Monday, June 20, 2005

கூத்தரும், பாணரும்.

பழந்தமிழகத்தில் மன்னர்களை மகிழ்விக்க கூத்தர், பாணர், பொருநர், விறலியர் போன்றோர் மன்னனது ஈகை குணம், வீரம் போன்றவற்றை உயர்த்திக் கூறி., மண்ணகங் காவல் மன்னன் முன்னர் தான் எண்ணிய பரிசு இதுவெனவும் கூறி வாங்கிச் செல்வார்கலாம். ஈகையையும், வீரத்தையும் இரு கண்ணென போற்றி இருந்திருக்கிறார்கள் அக்காலத்தில். அப்போது கூட 'வல்வில் ஓரி' என்ற மன்னனைப் பார்க்க வந்து ஏமாந்த புலவர் ஒருவர்.,

"ஈயென இரத்தல் இழிந்தன்று அதனின்
ஈயேன் என்றல் அதனினும் இழிது.. "

எனத் துவங்கிய புறப் பாட்டொன்றைப் பாடி இருக்கிறார். கடலில் எவ்வளவு நீர் இருந்தாலும் அதை ஆடு., மாடுகள் குடிப்பதில்லை., ஆனால்

'ஆவும் மாவும் சென்றுணக் கலங்கி,
சேறோடு பட்ட சிறுமைய தாயினும்
உண்ணீர் மருங்கின் அதற் பலவாகும்...
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர் அதனால்....."

இப்படிப் போகின்றது அப்பாட்டு. பாரி, பேகன் போன்று கடையெழு வள்ளல்களில் ஒருவன் ஓரி... அவனே ஒரு புலவரைப் புலம்ப வைத்திருக்கிறானென்றால்., உண்மையில் நமது நாட்டில் ஈகை தழைத்திருந்ததா?.
அக்காலத்தில், புலவர்கள் தான் நிறைய பொருட்கள் பெற்ற இடத்தை மற்ற பணர்களுக்கு அடையாளம் காட்ட, ஆற்றுப் படுத்துதல் அதாவது 'வழிப்படுத்துதல்' என்ற மரபை வைத்திருந்திருக்கிறார்கள்., "பெற்ற பெருவளம்., பெறார்க்கு அறிகுறீயீச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்". அன்று செய்யுள் எழுதினார்கள்., இன்று அனைத்தும் உரைநடையாயிற்று. ஆனால் செய்யுள் எழுதியவன்., "இவ்வளவு பெற்றேன்; நீயும் சென்று வாங்கிக்கொள்" என்கிறான்., ஆனால் நம் எழுத்தாளர்கள்?. அதைவிட அவர்களின் குணத்தைப் பற்றி சொல்லும்போது,
"புகழெனின் உயிருங் கொடுக்குவர்
பழியெனின் உலகோடு பெறினுங் கொள்ளலர்
அயர்விலர் அன்ன மாட்சியினராகி.... "

தமெக்கென முயலாமல் ...பிறர்கென முயலுனர்..... இதையெல்லாம் படிக்கும்போது., கற்பனையை ஏற்றி இதையெல்லாம் கூறியிருப்பரோ என்றே எண்ணத் தோன்றுகின்றது. எனெனில் இவற்றையெல்லாம் படித்து வந்தவர்கள்தாம் நாமும்...நமது எழுத்தாளர்களும். நாலுபேர் கவனத்தை ஈர்க்க., எத்தகைய பழியையும் எழுதத் தயங்குவதில்லை நாம். அன்றைய புலவர்களின் சங்கிலித் தொடர்தான் எழுத்தாளர்களென்றால்., ஒரு மாட்சிமைகூட கைவரவில்லையே ஏன்?.
அன்று மன்னராயிருந்தவர்கள் சிலர் புலவராகவும் இருந்திருக்கிறார்., புலவர்களோ, கூத்தர்களோ மன்னராக இருந்திருக்கின்றனரா?., எனக்கு தெரியவில்லை., தெரிந்தவர் சொல்வீர். ஆனால் இன்று மன்னாராட்சி கடந்த காலமாகி., மக்களாட்சி!!., பரிசு வாங்கிய கூத்தர்கள் கொடுக்கிறார்கள்., கூத்தாடுவதே மன்னராகத்தான்?!.

3 comments:

Thangamani said...

//கற்பனையை ஏற்றி இதையெல்லாம் கூறியிருப்பரோ என்றே எண்ணத் தோன்றுகின்றது.//

அவ்வையை படிக்கும் போதும் அப்படித் தோன்றியதில்லை..

Moorthi said...

அரசவைக் கவிஞரைத்தவிர மற்ற புலவர்களின் வாழ்க்கை அவ்வளவு பெரிய வசதியோடு இல்லை என்பதுதானே உண்மை. அன்றும் அதான்.. இன்றும் அதேதான். சும்மனாச்சிக்குமாவது மன்னனைப் புகழ்ந்து பொருளீட்டினர். அடுப்பின்மீது பூனை தூங்கியது போன்ற கவிதைகள் எழுதி தங்கள் வறுமையை உலகிற்கு உணத்தினார்கள்.

Nagarathinam said...

அன்புள்ள நண்பருக்கு
தங்கள் வலைத்தளத்தைப் பற்றி தினமலர் இரண்டாம் பக்கத்தில் எழுதி உள்ளேன். பார்த்தீர்களா? இன்டர்நெட்டில் படித்துக் கொள்ள....
http://www.dinamalar.com/2005sep25/flash.asp

அன்புள்ள, நாகரத்தினம்.
snagarathinam@gmail.com