Monday, May 16, 2005

காஞ்சிபுரம்! கும்மிடிப்பூண்டி!

காஞ்சிபுரத்தில் 'அம்மா' தோற்று இருந்தால்... அது ஆச்சாரிகளுக்கு கிடைத்த வெற்றியாய் போயிருக்கும். காஞ்சிபுரத்தில் உள்ளவர்களுக்குத்தானே தெரியும் காஞ்சி மடத்தைப் பற்றி?. எனவே இதை ஜெயலலிதாவிற்கு அவர்கள் செலுத்தும் நன்றியாய் கொள்ளலாம்.

கும்மிடிப்பூண்டி!, தி.மு.க வில் எப்போதும் விசுவாசம் உள்ளவன் ஓரங்கட்டப் படுவான். 2 முறை ஒருவர் தொடர்ந்து வென்றால்.. அடுத்த முறை அவருக்கு கண்டிப்பா 'சீட்' கிடைக்காது. என்னதான் பயமோ?. ஜெயித்தவனை "நீ வேளையப்பாரு! இந்தா அவன் ஜெய்கறதுக்குன்னு" சொன்னா, அவங்க நல்லாப் பாப்பங்கல்ல பாக்க வேண்டிய வேலைய?.

இந்த முடிவுகளைக் கொண்டு எதையும் அனுமானிப்பது காலவிரையமே என்று நமக்குத் தெரிகிறதோ இல்லையோ 'அம்மா' விற்கு தெரியும். ஆனால் வருகிற சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க வே வெற்றி பெரும்!.

இந்த மாதிரி பரபரப்பு நேரத்துல எல்லாம் 'அன்பழகன்' என்னதான் பண்ணுவாரு? பாவம்!

2 comments:

மாயவரத்தான்... said...

//ஆனால் வருகிற சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க வே வெற்றி பெரும்!//
எல்லாம் சன்.டிவி. , முரசொலி நிஉர்பர் கணக்க எளுதுங்க! ஜெயிச்சா அது ஜெயலலிதாவுக்கு எதிரா வீசுர அலை. தோத்தா இது சும்மா இடைத் தேர்தல் தானே அப்படீன்னு!

அப்டிப்போடு... said...

தேர்தல் முடியும் வரை இதைப்பற்றி அமைதி காப்பதாக உத்தேசம்!, அதான் ஜெயிச்சாசில்ல? அடுத்தமாசமே கலைச்சுட்டு வச்சாங்கன்னாலும் அதிசயமில்லை