Tuesday, July 26, 2005

நம்பிக்கை - கவிதை

நாராயண் வெங்கட்... அறிவித்திருந்த போட்டிக்கு., என் முயற்சி...

***************

நம்பிக்கையுடன் தான் புற்றெடுக்கிறது கரையான்
நாகம் குடிபுகும் எனத் தெரிந்தும்....
சீக்கிரம் வா! ஓட்டுப் போட....

சத்துணவு, முட்டை, சேலைவேட்டி, சைக்கிள்
சாமானியன் நலனோ?., ஓநாய் கண்ணீரோ?...
குத்து பணம் கொடுத்த கட்சிபார்த்து...

கிணற்றில் கிடக்கும் ஜனநாயகமே! - இதோ
பற்றிக்கொள் நம்பிக்கை கயிற்றை... விட்டுவிடாதே....?!




********************
நன்றி தோழி.சந்திரவதனா., விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

NOW WE HAVE A OPPORTUNITY TO CAST OUR VOTES TO MAKE TAMIL AS OFFICIAL LANGUAGE IN THE UN. PLEASE DO NOT MISS THIS GRATE OPPORTUNITY. ASK ALL OUR KNOWN PEOPLES TO VOTE FOR IT.Go to:http://petitions.takingitglobal.org/ClassicalTamil

2 comments:

குழலி / Kuzhali said...

இன்றுதான் உங்கள் பழைய பதிவுளில் சிலவற்றை படித்தேன் கலக்கியிருக்கிங்க போங்க, ஒத்தை ஆளா நின்னு விளையாடியிருக்கிங்க, உண்மைய சொன்னா நீங்கதான் புரட்சித் தலைவி...

இந்த கவிதை நன்றாக உள்ளது, அந்த நாரயணன் பதிவுக்கு சுட்டி தாங்களேன் அப்படி என்ன இருக்கு எல்லோரும் கவிதை எழுதறிங்கனு பார்ப்போம்

அப்டிப்போடு... said...

குழலி., புரட்சித் தலைவியா?., புரட்டுத் தலைவியா நான் இல்லாம இருந்தாலே போதும். உங்கள் பதிவுகளை ஆற அமரப் படிக்க வேண்டும் என நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதோ நீங்கள் கேட்ட சுட்டி., http://mentalcentral.blogspot.com/2005/07/blog-post_112192738039102868.html