Wednesday, June 15, 2005

குங்குமம் கேள்விகள் - நம்ம பதில்கள்

இதுவும் ஒரு me-me ஆயிரும்போல இருந்தாலும்., என் பதில்களை இங்கேயும் வைத்துக் கொள்ள விழைவதால்.,

ராஜ்குமார், காரப்பாடி பலவிதமாக யோசித்து... ஒருவிதமா பேசுவது; ஒருவிதமாக யோசித்துப் பலவிதமாகப் பேசுவது... எது சார் பெஸ்ட் வழி?
இரண்டாவதுதான் சிறந்த வழி., பல விதமாப் பேசுனா அவங்க, அவங்க அவங்களுக்குத் தேவையானத எடுத்துப்பாங்க! - யாரவது ஒருத்தர் நம்ம யோசிச்ச மாதிரியும் எடுத்துக்களாம். நம்ம அரசியல்வாதிக பொழப்பே இப்பிடித்தான ஓடுது?., இந்துத்துவாங்கிற ஒரே யோசனதான்., அத இந்தியாவுல ஒரு மாதிரி பேசுறது (நாலு பேரு முட்டாள்தனமா அடிபட்டு செத்தா., நமக்குத்தான் பேரு;) பாகிஸ்தான்ல வேற மாதிரி பேசி; நான் இம்புட்டு முக்கியமானவன் காட்டுறது. அதுமாதிரி. (தற்போதய உதாரணத்தைதான் சொல்ல முடியும்).


க தியாகராசன், குடந்தை: நாவலர் 'உதிர்ந்த ரோமம்'; கலைஞர் 'சிறுபிள்ளை'; எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் 'காலிடப்பா'; சிதம்பரம் 'வக்கற்றவர்'; ஆனால் இப்படிச் சொல்பவர்?
மூப்பனார் - சொதப்பனார் - அத்வானி ஸெலக்டிவ் அம்னீஸ்யாவால் பாதிக்கப்பட்டவர்., ஸ்டாலின் - குட்டித்தலைவர், அன்புமணி- சின்ன அய்யா இதையெல்லாம் செல்லுபவர் உங்களுக்காக தினமும் 22 மணிநேரம் உழைத்து இவற்றைக் கண்டுபிடித்த, உங்கள் அன்பு சகோதரி.

அ கி வ அசோக்குமார் - கோகிலா, நரிப்பாளையம் : பீகாரில் கொசு இருக்கக் கூடாது என்று கவர்னர் பூட்டா சிங் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...?
அங்கு மக்களே கொசு மாதிரித்தானே., தனியா எதுக்கு இன்னொரு கொசு?.

எஸ் அபுதுல்லா அஹமது, நாகூர்: தேசபக்தர்கள் - தீவிரவாதிகள் : ஒப்பிடவும்.
தேசத்திற்காக தடியடி வாங்குபவர் தேசபக்தர்., தேசத்திற்காக தடியெடுப்பவர் தீவிரவாதி.

நன்றி., அல்வா மாதிரி கேள்விகளை தொகுத்தளித்த பாஸ்டன் பாலாஜி அவர்களுக்கு.

2 comments:

Boston Bala said...

மூன்றாவது பதில் படு சூப்பர்.

மாயவரத்தான்... said...

//இரண்டாவதுதான் சிறந்த வழி., பல விதமாப் பேசுனா அவங்க, அவங்க அவங்களுக்குத் தேவையானத எடுத்துப்பாங்க! - யாரவது ஒருத்தர் நம்ம யோசிச்ச மாதிரியும் எடுத்துக்களாம். நம்ம அரசியல்வாதிக பொழப்பே இப்பிடித்தான ஓடுது?., //
என்னங்க அப்படிபோடு திடீர்ன்னு மருத்துவர் ஐயா மேல அப்படி என்ன கோபம் உங்களுக்கு?! ஒரே கவு கவுத்திட்டீங்க?!