Monday, May 23, 2005

வாழ்க! தமிழ்குடிதாங்கிகள்!!!

அப்பாப்பா... தமிழ்ல பெயர் வைய்யுங்கள்னு சொன்னா... என்னா எதிர்ப்பு?... என்னா துடிப்பு?...குடிதாங்கி, இடிதாங்கின்னு என்னன்ன கிண்டல்கள்?... கேலிகள்?...அரசியல் ஆதாயம்... அது....இதுன்னு ஆயிரம் காரணங்கள்!., யாரோ ஆங்கிலத்தை தார் பூசி அழித்துவிட்டார்களாம்... அதற்குத் துடித்துகொண்டொரு பதிவு...ஆங்கிலத்தில் மட்டும் பெயர்கள் வைப்பதை எதிர்த்து பதிவு போட்டார்களா?... யாருக்குத் தெரியும்?. ராமதாஸ் மரத்த வெட்டுனப்பக்கூட இவ்வளவு எதிர்ப்பு இல்ல...ஆனா தமிழில் பெயர் வேண்டும் என்றவுடன் தமிழர்கள் துடிக்கின்ற துடிப்பு மெய் சிலிர்க்கிறது.

'அரசியல் ஆதாயத்துக்காக அவர்கள் செய்கிறார்கள்' (பாவம்...யா... நெடுமாறன்) என்றுதான் மெத்தப் படித்த இத்தனை மேதாவிகளும் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களே... அப்புறம் என்ன ஆதாயம் வந்துவிடப் போகிறது?. ஓகோ படிக்காத பாமர மக்கள் தப்பி தவறி எங்க இவங்கள தூக்கிவிட்டிருவாங்கலோன்னு பயப்படுறிங்களா?.... கவலைப்படாதிங்க.... 'இரட்டை இலை' என்று ஒரு சின்னம் இருக்கும்வரை அது நடக்காது.

நல்லது பண்ணுனா வரவேற்கின்ற குணம் எப்போதுதான் நமக்கு வருமோ?... இரண்டு மலையாளிகள் ஒன்று சேர்ந்தால்... (உதாரணத்துக்கு சொல்றேன்... )'கொந்து களையும்' 'சவட்டிக் களையும் பட்டி'ன்னு என்னா அழகா மலையாலத்துல பேசிக்கிறாங்க?... அட எங்க வீட்டு 'பைப்ப' பழுது பாக்கறதுக்காக 'அப்பார்ட்மெண்ட் ஆபிஸ்' (ஆங்கிலம் தமிழ் மாதிரி கலந்திருச்சில்ல நம்மகிட்ட?) போனேன். அங்க ஒரு ஸ்பானிஸ் பொண்ணு இருந்துச்சு. என் பொண்ணுகிட்ட 'ஆண்டிக்கு 'Hai' சொல்லுன்னு சொன்னேன்'. பட்டுன்னு அந்த ஸ்பானிஸ் பொண்ணு என் மகளைப் பார்த்து 'நமஸ்தே...'னுச்சு!...தமிழ் செம்மொழியானலும்... ஆட்சி மொழியே ஆனாலும்... நாம இந்தியாவத் தாண்டுனா பாய், பெகன் தான்.... உள்ளயாவது நாம நம்ம அடையாளத்தோட இருந்தா ஏம்பா... உங்களுக்கு பொருக்க மாட்டேங்குது?. ஸ்பானிஸ்காரங்களுக்கு ஆங்கிலத்தில் பேசினால் பிடிக்காது. ஐரோப்பாவிலிருந்தும் மற்றும் உலகெங்கிலுமிருந்தும் பெயர்ந்தவர்கள் தான் அமெரிக்கர்கள் (செவ்விந்தியர் தவிர). ஆனாலும் அவரவது அடையாளங்கள் தொலைக்காமல்தான் வாழ்கிறார்கள். ஓரு 'ஜூஸ்' வீட்டிற்கு சென்ற போது அப்படியே இஸ்ரேலில் இருப்பதைப் போன்றே உணர்ந்தேன்.

மொழிப்பாற்றில்லாத ஒரு சமூகம் நம் சமூகம்தான். எத்தனை குண்டடிபட்டும், முகவரி தொலைத்தும் ஒரு ஈழச் சகோதரன் தமிழுக்குச் செய்யும் நூற்றில் ஒரு பங்கையாவது... சுகமாக... தமிழ்நாட்டில் பிறந்துவிட்டு, தமிழ்பேசி வளர்ந்த நாம் செய்கிறோமா? (என்னையும் சேர்த்துதான்). அட.. செய்யாவிட்டாலும் பாதகமில்லையப்பா... செய்பவர்களை கேலி செய்து உங்களுக்கு ஆகப் போவது என்ன?.

முன்பு நான் ஒரு பின்னுட்டத்தில் குறிப்பிட்டதைப் போல, சினிமாப் பாட்டுதான் இலக்கியமே இன்றைய தலைமுறைக்கு, யார் அறிமுகப்படுத்துகிறார்கள் நல்ல தமிழ் என்பதை?., நமக்குத்தான் நம்முள் அடித்துக் கொள்ளவும், அடுத்தவனைப் பிடித்து கீழே (நம்மவர்களைத்தான்! வந்தாரைத்தான் நாம் வாழவைப்போமே?) தள்ளவும், ஜோல்னாப்பையை மாட்டிக் கொண்டு ஒதுக்குபுறமுள்ள கடற்கரையில் கூட்டம் போடவும் (அட அதை மக்கள் வசிக்கும் இடங்களுக்கு பக்கத்தில் போட்டாலாவது என்னமோ ஏதோன்னு சின்னப்பசங்க திரும்பி பாப்பங்க!), பின் நவீனத்துவங்கிற (புடலங்கா!) பேர்ல ஆபாசமா எழுதி அதிர்ச்சி தர்றதுன்னு ஆயிரம் வேலை இருக்கே!, நம்ம இளைஞன் ஒருவனை அழைத்து காலச்சுவடு, தீராநதி இதெல்லாம் என்ன என்று கேட்டுப்பாருங்கள்... காலச்சுவடு...? தீராநதி.....யா? எப்ப 'ரிலிஸ்' ஆகும் தீபாவளிக்கான்னு கேப்பாங்க சத்தியமா? ! (தமிழ்குடிதாங்கிளால்தான் இதுவும்), தப்பித்தவறி தெரிஞ்சு இருந்தா அந்தப்பிள்ளை தமிழ் வாத்தியார் மகனா இருப்பான் அல்லது தமிழ் எழுத்தாளரோட மகனா இருப்பான். நம்ம பிள்ளைகளுக்கு தெரிஞ்ச இலக்கியமெல்லாம் ஒன்று வாரமலர், ஆனந்தவிகடன் இல்லாட்டி அவன் படிச்ச பாடத்திட்டத்தில் வரும் மனப்பாட செய்யுள், அப்புறம் பாப்பையா அய்யா புண்ணியத்துல பட்டிமன்றம்!.

நெடுமாறன் அவர்கள் மேல் எனக்குஎப்போதும் மதிப்பு உண்டு!. ராமதாஸ், திருமாவளவனை எல்லாம்... ஏதோ சாதி ஓட்டு கொஞ்சத்த ஒருமுறை ஐயாவுக்கும், மறுமுறை அம்மாவுக்கும் போட சொல்ற சாதரண காளன் கட்சித் தலைவர்களாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். 'வாய்ஸ்' அ அடக்குனப்ப 'அட அப்பிடிபோடு'ன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா இப்ப... இப்ப... இப்படி ஓரிரு அரசியல்வாதிகள் இருந்தாத்தான்... தமிழ்நாட்டுக்கு நல்லது. எனவே தமிழ்குடிதாங்கிகளே!!! நீவீர் வாழ்க!!!.. தமிழ் பொயர் வைக்காதவர்கள் மேலும், ஒரு மூன்று மணிநேரம் பொழுதுபோக்குவதற்காக பார்க்க கூடிய ஊடகம் தான். அதில் மூன்று வருடம் நிலைத்து விட்டாலே.... நாற்காலியைப் பிடித்து உக்கார்ந்து கொண்டு வாழ்நாள் முழுவதும் மக்கள் வரிப்பணத்தில் நன்றாக தங்கள் பொழுதைப் போக்கிக்கொள்ளலாம் என்கிற துணிவைக் கொண்டுள்ளவர்கள் மீதும் இடி பொழிக!!!.

31 comments:

நற்கீரன் said...

சரியா சொன்னீங்க!

துளசி கோபால் said...

என்னங்க மரம், ஒரே போடாப் போட்டுட்டீங்க!!!!

Muthu said...

மரம்,
நல்லாச் சொன்னீங்க. தமிழைச் சொல்லி ஓட்டு வாங்குவது என்பது நடவாத ஒன்று. தமிழைப் பேசுவதே கொஞ்சம் கவுரவக் குறைச்சல் என்று எண்ண ஆரம்பித்திருப்பவர்களிடம் தமிழ், தமிழ் என்று சொல்லி ஓட்டு வாங்க முடியுமா??. நல்ல நோக்கத்தை நன்றாய்த் தமிழ் அறிந்தவர்களே உண்ர மறுக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

மதி கந்தசாமி (Mathy) said...

ஆ...... இப்படி அடிச்சு ஆடிற்றீங்க மரம்.

கலக்குங்க!

நீங்க குறிப்பிட்ட பதிவை எழுதியவரின் நோக்கம் நல்லதாகவே இருக்கும் என்று நம்புகிறேன். பின்னூட்டம் இட்டவர்கள் -? அங்கேதான் சிக்கலே.

-மதி

வசந்தன்(Vasanthan) said...

மரம்!
அப்படிப்போடு.

மொழிப்போருக்கு நான் ஆதரவு. ஆனால் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருந்த பெயர்ப்பலகையைத் தார் பூசியழித்ததாகப் பத்திரி (பத்ரி) எழுதியபோது ஏமாற்றமடைந்தேன். போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்களே அதற்குப் பொறுப்பு. எனினும் நெடுமாறன் ஐயா அதற்குள் இருப்பதால்தான் இது அரசியல் ஆதாயத்தைத்தாண்டிய அமைப்பு என்பது ஓரளவு எடுபடுகிறது.

pandaram said...

தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லுவது தப்பு இல்லைங்க! ஆனால் அதை அடாவடியா செய்யறது தாங்க தப்பு! மனித உரிமை என்று உள்ளதே அதனால் தான் இவ்வளவும் சொல்ல வேண்டியிருக்கிறது. கொஞ்சம் உணர்ச்சி வசப்படாமல் யோசித்தால் மொழி என்று இங்கு உபயோகப்படுத்தும் ட்ரம்ப் கார்டை, சாதி, மதம், இனம், மாநிலம், மாவட்டம் என்று எப்படி வேண்டுமனாலும் உபயோகப்படுத்தலாம்.
மொழியென்பது ஒரு தகவல் தொடர்பு சாதனம் என்ற அடிப்படை உண்மையை மறக்காமல் இருந்தால்/தார் பூசாமல் இருந்தால் என்னங்க தப்பு இருக்கிறது.

Raja Ramadass said...

தமிழன் வாழ்கிற வரைக்கும் தமிழ் வாழும். ஆனால் தமிழனை வாழ வைக்க எந்த அரசியல்வாதிக்கும் விருப்பமில்லை. இப்போது போராட்டம் என்பது எல்லாம் விளம்பரமாகிவிட்டது.

ஒவ்வொரு அரசியல் கட்சி தொண்டனும் தமிழ் மட்டும் தான் படிக்க வேண்டும் என சொல்ல எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் விருப்பமில்லை.

ஒருவகையில் சந்தோசம் திரைப்படங்கள் பெயரை மட்டும் மாற்ற சொன்னவர்கள் வீதி வரைக்கும் வந்திருப்பது

அப்டிப்போடு... said...

நற்கீரன், துளசி அக்கா, முத்து, மதி கந்தசாமி, வசந்தன் மற்றும் பண்டாரம் பின்னுட்டத்திற்கு நன்றி!


முத்து, இப்படிப்பட்ட சமுதாயத்தில் மூன்றாவது மொழிப்போர் வந்தால் என்ன தவறு? கசப்பான உண்மைகளை கொஞ்சம் கடுமையாக எடுத்து வைத்தால்தானே உணரமுடியும்?

மதி!,
அவர் ஆங்கிலத்தை அழித்ததற்கு வெகுண்டாரே., அப்படி தமிழுக்காக வெகுண்டாரா? என்பதே என் ஆதங்கம்.

வசந்தன்!
முத்து அவர்களின் பின்னுட்டத்தை பாருங்கள். தமிழின் பெயரால் யாரும் அரசியல் நடத்த முடியாது தமிழகத்தில் என்பதே உண்மை நிலை.

பண்டாரம் அய்யா அவர்களே!
மனித உரிமை! இந்த வார்த்தைகளை வைத்துக் கொண்டுதானய்யா நாட்டில் கொலைகாரனுக்கு கூட ஆள் சேர்க்கிறீர்கள்?. எது மனித உரிமை?. சாதிப்பாகுபாடும், இன, மொழி வளர்ப்பதும் ஒன்றா?. இனத்தை ஒடுக்கியாதால் எவ்வளவு விலை மதிப்பற்ற உயிர்களை இன்றும் இழந்து கொண்டு இருக்கிறார்கள் இலங்கையில். தத்தம் இனம் காக்க வேண்டித்தானே இன்றும் நிலமெலாம் இரத்தமாக இருக்கிறது பாலஸ்தீனத்திலும், இஸ்ரேலிலும் இவர்கள் எல்லாம் முட்டாள்கள்., இன, மொழி கடந்துவிட்ட புத்திசாலிகளே எது உங்கள் அடையாளம்? மொழி என்பது தகவல் தொடர்புக்காக மட்டுமென்றால் 'சைகை'யை விட தொந்தரவு தராத மொழி எதுவுமில்லை. ஏன் காப்பியங்களையும், காவியங்களையும் உலக மொழிகளில் படைக்கிறர்கள்?. வளர்ந்துவிட்ட எந்த நாடுகளும் தன் மொழி வளர்ச்சியை விட்டதில்லை. அமெரிக்காவில் கடை வைத்திருக்கும் ஒரு சீனாகாரனோ, ஜப்பான்காரனோ சீன மொழியிலும், ஜப்பான் மொழியிலுமே பெயர் வைக்கிறான். (எழுத்துக்கள் சீன மொழியிலுமிருக்கும் ஆங்கிலதிலுமிருக்கும்) . ஒரு உணவு விடுதி வைத்திருபவர் 'கிரேட் வால்' உணவு விடுதி என்று வைத்து தம் சாதனையை பறை சாற்றுகிறான். அவர்களை யாரும் தார் பூசி அழிக்கவுமில்லை, தார்க்குச்சி வைத்து குத்தவும் இல்லை. தன் தாய் மொழிமீதுள்ள தார்மீக அன்பினால் செய்கிறான். இங்கு நம்மை குத்தினால்கூட பாருங்கள் எவ்வளவு குற்றம் கண்டுபிடிகிறோம்?. உணர்ச்சிவசப்படக் கூடாதா?. இணையத்தில் உலவுகின்ற மெத்தணங்கள் என்னை அதிர்ச்சியுரவே செய்கிறது!!!. நாமெல்லாம் அங்கு படித்து, அங்கு வளர்ந்தோம். தமிழ் பேசு எனத் தடியெடுக்கும் நிலைமை. நமது பிள்ளைகளில் 25% வெளிநாட்டில் வளர்கிறார்கள். கணணியின் மூலம்தான் அவர்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள் அவர்கள். எனவே எழுதுவதைப் பொறுப்புடன் எழுதுவோம். குறைந்தது, நம் நாடு, நம் மொழி பற்றி எழுதும் போதாவது. தீட்டிய மரத்திலே கூர் பார்க்கதீர்கள்... தாங்கமுடியவில்லை! மொழியிழந்தவர் முகமிழந்தவர் ஆவர் என்பதை ஆணித்தரமாக கூறிக் கொள்கிறேன்!!!.

G.Ragavan said...

அப்படிப் போடு, தமிழில் பெயர் வைப்பதையோ தமிழில் முறையாகப் பேசுவதையோ யாரும் எதிர்க்கவில்லை (அல்லது நாங்கள். நான் துரோகிகளை விட்டு விடுகிறேன்). தமிழ் வளர்ச்சியில் அக்கறை எங்களுக்கும் உண்டு. எங்களைப் போன்ற நடுநிலையாளர்களின் கருத்தே வேறு.

செய்வதை முறையாகச் செய்ய வேண்டும். தமிழை ஆதரிப்பது வேறு. வேறு மொழியை எதிர்ப்பது வேறு. தமிழ் வளர்ப்பிற்கு எங்கள் ஆதரவு உண்டு. இந்தியைத் திணித்தாலும் நடுநிலையாளர்கள் எதிரிக்கத்தான் செய்வோம். ராமதாசையும் திருமாவளவனையும் இந்த விஷயத்தில் குற்றம் சொல்கின்றவர்கள் எல்லாம் தமிழ் எதிரிகள் அல்ல. உங்களை விட, இவர்களை விட இலக்கியத்தில் இன்னும் ஆழமாக இருக்கின்றவர்கள்.

வன்முறையால் யாரையும் பணிய வைக்க முடியாது. அது எதிர் விளைவையே உண்டாக்கும். அதுதான் நடக்கிறது. அதுதான் எங்கள் வருத்தமும்.

pandaram said...

நன்றி ராகவன்! சொல்ல வந்ததை அழகா சொல்லிட்டீங்க.

என்னங்க மரம்? உணர்ச்சிவசபடுதலில் பாரதிராஜா வம்சமா இருப்பிங்க போலிருக்கு :)

'சைகை' மட்டுமே இருந்திருந்தால் இன்றைக்கு இவ்வளவு பிரச்னை இல்லமால் இருந்திருக்கும் (Hopefully!). நான் முன்பே கூறியது போல் மொழி, அடிப்படையில் ஒரு மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு சாதனமே.காப்பியம், காவியம் எல்லாம்
அதற்கு அப்புறம் தான்.

அப்டிப்போடு... said...

ராஜா ராமதாஸ் (அட!),

அரசியல்வதிகள் நல்லது பண்ணுவதில்லை எனப் புலம்புகிறோம். பண்ணினால் விளம்பரம் என புறம் தள்ளுகிறோம். விசித்திரமான ஆளுக நாம!

அப்டிப்போடு... said...

ரகவன்,

வடக்க வளந்தவரு நீங்க., எங்கூர்ல போய், சின்னப் பசங்கள கூப்பிட்டு 5 நிமிஷம் பேசிப்பாருங்க தெரியும். உங்க அளவுக்குகூட யாரும் தமிழ் பேச மாட்டாங்க. வன்முறை சாதித்துதான் இருக்கிறது!., இப்போது வருகின்ற படங்களின் பெயர்களைப் பாருங்கள். வன்முறை கூடாதென்பதில் எனக்கும் மாற்று கருத்தில்லை. தார்பூசி அழிப்பது வன்முறையா?., அது மனித உரிமையே... அல்லவா நாடு நிலைமையாளர்களுக்கு!!. எந்த வேற்று மொழியயும் கற்றுக் கொள்ளாதே என்று யாரும் கூறவில்லை!!!. வீதிக்குவீதி 'கான்வென்ட்'., 'கேந்திரவித்தியாலயா' தான?. தமிழை நடைமுறைப் படுத்துங்கள் என்று தான் கேட்கிறார்கள். என்னுடைய இலக்கிய அறிவின் ஆழத்தை என் இரண்டு பதிவுகளிலேயே முடிவு கட்டிவிட்ட பலே இலக்கியவாதியே புரிந்ததா?. வருகைக்கு நன்றி.

G.Ragavan said...

//அரசியல்வதிகள் நல்லது பண்ணுவதில்லை எனப் புலம்புகிறோம். பண்ணினால் விளம்பரம் என புறம் தள்ளுகிறோம். விசித்திரமான ஆளுக நாம! //

அப்படிப் போட முடியவில்லை நண்பரே! நல்லது என்று எதைச் சொல்கின்றீர்கள்? தமிழிசைச் சங்கம் நிறுவி அதில் தமிழிசையைக் கற்றுக் கொடுத்து தமிழ்ப் பாடல்களை மேடையேற்றி பிரபலமாக்கியதையா?
ஊர் தோறும் இலவசக் கல்வி மையங்கள் அமைத்து ஏழைகளுக்கும் எழுத்தறிவில்லாதவர்களுக்கும் தமிழில் பிழையின்றி எழுதவும் படிக்கவும் கற்றுத் தந்ததற்காகவா?
சிறந்த தமிழ் நூல்களைத் தேர்ந்தெடுத்து அவைகளுக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கி படிக்கின்ற எழுதுகின்ற வழக்கத்தை ஊக்குவித்திற்காகவா?
அல்லது தமிழிலுள்ள சிறந்த நூல்களை பிறமொழிகளில் சிறப்பாக மொழி பெயர்த்து அவைகள் பெருமையுறச் செய்ததற்கா?
பிறமொழிகளிலுள்ள நல்ல இலக்கியங்களை தமிழுக்குக் குற்றமற மொழிமாற்றம் செய்து "சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்ற பாரதி சொன்ன வழி நடந்ததிற்கா?
அல்லது பாரதிதாசன் அருந்தமிழ்க் கவிதைகளைப் எழுதிப் பரப்பி தமிழ் வளர்த்தமைக்கா?
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நல்ல திரைப்படங்களை எடுத்து "இதைப் பார்த்துப் பழகு" என்று அடுத்தவனிடம் பெருமிதம் பேசியதற்கா?

இதையெல்லாம் செய்யாம விட்டுட்டு தார் பூசி அழிக்கிறதல்லாம் தமிழை வளர்க்குமுன்னு பேசினா......ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று சூழினும் தாமுந்துறும்.

இப்ப சொன்ன ஊழ் மக்களுக்கு இல்ல. ஏன் தெரியுமா?
"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்" இதெல்லாம் தமிழிலக்கியங்கள் சொன்னவை. இதெல்லாம் அவங்களுக்கு எடுத்துச் சொல்லுங்க.

அப்டிப்போடு... said...

பண்டாரம்!

உணர்ச்சிவசப் படுறதுல 'பாரதிராஜா' வம்சமா இருந்திட்டுப் போறேன்.. ஆனா உணர்ச்சியே இல்லாம இருக்குற... ஆ அது சரி... அட இதுவும் சரிதான்னு ஒரு தெளிவான நிலைப்பாடில்லாமல் இருக்கிறவங்க என்னா வம்சம் சாமி?. இப்படிப்பட்டவர்கள் சமுதாயத்தில் ஏதோ அங்கொன்றும், இங்கொன்றுமாக விதிவிலக்குகளாக இருத்தால், ஒதுக்கிவிடலாம். விதிவிலக்குகள் பெருகிக்கொண்டிருப்பது ஆபத்தானது அப்பனே!.

அப்டிப்போடு... said...

இப்பதிவிற்கு மாற்று கருத்துடன் பின்னுட்டமிட்ட இலக்கியவாதிகள் கீழ்கண்ட இணைய தளத்திற்கு செல்ல, தங்களது பொன்னான நேரத்தை வீணடிக்கிறேன் எனக் கருதாமல் சொடுக்குக.

http://annakannan.blogspot.com/2005/05/blog-post_24.html

G.Ragavan said...

அப்படிப் போடு, உங்கள் இலக்கிய அறிவைக் குறைவாக மதிப்பிட்டதிற்கு மன்னிக்கவும். உங்களுடன் புதிதாகப் பழகுவதாலும் அறிமுகமில்லாததாலும் அப்படிப் போட்டுவிட்டேன். போட்டிருக்கக் கூடாதுதான். மன்னித்து விடுங்கள். செய்த தவறுக்கு எந்த விளக்கமும் கொடுக்க முடியாது. இருந்தும் வரவேற்ற பெருந்தன்மைக்கு தலை வணங்குகிறேன்.

நான் வடக்கே வளர்ந்தவனில்லை. தெற்கேதான் பிறந்தேன். வளர்ந்தேன். படித்தேன். எனக்கும் இந்தி எழுதப் படிக்கத் தெரியாது. தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆகையால் என்னை வடக்கிலிருந்த வந்த வளப்பன் என்று தவறாக எண்ணி விடாதீர்கள்.

மற்றொன்று வடக்கிலும் திரைப்படங்கள் ஒன்றும் கலைப்படங்களாக வருவதில்லை என்பதே உண்மை.

வீதிக்கு வீதிக்கு கான்வெண்டுகள்தான். ஒத்துக் கொள்கிறேன். தாம் விரும்பிய எதையும் படிக்கும் உரிமை எவருக்கும் உண்டு. அதைத் தடுக்கக் கூடாது. மாறாக தமிழ் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அது வேறு செயல். அதைத் தமிழறிஞர்களிடம் கேட்டால் சொல்வார்கள். கண்டிப்பாக தார் பூசச் சொல்ல மாட்டார்கள்.

நீங்கள் சொன்ன மாதிரி பள்ளிகளில்தான் நானும் படித்தேன். எனது தமிழும் மோசமில்லை. எல்லாம் ஆர்வத்தில் வருவதுதான். அந்த ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.

என்னுடைய வேதனையெல்லாம் இந்த அடாவடிகள் எல்லாம் மக்களிடத்தில் வெறுப்பை உண்டாக்கி, தமிழிடமிருந்து தள்ளிப் போகும் தூரத்தைக் கூட்டிவிடுமென்றுதான். அதைவிட இன்னொன்று. இவர்களையெல்லம் முட்டிக்கு முட்டி தட்டி ஜெயலலிதா ஜெயிலுக்கு அனுப்புவார். அதைப் பாராட்டி ஜெயலலிதா நல்லது செய்து விட்டார் என்று எல்லாரும் பாராட்டுவார்கள். அதைத்தான் தாங்க முடியாது.

என்னவோ போங்கள். நடப்பது நடந்தே தீரும்.

vishytheking said...

see todays dinamalar (24th may) they show how much these parties are interested in tamil.. their own political office has english.. they go to others places to clean up the things..
Publicity stunt.. nothing in this for tamil..

vishy

vishytheking said...

hi

see the big picture.. these are the same guys who said i will align with anybody to grow.. (same logic BSP adopted.. now they are aligning with brahmins in up.. convening a sammelan for them).. Ramadoss's grand children study in a school which teaches only Hindi and English. There is a wonderful tamil school in Delhi where all my relatives and friends studied. Tamil is not for Ramadoss's family.. its for public.. if he could kindle the tamil spirit and show to others as tamizhkudi tangi, he can get more votes.. Now that he could not muster more votes, he has aligned with a dalit (whom they attacked in 80 and 90s to build the party) so that his candidate will get the dalit votes too. I am sure if Jaya is giving 10 seats extra, he will also find a reason like veeramani did (he said he is supporting Jaya becoz she put sankaracharya in jail) to align with her..

All you educated guys also fail to see the real reason.. that is the pity.. When we talk we say, padiparivillatha moodargal irattai ilayai pathu kuthuvanga.. We also do that knowingly..

who can save all of us.

அப்டிப்போடு... said...

ராகவன்,

உங்கள் அளவிற்கென்றால், வடக்கில் இருந்தவர்கள்., எனச் சுட்டவே எழுதினேன். மன்னிக்கவும். உண்மையில் அது ராகவனை நினைத்து எழுதவில்லை. உங்கள் பதிவுகள் படித்து பின்னுட்டங்களும் இட்டதாக நினைவு. ஊக்குவித்தல் என் மகிழ்வு

அப்டிப்போடு... said...

vishytheking,

//who can save all of us//
Welcome!. Why we have to always search somebody to save us. All the political revolutions are came by the persons who stayed away from their motherland. Magadhma Gandhi thought about our freedom, when he lived in South Africa. If we come closer., we can CHANGE EVERYTHING.

G.Ragavan said...

//ராகவன்,

உங்கள் அளவிற்கென்றால், வடக்கில் இருந்தவர்கள்., எனச் சுட்டவே எழுதினேன். மன்னிக்கவும். உண்மையில் அது ராகவனை நினைத்து எழுதவில்லை. உங்கள் பதிவுகள் படித்து பின்னுட்டங்களும் இட்டதாக நினைவு. ஊக்குவித்தல் என் மகிழ்வு//

ஆம் நண்பரே. உங்கள் பின்னூட்டு வழியாகத்தான் உங்கள் வலைப்பூவை நுகர்ந்தேன். :-) புதிதாக நுழைந்திருக்கிறேன். ஆகையால் உங்கள் ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் கண்டிப்பாகத் தேவை.

அன்புடன்,
கோ.இராகவன்

vishytheking said...

//who can save all of us//
Why we have to always search somebody to save us. we can CHANGE EVERYTHING.
//

It was supposed to be meaning "nobody can save us". anyway i appreciate your positive ending.. yes we can change anything and its us who had been changing the history.. nobody else does that.. may be sometimes some body leads or show the direction.

But this is all around the world.. when i see people supporting Bush's thirst for war, after all these lies and losing hundreds of young americans to war, its not alone in Tamilnadu, but around the world people believe somebody without doing an evaluation. (Pagutharithal indri karuthukalai othukkolluthal, namakku palan tharum karuthukalai mattum yetrukolluthal)

regards

vishy

ps. please write in tamil.. I could not download the tamil software into my office PC hence i am writing in english..

அப்டிப்போடு... said...

//But this is all around the world.. when i see people supporting Bush's thirst for war, after all these lies and losing hundreds of young americans //

விஷி,

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை பராட்ட, திட்ட என கூட்டங்கள் எப்போதும் இருக்கும். வழிகாட்டும் தலைவர்களை விமர்சிக்காமல் ஏற்றுக் கொள்ளுதல் அதாவது புஷ் அவர்களின் போர் தாகம் நியமற்றது என்றாலும் அதை பெரிய நாடுகள் சில ஆதரிக்கத்தானே செய்தன?. அது அவர்களின் லாபம் கருதியே. பிரிட்டன் ஆதரித்தே ஆக வேண்டும் தங்கள் பொருளாதாரம் தொடர்ந்து ஓங்கியிருக்க. ஆயுத வர்த்தகத்தை மேம்படுத்தவே போர்கள் என்பது எல்லா அமெரிக்கர்களுக்கும் தெரியும். ஆனாலும் புஷ் ஐத்தான் மீண்டும் தேர்ந்தெடுத்தார்கள். நமது ஊரில் நடப்பதையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?. மாற்றத்தை தலைவர்களிடம் எதிபார்ப்பது போகத ஊருக்கு வழி தேடுவதைப் போன்றது. ரமதாஸ் தமிழ்ப் பற்று மிக்கவர் என்று நான் நம்பவில்லை., அவர் 10 சீட் என்ன 5 சீட் அம்மா அதிகமாக குடுத்தாலே, ஓடி அ.தி.மு.காவுடன் ஒட்டிக்கொள்வர். ரமதாஸ்சின் பேரன்கள் மட்டுமல்ல, தழிழைச் சொல்லி கட்சி வளர்த்த அனைவரது வாரிசுகளும் அப்படித்தான். ஆனால் தமிழ் நாட்டில் குறைந்த பட்சம் தமிழ் நடைமுறைப் படுத்த வேண்டும் என்பது ஆதரிக்கதக்க கருத்து தானே?. அரசியல்வதிகள் மேல் அவர்கள் என்ன செய்தாலும் ஒரு முத்திரை வைத்துதான் இருக்கிறோம், ஆனாலும் நன்று சொன்னால் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் நமக்கு வர வேண்டும். அரசியல்வாதிகளின் செயல்களுக்கு உரிய கூலியை காலம் தந்து கொண்டுதானிருக்கிற்து. அது நம்மூர் தலைவரானாலும், ஜார்ஜ் புஷ் ஆனலும்.

vishytheking said...

The point is not refusing what he says.. I too believe that tamil needs to be guarded.. preserved.. but making it a classical language or erasing the english names will not change.. when they had the power to enact rules.. did they bring some rules to make everybody study in tamil medium schools till 5th or 8th..

At the end of the day, if i study in tamil medium school, can i do my MBBS (can i first of all qulaify with that many marks studying in tamil? are there people to teach me?)or BE?

So what are we fighting at.. we dont have the infrastructure to teach in tamil and survive in tamil.. we can only write stories and film songs in tamil now.. if i study in tamil medium, i can only become a peon in a governmetn office.. (i am not teasing anybody.. but telling matter of factly).. or i should become a lawyer or politician.. (or the better profession god man..).

we always quote japan korea and china germany for using their mother tongue.. there you can do anything in their language.. they need not learn english or other language to survive..here i have to.. When i left chennai, 17 years back to bhopal for a job in P&G, i dont know a single syllable in Hindi..(we used to call it a kuthirai karan language.. hai hai nnu sollaranga nnu).. I could not get food.. the shop keepers used to say , tell me the name of the thing u want.. no this , that buziness..).. we have discussions if we should translate the speech of the governer into tamil or not.. how many of our ministers speak in tamil in the parliament.. none of the hindi belt politicians speak in angrazee including Atal bihari.

Our leader is saying that he let his Nephew become minister becoz he speak hindi.. that is the basic culture we have.. we dont want tamil except for writing and talking in political meetings.

I too agree that "epporul yaar yaar vaai ketpinum". But here all that people say are loaded..This ultimately expects every body to fight so that the other person can grow.. the irony is his party office should have been the first target to erase english. he should have cleaned his shit.. turn towards our own houses.. are we willing to put our children in a tamil medium school or college..

what is the big purpose served in these protests.. and supporting the leaders who lead these protests..

We always keep ourselves in isolation to survive.. that is not the right thing.. we should equip ourselves to fight and then win.. its the same story of two lines.. and rubbing the bigger line to show the smaller line as big. How long can we do that..

we are worried about getting the credit.. who did this.. today the leaders say i did not say anything for srilankan tamils..its you who did that.. vazhga tamizh patru.. tamizhan endru sollada talai kunindu nillada.. I remember my fellow students who died in 1983 in tiruchi when the bus driver drove over them when we were protesting the death of tamils in srilanka.. Now its a pride to say, its not me who supported the tamils.. we wanted all of them to die..

let the personal agendas rule this country and let tamil die a natural death..

(sorry if i have hurt anybody.. unless we remove the entire amma ayya culture and bring in a selfless leader we are going nowhere..this is my personal pain as i see lots of my people study only english and my own niece asked me if i write poetry in tamil and said can you please translate that for me as i cannot read tamil.. They dont live in america or Mumbai.. they are in a village near Kumbakonam..)

vishy

Tamizhil ezhuthiyatharku mikka nandri.. anbu nanbare..

pandaram said...

மரம்,

தயவு செய்து இந்த சுட்டிக்கு செல்லுங்கள்:

http://mayavarathaan.blogspot.com/2005/05/blog-post_25.html

//தார்பூசி அழிப்பது வன்முறையா?., அது மனித உரிமையே... அல்லவா நாடு நிலைமையாளர்களுக்கு!!. //

நிச்சயமாக இல்லை! கொஞ்சம் நிதானமாக யோசித்து எழுதுங்கள்!

தமிழ் வளர்ப்பது வேறு; தார் பூசினால் வன்முறை தான் வளரும்.

"முக்கண்ணனேயானலும், முரண்பட்டால் சுட்டுவேன்"

-என்பதை, சுட்டு விடுவேன் என்று வேண்டுமானாலும் மாத்திக்கலாம்!

மாற்று கருத்தை அதன் தன்மை/தரம்/context (தமிழ் வார்த்தை தெரியவில்லை) கொண்டு அலசுங்கள்;

நாங்கள்/நான் தமிழ் எதிரி என்று முடிவு செய்து- தமிழ் வளர்த்தலின் அவசியம், தமிழின் இன்றைய நிலை, இன்ன பிற...-எழுதிப் போவது என்ன விதத்தில் சேரும் என்று தெரியவில்லை.

தார் பூசி தமிழ் வளர்ப்பதை ஆதரித்தலும், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் -ஐ ஆதரித்தலும் ஒன்றுதான்!

உங்களோடு சண்டையிட வேண்டுமென்பதல்ல என் குறிக்கோள் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

அப்டிப்போடு... said...

அன்பு நண்பர் பண்டாரம் அவர்களே!,

நீங்கள் தமிழுக்கு எதிரி என முடிவு கட்டியிருந்தால்., உங்கள் பின்னுட்டத்திற்கு மறுமொழி எழுதியிருக்கவே மாட்டேன். தார்பூசி தமிழ் வளர்க்கிறார்கள் என்கிறீர்கள். எனக்கு என்ன செய்தேனும் தமிழை நடைமுறைப் படுத்த முனைகின்றனரே எனவே எண்ணத் தோன்றுகிறது. ஒரு கருத்திற்கு பின்னுட்டம் இடும் பொழுது கருத்தைப் பற்றி போசுவதை விடுத்து, பாரதிராஜா வம்சம், பாக்கியராஜ் வம்சமெல்லாம் தேவையா. யோசித்து எழுதுங்கள், சுட்டுவிடுவேன் என மாற்றிக் கொள்ளலாம்... இதெல்லாம் என்னத்துக்கு. முரண் பட்டால் என்றால் அநீதி இழைத்தால் எனப் பொருள் என்னுடன் முரண்பட்டால் என்பதல்ல, . சுட்டுவேன் என்றால் சுட்டிக்காட்டுவேன் எனப் பொருள். மனித உரிமை பற்றி பேசும் நீங்கள் சுட சொல்கிறீர்கள். மனித உரிமை என்றால், பாதிப்புக்கு உள்ளானவர், பதிப்பை செய்தவர் இருவருமே மனிதர்கள்தான், இருவருக்குமே மனித உரிமை உண்டு!. நான் யோசிக்காமல் எதையும் எழுதுவதில்லை. என்னுடன் சண்டையிட வேண்டும் என்ற தேவை உங்களுக்கில்லை என்பதை நானறிவேன். நான் கூறிய அனைத்தும் உங்களுக்கு மட்டுமல்ல புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சுட்டிய பதிவு, அன்னாரது படைப்புகளை அனேகமாக நாந்தான் முதலில் படிப்பேன். என் மீது ஏதேனும் வருத்தம் இருந்தால் மன்னிக்கவும். ஆனால் தமிழ் குடிதாங்கிகளை வரவேற்க வேண்டும் இவ்விடயத்தில் என்ற கருத்தில் எந்த மாற்றமும் எனக்கில்லை. நன்றி!!

அப்டிப்போடு... said...

விஷி!
ஆழ்ந்த ஆதங்கம் உங்களுடையது. முதலில் 5 ஆவதிலிருந்து 8 ஆவது வரை அனைவரும் தமிழையே பயிற்று மொழியாக்கச் சட்டம் கொண்டு வந்தால்... ஆங்கிலப் பெயர்களை அழிப்பதற்கே துடிப்பவர்கள் சும்மா விடுவார்களா?. அடுத்தது மருத்துவமோ, பொறியியலோ தமிழில் படிக்க முடியாது. ஏன் முடியாது.? அறிவியல் தமிழ் என்பது வளரவில்லை!. எப்படி வளரும்?., நாமெல்லாம் கான்வெண்டில் படித்து வளர்கிறோம், ஆங்கிலத்தில் படித்து, படித்தை வாயிலெடுத்து மதிப்பெண்கள் பெருவது மட்டுமே நமது நோக்கம். யார் வளர்க்க வேண்டும்?., அவர்களும் தனித்தமிழ் வாரியம், தமிழுக்கு தனி தமிழ்குடிமகன் எல்லாம் வைத்துப் பார்த்தனர். பயன்???. தமிழ் படித்தால் பணியாளனாக மட்டுமே போக முடியும் என முடிவு கட்டி விடுகிறோம். தமிழ் ஆசிரியர்களை தவிர்த்துவிட்டீர்கள்?., தமிழ் படிப்பதற்கான வசதிகள் குறைவு!. I.A.S ., I.P.S படிக்க நமது ஊரில் வசதிகள் குறைவுதான். ஆனால் என்ன முயற்சித்தும் அதை நாம் படிக்கப் பார்கிறோம். தமிழைப் படித்தால் டப்பு க்குத் தேறாது என்று நமக்குத் தெரியும். அதானால் அதை அசட்டை செய்கிறோம். விளைவு கடைப் பெயர்களிலிருந்து, திரைப்பட பெயர்கள் வரை வேற்று மொழிப் பெயர்கள்தான். ஜப்பான், சீனாவக் குறிப்பிட்டேன். ஒரு நண்பர் இதற்கென தனிப் பதிவே போட்டுவிட்டார். சீனர்கள் ஆங்கிலம் கற்காததால் வருத்தப்படுகிறார்கள் என்று. இது ஒரு மாயை ஆகவே படுகிறது., சீனர்களே இப்போது உலகில் அதிகம் புலம் பெயர்ந்திருப்பது. சிங்கப்பூரில் வசிக்கும் அந்த நண்பர் நெஞ்சில் கை வைத்து சொல்லட்டும்., வெரும் 'நோ லா' 'கேனா' 'க்ரொட்' என சிங்கிலீஸ் போசும் அந்த நாடு ஆங்கில அறிவு இல்லாத்தால் எதில் குறைந்திருக்கிறது?. சீனா, ஜப்பன் மட்டுமல்ல பிரான்ஸ், ஸ்பெயின், நார்வே, ஜெர்மனி, நெதர்லண்ட், இத்தாலி, ரஷ்யா, இஸ்ரேல், பாலஸ்தீன், அரேபிய நாடுகள் அனைத்தும் (சில நாடுகள் விடப்பட்டிருக்கலாம் ) ஆங்கிலத்தை அவசியமென கருதவில்லை. அரபி மொழியில்தான் முதன் முதலில் ஆங்கில கணணி மொழிகளுக்கு மாற்றாக கணணி மொழிகள் வெளிவந்தன. இப்போது அவர்களது அனைத்து கணணி செயல்பாடுகளும் அவர்கள் மொழியில் உள்ளது. மெல்ல மெல்ல பெரும்பான்மையான நாடுகளும் மாறிக் கொண்டு இருக்கின்றன. இதை நான் எழுதுவதால்., ஏதோ ஆங்கிலமே வேண்டாம் எனக் கூறுகிறேன் என்று யாரும் குதிக்காதீர்கள். " உலகத்தை காட்டும் கண்ணாடி " என்றார்கள், ஆனால் அது அமெரிக்காவையும், பிரிட்டனையும் தவிர எதையும் காட்டுவதாக எனக்குத் தெரியவில்லை. உலக இலக்கிய மொழிபெயர்ப்புகள் வேண்டுமானால் மிகுதியாக காணக்கிடைக்கலாம். அமெரிக்காவிலும் கூட நமது உச்சரிப்பு முறையிலிருந்து வேறுபட்ட ஆங்கிலமே. சிறிது காலம் அவர்களுடன் பேசிப் பழகினால்தான் நாம் போசுவது அவர்களுக்குப் புரியும். அதற்கும் கூட மிகுந்த இலக்கணம் பிறழாத சொற்றொடர் எல்லாம் தேவையில்லை. "go straight" என்பதை " all the way down" என்கிறார்கள் "hereafter" என்பதை "now on" என்கிறார்கள். இது உதாரணமே. ஆங்கிலம் பல்வேறு வேற்று மொழி வேர்ச் சொல் கொண்டதுதான் எனினும் ஒரு மாயை உண்டாக்கத்தக்க அளவில் அது வளர்ந்திருக்கிறது என்றால், அதன் பாயன்பாடு அப்படி. அமெரிக்கனோ, பிரிட்டனில் உள்ளவனோ, அவன் தாய் மொழி மறந்து வேற்று மொழியை கொண்டாடுவானாயின், அம்மொழியும் தமிழ் மொழி போலவே ஆகும். ஜார்ஜ் புஷ் தார் தூக்கும் நிலைமை வரும். நீங்கள் குறிப்பிட்டதைப் போல், உங்களுக்கு உணவு வேண்டுமெனில் அத்தியாவசிய தேவையான வார்த்தைகளை நீங்கள் அம்மொழியில் கற்றுத்தான் ஆகவேண்டும் என்ற ஒன்றை உங்கள் மேல் திணிக்கும் உரிமையை அவனுக்குத் தருகிறீர்கள் (அதில் உங்கள் தேவையும் இருக்கிறது, மறக்கவில்லை!) ஆனால் ராமதாஸ்க்கு மறுக்கிறீர்கள். அவர் செய்யட்டும் முதலில் என்கிறீர்கள்!!!. அவர் சாக்கடையில் நின்று கொண்டு நன்மைப் பார்த்து சாக்கடையில் இறங்காதே என்று கூறினால், நீ வெளியே வா., அதுவரை நானும் நிற்கிறேன் என்று சொல்வது எவ்வளவு அபத்தமானது?. நான் முன்பே கூறியபடி அரசியல்வாதிகளுக்கென நாம் வேறு இடத்தைதான் வைத்திருக்கிறோம். ஆனாலும் ஈழத் தமிழர் பற்றி "அவர்" பேசியிருப்பது அதிர்ச்சியையே அளிக்கிறது. தள்ளாமை கொடிது அதனினும் கொடிது தள்ளாமையில் அரசியல் செய்வது போலும் (வேறு என்ன சொல்ல?). பின்னுட்டத்தில் உங்களை சிறுமை படுத்தும் முகமாக எதுவும் நான் எழுதவில்லை. அப்படி ஏதேனும் தொணித்தால் முன்பே கோருகிறேன் மன்னிப்பு!.

வீ. எம் said...

அரசியலுக்கா , விள்ம்பரத்துக்கா ..புரியவில்லை .. செய்யும் விஷயம் சரி..ஆனால் செய்ய சொல்லுபவர்கள்????
====================


"சென்னையில் இருந்து திண்டிவனம் போய்க்கொண்டு இருக்கிறேன், ரோடு(raod) எல்லாம் குண்டும் குழியுமா இருக்கு...
என் கார்(CAR) டயர் (TYRE) கிழிந்து போய் எனக்குக் ஆயிரக்கணக்கில் நட்டம்........ இங்கே ரோடெல்லாம் அப்படி இருக்கு... "

"கவர்மென்ட் (goverment) ஆபீஸ்(office) ல ·பைல்(file) நகரனும்னா லஜ்சம் தர வேண்டி இருக்கு...."
.................... இந்த நிலை மாறனும்னா நீங்க யாருக்கு ஓட்டு(vote) போடனும்????

================

மேலே உள்ள பகுதி யார் பேசியது தெரியுமா????? தார் பூச்சு நாயகன் ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசியதில் இருந்து ஒரு சிறு பகுதி....

புரிகிறதா????? புரிந்தால் சரி !!!

வீ. எம்

அப்டிப்போடு... said...

வீ.எம்,

விஷியின் பின்னூட்டத்திற்கான மறுமொழியின் பகுதியையே உங்களுக்கும் சுட்ட விரும்புகிறேன்.

//அவர் சாக்கடையில் நின்று கொண்டு நன்மைப் பார்த்து சாக்கடையில் இறங்காதே என்று கூறினால், நீ வெளியே வா., அதுவரை நானும் நிற்கிறேன் என்று சொல்வது எவ்வளவு அபத்தமானது?.//

//ராமதாஸ் தமிழ்ப் பற்று மிக்கவர் என்று நான் நம்பவில்லை., அவர் 10 சீட் என்ன 5 சீட் அம்மா அதிகமாக குடுத்தாலே, ஓடி அ.தி.மு.காவுடன் ஒட்டிக்கொள்வர். ரமதாஸ்சின் பேரன்கள் மட்டுமல்ல, தழிழைச் சொல்லி கட்சி வளர்த்த அனைவரது வாரிசுகளும் அப்படித்தான். ஆனால் தமிழ் நாட்டில் குறைந்த பட்சம் தமிழ் நடைமுறைப் படுத்த வேண்டும் என்பது ஆதரிக்கதக்க கருத்து தானே?. அரசியல்வதிகள் மேல் அவர்கள் என்ன செய்தாலும் ஒரு முத்திரை வைத்துதான் இருக்கிறோம், ஆனாலும் நன்று சொன்னால் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் நமக்கு வர வேண்டும். // பின்னுட்டத்திற்கு நன்றி!

vishytheking said...

அவர் சாக்கடையில் நிற்கவில்லை..அவர் வீட்டு மாடியில் நின்று கொண்டு உஙளை சாக்கடையில் இறங்க சொல்கிறார்.. அவர் மகன் மொன்ட்பொர்ட் பள்ளியில் படித்தான்.. அவர் பேரக்குழந்தைகள் டெல்லியில் நல்ல பள்ளியில் படிக்கிறார்கள்.. இந்தி தெரியாமல் வேலை கிடைக்கத நண்பர்கள் ஏராளம்.

அவர் அலுவலகத்தில் ஆங்கிலம் புகுந்து விளையாடுகிறது.. நீங்கள் ஆங்கிலம் உபயோகிக்க கூடாது என்று மட்டுமே போரட்டம்.. இந்தி தெரிந்ததால் ஒருவர் அமைசசர் ஆனார். தெரிந்தால் சரி.

அ நீங்கள் = பொது மக்கள்..

சன் டிவி பெயரை மாற்றச் சொன்னால், பத்து வருடங்கள் ஆகி விட்டதென்று கூறுகிறார்கள். தமிழுக்காக இது கூடவா செய்ய மாட்டர்கள்.. உயிர் தமிழ், உணர்வு தமிழ்..ஆனால் பெயர் மாறினால் வியாபாரம் போய் விடும்.. (இல்லை அதிர்ஷ்டம் பொய் விடுமா... சப்பை கட்டு கட்டதே அம்மா.

தமிழ் மீது பற்று வையுங்கள்.. ஏமாறாதீர்கள்..

விச்சு

enRenRum-anbudan.BALA said...

மரம்,
படிக்க சுவாரசியமான பதிவு தான் !!!

//நல்ல நோக்கத்தை நன்றாய்த் தமிழ் அறிந்தவர்களே உணர மறுக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.---- முத்து
//

இங்கு ஒரு விடயத்தை மறுபடியும் வலியுறுத்த வேண்டியது அவசியமாகிறது. தமிழ் வளரவேண்டும் என்பதிலும், தமிழை நடைமுறையில் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் பொதுவாக யாருக்குமே மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால், 'நல்ல' நோக்கத்தின் பின்னணியில் இருப்பது விளம்பரம் மட்டுமே என்கிறபோது எதிர்க்கத் தான் செய்வார்கள்.

//நல்லது பண்ணுனா வரவேற்கின்ற குணம் எப்போதுதான் நமக்கு வருமோ?...
//
UPA கூட்டணியில் இருக்கிற பல தலைவர்கள், இவங்க செய்ற நல்லதை (!!!) அப்படியொன்றும் ஆர்ப்பாட்டமா வரவேற்ற மாதிரி தெரியலையே :-(

//அவர் சாக்கடையில் நின்று கொண்டு நன்மைப் பார்த்து சாக்கடையில் இறங்காதே என்று கூறினால், நீ வெளியே வா., அதுவரை நானும் நிற்கிறேன் என்று சொல்வது எவ்வளவு அபத்தமானது?.
//
ஆனால் தன்னால் பின்பற்றமுடியாத ஒன்றை ஒருவர் மற்றவர் மேல் திணிக்க முற்பட்டால், அது கேலிக்கூத்தாகி விடுவதோடு மட்டுமல்லாமல், எதிர்வினையை ஏற்படுத்துவதால், நட்டத்திலும், தோல்வியிலும் முடியும். எதிர் விளைவுகள் அதிகம் உண்டாகும் ! தமிழார்வம் உள்ளவர்களையும் வெறுப்பேற்றுவதில் முடியும். உண்மையிலேயே அக்கறை இருப்பவர்கள், தமிழ்ப்பற்றும், தமிழறிவும் கொண்ட அறிஞர்களை அழைத்து தமிழ் வளர்ச்சிக்கு திட்டங்கள் வகுத்தால் நிச்சயம் பாராட்டலாம். அவற்றை நடைமுறைக்கு கொண்டு வர ஆவன செய்யலாம். அதை விடுத்து இந்த தார் பூசுவதெல்லாம் வடி கட்டிய அரசியல் சாகசம் (political stunt) !!! அவ்வளவு தான். நீங்கள் வேண்டுமானால் "வாழ்க! தமிழ்குடிதாங்கிகள்!!!" என்று மேற்கிலிருந்து பாராட்டு வழங்கலாம் :))

//எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் ....//
நல்லதை யார் கூறினாலும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது வாதத்திற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். நடைமுறைக்கு ஒவ்வாது. சொல்பவரின் தகுதியை வைத்து தான், அவர் சொல்வது ஏற்றுக் கொள்ளப்படும் / படாது. இதில் தனிமனித வெறுப்பு என்று ஒன்றுமில்லை.

கடைசியாக, அவரவருக்கு (என்னையும் சேர்த்து) தனது பிள்ளைகளும் வெளிநாடு சென்று படிக்க வேண்டும் / பொருளீட்ட வேண்டும் (அல்லது தில்லியில் பெரிய பதவியில் இருக்க வேண்டும்!) என்ற ஆசை இருக்கும் தானே !!!!!!!!!!!!!

என்றென்றும் அன்புடன்
பாலா