துள்ளது காங்கிரஸ் செல்வாக்கு எனவே இங்கு திமுக மணி தொகுதியை பிடிக்கலாம்.

3.தொண்டாம்புத்தூர்
எஸ்.ஆர்.பாலசுரமணியன்(காங்கிரஸ்)
மு.கண்ணப்பன்(மதிமுக)

திமுகவும் அதன் தோழமை கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அகியவை பலமாக இருக்கிறது இத் தொகுதியில் மாநில அளவில் அரசியல் செய்யும் இரு தலலகல் மோதுகின்றன.. தமிழகத்தின் தற்போதய எதிர்கட்சி தலைவரும், தொகுதியின் தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏவும் ஆன காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பி மீண்டும் இங்கு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மாதிமுக சார்பில் அதன் பொருளாலரும், முன்னால் அமைச்சருமான மு.கண்ணப்பன் போட்டியிடுகிறார். அரசை எதிர் வரிசையிலிருந்து ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்ததனால் தொகுதிப் பக்கம் எஸ்.ஆர்.பி வருவதில்லை. இந்த வருத்தம் மக்களுக்கு உள்ளது. ஆனால் பல நல்ல வளர்ச்சிப் பணிகளை சென்னையிலிருந்து கொண்டேனும் செய்திருக்கிறார். இப்போதும் சீட் கிடைக்கவில்லையென்றால் சுயேட்சையாக நின்று ஓட்டைப் பிரிக்க வேண்டும் என்ற காங்கிரசின் கலாச்சாரத்தில் இத்தொகுதியில் இருந்தவர்களை சமாதனப்படுத்தி தனக்காக தேர்தல் பணி செய்ய அழைத்து அரவணைத்திருக்கிறார்.. மு.கண்ணப்பனுக்கு அதிமுக ஓட்டுவங்கி பலமாக உள்ளது. இது கிராமப்புறங்கள் நிரம்பிய தொகுதி. இவர்களுடன் தேமுதிக கோவில் பிள்ளையும், பாஜக சின்னராஜ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். பாஜக வேட்பாளர் ஓட்டுகள் பிரிப்பார். எனினும் கூட்டணிபலம் எஸ்.ஆர்.பிக்கு கைகொடுக்கும்.

4. அவினாசி
எம்.ஆறுமுகம் (சிபிஐ) - (கூட்டணி பலம் +)
ஆர்.பிரேமா (அதிமுக)

அவினாசி அதிமுக தொகுதி. சிட்டிங் எஸ்.மகாலிங்கம் இல்லாமல் ஆர்.பிரேமா என்பவர் அதிமுக சார்பாக நிற்கிறார். இவர் இத்தொகுதிக்கு புதுமுகம். திமுக இம்முறை சிபி ஐக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது. சிபிஐ எம்.ஆறுமுகம் 3 முறை இதே தொகுதியில் நின்று ஒரு முறை வென்றிருக்கிறார். தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர் கூட்டணி பலத்தோடு ஆறுமுகம் அவினாசியில் வெற்றி பெறலாம்.

5.பேரூர் :
நா.ருக்குமணி (திமுக)
எஸ்.பி. வேலுமணி (அதிமுக)
பேரூர் நகரங்களையும் அதிக எண்ணிக்கையில் கிராமங்களையும் கொண்ட தொகுதி. இங்கிருக்கும் கிரமங்களில் கட்சிக் கொடிகளில்லை., சுவர்களில் சின்னங்கள் இல்லை ஏன் மக்கள் ஓட்டுக்கேட்டு யாரையயும் உள்ளே வரவே அனுமதிப்பதில்லை. அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத இக்கிராமங்களில் அதைச் செய்துத்ருகிறேன் என்று சொல்லிச் சொல்லி ஓட்டு வாங்குபவர்கள் செய்வதில்லை. பேரூரில் திமுகவும், அதிமுகவும் சம்மான பலம் பெற்ற தொகுதி. இங்கு குனியமுத்தூர் நகராட்சித்தலைவர் எஸ்.பி வேலுமணி அதிமுக சார்பில் நிற்கிறார். குனியமுத்தூரில் இவர் பலம் பொருந்தியவர். நலங்களும் செய்திருக்கிறார். திமுக சார்பில் நா.ருக்மணி நிற்கிறார். கூட்டணி ஒத்துழைப்பு இவருக்கு உள்ளது. தேமுதிக சார்பில் ராஜசேகர் என்பவர் நிற்கிறார். இங்கு திமுக கூட்டணியுடன் இருக்கும்போது எடுத்த வாக்குகள் 96,507. அதிமுக கூட்டணியுடன் இருந்தபோது எடுத்த வாக்குகள் 94,607. அடிப்படை வசதிகள் இல்லாததால் அதிமுக எம்.எல்.மீது மக்களுக்கு கடும் அதிருப்தி. மதிமுகவுக்கு செல்வாக்கில்லை. காங்கிரஸ்க்கும் அப்படித்தான். ஆனால் சிபிஎம் பலம் சிறிதளவு உள்ளது. அதிமுகவிற்கு சாதகம் செய்யும் ஜனதாதளம் சிறிது பலம். கூட்டி, கழித்து, அடித்து, திருத்திப் பார்த்தால்... எனக்கு என்ன தெரியும்?. திமுகவிற்குத்தான் சாதகமாக உள்ளது.

6.சிங்க நல்லூர்:
சவுந்தராஜன்(சிபிஎம்) - (சொந்த கட்சி பலம், கூட்டணி பலம் ++)
காளான் (ஐ.என். டி.யூ.சி)
சிட்டிங் கேசி கருணாகரன் சிபிஎம். வேட்பாளரோ சிபிஎம் சவுந்தராஜன். எதிர் தரப்பில் ஐ.என். டி.யூ.சி சார்பில் காளான் நிற்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பலம் பெருந்திய மாவட்டம்தான். ஜனத தளத்தின் கையும் கொஞ்சம் ஓங்கியிருக்கிறது. ஆனாலும் கூட்டணி துணையோடு சிபிஐ (எம்)சவுந்தராஜன் வெல்லாம்.

7.திருப்பூர் :
கோவிந்தசாமி(சிபிஎம்) -(சொந்த கட்சி பலம், கூட்டணி பலம் ++)
சு.துரைசாமி (மதிமுக)
திருப்பூர் தொழிற் நகரம். தொழிற் இருந்தால் தொழிற் சங்கங்கள் இருக்காதா?., சங்கங்கள் இருந்தால் அங்கு எக்கட்சி செல்வாக்குப் பெற்றிருக்கும் எனத் தெரியாதா?. தொழிலாளி இருந்தால் முதலாளி இருந்தாகணுமே? இங்கு தேர்தல் களத்திலேயே அனைத்தும் உண்டு. சிட்டிங் அதிமுக சி.சிவகாமிக்கு இல்லாமல் மதிமுகவிற்கு சென்றுவிட்டது தொகுதி. சு.துரைசாமி போட்டியிடுகிறார். திமுக தரப்பில் சிபிஎம் கோவிந்தசாமி போட்டியிடுகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பலமான மாவட்டம் இது. மாநிலத் தொழிளார் பிரிவு செயலாளர் கார்த்திகேயன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். வாக்குகள் சிதறும். மதிமுக துரைசாமியோ வல்லிசு தொழிலதிபர். எனினும் சொந்த கட்சி பலம், கூட்டணி பலம், தொகுதிக்கு செய்த நல்லவைகள் எல்லாம்கொண்டு கோவிந்தசாமி சிபிஎம் சார்பில் இங்கு வெல்வார்.

8.கோவை கிழக்கு
பொங்கலூர் ந. பழனிச்சாமி (திமுக) - (கூட்டணி பலம் ++)
டி.கோபாலகிருஷ்ணன் அதிமுக

கோவை கிழக்கு சிபிஎம். காங்கிரசின் பலமான தொகுதி. அவ்விரு கட்சிகளிக்கில்லாமல் திமுக எடுத்துகொண்டது. திமுகவில் பொங்கலூர் ந.பழனிச்சாமி நிற்கிறார். 1980ப் பிறகு நடந்த அனத்து தேர்தல்களிலும் கூட்டணி கட்சிகளே நின்றிருக்கின்றன. இப்போதுதான் திமுக நிற்கிறது. திமுகவிற்கு பலமில்லாத தொகுதிதான் ஆயினும் கூட்டணி கட்சிகளுக்கு மிகுந்த பலம் இங்கு. கடந்தமுறை காங்கிரஸ் வென்று வந்திருக்கிறது, அரசு ஊழியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. பொங்கலூரைச் சேர்ந்தவர் இங்கு நிற்கிறார் என பிரச்சாரம் செய்கிறது அதிமுக தரப்பு. அதிமுக மட்டுமென்ன 1984ல் ல் கோவைத்தம்பி இங்கு போட்டியிட்டார். அவருக்குப் பிறகு இப்போது டி.கோபால கிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். அரசு ஊழியர்களின் ஓட்டாலும், காங்கிரஸ், கம்யுனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்காலும் இங்கு பழனிச்சாமி கோவைக் கிழக்கில் வெல்வார்.

9.கோவை மேற்கு :
மகேஸ்வரி (காங்கிரஸ்) - (கட்சி பலம் +)
தா.மலரவன் (அதிமுக)

திமுக, காங்கிரஸ் செல்வாக்குள்ள தொகுதி. சிட்டிங் காங்கிரஸ் மகேஷ்வரியே மீண்டும் நிற்கிறார். அதிமுக சார்பில் த.மலரவன் களமிறங்குகிறார். இங்கு சிறுபான்மையின மக்களின் ஓட்டுக்கள் வெற்றியைத் தீர்மானிக்கும். தேமுதிக சார்பில் ஏ.எஸ்.அக்பர் நிற்கிறார். எனவே சிறுபான்மையின மக்கள் ஒட்டுக்கள் சிதறும். விஜய் ரசிகர் மன்ரத் த்லைவர் யுவராஜ் என்பவர் சுயேட்சையாக பொட்டியிடுகிறார் (ஆரம்பிச்சாசா?). கூட்டணி பலத்தோடு மகேஷ்வரி இங்கு வெல்லலாம்.


10.பல்லடம்:
எஸ்.எஸ்.பொன்முடி (திமுக)
செ.ம.வேலுச்சாமி(அதிமுக)-பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை- தொகுதியில் செல்வவக்கு, கட்சி பலம் + )

அதிமுக செல்வாக்கு உள்ள தொகுதி. அமைச்சர் வேலுச்சாமியின் தொகுதி. தொகுதியில் இவருக்கு நல்ல பெயர். நிறைய நலத்திட்டங்கள் செய்துள்ளளர். கடந்த 5 ஆண்டுகள் அமமச்சராக இருந்தது, அதிமுக அமமச்சரவையிலேயே இவர் மட்டும் தான். இவர் மீண்டும் நிற்பதில் பல்லடம் ஒசெ பரமசிவன் முன்பு பிரச்சனை செய்தாலும் இப்போது விறுவிறு சென்று பிரச்சாரமும் செய்கிறார். திமுக சார்பில் கடந்த இருமுறை நின்று 1996 ல் வென்ற எஸ்.எஸ்.பொன்னுச்சாமி மீண்டும் போட்டியிடுகிறார். தொகுதியில் இரட்டை இலை செல்வாக்குடன் திகழ்வதாலும், அமைச்சரின் தனிப்பட்ட சாதனைகளாலும் பல்லடம் மீண்டும் வேலுச்சாமிக்கே.

11.பொள்ளாச்சி :
த. சாந்திதேவி (திமுக) - (கூட்டணி பலம் +)
பொள்ளாச்சி ஜெயராமன்(அதிமுக)
அதிமுகவிற்கு பலம் கூடுதலான தொகுதி. அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனே அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். தன் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறார். திமுக சார்பில் ஆனைமலை ஓசெ சாந்திதேவி நிற்கிறார். கடந்தமுறை திமுக சார்பில் போட்டியிட்ட தமிழ்மணி. 1996 ல் வென்ற ராஜூ போன்றவர்கள் இத்தொகுதியை எதிர் பார்த்து ஏமாந்ததால், பிரச்சாரம் சுணக்கமாய்த்தான் இருந்ததாம். சாந்திதேவி தொகுதியில் அதிகம் உள்ள கவுண்டர் ச்மூக வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வார். கிராமப்புற செல்வாக்கும் இருக்கிறது.ஜெயராமனுக்கு நகர் புற செல்வாக்கும் செட்டியார் சமூக ஓட்டுக்களும் கிடைத்தாலும் தென்னை விவசாயிகள் அதிகமுள்ள மாவட்டம் என்பதாலும், கூட்டணி பலத்தாலும் சாந்திதேவி முன் நிற்கிறார்.

12.தராபுரம் :
பெ.பிரபாவதி (திமுக) -(கூட்டணி பலம் +)
எம்.ரெங்கநயகி (அதிமுக)
பாமக சிட்டிங் சிவகாமி வின்சென்ட். தொகுதி திமுக பெ.பிரபாவதிக்கு. திடிரென அதிமுகாவில் ஐக்கியமான சிவகாமிக்குத்தான் சீட் முதலில் தருவதாக இருந்தது. இப்போது அதிமுக சார்பில் எம்.ரெங்கநயகி நிற்கிறார்.. பாமகவிற்கும், மதிமுகவிற்கும் சற்று பலம் இருக்கிறது. கூட்டணி பலம் கொண்டு நோக்கினால் இங்கு பெ.பிரபாவதி வெல்வார்.

13.கிணத்துகடவு ;
நெகமம் கந்தசாமி (திமுக) -(கூட்டணி பலம் ++)
தாமோதரன் (அதிமுக)
கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக சார்பாக சிட்டிங் எம்.எல்.ஏ தாமோதரன் மீண்டும் களமிறங்கிகிறார். தொகுதியில் மிக நல்ல பெயர் இவருக்கு. இங்கு அதிகம் இருக்கும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். தொகுதியில் உள்ள பெரும்பான்மையான கிராமங்களில் கூட்டு குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தி வெற்றி கண்டு இருக்கிறார். திமுக தரப்பில் சீனியர் அதிமுக தல நெகமம் கந்தசாமி நிற்கிறார். பலமுறை இத்தொகுதியில் வென்று வந்தவர் அவர். அப்போதைய அடாவடி அரசியல் இப்போது எடுபடுமா? என்ற கேள்வி இருந்தாலும். மதிமுக சப்போர்ட் இங்கு திமுகவிற்கு சாதகமாக இருப்பதாலும், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பும் உள்ளதாலும் நெகமத்தாருக்கே கிணத்துக்கடவு.

14.உடுமலைப் பேட்டை :
செ.வேலுச்சாமி (திமுக)
சண்முகவேல்(அதிமுக) -( கட்சி பலம் +)
அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ சண்முகவேல் மீண்டும் நிற்கிறார். திமுக சார்பில் செ.வேலுச்சாமி நிற்கிறார். சண்முகவேல் மீண்டும் வர வாய்ப்புள்ளது.
15. வால்பாறை:
கோவைத் தங்கம் (திமுக) - (கூட்டணி பலம், சொந்த செல்வாக்கு +)
சுசி.கலையரசன் (விசி)
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்திற்கும் வாக்கு வங்கி உண்டு இங்கு. காங்கிரஸில் சிட்டிங் எம்.எல்.ஏ. கோவைத் தங்கமே மீண்டும் போட்டியிடுகிறார். நல்ல பல சாதனைகள் செய்து தொகுதியை தன் பக்கம் வைத்திருகிறார். கூட்டணி பலமும் நன்றாக உள்ளது. எதிர்தரப்பில் விடுதலை சிறுத்தைகளின் மாநில பொதுச் செயலாளரான சுசி.கலையரசன் இங்கு நிற்கிறார். அதிமுகவினரின் ஆதரவு இல்லா நிலையில் தேர்தலைச் சந்திக்கிறார். கோவைத் தங்கம் மீண்டும் வெல்வார்.
கோவை நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
தேனி மாவட்டம்
நாகை மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
தஞ்சை மாவட்டம்
கரூர் மாவட்டம்
தருமபுரி மாவட்டம்
ஈரோடு மாவட்டம்
நீலகிரி மாவட்டம்

தேர்தல் அலசல் - 2006 -ஈரோடு


ஈரோட்டில் வெல்லப் போவது யார்?


ஈரோடு : 1.சத்திய மங்கலம் 2.பவானிசாகர் 3. மொடக்குறிச்சி 4.அந்தியூர் 5.கோபி 6.பவானி 7.ஈரோடு 8.பெருந்துறை 9.வெள்ளக்கோவில் 10.காங்கேயம்

1.சத்திய மங்கலம்:
எஸ்.பி. தர்மலிங்கம் (திமுக) - (கூட்டணி பலம் +)
டி.கே.சுப்ரமணியன் (மதிமுக)

சத்தியமங்கலம் இரு கழகங்களுக்கும் சமமாகவே வாய்ப்பளிக்கும் தொகுதி. அதிமுக கேந்தசாமி சிட்டிங் எம்.எல்.ஏ. இம்முறை மதிமுகவிற்கு கொடுத்திருக்கிறார்கள் இத் தொகுதியை. 2001 சட்ட மன்றத் தேர்தலில் இத் தொகுதியில் தனித்து நின்று 16,486 வாக்குகள் பெற்ற டி.கே சுப்ரமணியந்தான் இம்முறையும் களமிறங்குகிறார். இவர் தொகுதிக்கு நன்கு அறிமுகமான முகம். தவிர இதே தொகுதியில் 3 முறை திமுக சார்பில் நின்று., ஒடுமுறை வென்று எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார். சத்திய மங்கலத்தை முதன்மைத் தொகுதியாக்குவேன் என்றெல்லாம் மதிமுகவிற்கு இவ்விடம் கிடைக்குமென உறுதியாக எண்ணிக்கொண்டு பிரச்சாரம் பலமாகவே இருக்கிறது. ஆனால் வீரப்பன் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்கு அதிமுகவின் மேல் கோபமும் இருக்கிறது. அது இவரின் வாக்குகளைப் பாதிக்கலாம். மலை மக்களின் ஓட்டுக்கள் அப்படியே தனக்கு கிடைக்குமென நினைத்து திமுக தர்மலிங்கம் என்ற வேட்பாளரைக் களமிறக்கியுள்ளது. திமுக பிரச்சாரம் கொஞ்சம் மந்தம்தான். ஆனால் மலை வாழ் மக்களது குறைகள் கேட்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும், அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று திமுக கூறி வருவதாலும், கூட்டணி பலத்தாலும் தர்மலிங்கம் சத்தியமங்கலத்தில் வெல்வார்.
2.பவானிசாகர் :
ஜீவா ஓ.சுப்ரமணியம்(திமுக) - (கூட்டணி பலம் +)
சிந்து ரவிச்சந்திரன் (அதிமுக)
சிட்டிங் அதிமுக பி.சிற்றம்பலம். தற்போது நிற்பது சிந்து ரவிச்சந்திரன். பவானிசாகர் அதிமுகவிற்கு சாதகமான தொகுதிதான். திமுக சார்பில் முதலில் வேட்பாளரென அறிவிக்கப்பட்டது கீதா நடராஜன். பிறகு அதை மாற்றி ஜீவா என அறிவித்தது திமுக. இதனால் உடன்பிறப்புகளுக்கு உற்சாகம் இல்லை. சிந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்த சிந்துவை இறக்கியிருக்கிறார்கள். இத் தொகுதி மட்டும் அதிக அளவில் வசிக்கும் வேட்டுவ கவுண்டர்கள் ஓட்டுக்கள் இதனால் பாதிக்கப்படும். இச்சமூக ஓட்டுக்கள் விழுந்தால், கூட்டணி பலத்துடன் திமுக வெல்லும்.

3. மொடக்குறிச்சி:
ஆர்.எம்.பழனிச்சாமி (காங்கிரஸ்)
வி.பி.நமச்சிவாயம் (அதிமுக) - (கட்சி பலம் +)
மொடக்குறிச்சியும் அதிமுக செல்வாக்குள்ள தொகுதி. சிட்டிங் ராமசாமிக்கு சீட்டில்லை. நமச்சிவாயம் நிற்கிறார். எதிர்புரத்தில் ஆர்.எம். பழனிச்சாமி காங்கிரஸ். தேமுதிக சார்பில் விக்டோரியா நிற்கிறார். இங்கு அதிமுக வெல்லவே அதிக வாய்ப்புள்ளது.

4.அந்தியூர்:
எஸ்.குருசாமி(திமுக)
மு.சுப்ரமணியம் (அதிமுக) - (கட்சி பலம் +)
அதிமுக பலம், திமுக அதற்கடுத்தபடியாக, பாமக செல்வாக்குள்ள தொகுதி. காங்கிரஸ் கடந்த எழு தேர்தல்களில் இங்கு நிற்கவில்லை. சிட்டிங் எம்.எல்.ஏ. பாமக ஆர்.கிருஷ்ணன். போட்டியிடுவது திமுக எஸ்.குருசாமி. அதிமுக தரப்பில் மு.சுப்ரமணியம். குக்கிரமங்கள் என்று சொல்லிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் இருக்கும் கிராமங்களை பார்த்திருக்கிறோம். அந்தியூர் தொகுதியில் உள்ள கிரமங்கள்தான் உண்மையிலேயே குக்கிராமங்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத கிராமங்கள். இங்கு அதிமுக வரவே அதிக வாய்ப்பு.

5.கோபி:
வெங்கிடு மாணிமாறன்(திமுக)
செங்கோட்டையன் (அதிமுக) - (தொகுதியில் செல்வாக்கு, கட்சி பலம் +)
கோபியும் அதிமுக பலமான இடம். முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் தொகுதி. 5 முறை இங்கு தேர்தலில் நின்று இருக்கிறார் செங்கோட்டையன். 4 முறை வெற்றி பெற்று இருக்கிறார். தற்போதும் நிற்கிறார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் மறுவாழ்வு. கடந்த முறை அதிமுக சார்பில் இங்கு நின்று, வென்றவர் எஸ்.எஸ்.ரமணீதரன். அப்பக்கம் திமுக முன்னால் எம்.எல்.ஏ வெங்கிடுவின் மகன் மணிமாறன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்கிறார். ஜெ. பிரச்சாரத்திற்கு போகும்போதெல்லாம் முன்னால் செல்லும் செங்கோட்டையன் தன் தொகுதியில் பிரச்சாரம் சரிவர செய்வதில்லையாம். தேமுதிக சார்பில் நடராஜன் போட்டியிடுகிறார். பணபலமும் பிரச்சாரமும் இத்தொகுதியை அதிமுகவிற்கு கொடுக்கும்.

6.பவானி :
கேசி கருப்பண்ணன் (அதிமுக) - (கட்சி பலம் +)
கே.வீ.இராமநாதன் (பாமக)
பவானி அதிமுக தொகுதி. இங்கு அதிமுகவில் கேசி கருப்பண்ணனும், பாமக சார்பிக் கே.வீ. ராமநாதனும் போட்டியிடுகிறார்கள். அதிமுக கருப்பண்ணந்தான் சிட்டிங் எம்.எல்.ஏ. ஜெ. பிரச்சாரத்திற்கு போகும்போது அவரிடமே இவர் தொகுதிப் பக்கமே வரவில்லையென்று பெண்கள் சொல்ல, பிறகு கருப்பண்ணனின் நிலைமைய நீங்களே கற்பனை பண்ணிக்குங்க. ஆனாலும் தொகுதியில் சில வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களிடம் நல்ல பெயரும் வைத்திருக்கிறார். பாமக இத்தொகுதியில் 1996 ல் தனித்து நின்று 18,768 வாக்குகள் எடுத்திருக்கிறது. இப்போது இதில் நிச்சயம் முன்னேற்றமிருக்கும்., அதிமுக அதிக முறைகள் இங்கு வென்றிருக்கிறதே தவிர, அதே தேர்தலில் இங்கு தனித்து நின்று அதிமுக பெற்ற வாக்குகள் 28,427 தான் மதிமுகவிற்கு பலமில்லாத தொகுதி, விசிக்களுக்கும் அப்படியே. இதை வைத்து கணித்தால் பாமகவிற்கு சாதகம் இருக்கிறது என்றாலும் உறுதியாக சொல்லமுடியவில்லை. எனவே இப்போதைக்கு இத்தொகுதி அதிமுகவிற்கு.

7.ஈரோடு :
என்.கே.கே.பி.ராஜா (திமுக) -(கூட்டணிபலம் +)
இ.ஆர்.சிவக்குமார் (அதிமுக)
ஈரோடும் கரூரைப் போல இரு விவசாய, தொழிற் நகரம். மஞ்சள் விளைச்சலில் முதன்மையான இடம். கைத்தறி, விசைத்தறிகளின் உலகம். ஈரோடு தொகுதியும் சொல்லப்போனால் அதிமுக சர்போர்ட் தொகுதிதான். கடந்த 7 தேர்தல்களில் 5 முறை அதிமுக வந்திருக்கிறது 2 முறை திமுக வந்திருக்கிறது. இம்முறை திமுக வேட்பாளர் என்.கே.கே.பெரியசாமி மகன் ராஜா. கடந்தமுறை பெரியசாமி நின்றார். 1996ல் இப்பகுதி எம்.எல்.ஏ அவர். அதிமுகவில் சிட்டிங் கே.எஸ் தென்னரசுவை விட்டுவிட்டு சிவக்குமார் என்ற வேட்பாளர் நிற்கிறார். எனவே தென்னரசு அமைதியாகிவிட்டார். இவர் ஆதரவாளர்களும் அதே. முன்னால் அமைச்சர் முத்துச்சாமி அதிமுகவிற்கு ஆதரவாக களத்தில் இறங்கி பிச்சாரம் செய்கிறார். அமைச்சர் பி.சி. ராமசாமியும் தற்போது பிரச்சாரக்களத்தில் இறங்கிவிட்டார். இப்பகுதியில் நெசவாளர்களை வாட்டி எடுத்த வரி பிரச்சனையை (சென் -வாட் ) திமுக தீர்த்ததால் நெசவாளர் ஓட்டுக்கள் திமுகவிற்கே. தேமுதிக சார்பில் அக்கட்சியின் கொ.பசெ. சந்திரக்குமார் போட்டியிடுகிறார். கூட்டணி பலமில்லை அதிமுக வேட்பாளருக்கு. திமுக இங்கு கூட்டணி பலத்தோடு உள்ளதால் வெல்லும்.

8.பெருந்துறை :
என். பெரியசாமி (சிபிஐ) - (கூட்டணி பலம் +)
பொன்னுதுறை (அதிமுக)
கடந்த 7 தேர்தல்களில், 6 முறை அதிமுக இத்தொகுதியில் வென்றிருக்கிறது. 1 முறை சிபிஐ வென்றிருக்கிறது பெருந்துறையில். ஆனால் மதிமுக மற்றும் விசிக்களுக்கு போதிய பலமில்லை. தற்போதய எம்.எல்.ஏ, கே.எஸ். பழனிச்சாமி அதிமுக சார்பில் தற்போது சேர்மன் பொன்னுதுரை களமிறக்கப்பட்டுள்ளார். எனவே உட்கட்சி பூசல்களும் அதிகம். 1996 ஆல் நின்று இங்கு வென்ற சிபிஐ என்.பெரியசாமி மீண்டும் இத்தேர்தலில் நிற்கிறார். சிபிஐ க்கு இத்தொகுதியில் நற்பெயரும், நல்ல அறிமுகமும் இருக்கிறது. கூட்டணி பலம் சிபிஐ பெரியசாமி வெற்றி பெறலாம்.

9.வெள்ளக்கோவில்:
எம்.பி.சாமிநாதன் (திமுக) - (கட்சி செல்வாக்கு, கூட்டணி பலம் +)
வி.பி.பெரியசாமி (அதிமுக)
திமுகவும், அதிமுகவும் சமமான பலம் பெற்ற வெள்ளக்கோவிலில்,இம்முறை, திமுகவும், அதிமுகவும் மோதுகிறது. திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசன், அதிமுகவின் துரை ராமசாமி போன்ற சீனியர்கள் நின்ற தொகுதி. திமுக வேட்பாளர் எம்.பி.சீனிவாசன் கடந்த 2 முறை இங்கு போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். இம்முறையும் அவரையே களமிறக்கியுள்ளது திமுக. தொகுதியில் மிக நல்ல பெஉயர் இவருக்கு. மத்திய அமைச்சர் சுப்புலட்சுமியின் செல்வாக்கும் திமுகவிற்கு உதவும். கடந்த முறை அதிமுக வி.பி பெரியசாமி போட்டியிட்ட தொகுதி இப்போது மதிமுக வசம். மதிமுக மாசெ கணேசமூர்த்தி வேட்பாளராக போட்டியிடுகிறார். போட்டி கடினம். கூட்டணி பலம், கட்சி செல்வாக்கு அனைத்தையும் வைத்துப் பார்த்தால் எம்.பி.சீனிவாசனுக்கு வாய்ப்புள்ளது.

10.காங்கேயம்:
விடியல் சேகர் (காங்கிரஸ்) - (கூட்டணி பலம் +)
என்.எம்.எஸ்.பழனிச்சாமி (அதிமுக)
அதிமுகவின் பலமான தொகுதி, 1991ல் ஜெ. போட்டியிட்டு வென்ற தொகுதி. சிட்டிங் செல்வி இல்லை.,இம்முறை என்.எம்.எஸ்.பழனிச்சாமி அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். திமுக இம்முறை தொகுதியை காங்கிரஸ்க்கு விட்டுக் கொடுத்திருக்கிறது. இப்பகுதி செல்வாக்குள்ள திமுக பிரமுகர் ராஜ்குமார் மன்றாடியார். இம்முறை விடியல் சேகர் காங்கிரஸ் சார்பில் களமிறங்குகிறார். விடியல் சேகர் ஆயிரம்விளக்கு தொகுதியில் கடந்தமுறை ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றவர். இரு வேட்பாளர்களுமே இப்பகுதியில் அதிகம் உள்ள கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகம் சார்ந்தவர்கள். அரசு கல்லூரி காங்கேயத்தில் வேண்டும் என்பது தொகுதி மக்களின் கனவு. குடிநீர்ப் பிரச்சனை உள்ள தொகுதி (எந்தத் தொகுதில இது இல்லாம இருக்குங்கிறிங்களா அதுவும் சரித்தான்!). விவசாயம், நெசவு இரண்டும் செழித்திருக்கும் தொகுதி. இங்கு மதிமுக பலமானதல்ல. மற்றும் பழனிச்சாமியும் தொகுதிக்குப் புதியவர். கூட்டணி பலம், கட்சி பலம் எல்லாம் சேர்ந்து இத் தொகுதியில் காங்கிரஸ் வர வாய்ப்புள்ளது.
பெரியார் பெரியார் மாவட்டம் முழுக்க அதிமுகவிற்கே. ஆதரவு இருக்கிறது. ஆனால் கடந்த ஆட்சியில் வந்த சென் - வாட் பூதம், கஞ்சித் தொட்டி எல்லாம் கணக்கில் கொண்டே தேர்தல் தீர்ப்பு அமையும். நெசவாளர்களுக்கு பல சலுகைகள் வழங்குகிறது கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில். திமுக நாடாளுமன்றத்திலிருந்து வென்று வந்த பிறகு அது வாக்குறுதி அளித்தபடி சென் - வாட் வரியை முழுதாக நீக்க மத்திய அரசை வலியுறுத்தி அதை செயல்படுத்தியது.
ஈரோடு நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
தேனி மாவட்டம்
நாகை மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
தஞ்சை மாவட்டம்
கரூர் மாவட்டம்
தருமபுரி மாவட்டம்

தேர்தல் அலசல் - 2006 -சேலம்


சேலம் : மொத்தம் 11 தொகுதிகள்.

1.மேட்டூர் 2.தாரமங்கலம் 3.எடப்பாடி 4.வீரபாண்டி 5.ஒமலூர் 6. ஏற்காடு 7.சேலம்-1 8.சேலம்-2 9.பனைமரத்துப்பட்டி 10.ஆத்தூர் 11.தலைவாசல்.

1.மேட்டூர் :
ஜி.கே.மணி (பாமக) - ( கூட்டணி பலம், கட்சி செல்வாக்கு +)
கே,கந்தச்சமி (அதிமுக)

அதிமுக கை சற்று ஓங்கியுள்ள தொகுதி. சிட்டிங் எஸ்.சுந்தராம்பாளுக்கு சீட்டில்லை. கே.கந்தசாமி அதிமுக சார்பில் நிற்கிறார். பாமக சார்பில் ஜி.கே.மணி. எனவே சுறுசுறுப்பாக இருக்கிறதாம் தொகுதி. கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு 1996ல் வென்ற பி.கோபாலுக்கு கிடைக்கும் என நினைத்து ஏமாந்தனவாம் உடன்பிறப்புகள். பாமகவிலேயே சரியான ஒத்துழைப்பு இல்லையாம். பிறகு எல்லாவற்றையும் சரிப்படுத்தி இப்போது உற்சாகமாக ஓடிக்கொண்டிருக்கின்றனாரம். அதிமுக வேட்பாளர் கந்தசாமியும் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறாராம். மேட்டூர் மணியின் சொந்த ஊர் என்பதாலும், கூட்டணி பலத்தாலும், கட்சி செல்வாக்காலும் ஜி.கே.மணி வெல்லலாம்.

2.தாரமங்கலம்:
பி.கண்ணன் (பாமக)
தாமரைக்கண்ணன் (மதிமுக)
கோவிந்தன் (சுயேட்சை) - (சொந்த செல்வாக்கு ++)
இத் தொகுதியில் இரண்டு கூட்டணிகட்சிகள் மோதுகின்றன. சிட்டிங் அதிமுக காமராஜ். மதிமுகவிற்கு தொகுதி கிடைத்திருகிறது. கடந்தமுறை இங்கு திமுக சார்பில் நின்றவர் அம்மாசி. இம்முறை பாமக களமிறங்குகிறது. மூன்றாவது பெரிய கட்சி எதுன்னு பார்க்க இப்படியோ?. மதிமுக சார்பில் தாமரைக்கண்ணன் பாமக சார்பில் பி.கண்ணன். ஆனா பாருங்க இரு கண்ணன்களை விட ஒரு சுயேட்சை வேட்பாளர் கோவிந்தன் இங்கு முன்னனியில் உள்ளார். பாமகவைச் சேர்ந்தவர் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். பாமகவினர் ஆதரவு இவருக்கு இருக்கிறது. இவர் 1996ல் பாமகவில் நின்று வெற்றி பெற்றவர். இங்கு சுயேட்சை வேட்பாளர் கோவிந்தனே வெல்வார்.

3.எடப்பாடி:
காவேரி(பாமக) - (கட்சி செல்வாக்கு, கூட்டணி பலம் +)
எடப்பாடி பழனிச்சாமி (அதிமுக)
எடப்பாடி பலமான பாமக தொகுதி. கடந்த இருமுறைகளாக வென்ற சிட்டிங் பாமக ஐ.கணேசன் இம்முறை களத்தில் இல்லை. பாமக சார்பில் காவேரி நிற்கிறார். இவரை எதிர்த்து அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி நிற்கிறார். மதிமுகவிற்கு பலமில்லாத நிலையில் அதிமுக அதன் வாக்கு வங்கியை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள இயலும். எனவே கூட்டணி பலத்துடன் உள்ள பாமக காவேரி வெல்லலாம்.

4.வீரபாண்டி:
வீ.ராஜேந்திரன் (திமுக) - (கட்சிபலம், கூட்டணி பலம் +)
விஜயலட்சுமி பழனிச்சாமி (அதிமுக)
வீரபாண்டி ஆறுமுகத்தின் இடம். இங்கு அவர் மகன் ராஜேந்திரன் திமுக சார்பில் நிற்கிறார். அதிமுக சார்பில் சிட்டிங் எஸ்.கே செல்வம். விஜயலட்சுமி பழனிச்சாமி இம்முறை அதிமுக சார்பாக போட்டியிடுகிறார். மதிமுகவிற்கு சொல்வாக்கில்லாத பகுதி. எனவே அதிமுக வாக்கு வங்கியை மட்டுமே நம்பி இருக்கவேண்டிய நிலை. ராஜேந்திரனுக்கு திமுக பலம், சொந்த தொகுதி, தந்தை செல்வாக்கு (இவரே 'அப்ப' ஆக்டிவ் பாலிடிக்ஸ்ல இருந்தவர்தான்)., பாமக செல்வாக்கு, காங்கிரஸ் பலம் இத்தனை இருக்கிறது. வீரபாண்டி குடுமபத்திலிருந்து சட்ட மன்றத்திற்கு இருவர். திமுக வெல்லும் இங்கு.

5.ஒமலூர் :
அ. தமிழரசு(பாமக)-( கூட்டணி பலம், கட்சி செல்வாக்கு +)
பி.கிருஷ்ணனுக்கு (அதிமுக)
சிட்டிங் செம்மலை, சீட் பி.கிருஷ்ணனுக்கு அதிமுகவில். எதிரில் சென்ற முறை போட்டி இரா.ராஜேந்திரன். இம்முறை பாமக அ. தமிழரசு. பாமக,திமுக,காங்கிரஸ், சிபிஐ போன்ற எல்லாக் கட்சிகளுமே கணிசமான செல்வாக்கு கொண்ட இடம். இம்முறை தமிழரசு வெல்லவே வாய்ப்புள்ளது.


6. ஏற்காடு (தனி):
சி.தமிழ்ச்செல்வன் (திமுக) -( கூட்டணி பலம் ++)
அலமேலு(அதிமுக)

ஏற்காடு தனித்தொகுதி. அதிமுகவில் சிட்டிங். இளைய கண்ணுக்கு சீட் கிடைக்காமல் புத்முகம் அலமேலுக்கு கிடைத்திருக்கிறது. லோக்கல் அதிமுக சர்போர்ட் இல்லாமல் அல்லல் படுகிறார். திமுக சார்பில் புழுதிக்குட்டை பஞ்சாயத்துதலைவர் தமிழ்ச் செல்வன் போட்டியிடுகிறார். பாமக மிகவும் பலம் பெற்றிருக்கிறதிங்கு. தொகுதியில் நிறைய மலை கிராமங்கள் இருப்பதால், அத்தனை ஒட்டுக்களும் திமுகவிற்கு சாதகமாகவே விழும் தேமுதிக சார்பில் ராமகிருஷ்ணன் மலை மக்களின் வாக்குகளை இவர் பிரிக்கலாம். எனினும் கூட்டணி பலம், தேர்தல் வாக்குறுதிகள் கொண்டு தமிழ்ச்செல்வன் வெல்ல வாய்ப்பு அதிகமிருக்கிறது.

7.சேலம்-1 ;
ரவிச்சந்திரன் (அதிமுக)
எம்.ஆர்.சுரேஷ் (காங்கிரஸ்) - (கூட்டணி பலம் +)
சிட்டிங் வெங்கடசலத்திற்கு சீட்டில்லாத நிலையில் அதிமுக ரவிச்சந்திரன் நிற்கிறார். காங்கிரஸ் சார்பில் சுரேஷ். காங்கிரஸ் வெல்ல வாய்ப்பு உள்ளது.

8.சேலம் 2 :
வீர.பாண்டி ஆறுமுகம் (திமுக) -(சொந்த செல்வாக்கு, கூட்டணி பலம் குறிப்பாக பா.ம.க +)
சுரேஷ் குமார் (அதிமுக)

முன்னால் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தொகுதி. பிரச்சாரம் படு வேகத்தில் சென்று முடிந்ததாம். இளைஞர் படையொன்றை தயாரித்து வீடுவீடாக தேர்தல் அறிக்கைகளை வினியோகித்து பிரச்சாரம் செய்து கலக்குகிறதாம் திமுக. அதிமுக சார்பில் மேயர். சுரேஷ் களமிறக்கப்பட்டிருக்கிறார். சேலம் 2 வீரபாண்டி ஆறுமுகத்திற்கு.

9.பனைமரத்துப்பட்டி:
ராஜெந்திரன் (திமுக) - (கூட்டணி பலம் +)

ஆர். இளங்கோவன் (அதிமுக)
திமுகவிற்கு கிடைக்கும் இத் தொகுதி.

10.ஆத்தூர் :
ஆர் சுந்தரம் (காங்கிரஸ்) - (கூட்டணி பலம் +)
ஏ.கே முருகேசன் (அதிமுக)
அதிமுக மஞ்சினி ஏ.கே முருகேசன் மீண்டும் நிற்கிறார். காங்கிரஸ் சார்பில் ஆர் சுந்தரம் போட்டியிடுகிறார் இங்கு காங்கிரஸ்க்கு நல்ல செல்வாக்கு உள்ளது, பாமகவிற்கும்தான் எனவே காங்கிரஸ்க்கு இத்தொகுதி கிடைக்கவே அதிக வாய்ப்பு.

11.தலைவாசல்(தனி):
கு.சின்னத்துரை(திமுக) - (கூட்டணி பலம் +)
பா.இளங்கோவன்(அதிமுக)
தலைவாசலைப் போய் கடைசியில் போட்டுவிட்டேன். சரி., தலைவாசல் காங்கிரஸ் பலமுள்ள தொகுதி. அதிமுக சிட்டிங் வி.அழகம்மாள். நிற்பது பா.இளங்கோவன். சென்ற முறை திமுகவில் நின்றது எம். பாண்டியராஜன். இம்முறை கு.சின்னத்துரை. இத் தொகுதியில் கு.சின்னதுரைக்கு ஆதரவு அதிகமாக உள்ளது.

தேர்தல் அலசல் - 2006 -கரூர்


யாருக்கு கரூர்?
கரூர் - மொத்தம் 6 தொகுதிகள்.

1.கிருஷ்ணராயபுரம் 2.கரூர் 3.தொட்டியம் 4.அரவகுறிச்சி 5.குளித்தலை 6. மருங்காபுரி

1.கிருஷ்ணராயபுரம் :
பி.காமராஜ் (திமுக) - (கூட்டணி பலம் +)
சசிகலா ரவி (அதிமுக) - சிட்டிங்

கிருஷ்ணராயபுரம் தொகுதி, அதிமுக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளின் பலமான தொகுதி. அதிமுக எம்.எல்.ஏ சசிகலாவே மீண்டும் போட்டியிடுகிறார். கடந்தமுறை திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.பெரியசாமிக்கு இம்முறை சீட் இல்லை. அதிமுக எம்.எல்.ஏ பெரிதாக ஒன்றையும் சாதித்துவிடவில்லையானாலும். வெள்ள நிவரண தொகைகளை சமமாக பங்கிட்டு கொடுத்திருக்கிறார். இவர் அறிவிக்கப்பட்டபோது முகம் சுளித்தவர்கள் இப்போது ஒன்றாக இணைந்து பரபரப்பாக அதிமுகவிற்கு வேறுபாடு மறந்து வாக்கு கேட்கிறார்கள். திமுக சார்பில் புதுமுகம் காமராஜ் போட்டியிடுகிறார். கூட்டணி செல்வாக்கும், விவசாயிகள் நிறைந்த இத் தொகுதியில் விவசாய சலுகைகளும் இவருக்கு கை கொடுக்கும். தேமுதிக சார்பில் இங்கு முருகன் என்பவர் நிற்கிறார். தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் கட்சி சார்பில் இங்கு போட்டியிட்ட பொன்னுசாமி என்பவர் கொலைசெய்யப்பட்டார். கிருஷ்ணராயபுரத்தில் திமுக வெல்லும்.
2.கரூர்:
வாசுகி முருகேசன் (திமுக) - (சொந்த செல்வாக்கு, கட்சி பலம் ++)
வி.செந்தில் பாலாஜி(அதிமுக)
திமுக, அதிமுக விடம் மாறி, மாறி இருந்த தொகுதி தற்போது காங்கிரஸ் வசம் வரும் தேர்தலில் யார் வசம்?. திமுக சார்பில் 3 முறை இதே தொகுதியில் போட்டியிட்ட வாசுகி முருகேசன் 1 முறை வென்றிருக்கிறார். அவரேதான் இம்முறையும் போட்டியிடுகிறார். காங்கிரஸ்க்கு இத்தொகுதி இல்லை. இங்கு அதிமுகவில் எப்போதும் போட்டியிடும் சின்னச்சாமி இல்லாமல் வி.செந்தில் பாலாஜி என்ற வேட்பாளர் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ரவி என்பவர் நிற்கிறார். அமரவதியாற்றுப் பாலம் போட்டதை வைத்து ஓட்டுக் கேட்கிறது அதிமுக. இருப்பினும் எம்.பி. பழனிச்சாமிக்கு தொகுதியில் உள்ள நல்ல பெயரும் வாசுகிக்கு உதவும். திமுகவிற்கு செல்வாக்குள்ள தொகுதி இது. வாசுகிக்கு 1996 ஆம் ஆண்டு மீண்டும் திரும்பலாம்.

3.தொட்டியம் :
ம.ராஜசேகரன் (காங்கிரஸ்) - கூட்டணி பலம் +
ஆர்.நடராஜன் (மதிமுக)

இத்தொகுதியில் காங்கிரஸால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்பி.சி.செல்வராஜ். திடிரென இவரை மாற்றி, மாசெ இராஜசேகரை வேட்பாளராக அறிவித்தது கட்சி. அவசர, அவசரமாக செல்வராஜ் சென்று மனுதாக்கல் செய்த செல்வராஜிடம், உங்கள் கட்சியின் ஒப்புதல் கடிதம் இல்லாததால் சுயேட்சை வேட்பாளர் ஆக இந்த மனு ஏற்றுக் கொள்ளப்படும் என்று சொல்ல., திடுகிட்ட செல்வராஜ் சோனியாவிற்கு தெரியாமல் என்னை மாற்றி விட்டார்கள என புலம்ப, ம.ராஜசேகரன் இப்போது காங்கிரஸ் சார்பில் மகிழ்ச்சியுடன் நின்றார். திமுக சார்பில் இதே தொகுதியில் 4 முறை போட்டியிட்டு, இரண்டு முறை வென்ற கண்ணையன் மற்றும் அதிருப்தி கோஷ்டிகளால் இராஜசேகரும் இப்போது கலங்கத்தில். இருந்தாலும் மதிமுகவிற்கென தனிப்பட்ட செல்வாக்கில்லாத தொகுதி. அது அதிமுக பலத்தை மட்டுமே நம்ப வேண்டும். கூட்டணி பலமுள்ள கை வேட்பாளர் வெல்வார்.

4.அரவக்குறிச்சி :
கலீலூர்ரஹ்மான் முஸ்லீம்லீக்(திமுக) -(கூட்டணி பலம், முஸ்லீம் மக்கள் வாக்கு வங்கி +)
மொஞ்சனுர் பி.ராமசாமி(மதிமுக)

இத்தொகுதியில் மதிமுகவும், திமுகவும் (முஸ்லீம் லீக்) மோதுகின்றன. மதிமுக சார்பில் போட்டியிடும் மொஞ்சனூர் ராமசாமி, கடந்த 7 தேர்தல்களில் 6 முறை (திமுக, மதிமுக சார்பில்) போட்டியிட்டு 1 முறை வென்று இருக்கிறார். மதிமுக இம்முறையும் இந்த சீனீயர் தலைவரை களமிறக்கி இருக்கிறது. மதிமுக தனித்து நின்று போனமுறை அவர் பெற்ற வாக்குகள் 16,954. இவரை எதிர்த்து நிற்கும் முஸ்லீம் லீக் (திமுக சின்னத்தில்) வேட்பாளர் கலிலூர் ரஹ்மான் முஸ்லீம் மக்களின் ஓட்டை அள்ளலாம். கடந்தமுறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற லியாதீன் சையீத் இம்முறை சீட் கிடைக்கவில்லை என்கிற மனவருத்தில் இருக்கிறார். இவர் பிரச்சாரத்தில் முழுவீச்சில் ஈடுபட்டால் முஸ்லீம் வாக்குகளை கணிசமாக அதிமுக பெறலாம். தேமுதிக சார்பில் பஷீர் அகமது நிற்கிறார். ஓட்டைப் பிரிப்பார். எனினும் கூட்டணி செல்வாக்கால் முஸ்லீம் லீக் வேட்பாளர் இத் தொகுதியில் வெல்லலாம்.

5.குளித்தலை :
ரா.மாணிக்கம்(திமுக) -கூட்டணி பலம் +
ஏ.பாப்பாசுந்தரம் (அதிமுக)

கலைஞர் முதன்முதலில் தேர்தலில் நின்ற தொகுதி, இங்கு அதிமுக சார்பில் நிற்கும் பாப்பா சுந்தரம் 4 முறை போட்டியிட்டு 3 முறை வென்ற தொகுதி. சிட்டிங் எம்.எல்.ஏவும் அவர்தான். ஆனால் மக்கள் இம்முறை அவர் மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். அரசு கல்லூரி, கூட்டு குடிநீர்த் திட்டம், மணப்பாறை அரசு மருத்துவனை குளித்தலையில் பேருந்துநிலையம் மற்றும் நெசவாலை அமைப்பேன் எனக் கூறி ஓட்டுவாங்கிவிட்டு, இதில் ஒன்றைக் கூட செய்ய முனையவில்லை. அரசு அறிவித்திருந்த சில நலத்திட்டங்கள் நிறைவேறின. மீனாச்சி டீச்சர் விவகாரம் வேறு பாப்பா சுந்தரத்திற்கு பகையாய் இருக்கிறது. இவர் கூட்டணி சகிதம் பிரச்சாரத்திற்கு போகும்போது நிறைய கிராமங்களில் அவரை உள்ளே விட மறுத்தனர் மக்கள். திமுக சார்பில் நகரச்செயளாலர் மாணிக்கம் நிற்கிறார். இவர் முத்துராஜா சமூகத்தைச் சேர்ந்தவர் எனவே அந்த வாக்கு வங்கியை கைப்பற்றக்கூடும். (பாப்பா சுந்தரத்திற்கும் ரெட்டியார் சமூக வாக்கு வங்கி உள்ளது.) காங்கிரஸ், கம்யூனிசத் தோழர்களுடன் இணைந்து சுறுசுறுப்பாக இருக்கிறது பிரச்சாரம். தேமுதிக சார்பில் விஸ்வநாதன் என்பவர் போட்டியிடுகிறார். பாப்பாவின் மீதான அதிருப்தி, பிரச்சார பலம், கூட்டணி பலம், உட்கட்சி ஒத்துழைப்பு, தேர்தல் அறிக்கை அனைத்தும் சேர்ந்து மாணிக்கத்தை வெல்ல வைக்கும். .

6. மருங்காபுரி:
ரெக்கையா மாலிக் /சல்மா (திமுக)
செ.சின்னசாமி (அதிமுக) - (கட்சி செல்வாக்கு +)
மருங்காபுரி அதிமுகவின் தொகுதி. திமுகவிற்கு செல்வாக்கு இல்லாத தொகுதி இங்கு 1996 ல் மட்டும்தான் புலவர். செங்குட்டுவன் போட்டியிட்டு வென்றார். அதுவரை திமுக வந்ததில்லை. மீண்டும் 2001ல் அதிமுகவிற்கு சென்றுவிட்டது. பொன்னம்பட்டி தலைவி ரெக்கையாமாலீக் என்ற கவிஞர் சல்மா நிற்கிறார். இவருக்கு நன்கு அறிமுகமான தொகுதி இது. மற்றும் இலங்காகுறிச்சி, துவரங்குறிச்சி போன்ற இடங்களில் இருக்கும் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் விழலாம். காங்கிரஸ் ம் உடன் இருக்கிறது. அதிமுக சின்னச்சாமி பிரச்சாரம் பண்ணாமலேயே வெல்லலாம் இத்தொகுதியில். எந்த புதுமுகமும் இங்கு அதிமுக சார்பில் நின்றால் வெல்லும். கடந்த முறை வென்றவர் செல்லையா. முன்னால் கல்வி அமைச்சர் பொன்னுசாமி இன்றும் செல்வாக்குடன் இருக்கும் தொகுதி. ஆனால் 1996 ல் நின்ற போது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து நின்றதால் புலவர் செங்குட்டுவன் வெல்ல முடிந்தது. இப்போதும் கூட்டணிதான். சல்மா நன்றாக பிரச்சாரம் செய்கிறார். அவர் பெண் என்பதாலும், முஸ்லீம் வாக்கு வங்கியுள்ளதென்பதாலும், கூட்டணியாலும் இம்முறை திமுக வெல்ல வாய்ப்புள்ளது எனக் கணிக்கலாம் தேமுதிக வேட்பாளர் ஜமால்முகமது முஸ்லீம் வாக்குகளை பிரிப்பார். எனவே சின்னச்சாமிக்கு வாய்ப்புள்ளது.
கரூர் மாவட்டம் இயற்கையும், அறிவியலும் இணைந்து விளங்கும் மாவட்டம். காகித ஆலை ,சிமெண்ட் பாக்டரி, நூற்பாலைகள்,சர்க்கரை ஆலை, பேருந்து கட்டுமானச்சாலை, என தொழிற்சாலைகளும், வாழை, மஞ்சள், வெற்றிலை, வெங்காயம் என விவசாயமும் சிறந்து விளங்கும் மாவட்டம். இது பொதுவாக திமுக மாவட்டம். இப்போவோ அப்பவோன்னு உயிரைக் கையில பிடிச்சுகிட்டுதான் அமராவதி ஆத்து பாலத்த ஒரு காலத்துல கடக்கணும். அதிலயும் பாலம் முழுவதும் மக்கள் சலிக்காம போய்கொண்டிருப்பார்கள். இப்போது அப்பாலம் புதுபிக்கப்பட்டது., ஊர் நடுவில் அதிமுகவிற்கு பெரிய பிரச்சார மேடையாக இருக்கிறது. மழைநீர் சேமிப்புத்திட்டம் முறையாக செய்யப்பட்டு, பயன்பெறும் மாவட்டம். கரூர் மட்டும் இப்படி இருக்கிறதா?., பக்கத்தில் உள்ள குளித்தலைக்கோ பேருந்துகள் நிற்க நிலையமில்லை. அங்கிருந்து ஆரம்பித்து வரும் கிராமங்கள்., அரவக்குறிச்சியை சுற்றியுள்ள ஊர்கள், கரூர் - மணப்பாறை நெடுஞ்சாலை செல்லும் வழியிலுள்ள கிராமங்கள் ஆகியவைகளில் அடிப்படை வசதியும், போக்குவரத்து வசதியும் இல்லாத ஊர்கள் அதிகம் உள்ளன. விவசாயத்திற்கும், சிறு தொழிழுக்கும் ஊக்கம் தருவோர் இங்கு வெல்வர்.
கரூர் நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
தேனி மாவட்டம்
நாகை மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
தஞ்சை மாவட்டம்

Wednesday, May 03, 2006

தேர்தல் அலசல் - 2006 -திருச்சி


திருச்சியில் வெல்லப் போவது யார்?
திருச்சி : மொத்தத் தொகுதிகள் 7.

1.உப்பிலயபுரம் 2.திருவெறும்பூர் 3. லால்குடி 4.திருவரங்கம் 5.முசிறி 6. திருச்சி-ஒன்று 7.திருச்சி - 2.

1.உப்பிலியபுரம் :
ரா.ராணி(திமுக)
பெ.முத்துசாமி (அதிமுக) - (கட்சி பலம் +)

அதிமுகவின் பலமான தொகுதி. உப்பிலியபுரம் சரோஜா., சிட்டிங் எம்.எல்.எ. தற்போது வாய்ப்பு முத்துசாமிக்கு வழ்ங்கப்பட்டிருக்கிறது. ராணி திமுக சார்பில் நிற்கிறார். சரோஜா அப்படியொன்றும் கொடுத்த வாக்குதிகளையெல்லாம் நிறைவேற்றி விடவில்லைதான். துறையூர் போன்ற இடங்களில் திமுகவிற்கு வாக்கு வங்கி இருந்தாலும். இலைக்குத்தான் தொகுதியின் பெரும்பான்மையான ஓட்டு. உப்பிலியபுரத்தில் முத்துசாமிக்கு வாய்ப்பிருக்கிறது.

2.திருவெறும்பூர்:
கே.என் சேகரன்(திமுக) - (கூட்டணி பலம்++)
சிரிதர் வாண்டையார் (மூமுக)
திருவெறும்பூர் என்றாலே பெல் தொழிற்சாலை நினைவுக்கு வரும். அதிக வாக்களர்களைக் கொண்ட தொகுதி. இத்தொகுதியில் முக்குலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் அடுத்து ஆதிமக்கள். இங்கு அதிமுக சார்பில் மூவேந்தர் முன்னேற்றக் கழக வேட்பாளர் சிரிதர் வாண்டையாரும், திமுக சார்பில் கே.என் சேகரனும் நிற்கிறார்கள். இருவருமே முக்குலத்தைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும் விசிக்கள் உதவியுடன் ஆதிமக்கள் வாக்குகளை ஆதாரமாகக் கொண்டு பிரச்சாரம் செய்யலாம் என நினைத்தால் வாண்டையாரை ஆதரிக்க விசிக்களுக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. மதிமுக அவ்வளவு செல்வாக்கில்லாத தொகுதி இந்நிலையில் வெறும் அதிமுக வாக்கு வங்கியை மட்டும் நம்பிக் கொண்டிருக்கிறார். உள்ளூர் வேட்பாளர் இல்லை இவர் என்பதும் சறுக்கல். தேமுதிக சார்பில் அக்கட்சியில் மாவட்டத் தலைவர் தங்கமணி நிற்கிறார். இவர் ஆதிமக்கள் வாக்குகளைப் கணிசமாக பிரிக்கக்கூடும். இரண்டாவது முறையாக இத்தொகுதியில் கே.என் சேகரன் நிற்கிறார். சிட்டிங்கும் இவர்தான். தொகுதிக்கு பல நல்லவைகளைச் செய்திருக்கிறார். ஜான்பாண்டியன் ஆதரவும் இவருக்கு உள்ளது. கூட்டணி பலத்துடன் தொகுதியை மீண்டும் வெல்வார் சேகரன்.
3. லால்குடி :
ராணி(திமுக) - (கட்சி பலம் +)
பெ.முத்துச்சாமி (அதிமுக)

கே.என்.நேருவின் தொகுதி. கடந்த 4 முறை போட்டியிட்டு இரு முறை வென்றிருக்கிறார். தற்போது அவர் திருச்சி 2 ல் நிற்பதால். இங்கு திமுக ராணி நிற்கிறார். அதிமுக சார்பிலோ சிட்டிங் எம்.எஸ்பாலன் இல்லாது பெ.முத்துசாமி என்பவர் நிற்கிறார். இவ்விருமே உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தேமுதிக சார்பில் எஸ்.ராமு என்பவர் போட்டியிடுகிறார். திமுக பாலம், கூட்டணி கட்சிகள் பலம் இரண்டையும் கணக்கில் கொண்டால் திமுக வெல்லலாம்..

4.திருவரங்கம் :
ஜெரொம் அரோக்கியராஜ் (காங்கிரஸ்) - (கூட்டணி பலம் +)
எம்.பரஞ்ஜோதி (அதிமுக)

திருவரங்கம் தொகுதியில் சிட்டிங், முன்னால் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியன், சீட்டில்லாததால் செழிப்பில்லாமல் இருக்கிறார். அதற்கு முந்திய தேர்தலில் (1996) அதிமுக சார்பில் போட்டியிட்டு தோற்ற பரஞ்ஜோதியை மீண்டும் இம்முறை களமிறக்கியிருக்கிறது அதிமுக. இருந்தாலும் எம்.எல்.ஏ பின் தொடர வீடு வீடாக வாக்கு கேக்கிறார் பரஞ்ஜோதி. காங்கிரஸ் ஜெரோம் ஆரோக்கியராஜ் பணபலமுள்ளவர். ஆனால் இத் தொகுதிக்கு அறிமுகமில்லாதவர். திருச்சிகாரர். அக்கிரகார வாக்கு வங்கியை கைப்பற்ற இருவருமே முனைப்புடன் உள்ளனர். ஜெரோம்க்கு சிறுபான்மையினர் ஆதரவும் கிடைக்கும். திருவரங்க ஜீயர் ஆசியுடன் இருவரும் பிரச்சாரகளமிறங்கினாலும், இங்கு மக்கள் கவனிப்பது பா.ஜ.க வில் யார் நிற்கிறார் என்பது. இவர்களை ஏமாற்றாமல் அக்கட்சி சார்பில் நிற்கும் பார்த்திபன் தொகுதியை சுற்றி, சுற்றி வருகிறார். இவர் ஓட்டுக்களை பிரிப்பார். கூட்டணியுடன் நின்ற போது அதிக ஓட்டுகள் இத்தொகுதியில் பெற்ற பாஜக இப்போது தனித்து நிற்கிறது, பரஞ்ஜோதி ஓட்டுக்களை பிரிக்கவே அதிக வாய்ப்பு..அவ்வளவு பாதிப்பிருக்காது, தேமுதிகவில் ரமேஷ்ம் களத்தில். இப்படியாக கலை கட்டியிருக்கிறது திருவரங்கம். இருந்தாலும் அதிமுக அதிருப்தி கோஷ்டிகள், கூட்டணி பலம், சிறுபான்மையோர் வாக்குகள் வைத்துப் பார்க்கும் போது இங்கு ஜெரோமுக்கே வாய்ப்பு.

5.முசிறி :
எம்.செல்வராஜ்(திமுக) - (கூட்டணி பலம் + )
புனாட்சி(அதிமுக)

அதிமுகவின் மிக பலமான தொகுதி முசிறி. கடந்தமுறை மண்ணச்ச நல்லூரைச் சேர்ந்த சி.மல்லிகா அதிமுக சார்பில் இத் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது கவுன்சிலர் பூனாட்சி நிற்கிறார். தொகுதிக்கு நன்கு அறிமுகமான பூனாட்சியின் ஒரேகுறை மல்லிகா வெள்ள நிவாரணத்தை சரியாக பிரித்துக் கொடுக்காததுதான். அவர் ஊருக்கே அனைத்தையும் கொடுத்துவிட்டார் என குமுறுகிறர்கள் ரரக்கள். உஷாராக எம்.எல்.ஏ இல்லாமல்தான் பிரச்சாரத்திற்கு செல்கிறார். சூரியன் பக்கமிருக்கும் செல்வராஜோ இதே தொகுதியில் இருமுறை போட்டியிட்டவர் இப்போதும் நிற்கிறார். இவ்விரு வேட்பாளர்களுமே முத்துராஜா சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான். ஆனால் செல்வராஜூக்குத்தான் அதிக செல்வாக்கு இருக்கிறது. கட்சியில் மாறுபாடு கொண்டிருந்தவர்களை அரவணைத்து சுமூகமாக தேர்தல் பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறார் செல்வராஜ். தேமுதிகவில் ஒசெ ஜோதிக் கண்ணனின் உறவினர் ராஜலிங்கம் நிற்கிறார். அதிமுகவின் கோட்டையான முசிறியில், கூட்டணி பலம் திமுக செல்வராஜை வெல்ல வைக்கும்.

6. திருச்சி-ஒன்று
அன்பில். பெரியசாமி (திமுக) - (கட்சி பலம் +)
அ.மலர்மன்னன் (மதிமுக)

திமுகவின் கோட்டை, முதலில் இங்கு திமுக சார்பில் மலர்மன்னன் நின்றபோது 2 முறை நின்று, இரு முறையும் வென்றுள்ளார். இம்முறை மதிமுக சார்பில் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கடந்த இருமுறை வென்ற சிட்டிங் பரணிகுமாருக்கு மறுக்கப்பட்டு திருச்சி 2 ல் எப்போது நிற்கும் அன்பில் தர்மலிங்கத்தின் வாரிசு அன்பில் பெரியசாமி இம்முறை திருச்சி 1 ல் போட்டியிடுகிறார். லால்குடியில் எப்போதும் நிற்கும் மாவட்டச் செயலாருக்கு திருச்சி 2 வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் பலமும், திமுகவின் பலமும் நிறையவே உள்ளது. கண்ணை முடிகிட்டு சொல்லலாம் இங்கு திமுக வெல்லும்.

7.திருச்சி -இரண்டு. :
கே.என். நேரு (திமுக) - (கட்சி பலம், சொந்த செல்வாக்கு ++)
மரியம்பிச்சை (அதிமுக)

திருச்சி ரெண்டு திமுகவிற்கு பலமுள்ள தொகுதி அரசு ஊழியர்கள் நிறைந்த தொகுதி., சிறுபான்மையின மக்களின் வாக்குகள் கணிசமாக கொண்ட தொகுதி. ஆனா இந்த ஓட்டுக்களை பிரிக்கறதுக்குன்னே ஒவ்வொரு முறையும் ஒரு சுயேட்சை வேட்பாளர் போட்டியிடுவார். இம்முறை ஏ.ராஜா முகமது. என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். மரியம்பிச்சை அதிமுகவும் செல்வாக்குள்ள வேட்பாளர்தான் எனினும்., கே.என் நேரு பலத்த செல்வாக்குள்ளவர். கடந்த முறை கூட்டணியோடு இங்கு நின்ற காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வென்றது திமுக. கே.என். நேரு திருச்சி இரண்டில் வெல்வார்.
திருச்சி நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
தேனி மாவட்டம்
நாகை மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
தஞ்சை மாவட்டம்
கரூர் மாவட்டம்
தருமபுரி மாவட்டம்
ஈரோடு மாவட்டம்
நீலகிரி மாவட்டம்