Thursday, November 03, 2005

அரசு ஊழியர்கள் - பகுதி - 4.

ஊர் துறையூர்., காலம் - சாந்தா ஷீலா நாயர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த காலம். இடம் - பஞ்சாயத்து யூனியன் அலுவலகம். அவர்- 5 வேளை தவறாமல் தொழுகை செய்யும் ஒரு இஸ்லாமிய சகோதரர். அந்த பஞ்சாயத்து யூனியனின் ஆணையர். அந்த நாள் - மாவட்ட வருவாய் (ரெவின்யூ) அலுவலகத்தின் கணக்கு வழக்குகள் பார்க்கும் சடங்கு (ஜமாபந்தி) அங்குள்ள இடப் பற்றாக்குறையால் பஞ்சாயத்து யூனியனில் நடந்து கொண்டிருந்தது. எனவே பஞ்சாயத்து யூனியன் ஊழியர்கள் மற்றும் ரெவின்யூ ஊழியர்களையும் சேர்த்து ஜே ஜே என்று இருக்கின்றது அலுவலகம்.

அலுகத்தின் முன்புறம் திடீரென்று சர.. சர வென சில கார்கள் வந்து நிற்க்கின்றன. அதிலிருந்து இறங்குகிறார் அவ்வூர் எம்.எல்.ஏ. விடு, விடுவென ஆணையரின் அறைக்குச் சென்றார் சில பல அவரது கைத்தடிகளுடன். ஒரு டெண்டர் விசயமாக பலத்த வாக்குவாதம் நடந்தது. அரசாணையை மீறி செய்யமாட்டேன் என ஆணையரும்., எம்.எல்.ஏ சொல்கிறேன் செய்ய வேண்டுமென எம்.எல்.ஏவும். வாக்குவாதம் முற்றி எம்.எல்.ஏ ஆணையரின் மீது அடிக்கப் பாய்ந்து அவரது உடையைப் பற்றி வெளியே இழுத்து வந்தார். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தனர். பின்பு சுதாரித்து., ஒரு எம்.எல்.ஏ எப்படி எங்கள் ஆணையர் மீது கைவைக்கலாம்? என அலுவலகத்தை பூட்டிவிட்டு வெளியே வந்து வேலை நிறுத்தம் செய்தனர். பாதிக்கப் பட்டவர் நேராக திருச்சி கலைக்டர் அலுவலகம் வந்து., தனக்கு நேர்ந்த அவமானத்தால் இனி அந்த அலுவலகத்துக்கு செல்ல முடியாதென்றும்., தனக்கு விடுப்பளிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஆணையரின் நேர்மைக்கு ஒரு சான்றை மட்டும் கூறுகிறேன். ஊழியர் சேமிப்பு பணத்திற்கு (PF) வரும் வட்டியைக் கூட வாங்கிக் கொள்ளாதவர். அவருடைய சேமிப்பிற்கு அரசு தரும் வட்டியைக் கூட வாங்கிக் கொள்ள மறுக்கும் நேர்மையாளர்.

அப்போதே சிலர் இதைப் பற்றி காவல் துறையிடம் புகார் செய்யலாம் என கூறியுள்ளனர். ஆனால் இவரோ நான் ஆண்டவனிடம் முறையிட்டு விட்டேன். வேறு எங்கும் முறையிட்டுப் பயனில்லை என்று கூறி அமைதிப் படுத்தி விட்டார்.

ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் இதைப் பற்றிய விசாரணைக்கு உத்தரவிட்டு, நடந்த விசாரணையில் இதைப் பற்றி காவல்துறையில் புகார் உள்ளதா என கேட்கப் பட்டது. இவர் ஆண்டவனிடம் முறையிட்டேன் என்று சொல்ல அனைவரும் நகைத்துவிட்டு., எம்.எல்.ஏ வை அழைத்து இருவரும் சமசரசமாகப் போகும்படி அறிவுருத்தி இருக்கிறார்கள்.

ஆனால் இதே காலத்தில் அந்த எம்.எல்.ஏ மீது மற்றுமொரு வழக்கு நடந்தது. அதாவது அவர் தான் மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர் என பொய்யாக பிறப்புச் சான்றிதழ் வாங்கி, (மலை வாழ் மக்களுக்கான தொகுதியில்) எம்.எல்.ஏ ஆனார் என வழக்கு. வழக்கு நிறுபிக்கப் பட்டு அந்த எம்.எல்.ஏ அவரது பதவியை இழந்தார்.

*******************

எங்கள் காலனியில் வசித்த, அப்துல் ஜப்பார் என்பவர் வருடா வருடம் தீபாவளிக்கு, அவருடைய வீட்டில் பலகாரங்கள் செய்ய வைத்து, விழி இழந்தோர் பள்ளிக்கும்., திருச்சி, மத்திய சிறைச்சாலை கைதிகளுக்கும் அளிப்பார். சிறையில் அவர் கொண்டு செல்லும் உணவுப் பண்டங்களை பரிசோதித்து முடிக்கும் வரை அங்கிருந்து, காவலர்கள் " சரி எல்லோருக்கும் தருகிறோம்" என்று சொன்னவுடன்தான் வீடு திரும்புவார்.


அனைவருக்கும் எனது இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள். ரமலான் அன்று நீங்கள் செய்யும் பிரியாணியின் மணம் போல்., எட்டுத்திக்கிலும் உங்கள் புகழ் பரவ வேண்டுகிறேன்.

8 comments:

Priya said...

Welcome back Maram. இது போல் நேர்மையின் சின்னமாக விளங்கும் அரசு ஊழியர்களைப் பற்றிய செய்திகள் அரசு அலுவலகங்களில் சுற்றறிக்கைகளில் தெரியப்படுத்தப் படவேண்டும். May be they should implement an incentive system based on peer feedback.
பெருமைக்கெனவாவது மக்கள் நேர்மையைக் கடைப்பிடிக்கத் தொடங்குகிறார்களா எனப் பார்க்கலாமே?

அப்டிப்போடு... said...

நன்றி.ப்ரியா., பகுதி - 3 பார்த்தீர்களா?.

Priya said...

மரம். பகுதி 3 ல் பின்னூட்டம் இட்டிருக்கிறேன் பாருங்கள். இதைப் படிக்கும்போதே நினைத்தேன், பகுதி 3 ஐப் பார்த்த மாதிரியே நினைவில்லையே என்று.
உங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?

Priya said...

Thank you maram. Pl. check your email.

அப்டிப்போடு... said...

ப்ரியா, உங்கள் மெயில் பாருங்கள். இது பொது இடம் என்பதால் என் மெயில் ஐ.டியை மேற்கண்ட உங்கள் பின்னுட்டம் வந்ததும் அழித்து விட்டேன். என் தனி மடல் வந்ததா?.

Priya said...

Got your mail maram. Hope you got my reply too. Thanks

யாத்திரீகன் said...

பதவி ஒன்று வந்து விட்டால் போதுமே இவர்களை ஏத்துவதற்கென்று ஒரு கூட்டம்...

அப்புறம் ஆணையர் என்ன கலெக்டரையே மதிக்க மாட்டாங்க...

ENNAR said...

அப்படி போட்டு தாக்கு இது நல்ல பதிவுதான் வரவேற்கிறேன்.