Friday, June 17, 2005

இணையத்தில் பதிபவர்களே - பதில் சொல்லுங்கள் இதற்கு!!!

இணைய தளத்தில் தான் பாத்தவற்றை., படித்தவற்றை, அறிந்தவற்றை, புரிந்தவற்றை தினமும் வந்து பதிக்காவிட்டால் கை நடுங்கும் இணைய நண்பர்களைப் பார்த்து கேட்கிறேன்., உங்களைப் பார்த்து கைநீட்டித்தான்., இந்த நள்ளிரவிலும் தூங்காமல் விழித்துக் கேட்கிறேன். நீங்கள் எல்லாம்............ இந்த சவாலுக்கு தயாரா?


ஹி ஹி!! வேற ஒண்ணுமில்ல.....நான் ஒரு கணக்கு சொல்கிறேன்., யார் சரியான விடை சொல்கிறீர்கள் எனப் பார்ப்போம். ((பின்ன தமிழ் மணத்துல தெரியுற மொத மூணு வரியப் படிச்சிட்டு ஓடிப் போயிற்ரிக., 15 நிமிச அற்ப ஆசைன்னு 80 வயசு 'பாய்'(ஸ்) சொல்லிட்டாரு...ம்.. அவருக்கென்ன அவரு வீட்டு 'லாண்டிரி(அட இந்தத் துணி துவைக்கிறது)பில்லக் கூட பத்திரிக்கைகரங்க வெளியிடுவாங்க (இது அவரே சொன்னது)...ஆனா நம்ம??)).


கட்டியால் எட்டுக் கட்டி, 1/4, 1/2, 3/4 ஆக செட்டியார் இறந்த பின்பு (யாரும் அடிக்கவராதீங்க., கணக்குல செட்டியார்னுதான் இருக்கு)சிறு குழந்தை மூன்றிற்கும் பிடாமல் (துண்டு போடாமல்) சரியாக (சம அளவு) பகிர்ந்து கொடுக்கவும்.


புரியாதவர்களுக்காக:

8 கட்டி இருக்குது மாமூ., செட்டியார்க்கு 3 புள்ள குட்டிங்க அக்கா, அவர் அப்பீட்டு ஆனாங்காட்டி..., இந்த மூணு புள்ளங்களுக்கு.... கட்டிகள உடைக்காம சரி சமமா பிரிச்சுக் கொடுக்கணும். எப்பிடி கொடுப்பிங்க?.

மதுர ஏரியா எல்லாம் ஒத்திக்கோ., நிச்சயம் இதுக்கு உங்களுக்கு விடை தெரிஞ்சு இருக்கும். தெரியாங்காட்டி ஒரு தபா 'ட்ரை' பண்ணு தப்பில்ல!. (ராமதாஸ் அண்ணாச்சி கூட்டணி மாறுர ஜோர்ல இருக்காப்ல இருக்கு., இடையில நம்ம தமிழு கொஞ்சம் 'ரெஸ்ட்' எடுக்கட்டும் இன்னான்ற...பா.. நீயி?)

26 comments:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

இந்த ரெண்டு தமிழுமில்லாமல் ஒழுங்கான தமிழ்ல சொல்லுங்க! 1/4, 1/2. 3/4 எல்லாம் என்ன??

ஷ்ரேயா

அப்டிப்போடு... said...

அதைச் சொல்லிவிட்டால்., பதிலச் சொன்ன மாதிரி!!

எட்டு கட்டிகள் உள்ளது கால், அரை, முக்காலாக செட்டியார் இறந்த பின்பு, அவருடைய மூன்று குழந்தைகளுக்கு உடைக்காமல் சமமாகப் பகிர்ந்து கொடுங்கள் ஸ்ஸ்ரேயா........

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

கட்டிகள் எண்ணிக்கை= 8

அதில் 1/4 = 2 (ஒரு பிள்ளைக்கு)
மீதி= 8 - 2 = 6

6ல் 1/2 = 3 (மற்றப் பிள்ளைக்கு)
மீதி = 6- 3 =3

என்னிடம் இருக்கிற கட்டியொன்றையும் சேர்த்தால் 3 + 1 = 4 கட்டி.

4ல் 3/4 = 3 (கடைசிப் பிள்ளைக்கு)

செட்டியாரின் மொத்தக் கட்டிகள் 8ம் 2+3+3 ஆகப் பிரித்தாச்சு.

மீதியாயிருக்கிற என்னுடைய கட்டியை எடுத்துக் கொள்வேன். சரியா??
>>ஷ்ரேயா<<

அப்டிப்போடு... said...

சமமாகப் பிரிக்க வேண்டும்., நானே கணக்குல புலி., கவுக்கக் கூடாது.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

ஒவ்வொரு பிள்ளைக்கும் இவ்விரண்டாகப் பகிர்ந்து குடுத்து, பகிர்ந்து குடுத்ததுக்கு கூலியாக ஷ்ரேயா ஆகிய நான் 2 ஐ எடுத்துக் கொள்வேன். ஆக..2+2+2+2=8 :o)

அப்டிப்போடு... said...

ஷ்ரேயாவிற்கு வேண்டுமென்றால் தங்க கட்டிகள் நான் தருகிறேன்(?)., அந்தக் கட்டிகள் செட்டியாரோட மூன்று குழந்தைகளுக்கு மட்டுமே!

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

8 த.கட்டியையும் ஒன்றாகப் போட்டு உருக்கி 3 சம கட்டிகளாக்கி எடுத்து குடுக்கலாம்..என்ன..கூலிதான் இல்லை. அட! நீங்க தருவீங்க என்று சொன்னது மறந்துபோச்! எத்தனை தரப் போகிறீர்கள்? :o)

அப்டிப்போடு... said...

கணக்குல இருக்கறது தங்க கட்டின்னு நான் சொன்னேனா?... உங்களுக்குத் தரேன்னுதான் சொன்னேன் என்னா ஒரு 10, 15 போதுமா?

லதா said...

2 அரை கட்டிகள் ஒருவருக்கு; 4 கால் கட்டிகள் மற்ற ஒருவருக்கு, 1 கால் கட்டி 1 முக்கால் கட்டி இன்னொருவருக்கு

எனக்கு செய்கூலி, சேதாரம் எதனாச்சும் உண்டா ? :-))

வீ. எம் said...

ஆளுக்கு ஒரு அரைக்கட்டிய கொடுத்து...30 நாளுக்குளே யார் முதல்ல செலவு பன்றாங்களோ அவங்களுக்கு மீதி 5 கட்டினு கொடுக்கனும்னு செட்டியார் ஆத்மா சொல்றான் .. வீ எம் அப்படியே செய்ரான்...
- இப்போ சமீபத்துல ஒரு படம் பார்த்தேன்..அதோட பாதிப்பு வேற ஒன்னும் இல்ல ஹீ ஹீ ஹீ..

எப்படியாச்சும் எடுத்துட்டு போட்டும்..பாழா போறவனுங்க.. எனக்கு ஒரு கட்டி கூட தர மாட்டேங்கறாங்க !!

வீ எம்

அப்டிப்போடு... said...

அய்யா *-* ஏம்பா போட்ட? காரணத்த சொல்லு ராசா! இப்ப மணி இரவு 3.36 மிச்ச நேரமும் தூக்கமில்லாமப் போகப்போவுது.

அப்டிப்போடு... said...

யாரோ இந்தப் பதிவிற்கு *-* என வாக்களித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. 1. அவர் சுஜாதா அவர்களின் அபிமானியாய் இருக்கலாம். அய்யா! அது அவரே ஒருமுறை பத்திரிக்கைப் பேட்டியில் சொன்னதுதான்.(பதிவிலும் தற்போது அதைப் போட்டுவிட்டேன்).
2. இந்தக் கணக்கு நாட்டுப் புறங்களில்., குறிப்பாக மதுரைப் பக்கத்தில் சொல்லப்படுவது. எனவே அதை அப்படியே சொல்லிருக்கிறேன். எனவேதான் மதுரைப் பக்கமிருப்பவர்களுக்கு தெரியும் என்றும் சொல்லியிருக்கிறேன்.
3. எனவே சாதி சாய டப்பாவை தூக்கிக் கொண்டிருக்கும் புண்ணியவான்கள் சற்று சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். சின்னப் பிள்ளைக எல்லாம் குதூகலமா விளையாடிட்டு இருக்கும்போது கும்மியடிச்சுட்டுப் போயிறாதிக.

மாயவரத்தான்... said...

//நானே கணக்குல புலி//

கவுண்டமணி கேட்டது தான் நியாபகத்துக்கு வருது : 'கொட்டை எடுத்ததா? எடுக்காததா?!'

அப்புறம் *-* போட்டுட்டு போனதைப் பத்தி சொன்னீங்க. இங்கே எனது பதிவுகளுக்கு பின்னோட்டம் வருதோ இல்லையோ மும்முரமா -* வந்துகிட்டே இருக்கும். சமயத்திலே நான் எழுதி பக்கத்தை ரீலோடு செஞ்சு வரதுக்குள்ளே எந்த புண்ணீயவான்களோ நாலஞ்சு -* அள்ளி தெளிச்சிட்டு போயிருப்பாங்க. எனக்கென்னவோ, நம்ம காசி அண்ணாத்தே ஆட்டொமேட்டிக்கா ஒரு நாலஞ்சு *-* என் பதிவுகளுக்கு வர்ற மாதிரி எதுவும் செஞ்சிட்டு போயிருப்பாரோன்னு ரொம்ப நாளா சந்தேகம்! :)))))

லதா said...

கட்டியோ(ர்) எட்டுக்கட்டி
கால் அரை முக்காக்கட்டி
செட்டியார் ....

மீதி வரிகளை என் அம்மாவிடம் கேட்டு பிறகு எழுதுகிறேன்.

நாங்க மருதை அல்ல :-)

வீ. எம் said...

கின்டலாய் ஒரு கருத்து மேலே போட்டேன் !

பதில் இங்கே :

1வது புள்ளைக்கு - 1/4 + 1/4 + 1/4 +1/4 (4 கட்டி )
2வது புள்ளைக்கு - 1/2 + 1/2 (2 கட்டி)
3 வது புள்ளைக்கு - 3/4 + 1/4 (2 கட்டி)

ஆக 8 கட்டி - அனைவருக்கும் 1 கிலோ சமமாக !

வீ எம்

லதா said...

வீ. எம்., என் மணிச்சித்ர தாழுவை சந்த்ரமுகி ஆக்கிட்டீயே

என் பின்னூட்டத்தைக் காப்பி அடிச்சிட்டியேன்னு சொல்ல வந்தேன். ;-))

muthalvan said...

8 கெட்டி பிள்ளை கொடுத்து ஒரு செட்டி பிள்ளை வாங்கனும்னு எங்க வீட்ல சொல்லுவாங்க. நீங்க சொல்லுகிற கணக்கு புதுசா இருக்கு.

Agent 8860336 ஞான்ஸ் said...

to வீ.எம்,

"You Divided and Ruled" - congrats !

கட்டிய பிரிச்ச நம்ம வீ.எம். சாருக்கு
ஒரு பொட்டி ய குடுங்க!

I mean a gift box !

-comment by ஞானபீடம்.

அப்டிப்போடு... said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

ஷ்ரேயா என்னா இன்னும் 'ட்ரை' பண்ணிட்டு இருக்கீங்களா?., இல்ல ச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு விட்டுட்டிங்களா?

லதா மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் புத்திசாலி!!!. எனப் புலாங்கிதப் பட்டேன். உங்களுக்கு இந்தக் கணக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அதுதான பார்த்தேன்?. ரொம்ப கடினமான கணக்காயிற்றே எப்படி தெரிந்ததென. செய்கூலி தரலாம்னு நினைச்சப்ப உண்மைய உடைச்சு சேதாரம் ஆக்கிப்புட்டிங்களே?.

வீ.எம்.,
லதாவின் பதிலும் உங்களின் பதிலும் சரியானது.

மாயவரத்தார்,
திடீர்னு - சக் காணோம்., என்னமோ நடக்குது (இணய) உலகத்திலே.

முத்லவன் அதைக் குறிப்பிட்டு ஒரு கவித என் அடுத்த பதிவில்.

ஞானபீடம்
லதாவும் இதே பதிலைக் கூறியிருக்கிறார். வீ.எம் அவராகவே (முன்பே இக்கணக்கு தெரியாமல்) கண்டுபிடித்திருந்தால் கொடுத்துருவோம் பெட்டி!!.

Agent 8860336 ஞான்ஸ் said...

லதாவும், வீ.எம்.மும் சரியான பதிலைச் சொன்னதால்,
ஒரு gift பொட்டியை, இவுங்க ரெண்டு பேருக்கும் எப்டி பிரிச்சுக்கொடுக்றதுன்னு
சொல்லுங்க பாக்கலாம்!

{ ஒங்க மதுரப் பக்கம் 'பொட்டிய ராவுரது அப்டீன்னு சொல்வாங்கலாமே. அதுக்கு என்னங்க meaning-கு? }


**************************
- comment by ஞானபீடம்.
**************************

அப்டிப்போடு... said...

ஞானபீடம்! அட இப்பிடிப் கேப்பீங்கன்னு தெரியாமப் போச்சே?., என்னதுக்கு மண்டைய உடைச்சுகிட்டு., ஆளுக்கொண்ணாவே கொடுத்திரலாம். நாமதான் ராவுர ஆளுகளாச்சே!.. ஆங் ... அது ஊர் ரகசியம் சொல்லக் கூடாது.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நேத்து வெள்ளிக்கிழமை..அலுவலகத்தில பொழுது போகல்ல....மத்தியான நேரமாப் பாத்து பதிவைப் போட்டீங்களா..அங்கருந்து வெளிக்கிடுற வரைக்கும் முயற்சி செய்திட்டிருந்தேன். இன்றைக்கு இப்பத்தான் நேரம் கிடைச்சு வந்து பாக்கிறேன்... எல்லாரும் பதில் சொல்லிப் போயிட்டாங்க. :o(

பி.கு: நான் தங்கக்கட்டிதான் கேட்டேன். :oD

>>ஷ்ரேயா<<

மாயவரத்தான்... said...

ஒழுஙா பிரிக்க ட்ரை பண்ணச் சொல்லுங்க.. அப்படி முடியாட்டி சரி சமமா பிரிச்சதை தவிர மீதம் இருக்கிறதை எனக்கு பார்சல் அனுப்பச் சொல்லவும்.

அப்டிப்போடு... said...

ஷ்ரேயா.., மாயவரதார்.,

நன்றி., மாயிக்கு 'பார்சல்' வேணும்னா தாராளமா அனுப்பிரலாம்(?!). கட்டிய சம்மாப் பிரிச்சா மிச்சம் 0.

மாயவரத்தான்... said...

த்தோடா..!!

Aathi said...

இப்பத்தான் நான் பாத்தேனா... எல்லாரும் கட்டியைக் கொடுக்கிறாங்க. நாம கொடுக்காமப் போனா நல்லா இருக்குமா இந்தா வாங்கிக்கிங்க...

1வது புள்ளைக்கு = இரண்டு முக்கால் கட்டி (இரண்டு கட்டி)

2வது புள்ளைக்கு - ஒரு முக்கால், ஒரு அரை, ஒரு கால் கட்டி (மூன்று கட்டி)

3வது புள்ளைக்கு - ஒரு முக்கால், ஒரு அரை, ஒரு கால் கட்டி (மூன்று கட்டி)

8 கட்டி சரியா இருக்குங்களா? ஏதோ எனக்கும் ஒரு கட்டியைப் (தங்கக்கட்டியைத்தான்) போடுங்கய்யா?