Wednesday, May 11, 2005

கணவர்களை 'எரிச்சல்' படுத்த...!

10 நிமிடத்துக்கு ஒரு முறை 'தம்மு', வார இறுதியில் 'தண்ணி'.... ஷாப்பிங் போகும்போது, உலக அழகிகள் நாம பக்கத்தில நடந்து வந்தாலும், எதிரே வருகிற, அத்த, சொத்த பிகர்களை 'சைட்' அடிச்சு மானத்த வாங்கறதுன்னு, இந்த கணவர்கள் நமக்கு கொடுக்கின்ற 'டார்ச்சர்' கொஞ்ச நஞ்சமல்ல...ஆனால் எந்தப் பத்திரிக்கையை எடுத்தாலும் "கணவரைக் கைக்குள் போட"... "கணவருக்கு உங்களைப் பிடிக்க வேண்டுமா"ன்னு ஏகப்பட்ட அட்வைஸ்களை அள்ளி விடுறாங்க!.

ஆனா சில பேருக்கு அவங்கள 'டென்சன்' படுத்தி பாக்கணும்னு ஆசை இருக்கும். அவங்களுக்காக,

1. நடு ராத்திரி வரை டி.விலயோ, கம்பியூட்டர்லயோ உட்கார்ந்து இருந்திட்டு, காலைல சாவகாசமா எழுந்திருச்சு கிளம்பி, காரை start பண்ணிய உடனே (கவனிக்க: கார் start பண்ற வரைக்கும் 'தேமே'ன்னு நின்னு பார்த்திட்டு இருக்கனும்.) ஓடிப்போய் "ஏங்க! பாப்பாவ நீங்க இன்னைக்கு schoolல விட்டுட்டுப்போங்க!"ன்னு போடணும் அருவால!.

2. ஆபிஸ்ல productionல பிசியா இருக்கும்போது (அந்த வீக் on call லா இருந்தா ரொம்ப நல்லது) phoneல கூப்பிட்டு "சாயங்காலம் மறக்காம சக்கரை....(என்ன பாக்கிறிங்க... நீங்க முடிக்கறதுக்கு ஆள் லைன்ல இருந்தால்ல?), ஆனா 'டென்சன்' பண்ணியாச்சுல்ல விட்டுருங்க.

3. ஒரு மாலை நேரம் 'ஐயா' அப்படியே ரிலாக்ஸ்டா காபி சாப்பிட்டுட்டு... அன்பா நாலு கடலையப் போடும்போது, "அதெல்லாம் கிடக்கட்டும்!, உங்கம்மா கல்யாணத்தன்னைக்கு சொன்ன அந்த ஒரு வார்த்தய என் உயிர் இருக்கிறவரை மறக்கமுடியாதுன்னு அடிச்சு விடுங்க! (என்ன வார்த்தைன்னு மறந்திருந்தா எதாவது ஒரு வார்த்தைய நினைச்சுக்கங்க! அதுவா முக்கியம்?).

4. நம்ம ஆளு அவருக்குத் தெரிஞ்ச ஒரு விஷயத்தையோ.. இல்ல.. ஆபிஸ்ல அவர் செய்த சாகசத்தையோ சோல்லி 'பிலிம்' காட்டும்போது, வேற எங்கயோ 'பராக்' பாத்திட்டு என்கிட்ட 'பச்சை கல் செட்டே இல்லை' என்று போடுங்கள்!.

5. அவருடைய 'ஆட்டோகிராப்' ஐ பெருமையா எடுத்துவிடும் போது... வெறித்த பார்வையுடனும், ஒரு பெருமூச்சுடனும் "ம்... அந்த 'மகேஷ்' (யாருன்னு யாருக்குத் தெரியும்?) யார்கிட்ட மாட்டிக் கஸ்டப்படறானோ" என்று புலம்புங்கள்!.

6. குழைந்தைகள் தவறு செய்யும்போது (மட்டும்) "அப்படியே அப்பனுக்குத் தப்பாமன்னு... பல்லைக்கடியுங்கள்(பிள்ளைகளைத் திட்டுவதா நமது நோக்கம்?)

இதுக்கும் மேல இருக்கவே இருக்கு சாப்பாடு நம்ம இஷ்டப்படி எரிச்சல் படுத்த!

'அட்ப்பாவி' என்று இதைப் படித்து அலறுகின்ற ஆண்களுக்கு, 'தம்' அடிக்காதிங்க! 'தண்ணி' அடிக்காதிங்க! 'சைட்' அடிக்காதிங்க! பொறுப்பான கணவனாக இருங்கள்! நாங்கள் எப்போதுமே பொறுப்பான் மனைவிகள்தான்! (மேற்கூறியவை எல்லாம் உங்களைத் திருத்ததானே)!

15 comments:

துளசி கோபால் said...

மரமே,

போடு போடு ன்னு ஒரே போடாப் போட்டுட்டீங்களே!

ஆனாலும் இதையெல்லாம் 'செய்முறை'யிலே செய்யறப்பக் கொஞ்சம் கவனமா
இருக்கணும். முக்கியமா 'நம்ம மகேஷ்' விஷயம்!

உங்க இமெயில் அட்ரஸ் இல்லாததாலே இதுலேயே போடறேன்.
என் பதிவுக்குப் பின்னூட்டம் கொடுத்திருந்தீங்களே அந்த 'கோலம், வீட்டு வேலை,
பெருசுங்க எடுத்த பேட்டி'ன்னு அதெல்லாம் அட்டகாசம்.

இந்தமாதிரி 'பாயிண்ட்'ங்களை வச்சு அருமையான பதிவாப் போட்டுறலாம்.

உங்க எழுத்து, அதோட ஸ்டைலு எல்லாம் எனக்குப் பிடிச்சிருக்கு!

'ரொம்ப நல்லாயிருக்கு'ன்னு சொல்லலாமுன்னா இந்தக் குமார் கோவிச்சுக்குவார்:-)
அப்புறம் 'காஃபி' கிடைக்காது!!!! அதுவும் ஃபில்டர் காஃபி!!!!
என்றும் அன்புடன்,
துளசி.

அப்டிப்போடு... said...

நன்றிங்க துளசி!
நம்மளாவது ஒரு மகேஷ்ச சொல்றோம், அவங்க ஒன்பது மகேஷ்வரிகளை எந்தக் கவனமும் இல்லாமச் சொல்றங்களே! (எண்ணிக்கை கூடுவது பெருமை!). நம்மளோடது கற்பனைதானே!. நாம 'காஃபி' கொடுக்கும்போதோ, அல்லது அவர்கள் 'பில்ட்டர் காஃபி' (ச்சும்மா...) கொடுக்கும்போதோ! உண்மையைச் சொல்லிற வேண்டியதுதான். நமக்கும் ஒரு ரசிகை கிடைச்சுட்டிங்க! அதுவும் எப்படி? நன்றாக எழுதக்கூடிய (எழுத்தில் எனக்கு சீனியர்) நல்ல ரசனையுள்ள தோழி. என் மின்னஞ்சல் முகவரி அனுப்புகிறேன்.

குழலி / Kuzhali said...

இந்த ஆட்டோகிராப் விடயத்தை வைத்து ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், நேரமிருந்தால் படித்து பாருங்கள் சுட்டி இதோ மனைவியின் காதலன்

ரவியா said...

hi...comming for the fisrt timme..very good..hilaroius !!

அப்டிப்போடு... said...

குழலி! வாசித்துப் பார்த்தேன், அதில் முதன் முதலில் கதாநாயகன் குத்திக்காட்டும்போது, நாயகி "உங்கள... தலையிலயே ஒன்னு போட்டன்னா!"
என்பாரே! அதை அவர் சொல்லியிருக்கக்கூடாது!!!

hello raviaa
\\comming for the fisrt time\\
Thanks! welcome! and come everytime!

லதா said...

apdipOdu,

naayagi," ungaLa,... thalaiyilEyE onnu pOttEnnaa" endRu avar sollaamal uNmaiyaagavE seydhirukka vEndumaa ? ;-))

இளவஞ்சி said...

யக்கோவ்!

நீங்கெல்லாம் இப்படி எங்க சந்தோசத்துக்கு வெனை வைப்பீங்கன்னு தெரிஞ்சிதான் நாங்க கொஞ்சம் வெவரமா கல்யாணத்துக்கு முன்னயே இப்படி பொண்ணு தேடறது! :)

http://ilavanji.blogspot.com/2005/02/blog-post_16.html

அப்டிப்போடு... said...

இளவஞ்சி!

உங்க பேர் நல்லா இருக்குங்க!. கவிதையும் நல்லாத்தான் இருக்கு..., நீங்க கேட்ட எல்லாம் கிடைக்கும், உகாண்டாவில போய் நம்ம மொழியே தெரியாத பொண்ண எடுத்திங்கன்னா., அதுவும் கூட,

அம்மா அப்பாவை கண்போல் பார்த்தும்
மாமா மாமியை அண்டவிடாமலும்

இந்த 2 வரிக்கு ஒத்து வராது... ஏன்னா எந்த நாட்டிலயும் பெத்தவங்கள அண்ட விடாத பெண்கள் கிடைக்கமாட்டாங்க!... பெத்தவங்களையே அண்ட விடாதது... நம்ம தலையில அண்டாவத்தான் போடும்! எனவே உங்க வரிகளைத்தான் இதுக்கு பதிலாத்தரணும்.

அப்படியொருத்தி உலகில் இல்லை..
தேடுதல் அலைச்சல்... கால விரையம்...!

அப்டிப்போடு... said...

latha!

yes!!!

Adaengappa !! said...

Hmm...Paavam aangal !! i just cud say அடேங்கப்பா !!.

அப்டிப்போடு... said...

அடேங்கப்பா

Welcome! why don't you said 'APDIPODU'?

Maravandu - Ganesh said...

yahhOv

ennaiya erissal patuththa entha makaraasiyum illaiyE

enakku kavalaiyaa irukku


maravantu
Bachelor

Maravandu - Ganesh said...

YakkOv ennaiya erichchal patuththa
entha makraasiyum illa :-(


maravantu
bachelor

அப்டிப்போடு... said...

யக்கோவ்னு சொல்லிட்டிங்க! பொண்ணு பாத்திரலாம்!, கவலைய விடுங்க! ஆமா அதென்னா மரவண்டு?.. இப்பிடியெல்லாம் பேர் வச்சா யார் பொண்ணுகுடுப்பாங்க?

Boston Bala said...

Good Ones! Most of the counterparts are already adpated by us :P)