Friday, September 30, 2005

பெய்யெனப் பெய்யும் மழை

தமிழ் கடலில் இன்று பல இலக்கிய வடிவங்கள் அழிந்து போய் 'பாரதி' விட்டுச் சென்ற புதுக் கவிதை ஒன்று மட்டுமே பெரும்பான்மையாக எழுதப் பட்டு வருகிறது. மிக அரிதாகவே மரபுக் கவிதைகள் வருகின்றன. புறமும், அகமும் எப்படியோ வேறுபட்ட வடிவங்களில் திரையிசைப் பாடல்கள் மூலம் அவ்வப்போது கிடைக்கின்றது. ஆனால் ஆற்றுப் பாடல்கள், கலம்பகம், பிள்ளைத்தமிழ், தூது போன்ற அழகிய இலக்கிய வடிவங்கள் மறைந்தே போய்விட்டது எனலாம். அக்காலத்தில் உரைநடை வடிவமில்லை., புதுக்கவிதை வடிவமில்லை. இன்று தூது போன்றவை உரை நடையில் மட்டுமே காணக் கிடைக்கின்றன. கலம்பகம் என்ற இலக்கிய வடிவத்தில் முதல் நூல், மூன்றாம் நந்திவர்மன் மேல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட நந்திக் கலம்பகம்., இந்த நூலைப் பாடி முடிக்கும் போது, நந்திவர்மன் மாண்டான் என்ற தகலும் உண்டு., நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும் என்று ஒரு குறிப்புண்டு. சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் உடலுக்கு நலம் பயப்பதைப் போல் உள்ள நலம் பேணும் மும்மூன்று மருந்துகளை (நன்நடத்தைகள்) பற்றிய குறிப்பாக உள்ள திரிகடுகத்தைப் படித்த போது., அதில் என்னைக் கவர்ந்தவற்றை இங்கு தருகின்றேன். திரிகடுகத்தை எழுதியவர் ஆதனார்.

உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்;
அலகு இல் அக நோய் அகற்றும் - நிலை கொள்
திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்
மருவு நல்லாதன் மருந்து.

(கடுகங்கள் உடல் நோயை மாற்றுவதைப் போல., உள்ள(மனம்) நோய் நீக்கும் நிலையான வழிகளை திரிகடுகம் என்ற பெயரில் நல்லாதனார் வழங்கும் மருந்துகள்.).
இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும்,
இவ் உலகின்நில்லாமை உள்ளும் நெறிப்பாடும்,
எவ் உயிர்க்கும்துன்புறுவ செய்யாத தூய்மையும், - இம் மூன்றும்
நன்று அறியும் மாந்தர்க்கு உள.
(68வது பாடல்)

முறை செய்யான் பெற்ற தலைமையும்,
நெஞ்சின்நிறை இல்லான் கொண்ட தவமும்,
நிறை ஒழுக்கம்தேற்றாதான் பெற்ற வனப்பும், - இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து.
(68வது பாடல்)

கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி;
கொண்டனசெய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ,
நல்லவை செய்வான் அரசன்; - இவர் மூவர்,
'பெய்' எனப் பெய்யும் மழை.
(96 வது பாடல்)

7 comments:

Priya said...

நல்ல பதிவு அப்டிப்போடு. பின்னுறீங்க. எல்லா விஷயங்களையும் அழகா அலசி, செறிவோட பதியுறீங்க. தொடர்ந்து கலக்க வாழ்த்துகள்

வசந்தன்(Vasanthan) said...

இப்பிடியே உங்களைக் கவர்ந்த வேற பாடல்களையும் போடுங்கோ.
நல்லாயிருக்கு.

அப்டிப்போடு... said...

நன்றி, பிரியா சிவராமகிருஷ்ணன்.
நன்றி வசந்தன்., நீங்க படிக்க தயாரா இருந்தா., நான் பதிய தயார்.

மதி கந்தசாமி (Mathy) said...

கலக்கல் அப்டிபோடு! நீங்க யாகூ குழுமங்களில் பரிச்சயமுள்ளவரா?

இங்கே எழுதுகின்ற ஹரியண்ணா(ஹரி கிருஷ்ணன் - http://harimozhi.com)

http://groups.yahoo.com/group/marabilakkiyam

என்னும் குழுமத்தை நடாத்தி வருகிறார்.

சந்தவசந்தம் குழுமத்திலும் மரபுக்கவிதைகள் முக்கிய விவாதப்பொருள்.

---

தொடர்ந்து எழுதுங்கள் மரம்.

-மதி

தாணு said...

புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தோணாவிட்டாலும் உங்களப் போன்றவர்கள் ரசித்தவை, எங்களுக்கு கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து. தொடர்ந்து எழுதுங்கள்

Vaa.Manikandan said...

uRsaakaththudan thodarunggaL.

அப்டிப்போடு... said...

ஊக்குவிப்பிற்கு நன்றி மதி, தாணு, மணிகண்டன்.