Wednesday, December 28, 2005

என்று மடியும் இந்த தீவிரவாதம்?

ஒவ்வொரு முறை புத்தாண்டு வருவதற்கு முன்னும் ஏதும் நடந்திரக் கூடாதுன்னு உயிரக் கையில பிடிச்சுகிட்டு இருக்க வேண்டியதா இருக்கு. இப்பப் பாருங்க வெள்ளம் போயி முடியுறதுக்குள்ள என்னன்னமோ வந்திருச்சு. இப்பப் பார்த்தா IISc ல தீவிரவாதம். நம்ம நாட்டில் லஞ்சம், ஊழல் போலவே தீவிரவாதமும் தவிர்க்கமுடியாத விதயமாயிருமோன்னு பயமா இருக்குங்க. ஒரு மாநிலத்த அது 'எங்க' இருக்குன்னு வரைபடத்துல தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி, அந்த ஊர்ல இருக்கிற தீவிரவாத குழுக்கள் பேரு தெரிஞ்சு போகுது நம்ம பிள்ளைகளுக்கு..

எத்தனையோ இன, மொழி, பண்பாடு மாறுபாடு கொண்ட ஒரு தேசம். அதை ஒன்றாக இணைப்பதற்கு ஒரு பெரியவர் பட்டபாடு., அந்த இரும்பு மனிதனின் உழைப்பால் விழைந்த கட்டிடத்தை எலிகள் ஓட்டையிட பார்க்கின்றன. எலிகளின் பற்கள் ஓட்டையிட ஏதுவாக இருப்பதுதான் கொடுமை.

அஸ்ஸாம்ன்னா உல்ஃபா., பிகார், ஒரிசா ந்னா மாவோயிஸ்ட்., நாகாலந்துன்னா நேசனல் சோஷியலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகாலாந்து., திரிபுரான்னா திரிபுரா டிரைபல் எரியா அட்டானமஸ் டிஸ்டிரிக் கவுன்சில்., மணிப்பூர்ன்னா பீப்புள் லிபரேஷன் ஆர்மி, மிசோரம்னா மிசோ நேசனல் ஃப்ரண்ட், பிகார்ல ராஜ்திர் வேற, பஞ்சப்ல உங்களுக்குத் தெரியும் ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார மறந்திருக்க மாட்டோம்., உத்திரப் பிரதேசம் - கேக்கவே வேண்டாம், ஆந்திரான்னா நக்சலைட், ஜம்முன்னா... அட, அத ஏன் நான் சொல்லிகிட்டு?. தீவிரவாதத்தின் வேர் எங்கு ஆரம்பிக்கின்றது. அது சுதந்திரம் கிடைத்ததிலிருந்தே வேர்விட ஆரம்பித்து விட்டது. அதற்கான காரணங்கள்... முக்கால்வாசி தனியான சுதந்திரத்தை கோரித்தான்.

ஒரு குறிப்பிட்ட தனியான கலாச்சாரம்(ethnic) உடைய மக்கள் ஒன்றாக இருக்கும் போது வேறு ஒருவரின் ஊடுருவலைத் தவிர்க்க., தற்போது பங்களாதேஷ் மக்களின் எல்லைப் புற ஊடுருவலைத் தவிர்க்க அஸ்ஸாமில் இத்தைய கும்பல்கள் உருவாகின. மணிப்பூர், நாகலாந்து இரு மாநிலங்களுக்கிடையேயான எல்லை பிரச்சனையும் தீவிரவாதிகளை உருவாக்கின., மணிபூரில் மட்டும் 19 தீவிரவாதக் குழுக்கள் உள்ளனவாம். உள்நாட்டு எல்லைப் பிரச்சனையை கட்டுக்குள் வைக்க முடியும். நிலவுடமை சக்திகளின் ஆதிக்கம்., வேலையில்லாத் திண்டாட்டம் மற்றம் சமுதாய ஏற்றத்தாழ்வு போன்றவை மாவோயிஸ்ட்., ராஜ்திர்(பிகார்) போன்றவை தோன்ற காரணமாகச் சொல்லப் படுகின்றன.

தாங்கள் பகுதி மக்கள் வஞ்சிக்கப்டுவதாக சொல்லி உருவாகின நக்சலைட் அமைப்புகள். மதக்காரணங்களுக்காக உருவான அமைப்புகள்தான் பஞ்சாபிலும், காஸ்மீரிலும். எல்லாவற்றிலும், அதிக உயிர் குடிப்பது மத தீவிரவாதம்தான். உலகம் முழுவதும் தன் கோரக்கரங்களை விரித்திருப்பதும் இதுதான். நிதமும் நம் எல்லைப் பகுதிகளில் நம் சகோதரனொருவன் செத்துக் கொண்டுதான் இருக்கிறான். எல்லைப்புற கிரமங்களில் கூட்டமாக மக்கள் கொல்லப் படுவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

சுதந்திரமான ஐந்து வருடங்களிலேயே இத்தைய கும்பல்களை கூட்டி பேச்சு வார்த்தை நடத்திய நம் மத்திய அரசு., இன்றும் பேசிக் கொண்டுதானிருக்கிறது. வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள்., ஒவ்வொரு மாநில தீவிரவாத அமைப்புகளுடனும்., பேச்சு வார்த்தை நடத்தப் பட்டு ஏதேனும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கும். எல்லா நாடுகளிலும்தான் தீவிரவாதம் இருக்கின்றது. ஆனால் நம்நாட்டில் மழை, வெள்ளத்தைப் போல் மக்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை. தினம்தினம் துக்கப்பட முடியுமா?. பார்லிமெண்ட்டில்., பேசும் கூட்டங்களில் கூட நாம் தீவிரவாததை நினைத்து அச்சச்பட வேண்டிய நிலைமை. இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் அதிர்ச்சி அறிக்கையுடன் எல்லாம் முடிந்து விடுகிறது. இஸ்ரேலில் என்ன நடக்கிறது ., பாலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது என்பது உலகம் முழுவதும் தெரிகிறது. என்னத்த சொல்றது போங்க.

6 comments:

சந்திப்பு said...

இந்தியாவில் தீவிரவாதம் படிப்படியாக தலைதூக்கி வருவதைத்தான் பெங்களூரில் நடந்த தாக்குதல் நமக்கு உணர்த்துகிறது. கடந்த பா.ஜ.க. ஆட்சியின் போது பாராளுமன்றத்திலேயே தாக்குதல் தொடுத்தனர். இந்த முறை நம்முடைய விஞ்ஞானிகளை குறி வைத்திருப்பதன் மூலம் இந்திய நாட்டின் தலைசிறந்த அறிவாளிகளை ஒழித்துக்கட்டுவது என்பதை நோக்கமாக கொண்டுள்ளதை அறிய முடிகிறது.
தீவிரவாதம் எந்த அடிப்படையில் தலை தூக்கினாலும், அதை நாம் ஆதரிக்க முடியாது. அது நக்ஸலாக இருந்தாலும் ல°கர் இ தொய்பாவாக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் வேறு, வேறு நோக்கங்கள் இருக்கலாம். இருப்பினும் தீவிரவாதம் - பயங்கரவாதம் இந்த இரண்டையும் ஒழித்தே ஆக வேண்டும்.
மேலும், ஏற்கெனவே தீவிரவாதிகள் பட்டியலில் இந்தியன் இன்°டிடியூட் ஆப் சயின்° அமைப்பு குறி வைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். இந்த நிலையில் இத்தகைய தாக்குதல் நடந்தததற்கு, நம்முடைய உளவுத்துறையும் செயலிழந்து வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
தீவிரவாதத் தாக்குதல் - பயங்கரவாதத் தாக்குதல் இவற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பள்ளிகளிலேயே இதற்கான பாடத் திட்டங்களை உருவாக்கி விழிப்புணர்வு நடத்துவது இன்றைய அவசியமாகி விட்டது.

துளசி கோபால் said...

தீவிரவாதம் உலகெங்கும் உள்ள ஒரே 'மொழி'யா ஆயிரும்போல.

நானும் + போட்டாச்சு.

மணியன் said...

மிகவும் கவலையளிக்கிறது. மதத்தை முறையாக பின்பற்றுவோர் தீவிரவாதிகளாவதில்லை. மதம் தலைக்கேறியவர்களே தீவிரவாதத்தை தழுவுகிறார்கள்.

முப்பது வருடங்கள் முன்பும் இதே பிரச்சினைகள்தான்; ஆனால் அப்போதெல்லாம் கேள்விபடாத வன்முறை உலகளாவிய அளவில் வளர்ந்ததெப்படி ?

நீங்கள் பதிந்த 'மேன்மக்கள்' எண்ணிக்கை materialismத்தின் எதிர்விகிதத்தில் குறைவது தான் காரணமோ ?

அப்டிப்போடு... said...

//தீவிரவாதத் தாக்குதல் - பயங்கரவாதத் தாக்குதல் இவற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பள்ளிகளிலேயே இதற்கான பாடத் திட்டங்களை உருவாக்கி விழிப்புணர்வு நடத்துவது இன்றைய அவசியமாகி விட்டது//.

சந்திப்பு!.,இது மிகவும் அவசியம்.

//தீவிரவாதம் உலகெங்கும் உள்ள ஒரே 'மொழி'யா ஆயிரும்போல//
அக்கா, ஆயிருச்சே! இப்பவே.

//முப்பது வருடங்கள் முன்பும் இதே பிரச்சினைகள்தான்; ஆனால் அப்போதெல்லாம் கேள்விபடாத வன்முறை உலகளாவிய அளவில் வளர்ந்ததெப்படி//
மணியன், அதுவாக வளரவில்லை., வளர்வதை ஒடுக்க ஆளில்லை.

மணியன் said...

ஒடுக்குவதால் தடுக்கமுடியாது. கட்டுப்படுத்த தான் முடியும்.

நமது பழங் கலாசாரத்தில் மனிதநேயமே முன்னணியில் இருந்தது. அதுவே காந்தீயத்திற்கும் வழி வகுத்தது.

இன்று மேற்கத்திய பொருளாசையே மேன்பட்டு யார் பெரியவன், வல்லவன் என்ற போட்டியில் மனிதம் மாண்டது.

அப்டிப்போடு... said...

//மேற்கத்திய பொருளாசையே மேன்பட்டு யார் பெரியவன், வல்லவன் என்ற போட்டியில் மனிதம் மாண்டது//

உண்மை, ஆனால் மனிதம் மாண்ட நாடுகள் வல்லரசாக இருப்பதும்., பிரந்திய வல்லரசு என பெயரிட்டுக் கொண்டு., இராணுவத்திற்கு எவ்வளவு செலவு செய்தும்., அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதும் எரிச்சலைதான் தருகிறது.