Monday, May 30, 2005

விச்சு அவர்கள் மற்றும், விச்சுவைப் போன்றவர்களுக்கு

எனது 'நடிகன் நாடாளலாமா?' என்ற பதிவிற்கு நீங்கள் அளித்த பின்னூட்டத்திற்கு., நான் அளித்த மறுமொழியினால் பின்னூட்டங்கள்தான் பாய்ந்து கொண்டு வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் தனிப் பதிவு போட்டு விளம்பரப்படுத்தியதற்கு நன்றி!. நான் என் மறுமொழியில்., 'நீங்க' என்று, 'பிராமணர்களைத்தான்' குறிப்பிட்டேன்!!. விஜயகாந்தை வெகுவாக ஆதரித்து சீமாச்சு, விச்சு அவர்கள் ஆகியோர் பின்னூட்டம் ஆளித்திருந்தீர்கள். அப்போது தோன்றிய எனது எண்ணதையே எழுதினேன்!!!.. பிறகு டோண்டு அவர்களும் பின்னூட்டம் இட்டிருந்தார்.
ஒரு 50 ஆண்டுகாலம் அரசியலில் கழித்த ஒரு தலைவரை அவர் திராவிடத்தை ஆதரித்தார் என்ற ஒரு காரணத்திறக்காக என்னவெல்லாம் அவரைப் பற்றி தரக்குறைவாக எழுத முடியுமோ அவ்வளவு எழுதுகிறீர்கள். மண்ணுக்குள் சென்றுவிட்ட பெரியாரை சம்மந்தமில்லாமல் சீன திரைப்பட விமர்சனத்துக்கு பின்னூட்டத்தில் கூட தயக்கமின்றி எழுதி கேலி புரிந்து மகிழ்கிறீர்கள். ஊழலைப்பற்றி எழுதினால் கூட தி.மு.க வை வெகுவாக தாக்கி, வசதியாக அ.தி.மு.க வை மறக்கிறீர்கள். கடந்த 5 ஆண்டில் மட்டும் 18 கொலைகள் என்கவுண்டர் என்ற பெயரில்., பொடாவில் எதிர்கட்சித் தலைவர்கள் எத்தனை பேர் அடைபட்டனர்?., ம்.. என்றால் கஞ்சா வழக்கு., ஏன் என்றால் 'தடா' வழக்கு. எத்தனை பேர் இதை சுட்டி காட்டினீர்கள் நேர்மையுடன்?. ஆனால் வீட்டில் உக்கார்ந்திருக்கும் கருனாநிதியை உங்கள் தூக்கத்திலும் 'நீங்கள்' விட்டுவைக்கிறீர்களா?. பிராமணியத்தை ஒவ்வொரு நிமிடமும் விடாமல் சுமந்து கொண்டிருக்கும் நீங்கள் அரிவுரை வழங்காதீர்கள் நான் 'ஜாதி' குறிப்பிட்டு எழுதக்கூடாதென்று!!!. அன்புமணி, தயாநிதி பதவிக்கு வந்ததால்., பாதிப்படையக் கூடியவர்கள் தொன்று தொட்டு உழைத்த தி.மு.க வினரும்., ப.ம.க.வினரும்தான். ஆனால் நடிகர், நடிகைகள் ஆட்சிக்கு வருவதால் பாதிக்கப்படுவது ஒட்டு மொத்தத் தமிழகம். நல்லவர்கள் கைகளுக்கு பதவி செல்ல வேண்டும் அதுவும் 'நெடுமறன்', 'நல்லகண்ணு' அவர்களைப் போன்றவர்களிடம் என்றுதான் எழுதியிருக்கிறேன். சமந்தமில்லாமல் நீங்கள் விவாதத்தின் போக்கை திசை திருப்பும் விதமாக இரண்டு வரிகளைப் பிடித்துக் தொங்கிக் கொண்டு இருந்தீர்களேயானால், தி.மு.காவையும் கருனாநிதி, அவரது மகன், குடும்பத்தை சாடும் களமாக இணையத்தளங்களை 'நீங்கள்' உபயோகப்படுத்துவதால்., பெரும்பாலான நல்ல பதிவுகள்., அதன் நோக்கம் புதைக்கப்பட்டு, வெற்றெழுத்துக்களாகவே நின்று போகின்றன. ஆனால் உங்கள் நோக்கங்கள் (தி.மு.க எதிர்ப்பு) தெளிவாகவே நிறுவப்பட்டு விடுகிறது.


விச்சு அவர்களே, நீங்கள் என்னுடைய முந்தய பதிவான, வாழ்க தமிழ்குடிதாங்கிகள் என்ற பதிவிற்கு, நான் எழுதிய மறுமொழிக்கு,

\\நீங்கள் குறிப்பிட்டதைப் போல், உங்களுக்கு உணவு வேண்டுமெனில் அத்தியாவசிய தேவையான வார்த்தைகளை நீங்கள் அம்மொழியில் கற்றுத்தான் ஆகவேண்டும் என்ற ஒன்றை உங்கள் மேல் திணிக்கும் உரிமையை அவனுக்குத் தருகிறீர்கள் (அதில் உங்கள் தேவையும் இருக்கிறது, மறக்கவில்லை!) ஆனால் ராமதாஸ்க்கு மறுக்கிறீர்கள். அவர் செய்யட்டும் முதலில் என்கிறீர்கள்!!!. அவர் சாக்கடையில் நின்று கொண்டு நன்மைப் பார்த்து சாக்கடையில் இறங்காதே என்று கூறினால், நீ வெளியே வா., அதுவரை நானும் நிற்கிறேன் என்று சொல்வது எவ்வளவு அபத்தமானது?.//

நீங்கள் கூறிய பதில்.

//அவர் சாக்கடையில் நிற்கவில்லை..அவர் வீட்டு மாடியில் நின்று கொண்டு உஙளை சாக்கடையில் இறங்க சொல்கிறார்.//

தமிழ் மயமாவது சாக்கடையில் இறங்குவதா? என தனிப் பதிவிட்டு நான் உங்களை அம்பலப்படுத்தி இருந்தால்... ஜெயகாந்தனின் கதிதான் உங்களுக்கும்!!. இவ்வளவு தெளிவாக எந்த ஒரு பொறுப்புமின்றி பேசும் உங்களுக்கு. உங்கள் மொழிகளிலே பதில் கூறுவது தவறென்று நான் ஒருபோதும் கருதவில்லை

8 comments:

கொழுவி said...

அப்படிப்போடு!
அந்த மாதிரி...

Moorthi said...

கொன்னுட்டீங்கன்னா... நாங்க இருக்கோம். தைரியமா எழுதுங்க.

dondu(#4800161) said...

"நான் என் மறுமொழியில்., 'நீங்க' என்று, 'பிராமணர்களைத்தான்' குறிப்பிட்டேன்!!. விஜயகாந்தை வெகுவாக ஆதரித்து சீமாச்சு, விச்சு அவர்கள் ஆகியோர் பின்னூட்டம் ஆளித்திருந்தீர்கள். அப்போது தோன்றிய எனது எண்ணதையே எழுதினேன்!!!.. பிறகு டோண்டு அவர்களும் பின்னூட்டம் இட்டிருந்தார்.
ஒரு 50 ஆண்டுகாலம் அரசியலில் கழித்த ஒரு தலைவரை அவர் திராவிடத்தை ஆதரித்தார் என்ற ஒரு காரணத்திறக்காக என்னவெல்லாம் அவரைப் பற்றி தரக்குறைவாக எழுத முடியுமோ அவ்வளவு எழுதுகிறீர்கள்.

என்னுடையப் பின்னூட்டத்தில் என்ன தவறு கண்டீர்கள்? நான் எங்கே மு.க. அவர்களை எதிர்த்தேன்? என் முழுப் பின்னூட்டம் இதோ:
"இது சுதந்திர நாடு. அவரவருக்கு தான் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் உண்டு. விஜயகாந்தை எடுத்து கொள்வோம். தான் தேர்தலில் நின்று ஜெயிக்க முடியும் என்று நினைக்கிறார். தான் சம்பாதித்தப் பணத்தை போட்டு தேர்தலில் நிற்கிறார். அவர் கட்சி வேட்பாளர்களும் நிற்கிறார்கள். பெரும்பான்மை பலம் பெற்றால் பதவி பெறுகிறார். இல்லாவிட்டால் பணமெல்லாம் இழந்து அரசியலை விட்டு விலகுகிறார். எதுவானாலும் ஓட்டு போடும் மக்கள் பார்த்து கொள்வார்கள். அதிலும் தமிழ் வாக்காளர்கள் விவரமானவர்கள். அவர்கள் ஒரு போதும் தொங்கும் சட்டசபையைக் கொண்டு வந்ததில்லை.

பிறகு அவர் அரசியலுக்கு வர வேண்டுமா கூடாதா என்று மற்றவர்கள் விவாதிப்பது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை? ஒரு மூலதனமும் இன்றி தலைவர் மகன் என்ற ஒரே தகுதியில் தேர்தலில் நிற்காமலேயே மந்திரி ஆவதை விட விஜயகாந்த் தன் அரசியல் தகுதியை மக்கள் மன்றத்தில் வைத்து பரிசோதிப்பது கேவலம் இல்லை. எம்.ஜி.ஆர். ஒரு வழியில் பதவிக்கு வந்தார், என்.டி.ஆர். வேறு மாதிரி வந்தார். சிவாஜி, அமிதாப் பச்சன் ஆகியோர் வந்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று களத்திலிருந்து விலகினர். எல்லாவற்றையும் காலம் பார்த்து கொள்ளும்.

நேரு குடும்பத்தில் பிறந்ததாலேயே இந்திரா, ராஜீவ், அவர் மனைவி சோனியா மற்றும் ராகுல் காந்தி அரசியலில் குப்பை கொட்ட முடிந்திருக்கிறது. நேரு சம்பந்தம் இல்லாதிருந்தால் இவர்களில் யாராவது தலைவர் பதவியை நினைத்து கூட பார்த்திருக்க முடியுமா? எல்லாம் நேரம்தான்.

1970-ல், ஒரு வக்கீல் மற்றும் நடிகர் ஒரு பத்திரிகை ஆரம்பித்தார். எல்லோரிடமும் கருத்து கேட்டார். முக்கால்வாசி பேர் இது உருப்படும் காரியமில்லை என்று திருவாய் மலர்ந்தருளினர். அவ்வாறு கூறியவர்கள் கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் யார் என்பதைக்கூட சிரமப்பட்டுத்தான் நினைவுக்கு கொண்டு வர வேண்டியிருக்கிறது. பத்திரிகை? அமோகமாக நடக்கிறது. பத்திரிகை பொருளடக்கம்? அரசியல், அரசியல் மற்றும் அரசியல். கவர்ச்சி படங்கள்? மூச். தனி நபர் தாக்குதல் கிடையவே கிடையாது. கிளு கிளு செய்திகள் - அண்ணாச்சி, ஜயலக்ஷ்மி முதலியோரைப் பற்றி? யார் அவர்கள்? நான் இங்கு எந்தப் பத்திரிகையைக் குறிப்பிடுகிறேன் என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா?

இதெல்லாம் நடக்கும் என்று யாராவது 1970-ல் நினைத்து பார்த்திருக்க முடியுமா? பத்திரிகைத் துறையில் அனுபவம் வாய்ந்த குடும்பத்தால் ஆரம்பிக்கப்பட்ட பெஸ்ட் கண்ணா பெஸ்ட் பத்திரிகை நொண்டுகிறது. எது நடக்கும் என்று யார் கூற முடியும்? இவர் பத்திரிகையோ சீராகச் சென்று கொண்டிருக்கிறது.

நடிகனோ, பொறியாளனோ, எழுத்தாளனோ யாராயிருந்தாலும் அரசியலுக்கு வருவதை எதிர்க்க நாம் யார்? வேண்டுமானால் தேர்தலில் அவர்களுக்கெதிராகப் பிரசாரம் செய்யுங்கள்."

இதில் விஜயகாந்துக்கு ஆதரவு எங்கிருந்து வந்தது? அவர் நிற்கிறார், ஜயிக்கிறார் அல்லது தோற்கிறார், அது அவர் தலைவிதி என்னும் பொருளில்தானே நான் எழுதினேன். அவர் நிற்கவே கூடாது என்பதற்கு நாம் யார்? இம்மாதிரிப் பொருள்பட எழுதியவர்கள் சிலர் பார்ப்பனர் என்பது தற்செயலே. இதில் லென்ஸை வைத்து ஜாதியைப் பார்த்து எழுதியது நீங்கள். இங்கு எழுதியவர்கள் எல்லோரும் தங்கள் சொந்தக் கருத்தையே எழுதினார்கள். இதில் எழுதியவர்கள் ஜாதியை வைத்து நீங்கள் பேசுவதுதான் ஓவர்.

"நடிகர், நடிகைகள் ஆட்சிக்கு வருவதால் பாதிக்கப்படுவது ஒட்டு மொத்தத் தமிழகம். நல்லவர்கள் கைகளுக்கு பதவி செல்ல வேண்டும் அதுவும் 'நெடுமறன்', 'நல்லகண்ணு' அவர்களைப் போன்றவர்களிடம் என்றுதான் எழுதியிருக்கிறேன்."
தாராளமாக தேர்தலில் நின்று, ஜயித்து அதிகாரம் பெறட்டும். யார் தடுத்தது அவர்களை? விகா தேர்தலில் நிற்கவே கூடாது என்று கூறுவதுதான் தவறு என்று நான் சொன்னேன். அவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்று எங்காவது நான் சொன்னேனா?
கமலஹாசனை ஆதரித்தாலும் பிரச்சினை, சாதியை புகுத்துகிறீர்கள். அதையே விகா விஷயத்திலும் எந்த லாஜிக்கில் செய்தீர்கள்? காமாலைக் கண்ணனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள்.

நடிகன் நாடாளலாமா என்றெல்லாம் எம்.ஜி.ஆர். காலத்திலேயே எழுப்பியாயிற்று. அதற்கு மக்களும் பதில் கொடுத்து விட்டனர். எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை மு.க. அவர்கள் முதன் மந்திரி ஆக முடியவில்லை. பின்னவரும் அழுது எல்லாம் பார்த்தர் (1984 தேர்தலில்). ஆகவே இப்போது அக்கேள்வியே இர்ரெலெவன்ட் என்றுதான் கூற வேண்டும். அதைத்தான் நானும் கூறினேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

அப்டிப்போடு... said...

மஸ்ட் டூ., மூர்த்தி , டோண்டு அய்யா பின்னுட்டத்திற்கு நன்றி.

டோண்டு அய்யா அவர்களே!

சீமாச்சு, விச்சு அவர்களின் பின்னுட்டத்தின்போது நான் நினைத்ததை எழுதினேன்., பிறகு நீங்கள் (நீங்களே என்ன சாதி என கூறிப் பெருமைப் படுகிறீர்கள் தானே?) டோண்டு அவர்களும் அதை ஆதரித்துப் பின்னுட்டமிட்டார். என்றே குறிப்பிட்டேன். உங்கள் பின்னூட்டத்திற்கு என் மாற்றுக் கருத்துக்களை தனியாக பதிவு செய்வேன். நீங்கள் அப்பதிவின் பின்னூட்டத்தில் தி.கவைத் தாக்கினீர்கள் என்று எழுதவில்லை. நீங்களும் ஆதரித்தீர்கள் என்பதே நான் குறிப்பிட வந்தது.

dondu(#4800161) said...

மறுபடியும் கூறுகிறேன், நான் விகா வருவதை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை. அவர் தேர்தலில் நிற்கவே கூடாது என்று கூற நாம் யார் என்றுதான் கூறினேன். அதே சமயத்தில் அவர் நிற்க வேண்டும் என்பதையும் கூறவேயில்லை. இதுவும் அவர் விருப்பம்தான் என்பது என் நிலை. அவர் நிற்பது பிடிக்கவில்லையானால் தேர்தல் சமயத்தில் எதிர்த்து பிரசாரம் செய்வதுதானே என்றுதான் எழுதினேன். இந்த நுட்பமான வித்தியாசத்தை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். மற்றப்படி நான் என் சாதியில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் என்று கூறியதின் பிண்ணனியை "என் வெளிப்படையான எண்ணங்கள்" என்றப் பதிவில் பார்த்து கொள்ளுங்கள்.

அது சரி, ஒரு விஷயம் எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. சோவை புகழ்ந்து எழுதியிருந்தேனே? யாருமே அதற்கு எதிர்வினை கூறவில்லையே? சோ ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்று நான் கூறியதிலும் மாற்றம் இல்லை என்று இந்த சமயத்தில் சந்தடி சாக்கில் கூறிவிடுகிறேன்!

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

vishytheking said...

அன்புள்ள மரம்..

அழகாக உங்களுக்கு உதவும் கருத்துக்களை மட்டும் எடுத்து கட்டுரை எழுதுகிறீர்கள்..

//ஊழலைப்பற்றி எழுதினால் கூட தி.மு.க வை வெகுவாக தாக்கி, வசதியாக அ.தி.மு.க வை மறக்கிறீர்கள்//

என் பின்னூட்டம்

//இன்றிருக்கும் ஆட்சியின் பின்னிருப்பவர்களிள் எத்தனை பேர் நீங்கள் சொன்ன இனத்தை சேர்ந்தவர்கள்.. கொள்ளை அடிப்பதில் 50 % அவர் வீட்டில் இருப்பவர்களும் (யாரென்று சொல்லத்தேவையில்லை) 50% மற்ற அமைச்சர்களும் தான் சாப்பிடுகிறார்கள்.. அடுத்த கட்சி ஆட்சியில் சாப்பிட்டு, நாட்டைக்கெடுத்தவர்கள் எல்லோரும் நீங்கள் சொன்ன ஜாதியை சேர்ந்தவர்கள் இல்லை.. //

இது ஜெயா வைப்பற்றியது தான் என்று நினைக்கிறேன்.. எனக்கு ஜெயா என்ன வளர்ப்புத் தாயா.. இல்லை வி கா மந்திரிப் பதவி தரப்போகிறாரா.. உங்கள் வலைப்பதிவில் முக்கண்ணனேயானலும், முரண்பட்டால் சுட்டுவேன் என்று எழுதி இருப்பதைப்பார்த்து ஏமாந்து விட்டேன். நீங்கள் முக்கண்ணனை மட்டும் தான் சுட்டுவீர்கள் என்று புரிகிறது.

உங்கள் கருத்து

//அவர் சாக்கடையில் நின்று கொண்டு நன்மைப் பார்த்து சாக்கடையில் இறங்காதே என்று கூறினால், நீ வெளியே வா., அதுவரை நானும் நிற்கிறேன் என்று சொல்வது எவ்வளவு அபத்தமானது?.//

என் பின்னூட்டம்

//அவர் சாக்கடையில் நிற்கவில்லை..அவர் வீட்டு மாடியில் நின்று கொண்டு உங்களை சாக்கடையில் இறங்க சொல்கிறார்.//

விளக்கம்.

அவர் உங்களைப்பார்த்து தமிழ் தமிழ் என்று சொல்கிறாரே தவிர, அவர் அதை கடைபிடிக்கவில்லை.. என்ன செய்தார் என்று திரும்பப் போய் படித்துப்பாருங்கள். அதைத்தான் அவர் மாடியில் நின்று கொண்டு உங்களை சாக்கடையில் இறங்கச்சொல்கிறார் என்று கூறினேன்.. தமிழை கூறியதாக உங்களுக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்ளலாமா.. இதன் பேர் insinuation.. கருத்தை திரித்துக்கூறுவது..

இப்படி புரிந்து கொள்ளாமல் கருத்தைத் திரிப்பதால் தானோ "குறிப்பறிய மாட்டாதவன் நல்மரம்" என்று கூறினார்கள்.

இதையும் கூறியிருந்தேன்.. :படித்தவர்கள் அவர்களுக்கு வசதியான முட்டாள் தனங்களை ஆதரிக்கலாமா? ராமதாசு தனக்கு வேண்டுவது கிடைத்த பின் தமிழ்பற்று வந்தவர் போல் நடிப்பதும் அதை ஆதரிப்பதும் தான் முட்டாள்தனம் என்று பொருள்.. தனி பதிவு போட்டு திட்டுங்களேன்.. என்ன ஆகும்.. 10 பேர் உங்களை ஆதரிப்பார்கள்.. 10 பேர் என்னை ஆதரிப்பார்கள். மீதி 530 பேர் அவர்கள் வேலையைப்பார்ப்பார்கள்.

//இந்த இனத்தவர் மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் நன்றகத்தான் வாழ்கிறார்கள். நாசமாய் போனது நாம் தான்.//

பிராமணன் என்று கூறித்திட்டுவது சூரியனைப்பார்த்து நாய் குலைத்த கதை தான். உங்கள் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டேன்.. இனி பதில் தர மாட்டேன். இந்த முறையும் தமிழை கேவலமாய்ப் பேசினதாகக் கூறியதால் தான் இந்த பதில்..

அன்புடன்

விச்சு

vishytheking said...
This comment has been removed by a blog administrator.
அப்டிப்போடு... said...

பிராமணன் என்று என் பதிவில் கூறி என்ன திட்டினேன்? உங்களை மாதிரி மரம் என்றும்., நாய் என்றுமா?. 'நீங்க' என்று நான் எழுதிய ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு 2 பதிவு போட்டது நீங்கள். இவ்வளவு தூரம் உணர்ச்சி வசப்படத் தேவையில்லை நான் உங்களை மட்டுமே குறிப்பிடவில்லை என்பது நெடுநாள் வலைப்பதிவில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும். சூரியன் என்று எதைக் குறிப்பிட்டீர்கள்?. இந்தப் பூச்சாண்டியெல்லாம் இங்கு காட்டாதீர்கள். உங்களை திருப்திப்படுத்த நான் எழுத ஆரம்பிக்கவில்லை. என் மனதிற்கு பட்டதை எழுதியே தீருவேன். உங்கள் பதிலை எதிர்பார்த்து இதை எழுதவில்லை. வேண்டுமானால் இன்னும் 10 பதிவு போட்டு திட்டிக்கங்க அப்பு!!!