Wednesday, June 15, 2005

ரஜினியின் குறும்பு

கடந்த மூன்று வாரமாக குமுதம் ரஜினியின் பேட்டியை வெளியிட்டு வந்தது. 06.06.2005 அன்று "Exclusive" - நேரடி சந்திப்பு என்று அட்டையிலே (படங்காட்டப்பட்டு) சுட்டப்பட்டு, (அட்டைப் படத்தில ரஜினி)லக்லக்லக்க ரகசியம் என்று தலைப்பிடப் பட்டு, 13.06.2005 அன்றும் அட்டைப் படத்தில் ரஜினி தலைப்பு : ரஜினியின் அடுத்த திட்டம்; அடுத்து 20.06.2005 அன்று அட்டையில் விக்ரம் (அதான் பேட்டி முடியப் போவுதில்ல? அடுத்தாளப் பார்க்கலாம்னு போல); தலைப்பு : இமயமலை என் ஆன்மீக வீடு., ஒரு நாள் சந்திப்புதான்., பேட்டி வெளியாகுமுன்னரே அதன் ஆசிரியருக்கு பேட்டியின் முழு விவரம் தெரிந்திருந்தும் என்னா பில்டப்பு?)

எதை உண்டால் 'முதல் இடம்' என்ற பித்தம் கொண்ட குமுதம்., ரஜினியைத் தானாகவே சந்தித்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஜவகர் பழனியப்பனை வாசலுக்கே வந்து வரவேற்றாராம் ரஜினி(?!).
அந்த வார பேட்டியின் ஒரு பகுதி கீழே,

ரஜினி : தினக்கூலி 50 ரூபாய் சம்பளம் வாங்குறவுங்க 30 ரூபாயை தியேட்டர் டிக்கெட்டுக்கு கொடுக்கிறாங்க., .......

இதுக்கு ஜவகர் அய்யா சொன்ன பதில் : பலகோடி மக்களை மூன்று மணிநேரம் அவர்களின் எல்லா கவலைகளையும் மறக்க வைத்து சந்தோசப் படுத்திரிங்க., அது எத்தனையோ கோடிக்கு சமம்(!).
தொடர்ந்து பேட்டியில் பாபாவுக்குப் பிறகு கலையுலகத் தொடர்ச்சியா ஒரு திட்டம் வச்சிருந்தேன்னு பூடகமா ரஜினி கூறினார்., (ஐயா, அவங்கவங்க டப்பு டப்புன்னு காமராசர், எம்.ஜி.ஆர் இல்ல., அதனால நான் வாரேன்னு கொஞ்சங்கூட தயக்கமில்லாம அடிச்சுப் பாக்குறாங்க இன்னும் எத்தன நாளைக்கு சாமி நீங்க இப்பிடி பூடகமாவே பேசி., உங்கள கும்பிடுறவங்கள (ரசிகன்ல இருந்து அரசியல்வியாதிக வரை) வெறுப்பேத்துவிக?).
ஜவகரும் விடாம, இமயமலையப் பத்தி புகழ்ந்து பேசிட்டு (ப்ப்ப்பாவம்ய்யா....!)., நீங்க சொல்றதக் கேட்கும்போது இப்பவே அங்க போகணும் போல தோணுது( எங்க?., இமயமலைக்கு...ஹா ஹ் ஹா!)., எதிர்காலத்துல வேற ஒரு திட்டம் வச்சிருக்கிறதா நடுவுல சொன்னிங்க? அது என்னன்னு சொல்லமுடியுமா (தூண்டில் போட்டாச்சு).

அதுவும் கலையுலகம் சார்ந்த ஒரு பிளான் தான்னு (நழுவிருச்சு மீன்)., அந்தப் பிளான் ஆப் தி ரெக்கார்டாம்., (அது யாருக்கு வேணும்?).
இப்படியே பேட்டி மொத்தமும் இமயமலை, மகான். கீதை ந்னு போயி., அவல நினைச்சுப் போன குமுத்தத வெறும் வாயும் மூணு புத்தகமுமா (என்ன புத்தகம்னு ரஜினி புத்தக மீ-மீ ங்கிற மாய இல்ல முகமூடி பதிவுல பாத்துக்கங்க) திருப்பியனுப்புன ரஜினியின் குறும்புத்தனத்த நினைச்சு, நினைச்சு சிரிச்சுகிட்டேயிருந்தேன் நேற்று முழுவதும். ஆன்மீகப் பயணத்த பத்திதான் வாரவாரம் விகடன்ல சொல்றாரே... ஜவகர் நீங்க அதைப் படிச்சு தெரிஞ்சுட்டு இருந்திருக்களாம்.

விஜயகாந்த் பொங்கியெழுந்து பேட்டி குடுக்கறதுகூட குமுதத்த தூக்கி நிறுத்தவில்லை போல?., ஒரு பொத்தகத்த வாங்கி ஒரே நாள்ல ஊர் முச்சூடும் படிச்சுருமப்பு நம்ம ஊர்ல.
ஒரு நாட்டின் எதிர்கட்சி போன்று செயல்பட வேண்டும் பத்திரிக்கைகள். நமது அரசியல் சட்டத்தின் நன்கு தூண்களில் ஒன்று தவறிழைத்தாலும்., அத்தூணாக தான் மாறி, நெறியுரைக்க வேண்டும் பத்திரிக்கைகள். பட்டணத்து நாகரீகத்தில் பிறந்து, சினிமாவுடன் வளர்கின்ற மேட்டுக்குடிகளுக்கு வேண்டுமானால் பத்திரிக்கைகள் படித்து தூக்கி எறியும் பழைய பேப்பராக இருக்கலாம்., ஆனால் கிராமப் புறங்களுக்கு பத்திரிக்கையும், பஞ்சாயத்து டி.வியும்தான் உலகத்தைச் சொல்லும் ஊடகங்கள்., சினிமாவெல்லாம்., தீபாவளிக்கும், பொங்களுக்கும் பார்க்கின்ற கொண்டாட்டங்கள் அவ்வளவே!. ஒரு முறை அரசியலைப் பற்றி நானும் எங்க அண்ணனும் காரசாரமாக விவதித்துக் கொண்டிருந்தோம்., அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு அம்மா., "எனக் கொரு மகன் பிறப்பான்; அவன் என்னைப் போலவே இருப்பான்னு" பாடுன மனுசனுக்கு ஒரு புள்ள இல்லயே?ன்னு புலம்புச்சு. இவ்வளவு ஏன் எம்.ஜி.ஆர் இறந்துட்டார்னு மொதமொத ஊர்ல வந்து சொன்ன பையனோட சனங்க யாரும் கொஞ்ச நாளாப் பேசவேயில்லை. இப்படி கண்மண் தெரியாமல் அன்பு வைக்கும் மக்களுக்கு நடிகர்கள் கொடுப்பது என்ன?. பத்திரிக்கைகள் பொறுப்பில்லாமல் ரஜினியிலிருந்து, செந்தில்வரை அரசியலுக்கு வர அழைப்பதின் பின்னனிதான் என்ன?. சில பேர் சொல்கிறீர்கள் வந்தால் வரட்டும்., தேர்தலில் எதிர்த்து பிரச்சாரம் செய்யுங்கள் என்று. சாமி!., காக்கா உட்க்காரப் பனம்பழம் விழுந்த கதையாகத் தானேய்யா இங்கு நடிக, நடிகைகள் ஆட்சிக்கு வருவது? (நான் எதைக் குறிப்பிடுகிறேன் எனப் புரியும் என நினைக்கிறேன். ) திடும்மென லாட்டரியில் தமிழ்நாட்டு முதல்வர் பதவி கிடைத்தவுடன்., என்ன நடக்கிறது அதிகாரிகள் உலகத்திலும், எதிர் அரசியல் கூடாரத்திலும் என அனுமானிக்கக்கூட அவகாசம் இன்றி., ஊழலை கண்டு கொள்ளாமல்., தான் அடித்து முதலில் விட்டதைப் பிடித்து கொள்வோம் என்ற நிலைதானே எப்போதும் உள்ளது. இதுவரை போனது போகட்டும் கத்துவதால் இழந்த வளர்ச்சி மீளப் போவதில்லை., நமக்கெல்லாம் ஒரே இரவில் கண்திறந்துவிடப் போவதுமில்லை. ஆனால் பத்திரிக்கைகள் சாமானிய மனிதர்களைப் போல பிதற்றுவது சரியல்ல., தவறு நடக்கும் போது., இப் பத்திரிக்கைகள் தாம் எழுதியதற்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். பத்திரிக்கைகள் ஆதரித்து எழுதும் நடிகர்கள் அரசியலுக்கு வந்து தவறிழைத்தால்., ஆதரித்து எழுதிய அத்தனை பத்திரிக்கைகளும் தவற்றிற்கு போறுப்பேற்க வேண்டும். உட்காந்தா 5 வருடம் ஒரு குறையுமில்லாமல் ஊழல் கொடிகட்டிப் பறக்குது., பதிரிக்கைகள் விற்பனையைக் கூட்ட நடிகர்., நடிகையர் படங்களைப் போடுங்கள்., பேட்டியைப் போட்டுக் கொள்ளுங்கள்., பிடித்தவர் படிப்பர்., வேண்டாதவர் வேறு வேலையப் பார்ப்பர். உங்கள் பத்திரிக்கை சார்பில் ஒரு நடிகரை அரசியலுக்கு வர ஊக்கப்படுத்தினீர்களேயானால் அவரும் தனக்கு பெரிய செல்வாக்கு இருப்பதாக எண்ணிக்கொண்டு இறங்கி விடுகிறார். இறங்குபவர் தகுதியானவர் என்பதற்கு சான்றுகளையாவது முன்வையுங்கள். பொறுப்பு வேண்டும் பேரறிவாளர் நெஞ்சில் விழைந்த பத்திரிக்கை பெண்ணிற்கு என எழுதுமாறு இருப்பதே வருந்ததக்கதுதான்.

10 comments:

மாயவரத்தான்... said...

//திடும்மென லாட்டரியில் ________________ பதவி கிடைத்தவுடன்., என்ன நடக்கிறது அதிகாரிகள் உலகத்திலும், எதிர் அரசியல் கூடாரத்திலும் என அனுமானிக்கக்கூட அவகாசம் இன்றி., ஊழலை கண்டு கொள்ளாமல்., தான் அடித்து முதலில் விட்டதைப் பிடித்து கொள்வோம் என்ற நிலைதானே எப்போதும் உள்ளது//

என்ன இருந்தாலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைப் பத்தி இப்படியெல்லாம் சேம் சைடு கோல் போடக் கூடாது குழ இல்ல மரம்!

Nambi said...

These people in Cine industry spoiled the cine media. They are not content with that.

அப்டிப்போடு... said...

அண்ணாச்சி., திசை திருப்பறதுக்குன்னே மாயவரத்துல இருந்து வண்டி கட்டிட்டு வந்திர்ங்களே?. எங்க தினமலர் வி.கா வ (மு.க மாதிரி ஆயிட்டாரு வி.கா) ஆதரிச்சு எழுதரதப் பத்தி உங்க கருத்த கொஞ்சம் சொல்லுங்க பாக்கலாம்?

முகமூடி said...

பேசிக்கொண்டே இருந்த ரஜினி மூக்கின் இடது பக்கத்தில் கை வைத்தார்... அது இடதுசாரி சிந்தனைவாதிகளுக்கு பல செய்தி சொன்னது... வலது பக்கத்தில் கை வைத்தார், அது வலதுசாரி சிந்தனையை வழிமொழிந்தது. ரஜினி விட்டத்தை வெறித்தார் அதில் தெரிந்தது அவரின் வெற்றித்திட்டம்னு இன்னும் பலவாரத்துக்கு என்னன்னவோ சொல்லி இழுக்காம இந்தளவுல நம்மள விட்டாங்களேன்னு சந்தோசப்படாம இப்படி சலிச்சிக்கறீங்களே....

மாயவரத்தான்... said...

தினமலர் வி.கா.வை ஆதரிச்சு எழுதுதா? அப்படியா!?! தெரியலை! எழுதட்டுமே! என்னவோ நான் தான் தினமலர் ஓனர் மாதிரி என்கிட்டே கேள்வி கேக்குறீங்க?! அப்படியே இருந்தாலும் விஜயகாந்தை ஆதரிச்சு எழுதினா தப்பா என்ன?!

மு.க. மாதிரி ஆகிட்டாரு வி.கா. அப்படீன்னு சொல்லி வி.கா.வை கேவலப்படுத்த முயல வேண்டாம் என்று வம்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வீ. எம் said...

// நீங்க சொல்றதக் கேட்கும்போது இப்பவே அங்க போகணும் போல தோணுது //

இமயமலைக்கு போவ காளிகாம்பாள் கோயில் பக்கத்துல குறுக்கு சந்து இருக்குனு ஒரு பதிவுல படிச்சேன்.. ஜவகருக்கு சொல்லிடுங்கோ !!
//எதை உண்டால் 'முதல் இடம்' என்ற பித்தம் கொண்ட குமுதம்.,//
குங்குமம் ஆசிரியர் கிட்ட பேச சொல்லுங்க.. இல்லை குமுதம் வாங்குனா 'மெடிகல் சீட்' இலவசமா குடுக்கா சொல்லுங்க..
இறங்குபவர் தகுதியானவர் என்பதற்கு சான்றுகளையாவது முன்வையுங்கள்
என்ன அன்னாச்சி, கொஞ்சம் கூட யோசிக்காம் பொசுக்குனு இப்படி ஒரு கஷ்டமான வேலைய கொடுத்துட்டீங்க???
//பேசிக்கொண்டே இருந்த ரஜினி மூக்கின் இடது பக்கத்தில் கை வைத்தார்... அது இடதுசாரி சிந்தனைவாதிகளுக்கு பல செய்தி சொன்னது... வலது பக்கத்தில் கை வைத்தார், அது வலதுசாரி சிந்தனையை வழிமொழிந்தது//


அப்புறப் எங்கதான்யா அவரு கைய வெப்பாரு??? பாவம்..
வீ எம்

குழலி / Kuzhali said...

//என்ன இருந்தாலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைப் பத்தி இப்படியெல்லாம் சேம் சைடு கோல் போடக் கூடாது குழ இல்ல மரம்//

மாயவரத்தான் அவர்களே...

பார்வைகள் மாறுகின்றன... பதிவுகளும் மாறுகின்றன...

காலங்கள் மாறுகின்றன...
காட்சிகளும் மாறுகின்றன...

பார்வைகள் மாறி
பாராளும் காலம்
போய்...
பாராளும் காலத்தில்
பார்வைகள் மாறுகின்றன...

ஒரே இரவில்
உயர்வு தேட
நாங்கள் ஒன்றும்
அது... அல்ல

ஒரே இரவில்
காட்சி மாற
இது ஒன்றும்
கனவு தொழிற்சாலை
அல்ல

காலங்கள் மாறுகின்றன...
காட்சிகளும் மாறுகின்றன...

மொத்தமும் மாற
காத்திருக்கின்றோம்
நாங்கள்

அதுவரை வரும்
தீய்ந்த வாசனைகளுக்கு
பதில் தர
அலுத்துப்போய்...

மொத்தமும் மாற
காத்திருக்கின்றோம்
நாங்கள்

அப்டிப்போடு... said...

குழலி நன்றி! அப்பிடிப்போடுங்க!

மாயவரத்தான்... said...

அப்படிப்போடு..?! அதுக்கு என்னா இப்போ?! (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா?!)

குழலி / Kuzhali said...

//என்ன இருந்தாலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைப் பத்தி இப்படியெல்லாம் சேம் சைடு கோல் போடக் கூடாது குழ இல்ல மரம்!//

ஓ... இதை சொல்கின்றீரா? சே.... இத்தனை நாள் இதை கவனிக்காமல் விட்டுவிட்டேனே....

ஆகா நம்மையும் கூட ஒரு ஆளா நினைத்து இப்படிலாம் சொல்றாங்களேனு ஒரு பக்கம் சந்தோசம் தான், நடிகைக்கு கோவில் கட்டுவது, நடிகனுக்கு பட்டம் விடுவது சே.. சே... கொடுப்பது எப்படி பிரபலமானவர்களுக்கு நடக்குமோ அதேபோல இவர் அவரா? அவர் இவரா?, நம்பெயரில் அடுத்தவர் பின்னூடமிடுவதெல்லாம் வலைப்பதிவில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகின்றோம் என அர்த்தம் (ஹி ஹி தற்பெருமை தாங்கலை...இல்லை)