Monday, May 23, 2005

பீகார் பேரவை நள்ளிரவில் கலைப்பு

பீகார் பேரவை நள்ளிரவில் கலைப்பு, மீண்டும் 6 மாதத்தில் தேர்தல் வைக்கப் போகிறார்களாம். ஏன் என்றால் குதிரைப் பேரத்தை தடுக்கவாம்...! குதிரை யாரு...? அட அட அடா...! பாஸ்வான் காரணம் என்று லொல்லுவும் ('டங்கு' சிலிப் ஆயிருச்சுங்கண்ணா!). லல்லுதான் காரணம் என்று பாஸ்வானும் சொல்றாங்கலாம். இதுனால ப.ஜ.க பூச்சாண்டிகள் (மன்னிச்சுக்கங்க! பூசாரிகள்) எல்லாம் சேர்ந்து 'பந்த்' நடத்தப் போறாங்கலாம். பிப்ரவரியில் தேர்தல் நடந்து, 2 மாச இழுபறிக்குப் பிறகு இப்போது கலைப்பு!., நம்ம சனங்கள விட நல்லா விவரமாத்தான் பிகார் சனங்க இருக்காங்க. பின்ன, 2 மாசம் அத்தன பேருக்கும் பி.பி வர வைச்சுட்டாங்கல்ல?. தேர்தல் நடந்து ஒரு முறை கூட பேரவை கூடாமல் கலைக்கப்படுகிறது. யாரு அப்பன் வீட்டு காசு சாமி?. மீண்டும் தேர்தல் எதற்கு? அப்பிடியே 5 வருஷத்துக்கு 'ஜனாதிபதி' ஆட்சி இருக்கவேண்டியதுதான?. அட ஆளுநர் நு ஒருத்தர் சும்மாதானப்பா இருக்காரு? (கலைக்கிறதத் தவிர ). நம்மூர்லயும் கலைச்சாங்கப்பா... இப்ப இருக்கிற பர்னாலா அப்ப இருந்தப்ப...நள்ளிரவு கலைப்பு இந்திய ஜனநாயகத்தில் ஒரு அம்சமா இல்ல ஆயிரும் போல. நல்ல வேளை பிகார் மாதிரி, நம்மூரு இல்ல.!.. என்னமோ அப்பப்ப போடா, தடா, கஞ்சா, மிஞ்சிப்போனா 'என்கவுண்டர்' என்று போயிட்டு இருக்குது பொழப்பு! நான் 'பாப்பாத்தி' நீ 'பெருங்காய டப்பா' என்றாவது நடந்துட்டு இருக்குது கஞ்சேரி!! பின்ன மூணு மாசத்துக்கு ஒரு தேர்தல் வச்சு, அவுங்க பண்ற அக்கப்போர யார் தாங்கறது?.

3 comments:

G.Ragavan said...

:-)) நல்ல கூத்துத்தான்

மாயவரத்தான்... said...

'ஊதி ஊதி பெருசாக்குற' மேட்டரை மட்டும் விட்டுட்டீங்க?

அப்புறம்.. இதுக்கு முந்தைய பதிவு 'தமிழ் போராட்டம்' குறித்து. இந்தப் பதிவுலே எத்தனை தூய தமிழ் சொற்கள்... ஆகா...டங்கு சிலிப் ஆகிறிச்சு..பந்த், பிர்வரி, பி.பி.,வருஷத்துக்கு, ஜனாதிபதி, ஜனநாயகத்திலே, என்கவுண்டர், டப்பா, கச்சேரி,... ஆகா.. தமிழ் பூந்து வெளையாடுது!! இதிலே தமிழ்குடிதாங்கிகளை வரவேற்று பதிவெல்லாம் வேற..! 'அவங்களை' மாதிரியே ஊருக்கு தான் உபதேசமா?!

அப்டிப்போடு... said...

மாயவரத்தாரே!
அந்தப் பதிவுலயே நிறைய எழுதியிருக்கிறேன் கவனிக்கவில்லயா? எதிர்காலத்துல வர்றவங்க என்ன மாதிரி இருக்கக்கூடாதுன்னா தமிழ் குடிதாங்கிகள் அவசியம் அல்லவா?.