Saturday, December 24, 2005

நிசம்தானா....?

ஒரு 'ஹிட்' குடுத்துட்டு அடுத்தது ஒரு 'அட்டு'(படம்! இந்த வார்த்தை படத்தை மட்டும் குறிப்பிடாது., தெரியுமப்போவ்...) குடுக்கறது பெரிய ஹீரோக்களோட வழக்கம். ஆனா இப்பிடிக் குடுக்கிற தயாரிப்பாளர்கள் இருக்காங்களா?. துளசிங்கிற ஹிட்டுக்குப் பிறகு நம்ம மாதிரி அட்ட அதுவும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு துணிவா 'ரிலீஸ்' பண்றாங்கன்னா.... ஆண்டவந்தான் அவங்களையும் படிக்கப் போற உங்களையும் காப்பாத்தனும். மதி, காசி மற்றும் தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி. மதியின் அழைப்பை யேல் பலகழைக்கழகம் வழங்கும் எட்டு டாக்டர் பட்டத்தை விட உயர்வானதாக கருதி :-))) ஆரம்பிக்கிறேன் இவ்வாரத்தை.

ஒரு விளக்கம். நான் என் பதிவுகளில் குறிப்பிடும் 'நம்ம' என்பது என்னைக் குறிக்கும். நம்ம பத்மா அவர்கள், ஒரு முறை இப்படி எழுதுனதப் படிச்சுட்டு., எல்லாரையும் சொல்றேன்னு நினச்சு 'டென்சன்' ஆகிட்டாங்க... இது ஒரு பழக்கம். "அறிஞர் அண்ணாவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.யார் அவர்களும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் நான் வந்து கொண்டிருக்கிறேன்"னு மேடைப் பேச்சுல ‘பீதிய’க் கிளப்புற திராவிடத் தலைவர்கள் மாதிரி..., (கூட்டத்துல... நடுராத்திரியானப்புறம்தான் நம்ம தலைகள் பேசும்!., இந்தக் கூட்டம் மெரீனா பீச்சுல நடந்தா கேட்பவன் நிலமைய கொஞ்சம் நினைச்சுப் பாருங்க!, இது ஏன் என்றால்., ஒருவேளை நம்ம பேசிகிட்டு இருக்கும் போது யாருந்தூங்கிறக் கூடாதுங்கிற 'பாதுகாப்பு' உணர்வோ இல்லை தனியா பேச விட்டுட்டு தூங்கிறாதிங்கய்யாங்கிற 'பய' உணர்வோ... அதுவுமிலையெனில் அத்தலைவர்கள் மறைந்து விட்டதை ஒப்புக் கொள்ள முடியாத 'பாச' உணர்வாகவோ கூட இருக்கலாம்... அண்ணன்கள் கிண்டல் அடிக்கிரதுக்கு முன்னாடி அத்தனையும் சொல்லிப்புட்டன்ல? )

எங்க பக்கம் இப்படித்தான் பேசுவோம். எங்க பையன் ஒருத்தன் பேசும் போது பாத்திங்கன்னா..,

"ஏய் வந்து சாப்புடு"
"ம்... வருவோமில்ல?"
"வேலைக்குப் போகலியா?"
"போவமில்ல....? எப்பப் போகணும்னு எங்களுக்குத் தெரியும்., நீங்க, உங்க வேலையப் பாருங்க!"

எப்பவும் இப்பிடி கூட்டமா நிக்கிற மாதிரியும், எதிலயும் வீராப்பா இருக்குற மாதிரியும் தான் பேசுறது.. எல்லாம் ஒரு தெம்புக்குத்தான்.

டிரைவரா வேலை பாக்குறேன்னு பொய்யச் சொல்லி., பொண்ண கட்டிட்டு வந்திருவான். அவன் வீட்டிலேயே இருக்குறதப் பாத்து அந்தப் புள்ள கேட்கும் "என்னா டிரைவரா இருக்கேன்னிக., எப்ப பாரு இங்கயே இருக்கிக?"
"அதான் இப்ப உன்னைய ஓட்றமில்ல?" கிண்டலாகச் சொன்னாலும்., படக்குன்னு அந்தப் புள்ள பக்கத்துல வந்து,
"இந்தா புள்ள!., பொய்தான் சொன்னோம்!., எதுக்கு சொன்னோம்? உன்னைய கட்றதுக்குத்தான? இத மனசுல வச்சுகிட்டு ஏழைரையப் போட்டுறாதன்னு பத்து பேர் சேர்ந்து அந்தப் பொய்ய சொன்ன மாதிரியே பேசி, கவர் பண்ணி... அடுத்த வாரம் உண்மையாவே டிரைவர் வேலைக்குச் சேர்ந்து தெளிவா அவன் ரூட்ல போயிட்டே இருப்பான்.

ஒருபுறம் கிராமம்... மறுபுறம் நகரம் இரண்டையுமே எனக்கு வாழ்க்கை காட்டியது இன்று வெளிநாட்டையும். அடுத்தவரை பாதிக்காது எனக்கு வரும் அனுபங்களை நன்மையெனினும், தீமையெனினும் அனுபவிக்காது தள்ளியதில்லை. அனைத்து விதமான வாகனங்களிலும் நேர்ந்திருக்கிறது என் பயணங்கள். மாட்டு வண்டி.. முதல் விமானம் வரை. சந்தித்த மனித மனங்களும் அதிகமே. உண்மையில் நான் அதிகம் படித்தது மனிதர்களையே. மனதைக் கட்டிப் போடும் நகரத்தின் செழிப்பான இடங்களே எனது உறவுகள். பிரமிப்புதரும் செல்வ வளத்தையும் திடிரென சறுக்கிவிட்ட ஒரு 'இனிய' காலத்தில் (வாழ்க்கை அனுபவங்களை தலையில் அடித்து கற்றுத் தரும் காலங்கள் இனிய காலங்கள்தானே?) எல்லாம் இழந்து, வாழ்ந்து கெட்ட வீட்டில் வாழ்ந்திருக்கிறேன் அவ்வப்போது. உழைப்பென்ற என்ற வளத்தை மட்டும் (நிலமிருந்தாலும்., உழைப்பில்லா நிலத்தால் பயன் என்ன?) கைகொண்டு எத்தனை இடரிலும் சுற்றம் விடாது., சிரிப்பெனினும், அழுகையெனினும் ஓடி வந்து கூடி நிற்கும் மனிதர்களே நிரந்தர செல்வம் எனக் கொண்ட கிராமத்து மண்ணிற்கு துக்கமில்லை. இதை எனது களமாக அறிமுகப் படுத்திக் கொள்ளவே எப்போதும் விரும்புகிறேன். வளர்ந்த சூழல் நகரம்தான் எனினும் நான் வாழ்க்கையை வாழ்ந்த சூழல் கிராமம். நஞ்சும் உண்ணும் நனிநாகரீகம் இல்லை. கோபமோ, பாசமோ மனதை அப்படியே காட்டிவிட்டு கடந்து செல்லுமவன்., நுனி நாக்கு ஆங்கிலத்தில் உலகத்தையே புரட்டும் ஒருவனுக்கு ஒப்பானவனாக அல்ல உயரமானவனாகவே எனக்குத் தெரிகிறான்.

பள்ளி, கல்லூரி மற்றும் சுதந்திரமாக சுற்றிய (திருமணத்திற்கு முன்பு) நாட்களில் நிறைய எழுதியதுண்டு. அவை அனைத்தையும் சேர்த்து, "எந்தப் பத்திரிக்கை வாசலிலும், பிரசுரிப்பு பிச்சை கேட்டு என் கவிதைகள் இது வரை கையேந்தியதில்லை" என்று 'கெத்'தாக இரண்டு வரி குறிப்பெழுதி பரணில் போட்டுவிட்டு வந்தேன். இருக்கிறதோ இல்லை... கரையானுக்கு இரையாகி விட்டதோ?. எதையோ கூகுளில் தேடிய போது கிடைத்தது நம்ம அல்வா சிட்டி விஜயின் பதிவுகள். பிறகு அவரது சுட்டிகளுக்கு வாசிப்பு விரிந்து... மொளன வாசிப்பாகவே சில காலம் ஊர்ந்தது. நன்றாகத் தூங்கி எழுந்த ஒரு மலைப் பொழுதில் இங்கு எழுதினால் என்ன? என்று தோன்றிய எண்ணமே இன்று உங்களை சோதிக்கிறது. “ பொருந்துவன போமின் என்றால் போகா” அவ்வையின் வார்த்தைகளை நினைத்து ஆறுதல் கொள்ளுங்கள். என் எழுத்தையொரு பொருட்டா மதித்து முதல் பின்னூட்டம் இட்ட துளசி அக்காவிற்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

நாங்கெல்லாம்... நீங்க... எங்க எழுத்த விரும்புற மாதிரி நடிச்சிங்கன்னா கூட விட்டுருவோம்., விரும்பலைன்னு தெரிஞ்சுது..... பட்டறையப் போட்டுருவோமில்ல?. எனவே எல்லாரும் விடுமுறைய நல்லா 'என்சாய்' பண்ணுங்க. ஆனால் இங்கு வந்து உங்கள் பொன்னான பின்னூட்டம் மற்றும் வாக்குகளை போட மட்டும் மறக்காதிங்க.

"ஒரு நாளில் மடியும் பூவிற்கு கூட வண்ணங்கள் கொடுத்து, மணம் கொடுத்து இரசித்துப் படைத்த இறைவன், மனிதர்களாகிய நம் வாழ்க்கையில் அக்கரை கொள்ள மாட்டாரா?" - இது நான் என்றோ படித்த., பைபிளில் வரும் ஒரு வசனத்தின் சாரம். அனைவருக்கும் என் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

32 comments:

ramachandranusha said...

அப்படி போடுங்க :-)

வாங்க, வாங்க! சுவாரசியமாகவும், விருவிருப்பாகவும் வாரம் போகும் என்று பட்சி சொல்கிறது.

சிங். செயகுமார். said...

நல்ல துவக்கங்கள் . புத்தாண்டு நட்சத்திரமே வாழ்த்துக்கள்! வாருங்கள். வகையாய் தாருங்கள்!

இளந்திரையன் said...

வாங்க அதுதான் அப்படிப் போட்டிட்டீங்களே அரிவாளை.... அப்புறம் என்ன (ஆப்பிட்டுக் கிட்டது நாங்கதானே... சும்மா தமாஷுங்க..)

Thangamani said...

வாங்க, அப்படிபோடு. உங்கள் எழுத்து நடை எனக்குப் பிடிக்கும்.அந்த நேரடியாகப் பேசும் விதமும்.
நம்பள எப்பவும் நாம, நாமன்னுதான் சொல்லிக்கிறது இல்லையா!
:)

இளவஞ்சி said...

நாமெல்லாம் மரத்தோட பதிவுகள அலச ஆரம்பிச்சா பிரிச்சிருவோமில்ல!! பாத்து பட்டரைய போடுங்க!!!

இதுவும் ச்ச்சும்ம்மா கெத்து காட்டறதுக்குதாங்க.. நீங்க கலக்குங்க அம்மணியோவ்... :)

பினாத்தல் சுரேஷ் said...

நமக்கும் பிடிச்சுருக்குங்க உங்க ஸ்டைல்.. கலக்குங்க!

வசந்தன்(Vasanthan) said...

ம். வடிவேலுவின் 'தெனாவெட்டு' அப்படியே வருகிறது.

Pot"tea" kadai said...

யெக்கோவ்...
பெஸ்ட் விஷஸ்
போட்டுத் தாக்குங்கோ!
"இன்ட்ரோ" -வே கலாசுது!

:-)))))))))

அப்டிப்போடு... said...

//சுவாரசியமாகவும், விருவிருப்பாகவும் வாரம் போகும் என்று பட்சி சொல்கிறது// -
உஷா., அது நல்ல பட்சியா இருக்கும் போல இருக்கு., என்னோட உதறல் உங்களுக்கு தெரியுதுதானே?

//வகையாய் தாருங்கள்!//
ஜெயக்குமர்., தந்துட்டாப் போச்சு.

//ஆப்பிட்டுக் கிட்டது நாங்கதானே//
இளந்திரையன்., பட்டரையப் போட்றவா....?

//நம்பள எப்பவும் நாம, நாமன்னுதான் சொல்லிக்கிறது இல்லையா//
ஆமா.....!. தங்கமணி, உங்க எழுத்தை படிக்கும்போது., நானெல்லாம் எழுதறது தேவையான்னே தோணும். உங்களுக்குப் பிடிக்குதுன்னு சொல்றிங்க...மகிழ்ச்சி.

//நாமெல்லாம் மரத்தோட பதிவுகள அலச ஆரம்பிச்சா பிரிச்சிருவோமில்ல!!//
ஐய்யய்யோ... இதுக்குத்தான் ஓவரா 'பில்டப்' குடுக்க கூடாதுங்கிறது. இளவஞ்சி... இந்த ஒரு வாரம் மட்டும் எதையும் ஆராயாதிங்கப்பு!., அனுபவிங்க! ங்கிற.. உங்க வார்த்தையையே...(கமலஹாசனோடதோ?) உங்களுக்குச் சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.

அனைவரது ஊக்குவிப்பிற்கும் நன்றி.

மணியன் said...

ஆரம்பமே அசத்தல். நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.

அப்டிப்போடு... said...

//நமக்கும் பிடிச்சுருக்குங்க உங்க ஸ்டைல்//

சுரேஷ்., எல்லாப் போட்டிகளிலும் வெல்லும் ஸ்டைல் உங்களுதுதாங்க. நன்றி.

//வடிவேலுவின் 'தெனாவெட்டு' அப்படியே வருகிறது//
வசந்தனுக்குப் பிடித்த 'டாபிக்'கும் விண்மீன் வாரத்தில் வரும்.

//"இன்ட்ரோ" -வே கலாசுது!//
பொட்டீக்கடை :-)))))))))
நன்றி

அப்டிப்போடு... said...

//ஆரம்பமே அசத்தல்//

நன்றிங்க மணியன்.

முத்துகுமரன் said...

முதல் பந்திலே சிக்ஸரரோட ஆட்டத்தை தொடங்கியிருக்கீங்க... வாழ்த்துகள்....

வர வர நட்சத்திரங்கள் எல்லாம் 'தோனி' அடி அடிச்சு ஆட்றாங்கப்பா. பாக்கவே சந்தோசமா இருக்கு.

போன ஆண்டுவரை நானும் திருச்சிதானுங்கோ( சொ.ஊ: மதுர)

G.Ragavan said...

vaanga maram. wish you all the success over the week as a star.

டிசே தமிழன் said...

வாருங்கள் மரம். இந்த வாரம் நிறையப்பதிவுகள் எழுத வாழ்த்து.

துளசி கோபால் said...

வாங்க நட்சத்திரமே!

வாழ்த்துக்கள்.

Agent 8860336 ஞான்ஸ் said...

//துளசிங்கிற ஹிட்டுக்குப் பிறகு நம்ம மாதிரி அட்ட அதுவும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு துணிவா 'ரிலீஸ்' பண்றாங்கன்னா.... //

தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்;
தன்னைத்தான் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்!

இதுவும் பைபிள் வசனம்ன்னு நெனக்கிறேன்!

:-)))

அப்டிப்போடு... said...

//முதல் பந்திலே சிக்ஸரரோட ஆட்டத்தை தொடங்கியிருக்கீங்க...//

அடுத்து வரும் பந்துகளில் 'டொக்'கு போடாம இருக்கணுமே., முத்துக் குமரன்., எங்க சொ.ஊ.ம் மதுர பக்கந்தான். திருச்சில எங்க இருந்திங்க?

//wish you all the success //
நன்றி ராகவன்.

//நிறையப்பதிவுகள் எழுத//

டிசே. நாளொன்றுக்கு இரண்டு பதிவுகளாவது போடப் பார்க்கிறேன்.

நன்றி துளசி அக்கா,

//தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்//
ஞான பீடம்., ஒன்ணும் சரக்கில்லைன்னா தன்னை தாழ்த்திக் கொண்டுதானே ஆகவேண்டும்?. நன்றி

மதுமிதா said...

///நாங்கெல்லாம்... நீங்க... எங்க எழுத்த விரும்புற மாதிரி நடிச்சிங்கன்னா கூட விட்டுருவோம்., ///


நாம நடிக்காமயே விரும்புறோமேன்னு முதல் நாளே காட்டுதேங்க மரம்.

அப்படிப்போடுன்னு நம்ம எழுத்து அசத்துதுங்கோ

பத்மா அர்விந்த் said...

அப்படிப்போடு
நல்வரவு. இப்ப டென்ஷன் எந்த பொருளில் சொறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? இல்லாட்டி எனக்கு மண்டை உடையும் போல இருக்கு எப்ப எதுக்கு என்று யோசிச்சு, கோபமா, வருத்தமா.... :) உங்களுடைய பதிவெல்லாம் நினைவுபடுத்தி பார்த்தேன்.

முத்துகுமரன் said...

முத்துக் குமரன்., எங்க சொ.ஊ.ம் மதுர பக்கந்தான். திருச்சில எங்க இருந்திங்க?

திருவரங்கம்

அப்டிப்போடு... said...

//நடிக்காமயே விரும்புறோமேன்னு//
நன்றி மதுமிதா

//யோசிச்சு, கோபமா, வருத்தமா.... //
ஐய்யய்யோ பத்மா., தவறா ஒண்ணுமில்ல... நம்மப் பொருத்தவரை சின்ன பதட்டம் கூட 'டென்சன்'தான். இங்கு பாருங்களேன்., அதாவது 'நம்ம' என்று எழுதுவதில் சிலர் குழம்பியிருந்தாலும்., நீங்கள் குழம்பியது நினைவுக்கு வந்ததால் குறிப்பிட்டேன். தவறாக ஒன்றுமில்லை.

பின்னூட்டத்திற்கு நன்றி.

அப்டிப்போடு... said...

பத்மா, மேலே சுட்டி விட்டுப் போய் விட்டது., http://tamilkudumbam.blogspot.com/2005/09/blog-post_27.html

அப்டிப்போடு... said...

முத்து குமரன்., திருவரங்கமா?., திருச்சியில் ஐ.டியில் நீங்க வேலை பார்த்துக் கொண்டிருந்திருந்தால் நம்ம மக்களை சந்தித்திருப்பீர்கள்.

Maravandu - Ganesh said...

//'அட்டு'(படம்! இந்த வார்த்தை படத்தை மட்டும் குறிப்பிடாது., தெரியுமப்போவ்...) //


உங்களைப் பாத்து யாரும் அப்பிடி சொல்லலையே :P

நடசத்திரவாரத்தில் கலக்குங்கள்

இராமநாதன் said...

வாழ்த்துகள் அப்டிபோடு,

1:4 => 0:5 ???? ;)

சன்னாசி said...

அட்டு, பிட்டு, ஏழரை, பட்ரை ... கலக்குங்கள்! (இல்லை, சைனப் போடுங்க என்பதா ;-)). வாழ்த்துக்கள்.

//தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்;
தன்னைத்தான் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்!

இதுவும் பைபிள் வசனம்ன்னு நெனக்கிறேன்!

:-)))//

Luke 14:11.

அப்டிப்போடு... said...

//உங்களைப் பாத்து யாரும் அப்பிடி சொல்லலையே//

கணேஷ்., சொலுவாங்க கண்ணில் கோளாறு உள்ளவர்கள்.

1:4 => 0:5 ????
:-)))))))))))))
இராமநாதன் மூன்றாவது பதிவு வந்ததும் பாருங்க.

//சைனப் போடுங்க என்பதா //
சன்னாசி, 'வாய்ச'க் குடுங்கன்னும் சொல்லலாம். :-)))

குழலி / Kuzhali said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்... கலக்குங்க

சிவா said...

நல்லா எழுதிருக்கீங்க அப்படிபோடு. நட்ச்சத்திர வாரத்திற்க்கு வாழ்த்துக்கள். தொடருங்கள், படிக்க காத்திருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

//நாங்கெல்லாம்... நீங்க... எங்க எழுத்த விரும்புற மாதிரி நடிச்சிங்கன்னா கூட விட்டுருவோம்., விரும்பலைன்னு தெரிஞ்சுது..... பட்டறையப் போட்டுருவோமில்ல?. எனவே எல்லாரும் விடுமுறைய நல்லா 'என்சாய்' பண்ணுங்க. ஆனால் இங்கு வந்து உங்கள் பொன்னான பின்னூட்டம் மற்றும் வாக்குகளை போட மட்டும் மறக்காதிங்க.
//

வந்துட்டோம்ல. தொளசி அக்காவோட நட்சத்திரப்பதிவுகளை இப்பத்தான் படிச்சு முடிச்சேன். அப்புறம் தான இந்த வார நட்சத்தரம் அப்டிபோடு அக்காவோட பதிவுகளைப் படிக்கலாம். மொதொ பதிவப் படிச்சிட்டோம்ல. பின்னூட்டமும் போட்றோமில்ல. அதுக்குள்ள போட்டுத்தள்ள வந்தா என்ன பண்றது? ஆத்தா மீனாச்சி பேரச் சொல்லி கும்பிட்டுக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் பாத்துக்கிட்டு போவேண்டியது தான். நாம கொஞ்சம் வெவரமுல்ல.

யக்கோவ். எங்க வீட்டுக்கு போன் பண்ணி போட்டுக்குடுக்கறதா எனக்கு பயங்காட்டி ரொம்ப நாளாச்சு. இன்னும் காணோம்?

அப்டிப்போடு... said...

குழலி நன்றி., பதிவுகள் பற்றி உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

நன்றி சிவா., குழலிக்கு சொன்னதேதான் உங்களுக்கும்.

வாங்க தம்பி, குமரன் தம்பி பொறுமையாப் படிச்சிட்டு பின்னூட்டம் போடுங்க. பாவம்னு விட்டா கூப்பிட்டு கேட்டு மாட்டிக்கிறிங்க?!.