Thursday, June 02, 2005

கொள்கையில்லாத கட்சி

செப்டம்பர் 14ந்தேதி கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ள விஜயகாந்த், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் என்னைக் கவர்ந்த பகுதிகளை உங்கள் பார்வைக்கும் இங்கே.

14ந் தேதியும் கட்சிப் பேர் அறிவிக்கப்பட போவதில்லை. கொள்கை என்ன எனக் கேட்டால். கொள்கைகளில் நம்பிக்கை இல்லையாம். (அப்டிப் போடு!!!). கொள்கை, கிள்கைன்னு ஏதாச்சும் சொன்னாவாவது செய்யிலைன்னா நாலு கேள்வி கேட்கலாம். கோடி பேர் திரட்டுவது (மாநாட்டிற்கு ) நோக்கமாம். மாநாட்டு நிதி? மன்றத்தினர் அவர்களால் முடிந்ததை(!) செய்கிறார்களாம். மீதி அவரது சொந்தப் பணமாம். டோண்டு (ராகவன்) அய்யா., என்னுடைய பதிவிற்கு பின்னுட்டம் இடும் போது, விஜயகாந்த் அவரது பணத்தைப் போட்டு அரசியலுக்கு வருகிறார் என்றார். என்னாது இது படிச்சவங்களே இப்பிடி அப்பாவியா இருக்காங்களேன்னு நினைச்சுக்கிட்டேன். இப்ப, இந்த விஜயகாந்த் போட்டிய எத்தன தலைகள் உண்மைன்னு நம்பப் போகுதோ?.

இதெல்லாம்விட பெரிய நகைச்சுவை., கட்சி பேர் இல்ல., கொள்கையில்ல ஆனா தேர்தல் எப்ப வந்தாலும் சந்திக்க தயாரா இருக்காங்களலாம். யோவ்... என்னாது இது? ஆள்ளாலுக்கு அடிச்சுப் பாருங்கையா ... விழுந்தாலும் விழுகும் தமிழனின் தலையெழுத்து!!.

4 comments:

வீ. எம் said...

வாங்க ! வாங்க கேப்டன் சார், பொது ஜனம் தலைல ஓரமா கொஞ்சம் இடம் இருக்கு... உங்க பங்குக்கு முக்கா கிலோ மொளகா எடுதுனு வாங்க !!!

.:D:. said...

http://www.dinakaran.com/daily/2005/Jun/02/others/topstory4.html

லதா said...

கொள்கை கொள்கை என்று அறிவித்துவிட்டுப் பின்னால் பல்டி அடிப்பதைவிட கொள்கை எதுவும் அறிவிக்காமல் இருப்பதே பரவாயில்லையா ? (ஆட்சியைப் பிடிப்பதுதான் எல்லோருடைய கொள்கை என்று மக்களுக்குத் தெரியும்தானே) :-((

குழலி / Kuzhali said...

//கொள்கை கொள்கை என்று அறிவித்துவிட்டுப் பின்னால் பல்டி அடிப்பதைவிட கொள்கை எதுவும் அறிவிக்காமல் இருப்பதே பரவாயில்லையா ? (ஆட்சியைப் பிடிப்பதுதான் எல்லோருடைய கொள்கை என்று மக்களுக்குத் தெரியும்தானே) :-((

//

அப்படிபோடு அதானே அப்பாலிக்கா நீ யித்த சொன்ன செய்யில நீ அத்த சொன்ன செய்யிலனு யாரும் கொரலுவுட முடியாதில்லியா