Tuesday, November 29, 2005

வலைபதிவுகள்

டிசே தமிழன்.,
இத்தனை சிறிய வயதில் எத்தனை தெளிவு? என என்னை இவரது ஒவ்வொரு பதிவும் வியக்க வைக்கும். அம்பை, சாரு நிவேதிதா, பாமா, ப.சிங்காரம், ஜெய மோகன், சால்மா மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் ஜேசுதாசன் உள்ளிட்டோர், ஈழ எழுத்தாளர்கள் ஷோபா சக்தி, சி.புஷ்பராஜா சுமதி ரூபன், காலஞ் சென்ற க்ஷ்தூரி, சிவரமணி போன்றவர்களைப் போல் இவரிடம் தன் படைப்பால் மாட்டிக் கொண்டவர்கள் ஏராளம். (நிறைய பேர்கள் விடுபட்டிருக்கலாம்., இவர் வாசித்தவர்களை எழுதினால் இந்தப் பதிவு பத்தாது). டி.சே ஒரு தேர்ந்த விமர்சகர், சிறந்த ரசிகர், நல்ல படிப்பாளி மற்றும் படைப்பாளி. இரண்டு வலைப் பதிவுகளில் டி.சேயின் எண்ணங்கள் வண்ணக்கோலங்களாய் வருகின்றன.

இவரது பரந்துபட்ட வாசிப்பனுபவம்., இசை இரசனை, திரைப் படத் திறனாய்வு போன்றவை முன்னதில் நிரம்பிக் கிடக்கின்றன. சில பதிவுகள் அவரைப் பற்றியும், ஈழ மண்ணில் கொண்ட நேசமும் அதன் நினைவுகளுமாய்.... எவ்விதப் பாசாங்குமின்றி தன் வயதுக்குரிய தேடலில் இருந்து அனைத்தையும் முன்வைக்கிறார். பின்னதில் படங்காட்டல்தான்., பயமுறுத்தலும் உண்டு "சுந்தர ராமசாமி -நினைவஞ்சலிக் கூட்டமும், தேவையில்லாச் சில குறிப்புக்களும்" இப்படி.
//பெண்ணுக்கு சமுகம் வழங்கும் மட்டுபடுத்தப்பட்ட சுதந்திரம், சாமர்த்திய வீடுகள், விதவைகள் வாழ்வு எனப்பல பெண்ணிய மனநிலையில் இருந்து ஒரு தசாப்பத்திற்கு முன் எழுப்பப்பட்ட கேள்விஅலைகள் இன்னமும் அதிர்ந்து கொண்டே இருப்பது நமது சமுகத்தின் சோகம்//
//உறவொன்று முகிழ்வதற்கு
காரணங்கள்
நூறு அரும்பவேண்டும்
ஒரேயொரு சறுக்கல் போதும்
நாம் யாரோ என்றுஎல்லாம் உதறிப் போவதற்கு.//
சி.புஸ்பராஜா எழுதிய, 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்'
//சி.புஸ்பராவாவின் இந்த நாவல், எமது போராட்டத்தின் பல சிடுக்குகளை இழைகளாகப் பிரித்துபோட்டிருக்கிறது. சுயவரலாற்று நாவல்கள் பலவற்றிற்கு உள்ள மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால், எழுதுபவர் தன்னை வரலாற்றில் நேர்மை உள்ளவராகக் காட்ட அதீதமாக முனைவதுதான். அந்தக்குறைபாடுடன் தான் இந்த நூலையும் வாசிக்கவேண்டியிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.//
வரிகள் பேசின.... டிசேவைப் பற்றி...
icarus prakash
மூத்த வலைப்பதிவாளர்(சண்டைக்கு வரப் போகிறார்). ரொம்ப பெரிய ஆள்., பேட்டி எடுத்திருக்கிறார். இவருடைய கதைகள் கல்கில வந்திருக்கு., நெடுநாள் வலைபதிபவர்களுடன் நீடித்த தொடர்பு கலந்துரையாடல், அப்புறம் குறும்பட பட்டரை அப்படி, இப்படின்னு கலக்கிட்டு இருக்கிறார். இவருடைய பதிவுகள் இங்கே.
இவருடைய பதிவிலும் விமர்சனங்கள் கட்டுரை, கதை, கவிதை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என விரிகின்றன.

//நம்முடைய வாழ்க்கையின் அடிப்படையை அசைத்துப் பார்க்கும் விஷயங்களைத் தவிர்த்து விட்டு, சும்மா சலனம் ஏற்படுத்தக் கூடிய விஷயங்களை மட்டுமே , தன்னுடைய பாணியில் விமர்சனம் செய்யும் கட்டுரைகள் அடங்கிய தொகுதி இது// - இப்படி கறரான விமர்சன பார்வை.
கலைஞர் கருணாநிதி பேட்டியொன்றில்.,
//கல்கி : உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமா?
கலைஞர் : இல்லை. அந்த முயற்சியில் நான் ஈடுபடாமல் இருப்பது, மக்கள் மீது எனக்கு உள்ள அன்பைக் காட்டுகின்றது //- இப்படிப் பட்ட இரசனை.
//பாரதியும், செல்லம்மாவும் ஒன்றாக வாழ்ந்த அந்த காலகட்டத்துலே?
எல்லார் மாதிரியும் தரையில நடக்காம, இவர் மட்டும் ஏன் இப்படிவானத்துல பறக்கறார் ன்னு அவங்க செல்லம்மா நெனைச்சிருக்க துளி கூட வாய்ப்பே இல்லீங்களா?//
- இப்படி நகைச் சுவை.
//ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசையில் இருந்தார்கள். எலக்ட்ரானிக்ஸ் படித்தவன், தமிழ் நாடு போலீஸில் சப்.இன்ஸ்பெக்ட்டராக இருக்கிறான். பிஎச்டி செய்ய ஆசைப்பட்டவள், ஹோம் மேக்கராக இருக்கிறாள்.கம்ப்யூட்டரே வேணாம் என்று ஓடி, எம்பிஏ செய்தவன், ஸா•ட்வேர் கம்பனி வைத்திருக்கிறான். வருஷா வருஷம் முதல் மார்க்கு வாங்கும் தீனா, சூரியன் எ•ப்எம்மிலே ரேடியோ ஜாக்கி. இன்னொரு கேஸ், ஏபிஎன் ஆம்ரோவிலே எக்ஸிக்யூட்டிவ்,. என் கதையைக் கேக்கவே வேணாம் :-)// – இப்படி ஒரு நகைமுரண்.
//எந்த ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும், அதற்கு தகுந்த புத்தகம், ஆங்கிலத்தில் உண்டு. மோட்டார் சைக்கிள் மெக்கானிஸத்தில் இருந்து முதலாளித்துவத்த்தின் சாதகபாதகங்கள் வரை, புகைப்பட இயலில் இருந்து, புத்தப்பதிப்புக் கலை வரை, ஆர்னித்தாலஜியில் இருந்து அமெரிக்க கலாசாரம் வரை என்று பலதும் ஆங்கிலத்தில் உண்டு. தமிழில்?// – இப்படியொரு (என்னுடையதும் இது) ஆதங்கம்.
//இணையத்தில் எழுதத் துவங்கி, இணையத்தில் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் மற்ற நண்பர்களான பாஸ்டன் பாலாஜி, ஹரன்பிரசன்னா, பி.கே.சிவக்குமார், பத்ரி, மூக்கு சுந்தர், கே.வி.ராஜா, மஸ்கட் சுந்தர், மதி, மீனாக்ஸ், காசி, பவித்ரா, சுவடு ஷங்கர், போன்றவர்களும், இணையத்தில் எழுதுவதன் கூடவே, அச்சுப் பத்திரிக்கைகளில் எழுதி, தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய தலைமுறை தோன்ற காரணமாக இருக்க வேணும் என்பது என் ஆவல்//. -இப்படியொரு நேச ஊக்குவிப்பு.

என இவர் பதிவில் எனக்குப் பிடித்ததை சொல்லிக் கொண்டே போகலாம்.
அறிமுகம்
'' வருமானம் போனாலும் தமிழ் மானம் போகக்கூடாது '' என்பதை உயிர்மூச்சாய் கொண்டு இயங்கும் இலட்சியக் கவிஞர் அறிவுமதி அவர்களுக்காக அவரது அபிமானத் தம்பிகளால் துவங்கப் பட்டிருக்கிறது இவ்வலை தளம். . அறிவுமதி பற்றிய திரைத் துறையினரின் கருத்துக்கள், அவரது 'நீலம்' குறும்படம் பற்றிய செய்தி, அவருடன் நேர்காணல், அவரே சாரல் நீர், காற்று, பூத்த நெருப்பு என அனைத்தும் அறிவுமதி பற்றிதான்.
நடிகர்களுக்கான வலைதளம் பார்த்திருக்கிறேன். இங்கு ஒரு கவிஞனுக்கு துவங்கியிருக்கிறார்கள். வரவேற்கிறேன்., அறிவுமதி அவர்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளதினால்.

16 comments:

முத்துகுமரன் said...

அண்ணன் அறிவுமதிக்காக தொடங்கப்பட்டிருக்கும் வலைப்பூவை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி....

விரைவில் அறிவுமதி அண்ணனின் புதிய படைப்புகளும் அந்த வலைப்பூவில் இடம் பெற இருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி

அன்புடன்
முத்துகுமரன்

கொழுவி said...

அதென்ன? வாறகிழமைதானே உங்கட முறை. அதுக்குள்ள முந்தீட்டியள்?

ramachandranusha said...

அதுதானே, அடுத்த வாரம்தானே ஒங்க முறை? பிரகாசர் விரைவில் (!) வருவார் என்று எதிர்பார்க்கிறேன்.

அப்டிப்போடு... said...

முத்துக்குமரன் நன்றி. தம்பிகள் நிறைய எழுதுங்கள் அவரை பற்றி. படிக்க ஆவலாக உள்ளேன். நல்லவர்கள் மேல் உள்ள நம்பிக்கையும், நட்பும் காட்டப்பட வேண்டியவை. பூட்டப்படக் கூடாது. வாழ்த்துக்கள்.

அப்டிப்போடு... said...

கொழுவி, உஷா., இன்றைக்குத்தானே நவம்பர். 29ந் தேதி? இன்று நான், டி,சே, பிரகாஷ் மூன்று பேரும் எழுத வேண்டும். அடுத்த வாரமுமா? பீதியக்கிளப்பாதிகப்பா!., படிச்சுப் படிச்சு கண்ணு வலிக்குது. ஆனால் இனிமையான வலிதான் )))):- இப்படிப் போட்டா சிரிக்கறதுதானே?.

மதி கந்தசாமி (Mathy) said...

கொஞ்சம் மாறிடுச்சு.

நேத்திக்கு டீஜே கேட்டப்பவே எனக்குக் கொஞ்சம் சந்தேகம் வந்திருக்கணும். என்ன செய்யுறது நினைப்பதைச் சரியாகச் சொல்லும் மொழியாளுமை இன்னும் கைவரவில்லை.

நான் என்ன நினைச்சேன்னா, நீங்க இந்த ஒரு வாரம் (அல்லது அதற்கு முன்பும் - ரொம்ப விசேஷம்னா..) படித்த பதிவுகள் பற்றிச் சொல்வீர்கள் என்று...

கூடவே இந்த ஒரு வாரத்தில் தொடங்கிய பதிவுகள் பற்றிச் சொல்வீர்கள் என்றும் எதிர்பார்த்தேன். அதை நன்றாகச் செய்திருக்கிறீர்கள்!

அப்படியே,

டீஜேவின் 'அண்மையில் படித்ததில் பிடித்தது' பதிவின் சுட்டியையும்
இகாரஸ் பிரகாஷின் பதிவின் சுட்டியையும் (எழுதினபிறகு மாத்திக்கலாம்)

அடுத்து நீங்கள் சிபாரிசு செய்யப்போகிறவரின் பெயரையும்

எழுதுங்கள்.

குழப்பத்துக்கு மன்னியுங்க மரம்.

-மதி.

மதி கந்தசாமி (Mathy) said...

Maram,

could you pls enable 'backlinks' in your blog. you can find that in the comment section of your dashboard.

Thanks Maram.

-Mathy

டிசே தமிழன் said...

மரம் எழுதிய பதிவைப் பார்த்தவுடன், நான் எங்கேயோ குழப்படி செய்துவிட்டேன் என்று புரிந்துவிட்டது :-(. மதி, மரம், பிரகாஷ் என்னை மன்னித்தருள்க.
....
அடுத்தடுத்த இரண்டு பரீட்சைகள் இருந்தாலே, இரண்டுக்கும் மாறி மாறி பதிலளிக்கும் 'புத்திசாலித்தனம்' உள்ளவன் என்பதால் இப்படி சொதப்புவது எனக்கு புதியவிடயமல்ல என்பது ஒரு உபகுறிப்பாய்.... :-).
....
மரம், அறிவுமதியின் புதிய தளத்துகான அறிமுகத்துக்கு நன்றி. நான் சந்தித்து உரையாட விரும்புகின்ற சிலரில் இன்குலாப்புக்கும், அறிவுமதிக்கும் என்றும் ஒர் இடம் உண்டு. அறிவுமதியின் படைப்புக்களை விட, அவரது கொள்கைகள், பிடிப்புக்கள், உதவி செய்யும் மனப்பாங்கு என்பவை என்னை அவரிடம் ஈர்க்கின்ற விடயங்கள். 'நட்புக்காலம்' கொஞ்சம் fantasy என்றாலும் எனக்குப் பிடித்த ஒரு தொகுப்பு.

டிசே தமிழன் said...

மேலே சொல்ல மறந்த ஒரு விடயம்...
மரம், எனது பதிவுகளுக்கான உங்கள் குறிப்புக்களுக்கு நன்றி; அதிகப்படியான பாராட்டு என்கின்றபோதும் :-).

icarus prakash said...

செடி, ( உங்களை மரம்னு சொல்ல மன்சு வர்ல), எப்போதோ எழுதிய விஷயங்களை எல்லாம் தேடி எடுத்துப் போட்டிருக்கீங்க.. படிக்கும் போது ஜில்லுன்னு இருந்தது... ரொம்ப டாங்ஸ¤

பத்மா அர்விந்த் said...

பிரகாசின் பதிவுகளின் தொகுப்பிற்கு நன்றி. முன்பே படித்ததுதான் என்றாலும் மீண்டும் படிக்க சுகமாகவே இருந்தது.
டீசே என்ற கட்டுரையாளனைவிட கவிஞன் இன்னும் அதிக சக்தி கொண்டவராயிருக்கிறார். நல்ல தொகுப்புரை. நன்றி

அப்டிப்போடு... said...

மதி, நான் பொதுவாக, நீங்கள் குறிப்பிட்டவர்களின் வலை தளத்தைப் பற்றி எழுத சொன்னீர்கள் என நினைத்து விட்டேன். எனினும் நான் படிக்காமல் விட்ட பதிவுகளை படிக்க முடிந்தது. நன்றி.

அப்டிப்போடு... said...

டி.சே அது அதிகப்படியான புகழ்ச்சி இல்லை. உங்கள் வயதிலிருக்கும் என் தம்பியிடம் "சுரா" "பரா" ந்னு சொன்னேன்னா., எங்கிட்டயிருந்து பத்தடி தள்ளி நின்னுக்குவான். (என்னாடா இது இவ்வளவு நேரம் நல்லாத்தானே இருந்துச்சுங்கிற கேள்வியோட!..). உங்களையெல்லாம் படிச்சா பெரு மூச்சுதான் வருது பேங்க!!.

//அறிவுமதியின் படைப்புக்களை விட, அவரது கொள்கைகள், பிடிப்புக்கள், உதவி செய்யும் மனப்பாங்கு//

அவருடைய படைப்புகளும் வரப்போகின்றன நான் குறிப்பிட்ட தளத்தில்.

அப்டிப்போடு... said...

பிரகாஷ்., உங்களுடைய பதிவுகள் பலவற்றை வாசித்திருக்கிறேன் என்றாலும்., இப்போது பெரும்பான்மையாக வாசிக்க முடிந்தது. கலக்கியிருக்கிறீர்கள் பலவற்றில், நான் குழப்பிவிட்டாலும் மதிக்கு இதற்காய் நன்றி.

அப்டிப்போடு... said...

பத்மா., நன்றி.

Sindhu said...

படித்ததில் பிடித்தது/வலைப்பூ அப்டீன்னு போன வாரம் ஒரு பதிவு நீங்களும் டீசே தமிழனும் மரமும் எழுதினீங்களே. இதோ செவ்வாய் முடிஞ்சு புதன் வந்திருச்சு. நீங்க மூணு பேரும் சிபாரிசு செஞ்ச காசியும் கண்ணனும் முத்துக்குமரனும் எழுதலையே.
நல்ல விஷயம்னு நினைச்சேன். புதுசா வர்ர என்னை மாதிரி ஆள்களுக்கு உதவும்னும் நினைச்சேன். கொஞ்சம் பாருங்க ப்ளீஸ்.