Sunday, November 27, 2005

கலைஞர் கருத்து

கலைஞர் வாயைத் திறந்தார் டிக்கிடி., டிக்கிடின்னு தமிழ் மணத்துல மூணு பதிவு. பொறுங்க! நான் அதை குறையெல்லாம் சொல்லல!!. எங்கூரு மிதக்குது.!, எனக்கு அதுக்கு நேரமுமில்ல. எனக்குத் தோணுன கேள்விகள மட்டும் கேட்டுட்டுப் போயிட்டு வாரேன்.

1. அது ஏன் கலைஞரைப் பற்றி பேசும் போது மட்டும்., எப்பவும் ஆரம்பத்துல இருந்தே தொடங்குறிங்க?. கல்கி அவர்களின் வரலாற்று நாவல் மாதிரி..., திரும்பத் திரும்ப எம்.ஜி.யார மலையாளின்னது., அவர கட்சியவிட்டு வெளியேத்துனது., இவ்வளவு காலம் கழித்தும் இந்த விதயத்துக்கு, நேத்துதான் நடந்த மாதிரி உணர்ச்சிவசப் படுகிறீர்களே அது எப்படி? என்னாத்துனால?

2. கலைஞர் கருத்து சொன்ன இந்த விவகாரம் அவர் சொன்ன 'ரூட்ல' போகணும்னுதான., வேண்டாத பெரியாரை... வம்படியா துணைக்கு அழைச்சாங்க..... குஷ்புவின் நிலை கண்டு கொதித்தவர்கள். நம்ம நாட்டுல பெண்களைப் பற்றியும்., பெண் சுதந்திரத்தைப் பற்றியும் பேசாத தலைவர் யாரு? ஆனா பெரியாரை மட்டும் துணைக்கழைத்து ஒரே கல்லுல என்னாத்த அடிக்கப் பாத்தாங்க?.

4. 1977ல தி.மு.க தோற்றது இப்ப நினைத்து பெரு மகிழ்ச்சி அடைகிறீர்கள். 1950 ல வந்த வாதம் இப்ப எடுபடாது., இந்த வாதத்த கிளப்புனியோ உன் அரசியல் வாழ்வு அம்புட்டுதான்னு பயமுறுத்துகிறீர்கள். சமன்பாடுகளை சமன் செய்து வெளியிட்டு எதை நிரூபணம் செய்கிறீர்கள்?

5. பஞ்சம் வந்தப்ப., மக்கள் பட்டினி கிடந்தபோதெல்லாம் ஆயிரம் அறிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டு இருக்கிறது. அதெற்கெல்லாம் இவ்வளவு முக்கியம் கொடுத்து பதிவிட்டிருக்கிறீர்களா?

6. திருச்சில வெள்ளம் கரை புரண்டு மக்கள் அவதி டி.வியில் காணச் சகிக்காததாய் கண்ணீர் வர வைக்கிறது. அதைவிட இந்த விதயம் அவ்வளவு முக்கியமானதா?. குஷ்புவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால்., அதிரடி படைக்கு எதிரா ஆர்ப்பாட்டம் பண்ணுனிங்களா?ன்னு டக்கு, டக்கு கேள்விகேட்குற நீங்க இதைக் கொஞ்சம் யோசிச்சுப் பாப்பிங்களா?
பின்குறிப்பு : உணர்ச்சிவயப் படாமல்., ஆரோக்கியமான முறையில் மட்டுமே பின்னூட்டம் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

10 comments:

முகமூடி said...

// திருச்சில வெள்ளம் கரை புரண்டு மக்கள் அவதி டி.வியில் காணச் சகிக்காததாய் கண்ணீர் வர வைக்கிறது. அதைவிட இந்த விதயம் அவ்வளவு முக்கியமானதா? //

// எங்கூரு மிதக்குது // இந்த கண்ணீர் நேரத்திலும் கூட, கலைஞரை குறை சொல்வதை கண்டால் பதற வேண்டும் என்ற அளவில் // உணர்ச்சிவயப் படாமல் // இருந்திருந்தால் இந்த பதிவே அவ்வளவு முக்கியமானதா? என்று ஒருக்கால் உங்களுக்கு தோன்றியிருந்தாலும் இருக் கலாம்...

இதற்கு ஏதும் பதில் சொல்வதானால் உணர்ச்சிவயப் படாமல்., ஆரோக்கியமான முறையில் மட்டுமே பதில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முத்து(தமிழினி) said...

அப்படிப்போடு அரிவாளை

முத்துகுமரன் said...

இதற்காகத்தான் கலைஞர் அமைதியாக இருந்தார். கற்பு பிரச்சனையில் எல்லோரும் வலிய வலிய பெரியாரை துணைக்கழைத்து அவரை சிறுமைப்படுத்த முயற்ச்சித்தனர். பெரியார் ஒழுக்க கேட்டிற்கு சாமரம் வீசியவர் என்று நிறுவ படாத பாடு பட்டனர். இந்த சூதறியாமல் பலியான பெரியாரியவாதிகளும் சிலருண்டு.

கலைஞரின் உடம்பில் ஓடும் கொஞ்சூண்டு திராவிட ரத்தம் உயிர்ப்புடன் இருப்பதால்தான் பிரச்சனை எந்த திசையில் நகர்த்தப்பட்டிருக்கிரது என்பதை மறைக்காமல் சொல்லிவிட்டார். முகமுடி கிழிந்தவர்கள் லபோதிபோ அன்று அலறுகிறார்கள்.

ramachandranusha said...

//டிக்கிடி., டிக்கிடின்னு தமிழ் மணத்துல மூணு பதிவு// :-))))))))))))))))))))

மாயவரத்தான்... said...

மரம்..முக்கியமான மேட்டரை மறந்திட்டீங்க. கருணாநிதி இதான் சாக்குன்னு வெளக்கமாறு, செருப்பு காட்டுறது கேவலமான விஷயம்ன்னு சொல்லிருக்காரு. சுஹாசினி, குஷ்புவை சொல்ற மாதிரி பா.ம.க.வையும், சிறுத்தையையும் இடிச்சிருக்காரு.

ROSAVASANTH said...

//பெரியார் ஒழுக்க கேட்டிற்கு சாமரம் வீசியவர் என்று நிறுவ படாத பாடு பட்டனர்.//

முத்துகுமரன் பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?' ஒழுங்காய் படித்திருபாரா என்று தெரியவில்லை. ஒரு உதாரணமாக அதில் தெளிவாகவே பலதாரதிருமணம் தொடங்கி பலவற்றை நேரடியாகவே ஆதரித்திருப்பார். ஆனால் நேர்மையாக ஆணுக்கு சொல்லப்படும் அனைத்தும் பெண்களுக்கும் பொருந்தும் என்றும் சொல்லியிருப்பார். இங்கே 'ஒழுக்கக்கேடு' என்பதாக 'தமிழ் பாதுகாவலர்களால்' எதெல்லாம் சொல்லப்படுகிறதோ அதற்கெல்லாம் அதற்கு அதரவாக பெரியார் சொன்னதை எடுத்துகாட்ட முடியும். தமிழ் தேசியவாதிகள் சொல்வது போல் ஏதோ ஒரு வாக்கியதை வைத்து ஜல்லியடிக்கும் விஷயம் அல்ல.

அப்டிப்போடு... said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

அப்படிப்போடு மரமும் டிக்கிடி., டிக்கிடின்னு ஒரு பதிவு போட்டுட்டார் :-))))

இனிமே புதுக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இது பற்றிப்பேசும் போது இது இன்னொரு சுத்து வரும்.

வேறு எந்த ஹாட் மேட்டராவது அடுத்து வரும் வரை இதுதான் வெள்ளிவிழாவாக ஓடும்.

நாட்டாமை said...

/1. அது ஏன் கலைஞரைப் பற்றி பேசும் போது மட்டும்., எப்பவும் ஆரம்பத்துல இருந்தே தொடங்குறிங்க?. கல்கி அவர்களின் வரலாற்று நாவல் மாதிரி..., திரும்பத் திரும்ப எம்.ஜி.யார மலையாளின்னது., அவர கட்சியவிட்டு வெளியேத்துனது., இவ்வளவு காலம் கழித்தும் இந்த விதயத்துக்கு, நேத்துதான் நடந்த மாதிரி உணர்ச்சிவசப் படுகிறீர்களே அது எப்படி? என்னாத்துனால?/

அது ஏன்னா அவரும் எதுக்கெடுத்தாலும் கைபர் கணவாய்,புறநானூறு அப்படின்னு ஆரம்பத்துக்கு போயிடறாரு.அதான் நாங்களும் அவர் வழியை பின்பற்றுகிறோம்.

/நம்ம நாட்டுல பெண்களைப் பற்றியும்., பெண் சுதந்திரத்தைப் பற்றியும் பேசாத தலைவர் யாரு? ஆனா பெரியாரை மட்டும் துணைக்கழைத்து ஒரே கல்லுல என்னாத்த அடிக்கப் பாத்தாங்க?./

ராமதாஸ் கட்சி சின்னமான மாங்காயை அடிக்க பாத்தோம்னா நினைக்கறீங்க?அப்படி எல்லாம் இல்லைங்க.பெரியார் மாதிரி இந்த விசயத்துல புரட்சிகரமா கருத்து சொன்ன பெரிய தலைவர்னு தமிழ்நாட்டுல வேற யாருமில்லைங்க.அப்படி இருந்தா சொல்லுங்க.அவர் பெயரையும் சேத்தி சொல்றோம்.

/சமன்பாடுகளை சமன் செய்து வெளியிட்டு எதை நிரூபணம் செய்கிறீர்கள்?/

பெரியார் = குஷ்பு

அப்படின்னு நிருபணம் செய்யறோமுங்கண்ணோவ்

/பஞ்சம் வந்தப்ப., மக்கள் பட்டினி கிடந்தபோதெல்லாம் ஆயிரம் அறிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டு இருக்கிறது. அதெற்கெல்லாம் இவ்வளவு முக்கியம் கொடுத்து பதிவிட்டிருக்கிறீர்களா?/

பஞ்சம் வந்தப்ப,மக்கள் பட்டினி கிடந்தப்ப நீங்க பதிவு போட்டிங்களாக்கும்?குஷ்பு அப்படின்னாலே சனங்களுக்கு ஒரு சந்தோஷம்.அவங்களை பத்தி செய்தி வந்தா அதுவே ஒரு செய்தியாயிடுது.அம்புட்டுதேன்..

/திருச்சில வெள்ளம் கரை புரண்டு மக்கள் அவதி டி.வியில் காணச் சகிக்காததாய் கண்ணீர் வர வைக்கிறது. அதைவிட இந்த விதயம் அவ்வளவு முக்கியமானதா?. /

அதேதானுங்கண்ணா..நீங்க மட்டும் ஏனுங்கண்ணா இன்னும் வெள்ளம் பூகம்பம் பத்தி இன்னும் பதிவு போடலை?

அப்டிப்போடு... said...

கல்வெட்டு நன்றி, நாட்டமை., எல்லாத்தையும் நக்கல் அடிக்கறதுதான் உங்க தொழிலாம்ல்ல?. நான்., அண்ணன்னு உங்களுக்கு யாரும் சொன்னாங்களா? இல்ல இதுவும் நக்கல்தானா?