Saturday, December 31, 2005

**விடை கொடு., விரும்பி வா**2005 ஆம் ஆண்டு பிறந்த போது., புத்தாண்டு மகிழ்ச்சி அறவே இல்லை. சுனாமியின் சோகமே இருந்தது. போன ஆண்டிற்கு தண்ணீர் தாகம் மிக அதிகம் அதிகம் போல., சுனாமிக்குப் பிறகு ஜூன் மாதத்தில் குஜராத்தில் 35 பேர்களை பலி கொண்டு ஆரம்பித்தது மழை வெள்ளம்., கடைசி மாதம் வரை நாட்டின் பல பகுதிகளில் சிலம்பம் ஆடி விட்டது. இங்கும் கத்திரீனா., ரீட்டா என.

அப்புறம் கே.ஆர். நாரயணன், வலம்புரி ஜான், தாமரைக் கனி, ஜெமினி, பானுமதி போன்றோர் மறைந்தனர். உலக அளவில் போப் ஜான்பால். தனிப்பட்ட வகையில் எனக்கு இழப்பு இந்த நட்சத்திர வாரம் துவங்குவத்றகு 1 நாள் முன் என்னை சிறுவயதில் வளர்த்த என் அம்மாட்சி திடீரென 'ஹார்ட் அட்டாக்கால்' மறைந்தது.

எத்தனை சுனாமிகள் வந்தாலும் மனிதம் தழைப்பது நடக்காதோ என எண்ண வைத்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, கண்டதேவி மற்றுமொரு சோகம்.

என்னைச் சந்தோசப் படுத்திய விருதுகள் தமிழுக்கு செம்மொழி விருது., அடூர் கோபால கிருஷ்ணன், மிர்னாள் சென்னிற்கு கிடைத்த 'பால்கே' விருதுகள்.

'நானாவதி' அறிக்கை சமர்பிக்கப்பட்டது. சீக்கியர் படுகொலைக்கு பார்லிமெண்டில் காங்கிரஸ் மன்னிப்புக் கேட்டது.

தி.மு.காவில் இந்த ஆண்டு அதிக ஆளவு எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர் இறப்பு மற்றும் கைதுகள் நிகழ்ந்தது.

லஞ்ச எம்.பிக்கள், தலைகள் ராஜினாமா, ஓய்வு என ப.ஜ.க க்கும் போதத ஆண்டுதான்.

யோசிக்க வைத்த செய்திகள்., டோனி மீண்டும் 3 வது முறையாக பிரதமரானது., குவைத்தில் பெண்களுக்கு தேர்தலில் ஓட்டுப் போடவும், நிற்கவும் உரிமையளித்த சட்டம் வந்தது.

மொத்தத்தில் 2004 இது ப.ம.க, வி.சி மாதிரி மகிழும் வகையிலும் இல்லை., குஷ்பு, லாலு, உமாபாரதி, நட்வர்சிங் போன்றோர்க்கு இருக்கும் அளவிற்கு துன்பமாயும் இல்லை.

*** *** *** ***

2006

வரும் போதே 2ந்தேதி பூமி குலுங்கும் என பீதியக் கிளப்புராங்க. பெங்களூர்ல 6 மனித வெடி குண்டாம்ல?., இளவஞ்சி, ராகவன் மற்றும் நண்பர்கள், தோழிகள் உசாராக இருங்கப்பா!.

என்ன இருந்தாலும் ஒவ்வொரு புத்தாண்டும் எல்லாவற்றையும் தன்னில் வைத்திருந்தாலும் ஒரு நம்பிக்கையும், உற்சாகத்தையும் பிறக்கும் போது தருகிறது என்பதில் ஐயமில்லை.

2006 ஆண்டே விரும்பி வா., யாவர்க்கும் நலங்கள் தா.

அனைவருக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் எண்ணங்கள் சிறக்க., சிறந்த எண்ணங்கள் ஈடேற வேண்டுகிறேன்.

11 comments:

பத்மா அர்விந்த் said...

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

Pot"tea" kadai said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சிவனடியார் said...

Ennago...eppadi ithellam?
really you are soooopeer...
sari why dont you talk about
the Public dead in chennai while the trying to get the money given by govt? my point is who's money given as they want and for
somebody's mistake?...
wish you a Happy PONGAL

Thangamani said...

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

ஞானவெட்டியான் said...

தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

மதுமிதா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துககள்

துளசி கோபால் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துககள்

அப்டிப்போடு... said...

தேன் துளி பதமா., நன்றி. உங்கள் குடும்பத்தாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவியுங்கள்.

தம்பி.,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்திற்கும்.

சிவனாண்டியார்.,
எல்லாவற்றையும் சொல்லவில்லை. மக்களாஇ மடிந்த சோகம் எப்படி அரசியல் ஆகி வருகிறது எனவும் கவனியுங்கள். உங்களுக்கும் புத்தாண்டு, பொங்கள் நல்வாழ்த்து.

அப்டிப்போடு... said...

தங்கமணி நன்றி. இந்த ஆண்டு மிகவும் சிறந்த ஆண்டாய் அமைய வாழ்த்துகள்.

ஐயா., நன்றி என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்., உங்களுக்கும் குடும்பத்தாருக்கும்.

மதுமிதா., நன்றி, இனியதாய் புத்தாண்டு இனிக்க வாழ்த்துக்கள்.

அக்கா நன்றி, உங்களுக்கும், அண்ணனுக்கும், தங்கைக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Dharumi said...

வாழ்த்துக்கள் - கடந்த ஒரு வார நட்சத்திர மினுக்கலுக்கும், வரவிருக்கும் புத்தாண்டுக்கும்

G.Ragavan said...

வணக்கம் அப்படிப் போடு. கொஞ்சம் லேட்டா புத்தாண்டு வாழ்த்துச் சொல்றேன்னு கோவிச்சிக்கிராதீங்க....எப்படியோ மறந்து போச்சு. மன்னிச்சிக்குங்க. இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய எனது வாழ்த்துகள்.

(அதென்ன பொங்கள் வாழ்த்து...பொங்கல்ன்னு சொல்லனும். புரிஞ்சதா?)