Monday, May 02, 2005

வந்திட்டா மகராசி

வணக்கங்க! என் பெயர் ஒரு மரத்தோட பெயருங்க! நான் இருக்கறது காட்டில இல்லைங்க... USA, DELAWARE லங்க...சரி! ஊர், பெயரா முக்கியம்? என்னத்த எழுதப் போறங்கிறீங்களா?, நம்ம ஊர்ல கொஞ்ச நாளைக்கு முன்பு ஒரு அரசியல்வாதி இருந்தாரு, ' தாமரைக்கனி'ன்னு, ( இப்பவும் இருக்கிறார், அரசியலில் அல்ல, வீட்டில்.). Interesting ஆன ஆளு, சட்டசபையில், அவருக்கு முன்னாடி உக்கார்ந்து, 'கோக்குமாக்கா' பேசரவங்கள, செல்லமா மோதிரக் கையால கொட்டுறது, (அவரோட மோதிர சைஸ் ச்சும்ம்மா... அவர் உள்ளங்கை அளவு சின்னததான் இருக்கும்). அவர் மகன், பத்தாவது பரீட்சை கேள்வித்தாளை திருடினதுக்கு காரணம் கருனாநிதி மற்றும் எதிர்கட்சியின் சதிதான் என்று சிரிக்காமல் பேட்டி கொடுப்பது என்று கலக்கிட்டு இருந்தாரு ஒரு காலத்துல. (சன் டிவி ரபிபெர்னாட் (நேருக்குநேர்) கஷ்ட்டப்பட்டு சிரிப்பை அடக்கிகொண்டு பேட்டி எடுக்கும் ஒரே தலைவர் இவர்தான்) ஆனா, தாமரைக்கனி எப்படிபட்டவர் என்று 'தெக்க' யராவது நண்பர்கள் இருந்தா கேட்டுப்பாருங்க. நம்ம எழுத்தும் கிட்டத்தட்ட அவர மாதிரித்தாங்க!. பயந்திறாதிங்க! அட!, நான் சில விஷயங்கள 'நகைச்சுவையாகவும்' சில விஷயங்கள 'சீரியஸ் ஆகவும்' சொல்லப்போறேன், அம்புட்டுத்தான்!. அதெல்லாம் கிடக்கட்டும், இதென்ன எழுத்து நடை இப்படி கொச்சைத் தமிழில் இருக்குதேன்னு கேக்குறிங்களா?

"இளங்கதிர் ஞாயிரு எள்ளும் தோற்றத்து....." - இது உங்களுக்கு 'சட்டுன்னு' புரியுதா?

'காலைச் சூரியன விட அழகான உருவம்..." - இது புரியுது தான?

என் சிற்றறிவுக்கு எட்டியதை, உணர்ந்ததை, பார்த்ததை, பழகியவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். "தட்டிப்' பாராட்ட, 'கொட்டி' நேர்படுத்த, இணைய உறவுகள்... நீங்கள் இருக்கிறீர்கள்.... உங்கள் ஆதரவோடு... எடுத்து வைக்கிறேன் என் முதல் அடியை!.

எங்க அப்பாவோட அப்பா எப்பவும் சொல்லுவாரு, "எங்க போனாலும் மொத அடி நம்ம அடியா இருக்கணும்டான்னு.... ( முதன் முதலில் நாங்கள் பள்ளிக்கு செல்லும் போது இதை தவறாமல் சொல்லுவார். வாத்தியாரோட அவருக்கு என்ன முன்பகைன்னு எனக்கு தெரியாது.). தமிழ் டைப்பிங் என்னை பயப்படுத்தியதால்... லேட்டு...... நாங்க லேட்டா வந்தாலும்.......அது! (Superkku Thanks).

12 comments:

துளசி கோபால் said...

வாங்க மரமே வாங்க!!!!

கொச்சைத்தமிழைப் பத்திக் கவலை வேணாம். அது
இச்சைத்தமிழா
இருந்தாப் போதும்!!!!

என்றும் அன்புடன்,
துளசி.

அப்டிப்போடு... said...

நன்றி துளசி.

Muthu said...

தாமரைக்கனியைப் பற்றி தெற்கே இருப்பவர்களிடம் கேட்டுப்பார்த்தால் நல்ல அபிப்பிராயம்தான் வரும். சட்டசபையில் நடந்துகொள்வதுபோல் அவரின் தொகுதியில் நடந்துகொள்வதில்லை என்பதே அவர் சுயேச்சையாகக்கூட ஸ்ரீவில்லிப்புத்தூரில் வெற்றிபெறக்காரணம் என்பது உங்களுக்கும் தெரியும், நீங்களும் அந்த ஊரா ? :-).

அப்டிப்போடு... said...

Hello முத்து, பின்னுட்டத்திற்கு நன்றி!. 'சுயேச்சயா' நின்னு ஜெயிச்சார் சரிதான். ஆனால் அவர் தொகுதில யார் வீட்டுலயாவது கலைஞர் புகைப்படம் இருந்தாக்கூட, வீடு பூந்து தாக்குவாங்க அவரோட ஆளுங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். அவரோட அரசியல் எதிரி கே.கே.எஸ்.எஸ்.ஆர்க்கு குழி (நிஜக் குழிங்க!, அவர் மேல 'ஆசிட்' ஊத்துனது யாரு? இவர் ஓன்றும் ஒழுங்கில்லைதான் என்றாலும்!) வெட்டி வச்சிருந்தார்னுகூட கேள்விப்பட்டு இருக்கேன். 'சுயேச்சயா' நின்னு ஜெயிச்சார்! யார்தான் நம்ம ஊர்ல ஜெயிக்கவில்லை?, ஜெயலலிதாவ திரும்பி உக்கார வச்சாங்க! அதனால எல்லோருக்கும் அவங்க மீது நல்ல அபிப்ராயமா இருக்கு?. மத்தபடி தி.மு.க எம்.எல்.ஏ க்கள் மாதிரி இல்லாம தொகுதிக்கு நிறைய பண்ணி இருக்கிறார். ஜாதி ஓட்டு வேற! (சாதியை அவர் ஜெயித்ததற்கு ஒரு காரணமாகத்தான் சொல்கிறேன்., எந்த உள்நோக்கமும் இல்லை). நான் திருச்சிங்க. HOME சொடுக்கி நம்ம மத்த படைப்புகளையும் பார்த்திட்டு கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்!

வசந்தன்(Vasanthan) said...

இப்போதுதான் உங்கள் பதிவு பார்த்தேன்.
தாமதாமாகவென்றாலும் வாழ்த்துக்கள்.

அப்டிப்போடு... said...

நன்றி வசந்தன்.

மதி கந்தசாமி (Mathy) said...

வாங்க 'மரம்'!

நல்லா எழுதுறீங்க. பின்னூட்டங்கள் தெரிவதற்கான வழிமுறைகள் + நட்சத்திரக் குறியீட்டுக்கான நிரலைச் சேர்த்துக்கொண்டீர்களென்றால் நன்றாக இருக்கும்.

http://thamizmanam.com/tamilblogs

லதா said...

paLLikkoodaththil mudhal adi yaarudaiyaadhu ? ungaLudaiyadhaa / aasiriyarudaiyadhaa ;-)) ?

அப்டிப்போடு... said...

Latha,
பள்ளிக்கூடத்தில் நான் வாங்கி விட்டு, வீட்டுல வந்து "நான் போட்டேன் நாலு"ன்னு சொல்லிக்குவேன்.

அப்டிப்போடு... said...

மதி கந்தசாமி,

நன்றி!., நட்சத்திரங்களை இப்போது இணைத்துவிட்டேன்.

லதா said...

urekha!!!

unga peyar karpagam-thaanE ? :-))

romba nEram yOsiththu yOsiththu maNdai kaanjivittadhu

அப்டிப்போடு... said...

lathaa,

puththisaali!!